Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Jul 7, 2011

20

வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்தால் மந்தபுத்தி (அறிவியல் உண்மை)

  • Jul 7, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: எப்படி பாரட்டுவதென்று தெரியாமல் அறியாத விஷயத்தை குறை சொல்லாதீர்கள்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் எத்தனையோ நண்பர்கள், பெரியோர்கள் இதனை பற்றி தெரியாமல் இருக்க கூடும் ஆனால் நம் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள் டேய் வடக்கு பக்கம் தலை வைக்காதடா.. ஏன் என கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஆனால் அவர்கள் சொல்வதில் விஞ்ஞானம் இருக்கிறது அந்த விஞ்ஞான அறிவியல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    நமக்கு எல்லோருக்கும் தெரியும் நம் பூமியே சுற்றிலும் ஒரு காந்த படுகை இருக்கிறது நமது கிரகங்களும் (Planet) காந்த முனைவுகளை கொண்டுள்ளது நம் கிரகங்கள் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி காந்த துருவம் அமைந்திருக்கிறது இதை சாதரணமாக நம்மிடம் இருக்கும் திசை காட்டும் கருவியில் (Compass) பார்த்தாலே தெரியும். திசை காட்டும் கருவியின் மேல்முனை எப்போதும் வடக்கு நோக்கி இருக்கும் எதிர் முனை தெற்கு பகுதியை நோக்கியே இருக்கும் இந்த காந்த சக்தியை முன்பே விஞ்ஞானம் வளராத காலத்திலேயே நம் முன்னொர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் தெற்கு கிழக்கு பகுதிகளில் சரி சமமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது அதனால் நாம் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமால் எழுந்திருக்க முடியும்.

    நமது கிரகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது மேலும் சூரியனின் காந்த துருவம் கிழக்கில் இருந்து பூமிக்குள் வருகிறது இதன் அழுத்தம் நம் தலை வழியாக வெளியேற பார்க்கும் போது அதிகபடியான வெப்பம் எதிர் நோக்கி எழும்பும் போது நம் தலையில் ஒரு வித ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு நோய்வாய் ஏற்படும் நிலையும் வருகிறது. இதன் அடிப்படையிலேயே தான் வீட்டின் முகப்பு கூட வைக்கப்படுகிறது இது நம் இந்தியாவில் இதை கடைபிடிக்கிறார்கள் வேறு இடங்களில் குறைவாகவே இருக்கிறது.

    மேலும் இது பற்றிய ஆராய்ச்சியில் வடக்கு மற்றும் மேற்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் அதிகமாகவும் உடம்பில் சோர்வுத்தன்மையும் மூளையை மந்த புத்தி ஆக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இரவு உணவு எப்போதும் கஞ்சனை போல சாப்பிட வேண்டும் அதாவது மதிய உணவு உண்பது போல உண்ணக்கூடாது உறங்கும் போது கிழக்கு பக்கம் தலை வைத்து மேற்கு பக்கம் கால் நீட்டவும் அல்லது தெற்கு பகுதியில் தலை வைத்து வடக்கு பக்கம் கால் நீட்டவும். இதற்கு எதிர்மறையான நிலையில் உறங்குபவர்கள் எப்பொழுதும் எரிச்சலும் சோம்பேறித்தனமும், தன்னம்பிக்கையும் இழந்து காணப்படுவார்களாம்.

    சரி என்ன பெரிய தூக்கம் தூங்கின பின் நமக்கு என்ன தெரியபோகுது? எப்படி தூங்குனா தான் என்ன என கேள்வி கேட்பவர்களுக்கு உங்கள் இரவு தூக்கம் சரியில்லை என்றால் அன்றைய தினம் விடிந்ததும் உங்களால் அசூசையான நிலையை உணரமுடியும் பின்ன என்ன எடுத்ததுக்கெல்லாம் எரிச்சல் வரும் வீட்டில் சண்டை வரும் அதோடு அலுவகம் சென்றால் அங்கு சொல்லவே வேண்டாம் உங்கள் தூக்கம் தான் பிரச்சினைகளை விடுபட வைக்கும் சரியான தூக்கமின்மையும் மேலும் சில வியாதிகளை பரிசாக தரும் சரியான நேரத்தில் தூங்கி எழுபவரின் மூளைக்கும் மன உளைசல் அல்லது இன்ன பிற காரணங்களால் தூங்காதவர்களின் மூளையும் EGG (ELECTRICAL ACTIVITY IN THE BRAIN) என்கிற பரிசோதனையில் அதிகம் வித்யாசம் வருவதாக சொல்கிறார்கள்.

    நாம் சரியாக தூங்காத போது நம் உடலின் தசைகளும் ரிலாக்ஸாக ஆவதில்லையாம் மாறாக முறுக்கு கூடி அதனாலே முதுகு வலி, கை கால் வலி வரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது அதே போலவே தூங்குவதும் எழுந்திருப்பதும் ஒரு சரியான நேரத்தை வழமையாக்கி கொள்வது நல்லது அதனால் உடல் சரியான இயக்கதில் இருக்கவும் செய்யும்.

    வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்து படுத்தால் மந்த புத்தி சுகவீணம், தன்னம்பிக்கை குறைவு வரும்.

    தெற்கு கிழக்கு தலை வைத்து படுப்பதால் காந்த சக்தியால் நமக்கு இழப்பு ஏற்படுவதில்லை தேவையில்லாதா அசூசகமான நிலை வருவதில்லை.


    ஓவ்வொரு நபருக்கும் தூக்கத்திற்கான அளவுகள் இருக்கிறது.

    குழந்தைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்க வேண்டும்

    இளைஞர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேண்டும்

    வயது வந்தவர்கள் 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.

    கர்ப்பமான பெண்கள் வழமையாக தூங்கும் நேரத்தை விட மேலும் சில மணி நேரங்கள் உறங்குவது நல்லது.


    நண்பர்களே ஒரு அன்பான வேண்டுகோள் இதற்கு பெயரும் காதலாமே! பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.

    மேலும் தகவல்களுக்கு wikipedia

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Jun 16, 2011

    25

    தமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்

  • Jun 16, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

    வணக்கம் நண்பர்களே இந்த புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் திரு.ராஜ்மோகன் அவர்களின் http://doctorrajmohan.blogspot.com தளத்தில் இருந்து எடுத்து தொகுக்கபட்டிருக்கிறது, குழந்தைகள் இல்லாத வீடில்லை குழந்தையை விரும்பாதவர்களும் இருக்க முடியாது அதனால் தான் என்னவோ முன்பே நம் மூதாதையர்களும் அவர்களை பற்றி குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்! என்பதாகவும் இன்னும் ஒரு படி மேலே போய் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாகவும் ஒப்பிட்டிருக்கின்றனர் இவை எதுவும் பொய்யில்லை எல்லாம் நிதர்சன உண்மைகள் இப்படிப்பட்ட நம் குழந்தை செல்வங்களை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி அவர்களை ஆரோக்கியத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் நமக்கு வளர்க்க ஆசை தானே ஆனால் முன்பு போல இந்நாட்கள் இல்லை நமது தற்போதையை உணவுமுறையும் சுற்றுச்சூழலும் பல்வேறு விதமான நோய்களை நமக்கும் நம் குழந்தை செல்வங்களுக்கும் தந்து கொண்டிருக்கிறது இந்த சூழலில் திரு.ராஜ்மோகன் அவர்களின் பல்வேறு தலைப்புகளில் குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகளை எளிய் தமிழில் எழுதியிருக்கிறார் அவசியம் நாம் இதை தெரிந்துகொள்வது நல்லது அந்த நல்லெண்ணத்துடனேயே இது வரை அவர் எழுதிய கட்டுரைகளை புத்தமாக தொகுத்திருக்கிறேன்.

    திரு.ராஜ்மோகன் அவர்கள் பின்வருமாறான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சில இடங்களில் மட்டும் நான் தலைப்பை மாற்றியிருக்கிறேன் ஓரு சில தகவல்கள் மற்றும் தலைப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்கும் மற்றவை எல்லாம் முழுமையான தமிழில் தான் தரப்பட்டிருக்கிறது இனி குழந்தை மருத்துவம் (Kulanthai Maruththuvam) புத்தகம் தரவிறக்கவும்.

    1. தடுப்பூசி கால அட்டவணை
    2. படுக்கையில் சிறுநீர் கழித்தல்
    3. வயிற்றில் குடல் புழு
    4. வேலைக்கு செல்லும் தாய்
    5. குழந்தைகள் வளரும் வேகம்
    6. குழந்தைகள் தூங்கும் நேரம்
    7. குண்டு குழந்தைகள்
    8. மிகை சுட்டி குழந்தைகள்
    9. குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா
    10. மூச்சு விடாமல் அழும் குழந்தை
    11. அடம் பிடிக்கும் குழந்தைகள்
    12. மண்ணை மட்டும் தின்றால்
    13. ஜுர வலிப்பு
    14. விடாமல் அழும் குழந்தை
    15. BABY WALKERS உபயோக படுத்தலாமா
    16. சூப்பான் தேவையா
    17. விரல் சப்பும் குழந்தை
    18. விமானத்தில் போகும் குழந்தைகள்
    19. அடிக்கடி குழந்தைகளுக்கு வரும் ஜுரம்
    20. NIMESULIDE ஆபத்து
    21. குடல்வால் அழற்சி
    22. காய்ச்சல் இன்புளூயன்சியா (H1N1)
    23. பன்றிக்காய்ச்சல்
    24. வைரஸ்க்கு எதிரான மலிவான வலியில்ல மருத்துவம்
    25. தேள் கடி
    26. தாய்ப்பால் சில உண்மைகள்
    27. வயிற்று போக்கு
    28. குழந்தைகளின் உயரம் & எடை
    29. இரத்த சோகை
    30. பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது
    31. குடற் காய்ச்சல்,குடற் புண் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல்
    32. தாய்ப்பாலால் தாய்க்கும் பல நன்மைகள்
    33. குழந்தைகள் பார்வையை பாதுகாக்க
    34. மாறுகண் வரமா? சாபமா?
    35. டான்சில் என்பது ஒரு தேவையற்ற கட்டி அல்ல
    36. குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
    37. குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம்
    38. குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி
    39. குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல்
    40. குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?
    41. உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க
    42. குழந்தைகளுக்கு வரும் காது வலி
    43. ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி
    44. டெங்கு ஜுரம் பயங்கரம்
    45. குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது
    46. ப‌ன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து போடும் முறை
    47. குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி
    48. சோர்வடைய காரணங்கள் 10
    49. மெட்ராஸ் ஐ-குறித்த உண்மைகள்
    50. ஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல
    51. பிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்
    52. மஞ்சள் காமாலை மஞ்சள் நிறமே
    53. தொப்புள் கொடி
    54. குழந்தைகளில் IQ திறனை வளர்ப்பது எப்படி
    55. ஸ்கூல் பேக் சிண்ட்ரோம்
    56. குழந்தைகளுக்கான இனை உணவு எப்பொழுது தரலாம்
    57. குழந்தைகளுக்கு புரதமாவு எப்போது எப்படி தரலாம்
    58. Ear Canal கிளீன் செய்வது எப்படி
    59. விளையாட்டும் உடல் நலமும்
    60. பிறந்த குழந்தையின் பிறவி பற்கள்
    61. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
    62. பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது
    63. தேன் பற்றியதான ஆயுர்வேதம்
    64. குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தரலாம்

    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட குழந்தை மருத்துவத்திற்கான தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ள புத்தகத்தை மின்னஞ்சல் வழியாகவோ அல்லது இன்ன பிற வழிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    மேலும் நண்பர்கள் கவணத்திற்கு நம் தளம் வழியாக மின்னஞ்சல் அனுப்பும் போது தயவுசெய்து தாங்கள் சொல்ல நினைப்பதை அல்லது கேட்க நினைப்பதை தெளிவாக இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் குறிப்புகள் எனக்கு புரிந்தால் மட்டுமே நான் தங்களுக்கு பதில் அளிக்க முடியும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Nov 14, 2010

    15

    தமிழில் மருத்துவ தளங்கள் II

  • Nov 14, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

    வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே தமிழில் மருத்துவ தளங்கள் I என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த பதிவிலேயே எனக்கு தெரிந்த தளங்கள் இவையெனவும் இதைப்போல வேறு மருத்துவ தளங்கள் இருந்தால் தெரியப்படுத்த சொல்லியிருந்தேன் சமீபத்தில் என்னுடைய பதிவில் இருவர் சில மருத்துவ தளங்களை சுட்டிக்காட்டியிருந்தனர் பின்வருமாறு.

    நீச்சல்காரன் said...

    http://siddhavaithiyan.blogspot.com/
    http://abidheva.blogspot.com/

    Please add it to your list


    eegarai said...

    தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள். படிப்பவர்கள் தமிழில் உள்ள மருத்துவ தளங்களே மொத்தம் நான்குதான் என்று நினைத்துவிடப் போகிறார்கள்! கூகிளில் ’மருத்துவம்’ எனத் தேடிப்பாருங்கள். எவ்வளவு தளங்கள் உள்ளன என்பது தெரியும்!

    “என் நண்பர்களின் மருத்துவத் தளங்கள்” என்ற தலைப்பே பொருத்தமானதாகும்!


    பழைய பதிவிலேயே அப்டேட் செய்தால் புதிதாய் வருபவர்களுக்கு தெரிவதில்லை அதே நேரத்தில் பழைய வருகையாளர்களுக்கும் நாம் தான் இதை முன்னே பார்த்துவிட்டோ என்கிற நினைப்பில் கவணிக்காமல் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது அதனால் தான் இதை தமிழில் மருத்துவ தளங்கள் II என எழுதுகிறேன். இனி வருங்காலத்தில் நம் தளத்தின் முகப்பிலேயே இருக்கும் தமிழில் மருத்துவம் என்பதை தெரிவு செய்தால் இனி வரும் அப்டேட் பதிவுகளை எளிதாக நீங்கள் படிக்க முடியும்.

    மதிப்பிற்குறிய ஈகரை தளத்தில் எல்லாவிதமான பொதுமருத்துவம், யோகா, சித்த மருத்துவம், பாலியல் சம்பந்த மான பிரச்சினைகள் சம்பந்தமான எல்லா தகவல்களை பதிகிறார்கள் அங்கு இதற்கெனெ ஒரு போரமாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் சந்தேகத்தை அங்கு கேள்வியாக கேட்கலாம் தள நிர்வாகிகளும் பதில் அளிக்கிறார்கள் அல்லாமல் நம்மை போன்ற நண்பர்களும் அனுபவத்தில் பதிலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் எல்லாம் தமிழிலேயே இருப்பதால் நம்மால் கேள்வியை எளிதாக கேட்க முடியும் பதிலையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். அன்பின் நண்பர்களே தளம் பயனுள்ளதென்றால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    ஈகரை தளம் செல்ல படத்தை கிளிக்கவும்




    அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.தேவன் மாயம் அவர்களின் தளத்தில் பொது மருத்துவ தகவல்கள் பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம், மின்னஞ்சல் வழி சந்தேகம் கேட்கும் வசதி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் தளத்தில் மருத்துவம் என்றல்லாது பிற தகவல்களையும் பதிகிறார்கள் ஆனால் மருத்துவத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என நினைகிறேன். தளத்தை படித்து பாருங்கள் பயனுள்ளதென நீங்கள் நினைத்தால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.தேவன் மாயம் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.கண்ணன் அவர்களின் தளத்தில் சிறு நீரக பிரச்சினை குறித்த தகவல்களை மிக எளிமையாக தருகிறார்கள் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவரிடம் கேட்கும் வசதி இல்லையென்றே நினைக்கிறேன் ஆனால் அதே நேரத்தில் மின்னஞ்சல் தொடர்பு வசதி கொடுத்திருக்கிறார்கள் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்களா என்பதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை இருந்தாலும் சிறு நீரக பிரச்சினை குறித்தான தகவல்களை நம்மால் அறிந்துகொள்ள தளம் உதவியாய் இருக்குமென்றே நம்புகிறேன். அன்பின் நண்பர்களே தளம் பயனுள்ளதென்றால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.கண்ணன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.குருசாமி சிவராமன் சித்த மருத்துவம் குறித்து எழுதி வருகிறார்கள் மிக சமீபத்தில் தான் எழுத தொடங்கியிருப்பார்கள் என நினைக்கிறேன் சித்த மருத்துவ தகவல்களை மிக எளிமையாக தருகிறார்கள் படித்து பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.குருசாமி சிவராமன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    என்ன நண்பர்களே நான் எனக்கு தெரிந்த தளங்களை பகிரிந்திருக்கிறேன் இது போல் சிறந்த தமிழ் மருத்துவ தளங்கள் இருந்தால் அவசியம் கருத்துரையில் தெரிவிக்கவும் நான் அதை அப்டேட் செய்துவிடுகிறேன் அனைத்து தளங்களின் முகவரிகளும் ஒரு இடத்தில் இருந்தால் எல்லொருக்கும் மருத்துவ சந்தேகங்கள் தீர உதவியாய் இருக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 10, 2010

    12

    தமிழில் மருத்துவ தளங்கள் I

  • Sep 10, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கடவுள் தீயவர்களை மன்னித்து விடுகிறார் ஆனால் எப்போதும் அல்ல.

    வணக்கம் நண்பர்களே நான் இங்கு சில தமிழ் மருத்துவ தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் ஒரு வேளை இந்த தளங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்க்ள் சிலர் இருப்பார்களேயானால் அவர்களுக்கு உதவட்டுமே என்கிற நோக்கம் மட்டுமே. இந்த காலத்தில் நிறைய விதமான நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன ஒரு விதத்தில் நம் உணவு முறையும் இதற்கு காரணம் இது யாவருக்கும் தெரியும் ஆனாலும் நாம் நம்மை மாற்றிக்கொள்வதில்லை. நாம் எடுத்த்தெற்கெல்லாம் நாம் மருத்துவமனை செல்லமுடிவதில்லை ஆனால் நமக்கு அந்த குறையை போக்குவதற்கென்றே எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் அவர்களுக்கு இருக்கும் நேரமின்மையிலும் தமிழில் மருத்துவ தகவல்களை என்னைப்போல சராசரி மனிதனுக்கும் புரியும் வகையில் மருத்துவ தகவல்களை எழுதுகிறார்கள்.

    மதிப்பிற்குறிய நண்பர் திரு.துமிழ் அவர்களின் தளத்தில் எல்லாவிதமான பொதுமருத்துவம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் பதிகிறார் அதுமட்டுமல்லாமல் நமக்கு இருக்கும் சந்தேகத்தையும் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கும் பதில் அளிக்கிறார் கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலும் அவர் அளிக்கும் தகவல்கள் நமக்கு புரியும் வகையில் இருக்கும். அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.துமிழ் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக மதிப்பிற்குறிய நண்பர் திரு.ராஜ்மோகன் அவர்களின் தளத்தில் குழந்தைகளுக்கன மருத்துவ தகவல்கள் பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம் ஆனால் இன்னும் அவர்கள் மின்னஞ்சல் வழி சந்தேகம் கேட்கும் வசதி தருவார்களேயானால் குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவ தளம் என்பதில் சந்தேகமில்லை. அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.ராஜ்மோகன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக தமிழ் கன்சல்ட் தளம் இங்கு நான்கு மருத்துவர்கள் நமக்கு உதவி செய்வதெற்கென்றே இருக்கிறார்கள் இவர்களும் இந்த மருத்துவ சேவையே இலவசமாகவே செய்கிறார்கள் இவர்களை பொறுத்த வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கலாம் ஆனால் தமிழையே அவர்கள் முதன்மைபடுத்துகிறார்கள் ஆனால் சில இடங்களில் பதில் முழுவதையும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அது ஒரு குறையாகத்தான் நான் நினைக்கிறேன் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்கள் புரிந்துகொளவதில் பிரச்சினையும் இருக்கும் ஆனால் அந்த குறையை களைந்தால் இது சிறந்த தமிழ் மருத்துவ தளம் தான். அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    தமிழ் கன்சல்ட் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக ஆயுர்வேத மருத்துவ தகவல்களை ஆயுர்வேத மருத்துவம் எனும் தளத்தில் பொதுவான மருத்துவ தகவல்களை பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம் மின்னஞ்சல் தொடர்பு கொடுத்திருக்கிறார் அவரின் இலட்சிய கணவாக ஆயுர்வேத 50 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அமைக்க விரும்புவதாக எழுதியிருக்கிறார், பயன்படுத்தி பாருங்கள் சிறந்த தளமாக இருப்பின் அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    ஆயுர்வேத மருத்துவ தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    என்ன நண்பர்களே நான் எனக்கு தெரிந்த தளங்களை பகிரிந்திருக்கிறேன் இது போல் சிறந்த தமிழ் மருத்துவ தளங்கள் இருந்தால் அவசியம் கருத்துரையில் தெரிவிக்கவும் நான் அதை அப்டேட் செய்துவிடுகிறேன் அனைத்து தளங்களின் முகவரிகளும் ஒரு இடத்தில் இருந்தால் எல்லொருக்கும் மருத்துவ சந்தேகங்கள் தீர உதவியாய் இருக்கும்.

    தமிழில் மருத்துவம் II

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர