Jun 6, 2010

8

வன்தட்டை (Hard Drive) துண்டு துண்டா வெட்டலாம்

  • Jun 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பிரச்சினை உள்ளவர்க்கே அதன் தாக்கம் புரியும் வெளியில் இருந்து பார்த்தால் ஒரு கதை போலவே தோன்றும்.

    நண்பர்களே இன்று நாம் பார்க்கபோவது நமது கணினியில் உள்ள வன் தட்டை எப்படி பிரிப்பது இது என்ன பெரிய விஷயம் கணினியில் இயங்கு தளம் நிறுவும் போதே நமக்கு தேவையான அளவில் வன் தட்டுகளை பிரித்து விடலாமே! நீங்கள் நினைப்பது சரிதான் ஆனால் இது நாம் இயங்குதளம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள கணினியில் எப்படி பிரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

    விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் இதற்கான வசதிகள் உள்ளதாக நாம் அறிகிறோம் ஆனால் எக்ஸ்பியில் இந்த வசதி இல்லை ஆனால் நமது கணினியில் ஏற்கனவே இரண்டு பார்ட்டிசியன் அதாவது C,D என இருக்கிறது என வைத்துக்கொள்வோம் நமக்கு வேண்டுமானால் D டிரைவை மேலும் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரிக்கலாம் ஆனால் அதில் உள்ள டேட்டா அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் நான் அதைப்பற்றி இங்கு விளக்கபோவதில்லை காரணம் வேறு ஒரு வழிமுறை இருக்கும் போது அதன் அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.

    இனி பார்ட்டிசியன் மேனேஜர் வெறும் 11எம்பி அளவுதான் தரவிறக்கி உங்கள் கணினியில் சாதரண மென்பொருள் நிறுவுவது போல நிறுவிக்கொள்ளவும் இனி இந்த பார்ட்டிசியன் மேனேஜரை திறந்து உங்கள் வன் தட்டை நீங்கள் விரும்பும் வகையில் பிரித்து கொள்ளலாம் உதாரணமாக உங்கள் வன் தட்டு 160ஜிபி உள்ளதாக இருக்கிறது ஒரே டிரைவாக இருக்கிறது என வைத்துக்கொள்ளலாம் உங்களுக்கு தேவையான அளவில் பார்ட்டிசியன் செய்வதற்கு விண்டோஸ் இயங்கு தள குறுந்தகடு தேவையில்லை மேலும் கரப்ட் ஆகிவிடுமோ என்கிற அச்சம் வேண்டியது இல்லை உங்களுக்கு எத்தனை டிரைவாக பிரிக்க வேண்டுமா அத்தனை டிரைவாக பிரிக்கலாம்.



    மேலே இருக்கும் படத்தை பாருங்களேன் இதில் ஏற்கனவே மூன்று டிரைவ்கள் பிரித்து இருக்கிறது இதை பற்றி கவலைப்பட வேண்டாம் இனி நீங்கள் C டிரைவை பிரிக்க நினைக்கிறீர்கள் அதற்கு C டிரைவை செலக்ட் செய்து பின்னர் இடது பக்கம் இருக்கும் Resize / Move Partition என்பதை கிளிக்கி புதிதாய் திறக்கும் விண்டோவில் அதன் அளவை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.



    என்ன நண்பர்களே மாற்றிவிட்டீர்கள் இனி என்ன ஓக்கே கொடுத்து விடுங்கள் இப்போது உங்கள் C டிரைவின் அளவை பாருங்கள் மாறியிருக்கிறதா மேலும் இப்போது புதிதாக Un Allocated என்கிற பெயரில் ஒரு டிரைவ் வந்திருக்கும் அதில் பெயர் எதுவும் இருக்காது இனி இந்த Un Allocated என்பதை தெரிவு செய்து நீங்கள் விரும்பும் அளவில் இடத்தை கொடுத்து மேலே இருக்கும் Create பட்டனை அழுத்துங்கள் இதில் பெயர் கேட்க்கும் அதில் உங்கள் கணிணி NFTS , FAT32,FAT இதில் எந்த வகை என்பது அதிலேயே இருக்கும் அதன் பெயர் கொடுத்து டிரைவ் லெட்டருக்கு உங்களுக்கு பிடித்த எழுத்தை கொடுத்து ஓக்கே கொடுக்கவும் சிறிது நேரத்தில் அடுத்த டிரைவ் தயாராகி இருக்கும். இனி அது போலவே மீதம் உள்ள இடத்திற்கும் கொடுத்து சேமித்து விடுங்கள் இறுதியில் சேமிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்களை சேமிக்கவா என கேட்கும் ஆமாம் என்பதை கொடுத்து சேமித்து விடுங்கள் இனி உங்கள் கணினி ரீபூட் அதாவது ரீஸ்டார்ட் செய்ய தொடங்கும் எல்லாம் முடிந்து.

    இனி உங்கள் கணினியை இயக்கி உங்கள் வன்தட்டு பகுதியை பாருங்கள் நீங்கள் விரும்பியவாறே எல்லாம் மாறியிருக்கும், மீண்டும் டிரைவை அழிக்க நினைக்கிறீர்களா அதற்கும் வசதி இருக்கிறது. எப்போதும் விண்டோஸ் இயங்குதளத்தை மட்டும் C டிரைவில் வைத்துக்கொண்டும் Dயில் நீங்கள் நிறுவ விரும்பும் மூன்றாம் நபர் மென்பொருள்களை நிறுவிக்கொள்ளவும் Eல் உங்கள் சொந்த டேட்டாக்களை பாதுக்காப்பாக வைத்துக்கொள்ளவும் இதனால் உங்கள் கணினியில் இயக்கத்தின் வேகம் அதிகம் பாதிக்கப்படாது நண்பர்களை இது எளிமையான மென்பொருள் என்பதால் தான் இது பற்றி அதிகம் விள்க்கவில்லை உங்களுக்கே பார்த்தால் எளிதில் புரிந்துவிடும் ஒருவேளை ஏதாவது சந்தேகம் இருப்பின் தயவுசெய்து தயங்காமல் கருத்துரையில் பதியவும்.

    இது உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் இது உங்களை போல உள்ள மற்ற நபர்களுக்கும் சென்றடைய உதவுங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    8 Comments
    Comments

    8 Responses to “வன்தட்டை (Hard Drive) துண்டு துண்டா வெட்டலாம்”

    Anonymous said...

    June 6, 2010 at 1:12 PM

    thanks 2 you


    ஜிஎஸ்ஆர் said...
    June 6, 2010 at 2:28 PM

    @Anonymous

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி முடிந்தவரை உங்கள் பெயரை வெளிப்ப்டுத்தியே கருத்துரை இடுங்கள்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    பிரகாசம் said...
    June 21, 2010 at 12:36 AM

    Thanks to you for posting this valuable information


    ஜிஎஸ்ஆர் said...
    June 21, 2010 at 9:38 AM

    @பிரகாசம்


    தங்களின் வரவுக்கும் நேரம் செலவழித்து கருத்துரை எழுதியமைக்கும் மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள் கருத்துகளை எழுதுங்கள்


    Anonymous said...

    November 11, 2010 at 7:04 PM

    என்னுடைய 4GB Transcend pen drive ல் USB Password கொடுத்து வைத்திருந்தனான். ஆனால் சில நாட்களுக்கு முன் அதை நீக்கி format பண்ணி விட்டு பார்த்தபோது capacity 496kb ஆகவும் FAT ஆகவும் மாறிவிட்டது. பின் எந்த வழியிலும் சரிப்படுத்தமுடியவில்லை.இதை எவ்வாறு சரி செய்யலாம்?
    மஞ்சு
    இலங்கை.


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:48 AM

    @rssஅன்பின் சகோதரிக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறேன் இனி மீட்டெடுப்பது என்பது கடினமே இது குறிப்பாக பெண் டிரைவை பாஸ்வேர்ட் கொடுத்து மறந்து போய் பார்மட் செய்தால் இது போன்ற பிரச்சினை வரும் இதற்கு ஏதாவது மாற்றி எடுக்கும் வாய்ப்பு இருந்தால் கடைக்கு சென்று மாற்றுவது நல்லது


    Vengatesh TR said...
    November 27, 2010 at 1:56 PM

    .நானும் இதை தான்,உபயோகித்து வருகிறேன் !!


    .புகைப்படத்துடன் தகவலுக்கு நன்றி, நண்பரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:34 AM

    @சிகப்பு மனிதன்இது நல்ல மென்பொருள்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர