Jun 2, 2010
நானே கேள்வியும் பதிலுமாவேன்
வணக்கம் நண்பர்களே இது சின்ன ஒரு கேள்வி பதில் போலத்தான் இருக்கும் எல்லாமே நீங்கள் முன்னமே படித்ததுதான் ச்சும்மா ஒரு ஞாபகத்துக்கு, இதில் கேள்வி கேட்பவர் நீங்கள் பதில் சொல்பவன் நான்.
கேள்வி: என்ன நண்பா நல்ல இருக்கிங்களா?
பதில்: கடவுள் அருளால் நலமாய் இருக்கிறேன்
கேள்வி: உங்கள் சுய விபரம் சொல்ல முடியுமா?
பதில்: என்னை பற்றி சொல்ல என்ன இருக்கு நண்பா இருந்தாலும் உங்களுக்கு பதில் சொல்லனுமே “ ஒன்றுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தாய் காட்ட முயற்சிக்கும் சராசரிகளில் நானும் ஒருவன்”
கேள்வி: உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா?
பதில்: நானும் எனக்கு தெரிந்ததை கவிதை என கிறுக்கியிருக்கிறேன் இனி படித்து விட்டு நீங்கள் தான் சொல்லவேண்டும் ராஜா சின்ன ரோஜா , தேவதையை கண்ட நாள் , மேல்மட்டம் கீழ்மட்டம் , தாய்க்கு தாயவோம் , அப்பா , பழைய டயரி கிறுக்கல் ,இளைஞனே மாற்றிக்காட்டு
கேள்வி: தொழில் நுட்ப பதிவுகள் மட்டும் தான் எழுதுவீர்களா சமுதாயம் சார்ந்த பதிவுகள் எழுதியிருக்கிறீர்களா?
பதில்: பொதுவான பதிவுகள் சில எழுதியிருக்கிறேன் அவற்றில் சிலவற்றிற்கு தொடுப்பு தருகிறேன் தவறிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.வாழ்க்கையில் எதிரி நீச்சல் , ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு , தாலிக்கு அர்த்தம் என்ன , வாழத்தான் வாழ்க்கை , கடவுள் நல்லவனா கெட்டவனா
கேள்வி: கணினியில் வைரஸ் இருக்கிறதா என அறிவதற்கு ஏதாவது எளிமையான வழி சொல்லமுடியுமா?
பதில்: உங்கள் கணினியில் டாஸ்க் மேனேஜரை திறந்து Performance திறந்து அதில் CPU Usage கணினியில் வேறு எந்த புரோகிராம் இயங்காத நிலையில் அது எடுத்துக்கொள்ளும் மெமரி அளவு பூஜ்ஜியமாக இருக்கும் மேலும் Process என்பதை திறந்து அதில் இயங்கும் பைல்கள் குறித்து கூகுளில் தேடிப்பார்த்தால் தெரிந்துவிடும்.
கேள்வி: இனையத்தில் பாதுகாப்பாக உலவுவது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
பதில்: நான் இது பற்றி நம் தளத்திலேயே எழுதியிருக்கிறேன்.
கேள்வி: உங்களுக்கு வலையில் எழுதுவதன் மூலம் வருவாய் வருகிறதா?
பதில்: இல்லை.
கேள்வி: நீங்கள் வலையுலகத்தில் பிரபலமாகி இருக்கிறீர்களா?
பதில்: இது வரை 54 நபர்களை நண்பர்களாக பெற்றிருக்கிறேன் 111 மின்னஞ்சல் சந்தாதாரரை பெற்றிருக்கிறேன் இவர்களை தவிர என்னை யாருக்கும் தெரியாது.
கேள்வி: தொடர்ந்து எழுத ஆர்வம் இருக்கிறதா?
பதில்: ஆதரவு இருக்கும் வரை எழுதலாம் என நினைக்கிறேன்.
கேள்வி: வலைத்தளத்தில் மூலம் பிற எழுத்து துறைகளில் இதுவரை வாய்ப்பு வந்திருக்கிறதா?
பதில்: சமீபத்தில் ஒரு வாய்ப்பு வந்தது அது பற்றி ஆலோசித்து கொண்டிருக்கிறேன் இன்னும் முடிவு செய்யவில்லை.
கேள்வி: உங்கள் வாசகர்கள் உங்களின் எந்தமாதிரியான பதிவை விரும்புகிறார்கள்?
பதில்: இந்த பதிவில் அவர்கள் கருத்துரையை தெரிவிப்பார்களேயானால் அவர்கள் விருப்பம் போலவே எழுதலாம்.
கேள்வி: உங்களுக்கு எதை பற்றி எழுத ஆர்வம் இருக்கிறது?
பதில்: நல்ல விஷயங்களை பற்றி மட்டுமே எழுத விரும்புகிறேன்.
கேள்வி: வலையுலகத்தின் வாயிலாக முகம் அறியா பிரபலங்களுடன் பேசியிருக்கிறீர்களா?
பதில்: தமிழில் மிக பிரபல திரட்டி ஒன்று என்னிடம் மின்னஞ்சலில் உரையாடியதும் மேலும் என்னுடன் பேசவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் ஆனால் இதுவரை அவர்களிடம் பேசியதில்லை.
கேள்வி: உங்கள் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
பதில்: நல்ல விஷயங்களை ஆதரிப்பதன் மூலம் அது நிறைய பேருக்கு சென்றடைய நீங்களும் துனையாய் இருங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
8 Responses to “நானே கேள்வியும் பதிலுமாவேன்”
-
சௌந்தர்
said...
June 2, 2010 at 10:14 AMகேள்வி: வலையுலகத்தின் வாயிலாக முகம் அறியா பிரபலங்களுடன் பேசியிருக்கிறீர்களா?
பதில்: தமிழில் மிக பிரபல திரட்டி ஒன்று என்னிடம் மின்னஞ்சலில் உரையாடியதும் மேலும் என்னுடன் பேசவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் ஆனால் இதுவரை அவர்களிடம் பேசியதில்லை
ஏன் பேசவில்லை... -
ஜிஎஸ்ஆர்
said...
June 3, 2010 at 11:08 AM@soundar
மன்னிக்கவும் நேரமின்மையால பதில் அளிக்க முடியவில்லை
\\ஏன் பேசவில்லை...\\
அவர்களும் போதிய நேரமின்மையால தொடர்பு கொள்ளவில்லை அவர்களை தொடர்புகொள்வதற்கு என்னிடம் அவர்களின் தொலைபேசி எண் இல்லை நண்பா அவர்களின் அழைப்பிற்காக நானும் காத்திருக்கிறேன்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
June 3, 2010 at 4:21 PMநண்பரே நான் உங்களிடம் இருந்து தொழில் நுட்ப பதிவுகளை மட்டுமே அதிகம் விரும்புகிரேன்.... உங்களுக்கு தொடர்ந்து எழுதும் மனநிலையினை அளிக்க எல்லம்வள்ள இரைவனிடம் வேன்டுகிரேன்.
வாழ்க வளமுடன்
என்றும் உங்கள் பதிவுகளுடன்
பிரபு -
June 3, 2010 at 4:32 PMநானும் இனைந்து விட்டேன் (பங்காளியாக)
வாழ்க வளமுடன்
என்றும் உங்கள் பதிவுகளுடன்
பிரபு -
ஜிஎஸ்ஆர்
said...
June 5, 2010 at 9:20 AM@பிரபு
நன்றி நண்பா தொழில் நுட்ப பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன் ஆனாலும் என் எழுத்திற்கு வடிகாலாக பொதுவான விஷங்களையும் அவ்வப்போது எழுத விரும்புகிறேன்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 5, 2010 at 9:21 AM@பிரபு
இனைந்ததில் மகிழ்ச்சி நண்பா
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
avvavm
said...
December 8, 2010 at 10:53 AMநண்பரே பங்கு சந்தை பற்றி எழுதலாமா ?
-
ஜிஎஸ்ஆர்
said...
December 9, 2010 at 9:43 AM@avvavmஎழுதலாமே ஆனால் அனுபவ ரிதியாக சந்திக்காமல் எழுதுவது சரியாய் இருக்காது என நினைக்கிறேன் இருப்பினும் தங்கள் வேண்டுகோளை நிச்சியம் ஆலோசிக்கிறேன் தஙக்ளுக்கு வேண்டுமானல் தமிழில் பங்குசந்தை பற்றி எழுதும் தளங்களை தருகிறேன்
http://wiki.pkp.in/forum/t-281029/
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>