Nov 14, 2010
தமிழில் மருத்துவ தளங்கள் II
வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே தமிழில் மருத்துவ தளங்கள் I என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த பதிவிலேயே எனக்கு தெரிந்த தளங்கள் இவையெனவும் இதைப்போல வேறு மருத்துவ தளங்கள் இருந்தால் தெரியப்படுத்த சொல்லியிருந்தேன் சமீபத்தில் என்னுடைய பதிவில் இருவர் சில மருத்துவ தளங்களை சுட்டிக்காட்டியிருந்தனர் பின்வருமாறு.
நீச்சல்காரன் said...
http://siddhavaithiyan.blogspot.com/
http://abidheva.blogspot.com/
Please add it to your list
eegarai said...
தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள். படிப்பவர்கள் தமிழில் உள்ள மருத்துவ தளங்களே மொத்தம் நான்குதான் என்று நினைத்துவிடப் போகிறார்கள்! கூகிளில் ’மருத்துவம்’ எனத் தேடிப்பாருங்கள். எவ்வளவு தளங்கள் உள்ளன என்பது தெரியும்!
“என் நண்பர்களின் மருத்துவத் தளங்கள்” என்ற தலைப்பே பொருத்தமானதாகும்!
பழைய பதிவிலேயே அப்டேட் செய்தால் புதிதாய் வருபவர்களுக்கு தெரிவதில்லை அதே நேரத்தில் பழைய வருகையாளர்களுக்கும் நாம் தான் இதை முன்னே பார்த்துவிட்டோ என்கிற நினைப்பில் கவணிக்காமல் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது அதனால் தான் இதை தமிழில் மருத்துவ தளங்கள் II என எழுதுகிறேன். இனி வருங்காலத்தில் நம் தளத்தின் முகப்பிலேயே இருக்கும் தமிழில் மருத்துவம் என்பதை தெரிவு செய்தால் இனி வரும் அப்டேட் பதிவுகளை எளிதாக நீங்கள் படிக்க முடியும்.
மதிப்பிற்குறிய ஈகரை தளத்தில் எல்லாவிதமான பொதுமருத்துவம், யோகா, சித்த மருத்துவம், பாலியல் சம்பந்த மான பிரச்சினைகள் சம்பந்தமான எல்லா தகவல்களை பதிகிறார்கள் அங்கு இதற்கெனெ ஒரு போரமாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் சந்தேகத்தை அங்கு கேள்வியாக கேட்கலாம் தள நிர்வாகிகளும் பதில் அளிக்கிறார்கள் அல்லாமல் நம்மை போன்ற நண்பர்களும் அனுபவத்தில் பதிலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் எல்லாம் தமிழிலேயே இருப்பதால் நம்மால் கேள்வியை எளிதாக கேட்க முடியும் பதிலையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். அன்பின் நண்பர்களே தளம் பயனுள்ளதென்றால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
ஈகரை தளம் செல்ல படத்தை கிளிக்கவும்
அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.தேவன் மாயம் அவர்களின் தளத்தில் பொது மருத்துவ தகவல்கள் பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம், மின்னஞ்சல் வழி சந்தேகம் கேட்கும் வசதி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் தளத்தில் மருத்துவம் என்றல்லாது பிற தகவல்களையும் பதிகிறார்கள் ஆனால் மருத்துவத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என நினைகிறேன். தளத்தை படித்து பாருங்கள் பயனுள்ளதென நீங்கள் நினைத்தால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
திரு.தேவன் மாயம் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்

அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.கண்ணன் அவர்களின் தளத்தில் சிறு நீரக பிரச்சினை குறித்த தகவல்களை மிக எளிமையாக தருகிறார்கள் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவரிடம் கேட்கும் வசதி இல்லையென்றே நினைக்கிறேன் ஆனால் அதே நேரத்தில் மின்னஞ்சல் தொடர்பு வசதி கொடுத்திருக்கிறார்கள் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்களா என்பதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை இருந்தாலும் சிறு நீரக பிரச்சினை குறித்தான தகவல்களை நம்மால் அறிந்துகொள்ள தளம் உதவியாய் இருக்குமென்றே நம்புகிறேன். அன்பின் நண்பர்களே தளம் பயனுள்ளதென்றால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
திரு.கண்ணன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்

அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.குருசாமி சிவராமன் சித்த மருத்துவம் குறித்து எழுதி வருகிறார்கள் மிக சமீபத்தில் தான் எழுத தொடங்கியிருப்பார்கள் என நினைக்கிறேன் சித்த மருத்துவ தகவல்களை மிக எளிமையாக தருகிறார்கள் படித்து பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
திரு.குருசாமி சிவராமன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்

என்ன நண்பர்களே நான் எனக்கு தெரிந்த தளங்களை பகிரிந்திருக்கிறேன் இது போல் சிறந்த தமிழ் மருத்துவ தளங்கள் இருந்தால் அவசியம் கருத்துரையில் தெரிவிக்கவும் நான் அதை அப்டேட் செய்துவிடுகிறேன் அனைத்து தளங்களின் முகவரிகளும் ஒரு இடத்தில் இருந்தால் எல்லொருக்கும் மருத்துவ சந்தேகங்கள் தீர உதவியாய் இருக்கும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்

இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr


15 Responses to “தமிழில் மருத்துவ தளங்கள் II”
-
மாணவன்
said...
1
November 14, 2010 at 11:07 AMமிகவும் பயனுள்ள தளங்களை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்
அருமை நண்பா,
நிச்சயமாக இந்த தளங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
அதுவும் தமிழில் இருப்பது இன்னும் சிறப்பு
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா...
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
உங்கள் மாணவன் -
மாணவன்
said...
2
November 14, 2010 at 11:12 AM//ஒரு வரி கருத்து: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்//
தலைப்புக்கு ஏற்ற மாதிரியும் தளங்களின் பயன்களுக்கேற்ப சரியாக தேர்வு செய்துள்ளீர்கள் அருமை... -
ம.தி.சுதா
said...
3
November 14, 2010 at 4:03 PMநல்லதொரு அப்டேட் புதுப்பதிவாய் போட்டதால் பலரை சென்றடையும் வாழ்த்துக்கள்..
-
ம.தி.சுதா
said...
4
November 14, 2010 at 4:05 PMஃஃஃஃஃஅனைத்து தளங்களின் முகவரிகளும் ஒரு இடத்தில் இருந்தால் எல்லொருக்கும் மருத்துவ சந்தேகங்கள் தீர உதவியாய் இருக்கும்.ஃஃஃஃஃ
உண்மையான விடயம் தான் இதை நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன் -
ம.தி.சுதா
said...
5
November 14, 2010 at 4:06 PMமுக்கியமாக ஒன்றை சொல்லாமல் விட்டுவிட்டேன்... உங்கள் முதல் பதிவில் இந்த இரண்டாம் பாகத்திற்கான லிங்கை அப்டெட் செய்து விடலாமல்லவா..??
-
venkat
said...
6
November 14, 2010 at 8:47 PMஅருமை
-
ஜிஎஸ்ஆர்
said...
7
November 14, 2010 at 11:16 PM@மாணவன்உண்மையை சொல்கிறேன் நண்பா இந்த பதிவு எழுதுவதற்கு நேரம் அதிகமாகவே எடுத்தது காரணம் நான் படத்தை இனைத்திருக்கும் விதம் மேலும் சப் டேக் கொடுத்திருக்கிறேன் மேலே தமிழ் மருத்துவம் என்பதன் அருகில் மவுஸ் கர்சரை கொண்டு சென்றால் தெரியும்
-
ஜிஎஸ்ஆர்
said...
8
November 14, 2010 at 11:17 PM@மாணவன் நன்றி நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
9
November 14, 2010 at 11:17 PM@ம.தி.சுதாவருகைக்கு நன்றி நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
10
November 14, 2010 at 11:18 PM@ம.தி.சுதாஅவசியம் நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்
-
ஜிஎஸ்ஆர்
said...
11
November 14, 2010 at 11:27 PM@ம.தி.சுதாஅப்டேட் செய்து விட்டேன் நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
12
November 14, 2010 at 11:28 PM@venkatவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா தொடர்ந்து இனைந்திருக்க முயலுங்கள்
-
priyamudanprabu
said...
13
November 15, 2010 at 8:39 AMநன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
14
November 17, 2010 at 5:35 PM@பிரியமுடன் பிரபுஎதற்கு நண்பா நன்றி நான் எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கிறேன்
-
tamilnaducollagedatas
said...
15
June 28, 2011 at 9:31 AMgood site
http://www.usetamil.net/
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>