Nov 4, 2010

18

கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை

  • Nov 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: அதிஷ்டம் என்பது வாழ்வின் ஒரு முறை தான் வரும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கைரேகை ஜோதிடம் பற்றி பார்க்கலாம். ஜோதிடங்களில் பலவகை அதில் இதுவும் ஒருவகை, மிக பழமையானதும் கூட இந்த கைரேகை ஜோதிடம் தான். நான் ஜோதிடம் பற்றி எழுதுவதால் நான் ஜோதிடன் அல்ல நான் இதை முழுதாய் கற்றுதெளிந்தவனும் இல்லை இருந்தாலும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை பற்றி நான் விவாதிக்கவில்லை இதை நம்புவர்கள் நம்பலாம் நம்பிக்கையில்லாதவர்கள் அவர்கள் விருப்பம் போல செயல்படலாம். நான் இப்படி சொல்வதால் இதை நம்புகிறவனும் முழுதாய் நம்புகிறவன் இல்லை அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

    பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு என்னிடம் வெறும் வலது கை ரேகையை மட்டும் பெற்றுக்கொண்டு இன்னும் சில பல கேள்விகள் இறுதியில் ஒரு ஆடியோ கேசட்டில் தகவல்களை பதிந்து கொடுத்தனர் அதில் என்னால் நம்ம முடியாத தகவல்கள் என் பெயர், அப்பா, அம்மா, சகோதரி, சகோதரனின் பெயர் அனைவரின் படிப்பு மற்றும் அப்பாவின் வேலை அம்மா குடும்பத்தலைவி இப்படியாக பல தகவல்கள் நான் தளர்ந்து போகும் நேரங்களில் அவ்வப்போது கேட்பதுண்டு ஏதோ ஒரு நம்பிக்கை வந்தது போல இருக்கும் ஒரு விதம் அவற்றில் சொன்ன விஷ்யங்கள் இந்த பதிவை எழுதும் வரை நடந்தே வந்திருக்கிறது இனிமேல் எப்படி என்பது தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.

    இந்த கைரேகை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!

    இனி சாதரணமாக ஒரு கைரேகை பார்க்கும் போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, விரலில் வளைவு கையில் உள் பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்க்கின்றனர்.

    என்னால் உங்களுக்கு அத்தனையும் சொல்லி தர இயலாது என்பதை விட தெரியாது என்பது தான் உண்மை ஆனாலும் அடிப்படையாக சில விஷயங்களை நாமே தெரிந்துகொள்ள முடியும். நான் கீழே இனைத்திருக்கும் படத்தின் வாயிலாக உங்களின் தலைவிதி, வாழ்க்கை, உங்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி, வெற்றியின் வாய்ப்பு, உடல் நலம், இதயம், திருமண வாழ்க்கை, குணாதிசயம், வழி நடத்தும் திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றின் ரேகைகளை தெளிவாக அறியும் வகையில் உள்ள படம் இனைத்திருக்கிறேன் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்.



    உங்களுக்கு வணிகத்திறமை இருக்கிறதா, கவித்திறமை இருக்கிறதா, பள்ளி, கல்லூரி நடத்தும் அல்லது ஆசிரியர் ஆகும் திறமை இருக்கிறதா என்பதையும் மேலும் சில விஷயங்களையும் கீழிருக்கும் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கான உறவு பலத்தை கீழிருக்கும் படம் வழி அறியலாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



    தங்களுக்கு எத்தனை மழலைச் செல்வங்கள் பிறக்கும் அது ஆணா, பெண்ணா என்பது வரை அறியமுடியும் என இதில் கரை கண்டவர்கள் சொல்கிறார்கள் அந்த ரேகை எந்த பகுதியில் இருக்கிறது என படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



    உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் கைரேகை வழி அறியலாம் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



    ஒரு மனிதனின் ஆயுட்காலமும் அறியமுடியும் என்கிறார்கள் இதன் நிபுனர்கள் அதற்கான ரேகையை பாருங்கள் உங்களுக்கும் புரியும். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



    எல்லாவற்றையும் விட இதுவும் உங்களை ஆச்சரியப்படுத்தும் உடலில் உள்ள நோய்களையும் கையை பார்த்து சொல்லமுடியும் என்கிறார்கள் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறும் நிறம் கருப்பு நிற புள்ளி போன்றவை நம் உடலில் இருக்கும் நோயை குறிக்குமாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



    என்ன நண்பர்களே வெறும் பட்த்தை மட்டும் இனைத்தால் எப்படி தெரிந்துகொள்ள முடியும் என்கிறீர்களா அதற்கு தான் உங்களுக்கு அடிப்படை புரியும் வகையில் மேலும் சில பாடங்கள் ஆங்கிலத்தில் பிடிஎப் புத்தகங்களாக கிடைக்கிறது கூகுலில் தேடினால் நிறைய கிடைக்கிறது உதாரணத்துக்கு இந்த கைரேகை படிக்கலாம்திறந்து படித்து பார்க்கவும்.

    என்ன நண்பர்களே உங்களுக்கு ஆச்சரியாமாக இருக்கிறதா நம் தளத்தில் இப்படித்தான் பலதரப்பட்ட தகவல்கள் அவ்வப்போது வரும். மேலும் ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் இதில் பார்க்கும் போது உங்களுக்கு இதில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு ஒத்து போகவில்லையா? இதை நினைத்து கவலைப்படவேண்டாம் இங்கு படித்ததை மறந்து விடுங்கள் நான் அப்படித்தான் எனக்கு ஒத்துப்போகும் விஷயங்களை மட்டுமே நம்புவேன் என்னில் ஒத்துப்போகாத விஷயங்களை இதெல்லாம் வெட்டி வேலை என ஒதுக்கி விடுவேன். பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    மேலும் சில ஜோதிட பதிவுகள்:

    பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து

    ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்

    நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்

    மேலும் சில படங்கள் : விக்கிபீடியா

    கைரேகை ஜோதிடம்: விக்கிபீடியா

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    18 Comments
    Comments

    18 Responses to “கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை”

    மாணவன் said...
    November 4, 2010 at 11:16 AM

    "கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை" தெளிவாக படங்கள் மூலம் அழகாக எழுதியுள்ளீர்கள் அருமை நண்பா,

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கைரேகை ஜோதிடம் பற்றி பார்க்கலாம்
    முயற்சி செய்துபார்க்கிறேன் சில விஷ்யங்கள் ஒத்துப்போகவில்லையென்றால் நீங்கள் சொன்னதுதான் “மேலும் ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் இதில் பார்க்கும் போது உங்களுக்கு இதில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு ஒத்து போகவில்லையா? இதை நினைத்து கவலைப்படவேண்டாம் இங்கு படித்ததை மறந்து விடுங்கள் நான் அப்படித்தான் எனக்கு ஒத்துப்போகும் விஷயங்களை மட்டுமே நம்புவேன் என்னில் ஒத்துப்போகாத விஷயங்களை இதெல்லாம் வெட்டி வேலை என ஒதுக்கி விடுவேன்”

    என்பதுதான் மிகச்சரியான கருத்து

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    உங்கள் மாணவன்


    மாணவன் said...
    November 4, 2010 at 11:26 AM

    ”ஒரு வரி கருத்து: அதிஷ்டம் என்பது வாழ்வின் ஒரு முறை தான் வரும்”
    அருமையான கருத்து அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று அப்படி அதிஷ்டம் ஒருமுறை கதவைத்தட்டும்போது நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.

    உங்களுக்கு மீண்டும் எனது தீபத்திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா

    ஜூனியர் ஜிஎஸ்ஆர் எப்படி உள்ளார் நலம் விசாரித்ததாக சொல்லவும்

    வாழ்க வளமுடன்

    நன்றி
    என்றும் நட்புடன்
    மாணவன்


    தர்சிகன் said...
    November 5, 2010 at 9:22 PM

    வணக்கம் நண்பரே..
    தீபாவளி வாழ்த்துக்கள்..

    மிகவும் நல்ல பதிவு.
    //...சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!...//
    இங்கு இது எனக்கு மிக பிடித்த கருத்து.....

    இருந்தபோதும்..
    நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆனால் காலையில் பத்திரிக்கை பார்க்கும் போது ஜோதிடம் சார்ந்த விடயங்கலை கட்டாயம் பார்ப்பேன் என்னை பொறுத்தவரை கடவுள் என்பது எமது உள் உணர்வெ இவ்வாரான ஜோதிடம் சார்ந்த விடயங்கலை படிக்கும் போது அது அதற்கு எற்றவாறு என்னை வழிநடத்துகின்றது.அதாவது குற்றம் செய்த மனம் குறுகுக்கும் என்பர்களே அது போலதான்.ஆனால் ஜொசித்துப் பார்த்தால் உள் உணர்வு(எனக்குள் இருக்கும் கடவுள்)கடவுளை நம்புகிறது போலதன் இறுக்கிறது. எதொ எனது அறிவினால் கடவுள் இருக்குரார இல்லையா என ஒரு முடிவுக்கு வர முடியவில்லை....
    உங்களால் முடிந்தால் இதற்கான முடிவை எழுதுங்கள்....


    ஜிஎஸ்ஆர் said...
    November 6, 2010 at 9:40 AM

    @மாணவன் நீங்கள் சொல்லவருவதை கொஞ்சம் தெளிவாக எழுதினால் எனக்கும் புரிந்துகொள்ள வசதியாய் இருக்கும், நீங்கள் எழுதி போது இருக்கும் மன நிலையும், படிப்பவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.

    சரியான புரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 6, 2010 at 9:42 AM

    @மாணவன் உங்களுக்கு வாழ்த்துகள் ஆனால் காலம் கடந்து விட்டது மன்னிக்கவும்.
    ஜூனியர் ஜிஎஸ்ஆர் நன்றாக இருக்கிறார் புரியாத பாஷையில் புது புது வார்த்தைகளில் என்னை திக்குமுக்காட வைக்கிறார். சந்தோஷத்தில் மிதக்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 6, 2010 at 9:46 AM

    @வருணன்புரிதலுக்கு நன்றி நண்பா எனக்கும் இதை பற்றி நீண்ட நாட்களாகவே எழுத விருப்பம் இப்பொழுது நீங்களும் கேட்டிருக்கிறிர்கள் நான் எழுதுகிறேன் எனக்கு தெரிந்த விஷயங்களை.


    ம.தி.சுதா said...
    November 6, 2010 at 12:50 PM

    சகோதரா நேற்று உடனேயே பார்க்க வந்தேன் அனால் தங்கள் கொமண்ட்ஸ் பெட்டி திறக்க மறுத்து விட்டது. (என் இணைய இணைப்பில் கோளாறால்)
    இது தங்களின் வித்தியாசமான பதிவுகளில் ஒன்று.. வாசிக்க மட்டும் தான் முடிந்தது. படம் கூட இறங்க வில்லை மீண்டும் வருகிறேன்...


    ம.தி.சுதா said...
    November 6, 2010 at 12:53 PM

    சகோதரா முதன்மை வருகையாளர் பெட்டி பெறுவது பற்றி அறிந்து விட்டேன். தங்களின் பொன்னான நேரத்தை எனக்கு செலவழிக்க சம்மதித்ததற்கு மிக்க நன்றி..


    ஜிஎஸ்ஆர் said...
    November 6, 2010 at 10:12 PM

    @ம.தி.சுதாஅது போல சந்தர்ப்பங்களில் நேரடியாக மின்னஞ்சல் அனுப்பி விடுங்கள். சரி எப்படியிருந்தாலும் தங்களுடைய பிரச்சினை சரியாகி விட்டால் சந்தோஷம் தான்.

    சரியான புரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 6, 2010 at 10:13 PM

    @ம.தி.சுதா நான் அப்பவே அதை பற்றி எழுதியிருப்பேன் எனக்கு இனைக்கும் போதே சில பிரச்சினைகளை சந்தித்தேன் அதனால் தான் தங்களுக்கு உடனே பதில் அளிக்க முடியவில்லை அதற்காக வருந்துகிறேன்.

    சரியான புரிதலுக்கு நன்றி


    Unknown said...
    November 7, 2010 at 3:19 PM

    good thankyou


    ம.தி.சுதா said...
    November 7, 2010 at 7:07 PM

    இந்தப் பதிவிற்கும் படத்திற்கும் நன்றாக சிரமப்பட்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.. வாழ்த்துக்கள்..
    ஃஃஃஃஃதங்களுக்கு உடனே பதில் அளிக்க முடியவில்லை அதற்காக வருந்துகிறேன்.ஃஃஃஃ இதிலென்ன வருத்தம்.. சகோதரா.. ஒரு உதவி தானே எல்லாம்.. தங்களின் நேர திட்டமிடலை நான் உணர்ந்தவனே...


    ஜிஎஸ்ஆர் said...
    November 8, 2010 at 12:01 AM

    @manoharவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    November 8, 2010 at 12:04 AM

    @ம.தி.சுதா நிச்சியமாய் நண்பரே இந்த மாதிரியான தகவல்கள் கொடுக்கும் போது சரியான தகவல்கள் கொடுக்கவேண்டும் அல்லவா நம் தளத்தில் பலரும் படிக்க வருகிறார்கள் யாராவது ஒருவர் ஜோதிடம் தெரிந்திருந்து தவறென்றால் நம் எழுத்தின் நம்பகத்தன்மையை குறைக்குமே நண்பரே!

    சரியான புரிதலுக்கு நன்றி


    Speed Master said...
    November 24, 2010 at 7:06 PM

    எனக்கு இதில் நம்பிக்கை கிடையாது
    just check
    பன்னி பார்த்தேன் என் கைரேகை நீங்கள் கொடுத்துல்ல எந்த மாதிரி மாறியிம் இல்லை
    Y?


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:12 PM

    @Speed Masterமொத்தமாக சில ரேகைகள் இல்லாவிட்டாலும் சில ரேகைகள் எல்லா கைகளிலும் இருக்கும்


    mathavan said...
    December 28, 2010 at 9:31 PM

    நண்பா வணக்கம் உங்கள் கைரேகை ஜோதிடம் மிக சிறப்பு நான் இலங்கைய சேர்ந்தவன் எனக்கு ஆங்கிலம் வாசிக்க தெரியா கைரேகை புகைப்படம் தமிழில் இல்லாதது தான் கஷ்டம நன்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 16, 2011 at 5:29 PM

    @mathavanமன்னிக்கவும் நண்பா நீங்கள் http://translate.google.com/ பயன்படுத்தி பாருங்கள் முழுமையான அர்த்தம் கிடைக்காது ஆனாலும் தகவலை தெரிந்துகொள்ள முடியும்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர