Mar 23, 2010

9

வாழத்தான் வாழ்க்கை

 • Mar 23, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து:நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில். (பிகேபி தளத்தில் படித்தது)

  நாம் பிறந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு தருணங்களிலும் எத்தனை எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்,சந்தோஷம்,துக்கம் என எல்லாவிதமான அனுபவங்கள் கிடைத்தாலும் நம்மை அதிகம் பாதிப்பது ஏமாற்றமும்,துக்கம் கலந்த வலியும்தான், நாம் ஒரு நாளாவது நாம் நாமாகவே இருக்கிறோமா என கேட்டால் நிச்சியாமாய் இல்லயென்று சொல்வதை தவிர வேறு வழியில்லை,எதிர்கொள்ளும் ஒவ்வொரு காரியங்களிலும் சந்தர்பங்களிலும் நாம் நாமாய் இருப்பதை விட மற்றவர்களுக்காக வாழ்வது(நடிப்பது) தான் இன்று நடக்கிறது சரி மற்றவங்களுக்காக வாழ்வது நல்ல காரியம்தானே அதை ஏன் தவறு என சொல்லனும்,நீங்க யாருமில்லாத பத்து நபரை உங்கள் கவனிப்பில் பராமரித்து வருகிறீர்கள் அவர்களுக்கு எல்லமுமாய் நீங்கள் இருந்து உங்கள் நேரத்தையும் கணிவான அன்பையும் அவர்களுக்காக மாற்றி வைத்தீர்களேயானல் அது வரவேற்க வேண்டியதுதான் அப்படி இல்லாமல் வெறும் புகழ்ச்சிக்காக சமுதாயத்தில் நானும் உன்னதமான நிலையில் இருக்கிறேன் என உங்களை வெளிப்படுத்துவதற்காக போடும் நாடகங்கள் எத்தனை நாட்களுக்கு தாக்குபிடிக்கும் என நம்புகிறீர்கள்? அதனால் என்ன பெரிய நிம்மதியையோ சந்தோஷத்தையோ அடைந்துவிடமுடியும்?

  நாம் அன்றாடம் பார்க்கதான் செய்கிறோம் எத்தனையோ மனிதர்கள் பேருக்காகவும் புகழ்ச்சிக்காகவும் பந்தாவாக நான் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என மேடையில் அளந்து விடுவார்கள், வறுமையை ஒழிக்க வேண்டும் அதற்கு என்னால் முடிந்தததை தருகிறேன் என மக்கள் மத்தியில் பெரிதாக பேசுவார்கள் என் விருப்பமே வறுமையை ஒழிப்பது தான் அதோடு மட்டுமல்லாமல் ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களையும் சமூகத்தில் பெருமைக்குறியவர்களாக மாற்றுவது தான் என் நோக்கம் என்பார்கள் மக்கள் கூட்டம் கலைந்து அவர்களிடம் நன்கொடை புத்தகத்தை கொண்டு சென்றால் அய்யோ இன்று நான் பணம் எடுத்துவரவில்லை நாளை வீட்டில் வந்து வாங்கி செல்லமுடியுமா என பல் இளித்து பேசுவார்கள்(வீட்டிற்கு பணம் வாங்க செல்பவனின் நிலைமயை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்) இல்லையென்றால் காசோலை தருகிறேன் பேர்வழி என ஒரு தொகையை எழுதி கொடுப்பார்கள் வங்கிக்கு சென்றால் தான் பணம் இல்லை என திரும்பி வரும் இதற்கெல்லாம் ஆதரமாக தினம் ஏதாவது ஒரு செய்த்தித்தாளில் பிரமுகர் கொடுத்த போலி காசோலை என வந்துகொண்டுதான் இருக்கிறது நான் கேக்கிறேன் எதற்காக இந்த நாடகம் யாரை சந்தோஷப்படுத்த உங்களை நீங்களே சந்தோஷப்படுத்துவா?

  இன்னும் சிலர் இருக்கிறார்கள் இவர்கள் முன்னெச்சரிக்கை பேர்வழி எப்பொழுதும் இப்ப இருக்கிற நிமிஷம் மட்டுமே நமக்கு சொந்தம் என தெரியாத மூடர்கள் இவர்கள் எப்பொழுதும் எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே சிந்திப்பாக சொல்லி நிம்மதியை இழந்து தானும் நிம்மதியாய் வாழாமல் தன் உடன் இருப்பவர்களின் நிம்மதியையும் கெடுத்துவிடுவார்கள் சரி கொஞ்சம் தெளிவாகவே இதை பார்ப்போம் ஒருவர் தனக்கு நோய் வந்துவிடுமோ என வராத நோய்க்காக(முன்னெச்சரிக்கை உணர்வாம்)வைத்தியம் பார்ப்பது அய்யோ நான் இன்னும் கொஞ்ச நாளில் இறந்துவிடுவேன் என புலம்புவது அப்புறம் ஒருவர் அவருக்கு இரு பெண்குழந்தைகள் வயது மூன்று தான் ஆகிறது அவர்கள் படித்து வளர்ந்து திருமணம் செய்வதற்கு எத்தனையோ ஆண்டுகள் இருக்கிறது அதற்காக நான் சிக்கனமாய் இருக்கவேண்டும் என சொல்லி தானும் கவலைப்பட்டு தன் குடும்பத்தையும் சிக்கனம் என்ற பெயரில் கொடுமை செய்வது சரியா? நான் கேக்குறேன் நாம உயிரோடு இருந்தாதானே இதெல்லம் நடக்கும் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையமுடியும்.

  வேறு சிலர் இவர்களும் முன்னர் பார்த்தவர்கள் போலத்தான் ஆனால் இது ஒரு வகை நோய் என்று தான் தோன்றுகிறது வீட்டை பூட்டிவிட்டு வெளியில் கிளம்புவார்கள் போகும்பொதே பூட்டை இழுத்து பார்த்துவிட்டுதான் கிளம்பிபோவார்கள் கொஞ்சதூரம் சென்றதும் மீண்டும் இவர்களுக்கு நாம் கதவை சரியாக பூட்டினோமா என சந்தேகம் வந்து விட்டிற்கு திரும்பி வந்து அலுவலகம் செல்வார்கள் அங்கு சென்ற பின் தான் தெரியும் மேலாலர் சரிபார்க்க சொல்லியிருந்த முக்கியமான அலுவலக கோப்பை முந்தைய நாள் வீட்டிற்கு எடுத்துசென்று இன்று அதை மறந்து அலுவலகம் வந்திருப்பது பார்த்தீர்களா அதீத முன்னெச்சரிக்கை உணர்வின் நிலைமையை!

  வாழ்க்கையில் முன்னெச்சரிக்கை உணர்வு தப்பா அப்படினு கேக்காதீங்க முன்னெச்சரிக்கை வேனும் அதுக்காக நான் எப்பவும் முன்னெச்சரிக்கையோடு தான் இருப்பேன் என அடம்பிடிக்காதீர்கள் வாழ்க்கையை எதார்த்தமா வாழப்பழகுங்கள் பிரச்சினைகள் வரும் பொழுது அதை பற்றி சிந்தியுங்கள் சந்தோஷமாக போய்கொண்டிருக்கும் வாழ்க்கையில் இல்லாத பிரச்சினையை குறித்து அதற்கு தீர்வு காண்கிறேன் என இருக்கும் சந்தோஷத்தை தொலைத்துவிடாதீர்கள் எனக்கு தெரிந்த ஒருவர் எந்த பொருள் வாங்கவேண்டுமென்றாலும் அது குறித்து பலரிடம் கேள்வி கேட்டு (நல்ல பொருளாக வாங்க வேண்டுமாம்) விலை அறிந்து சரியான சில்லரையோடு (சில்லரையை மாற்றிக்கொண்டு செல்வார் ஒருவெளை கடையில் சில்லரை இல்லாமல் இருக்கலாமம்) கடைக்கு செல்வார் ஒரு வேளை விலையில் பத்து ரூபாய் குறைந்து இருந்தால் அவருக்கு மிக அதிஷ்டமுள்ளதாக சந்தோஷப்பட்டுக்கொள்வார் மாற்றி ஒருவேளை ஒரு ரூபாய் கூடி இருந்தாலும் கடைக்காரரிடம் கேள்விகள் கேட்டு சண்டை போடுவார், சந்தோஷத்தையும் இழப்புகளையும் ஒரு போல எடுத்துகொள்ள பழகவேண்டும்.

  அதுக்காக மகன் தேர்வில முதல் மதிப்பென் பெற்றிருக்கிறான் அது சந்தோஷமான தருணம் அந்த நேரத்தில் அதை எளிதாக எடுத்துகொள்கிறேன் பேர்வழி என இருந்தால் பார்ப்பவர்கள் மூளை இல்லையோ என நினைத்துவிடுவார்கள் ஒரு சந்தோஷம் உங்களை மட்டுமல்லாமல் உங்களை சுற்றி இருக்குறவங்களையும் சந்தோஷப்படுத்துமானால் அந்த விஷயங்களை கொண்டாடுங்கள், வீட்டில் ஒரு வயதான பாட்டி இறந்து விட்டார் அதற்காக என்ன செய்வது மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருப்பதா இல்லை நான் சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரு போலதான் எடுத்துகொள்வேன் என இருப்பதா இந்த நேரத்தில் தான் கொஞ்சம் யோசிக்கவேண்டும் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் இயற்கையான ஒன்று அதை உணருங்கள் சின்ன சின்ன சந்தோஷத்தையும் பெரிசா கொண்டாடுங்க பெரிய துக்கத்தையும் எளிமையாக எடுத்துக்க பழகுங்க.

  இதில் இன்னொரு ரகம் இருக்கிறது மற்றவ்ர்களை திருப்திபடுத்துவதற்காக அவர்களுக்கு ஜால்ரா போடுவது ஒரு விஷயம் பிடிக்குது இல்லை பிடிக்கல இப்படி எதுவுமே இவங்களுக்கு இல்லை எப்பவும் மற்றவர்களை பற்றி அறிவதிலும் அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொளவதிலும் தான் இவர்களுக்கு சந்தோஷம் வாழ்க்கையில் உயர்வு வேண்டும் என்பதற்காக யார் காலையும் பிடிப்பார்கள் தான் யாருக்கும் உதவி செய்ய தயங்கமாட்டேன் என்பார்கள் கவனித்து பார்த்தால் தெரியும் இவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் என்ன கிடைக்கும் இவரிடம் எப்படி காரியம் சாதிப்பது என்கிற என்னமே மேலோங்கி இருக்கும் இதுக்கு பேருதான் வாழ்க்கையா? நீ உன்னை நம்பு உழைப்பை நம்பு நேர்மையாய் இருக்க பழகு மற்றவர்களிடம் நல்லவன் போல நடிப்பதில் என்ன கிடைச்சுரும் அது நிரந்தரமா?

  சினிமா பாட்டுல வர மாதிரி வாழ்க்கையை எட்டு எட்டு பிரிக்கலைனாலும் வாழ்கிற நாட்களை மூன்று பகுதியா பிரிக்கலாம் அது நீங்க நினைக்கிற மாதிரி குழந்தைபருவம்,இளமைபருவம்,முதுமைபருவம் என்பதல்ல நான் இதை வேறுவிதமாகத்தான் பார்க்கிறேன் 1.அறியா பருவம் 2.தேடும் பருவம் 3.அமைதி பருவம்(நாமளும் எழுதுறோம்ல அதனாலதான் இப்படி)இந்த அறியா பருவம் என்பது ஒரு வயசு முதல் இருபது வயசு வரையாக கணக்கெடுத்துக்குவோம் இது மகிழ்ச்சியான காலகட்டம் இதுல எதை பத்தியுமே கவலைபடமா பிடிச்சமாதிரி இருக்குறது காரணம் தப்பு பண்ணினாலும் சரி என்ன பன்றது சின்ன வயசு பிள்ளைங்க ஏதோ அறியாத வயது என்ன பன்றதுனு மன்னிச்சுவிட்டுருவாங்க இந்த நேரத்தில இவங்க உலமே தனிதான், அடுத்து தேடும் பருவம் இது ஒரு ஆபத்தான பகுதி இதுலதாங்க அதாவது இருபத்திரண்டு வயசு முதல் ஐம்பது வயது வரை இந்த காலகட்டம் தான் இதுலதான் பணம்,பொருள் ,செல்வாக்கு ஆஸ்தி, அந்தஸ்து இப்படி ஒவ்வொன்று மேலையும் வெறிகொண்டு தேடித்திரியும் நாட்கள் ஆனா பாருங்க இதுல எதுவுமே நாம இறந்த கூட வரப்போறதில்லை ஆனாலும் ஆசை யாரை விட்டது இந்த நேரத்திலதான் பொறாமை பொய் பித்தலாட்டம் என சகல விஷயங்களும் நடக்கும் தவறு என தெரிந்தும் அந்த தவறை சரியாய் செய்வதாய் நினைத்து மற்றவர்களையும் நம்ப வைத்து தானும் கெட்டுப்போவது, அடுத்து அமைதி பருவம் முதல் இரண்டு பருவங்களில் செய்த அனைத்தையும் நினைத்து அசைபோடுவது ஆனால் பாருங்க இந்த காலகட்ட்தில் தான் ஞானம் பொறக்கும் செய்த தவறுகள் நினைவுக்கு வரும்(சாகப்போற காலத்துல) நாம் வாழ்க்கையை சரியாக முறையாக வாழ்ந்திருக்கவில்லையென்றால் பெத்த பிள்ளைங்க கிட்ட கூட பாசம் கிடைக்காது அவ்வளவு ஏங்க சாப்பிட சோறு கிடைக்காது.

  எல்லாமே முடிஞ்ச பின்னால ஞானம் வந்து என்ன பன்ன? வாழ்க்கையை வாழும்போதே நல்லவனாய் நேர்மையானவனாய் வாழனும் ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவச்சு வாழ பழகுங்க நம்மை கடந்த நிமிஷங்களும் வரப்போகிற நிமிஷங்களும் நம்ம கையில் இல்லை இந்த நிமிஷம் இந்த நொடி உங்கள் கைகளில் தான் இருக்கிறது இப்ப இருக்குற வாழ்க்கையை முழுசா அனுபவிக்க பழகுங்க முடிந்தளவுக்கு சந்தோசமா இருங்க உங்கள் சந்தோஷம் மற்றவர்களையும் தொற்றிக்கொண்டால் அதுதான் உங்கள் வெற்றி கோடிகள் இருந்தாலும் மனதில் சந்தோஷமில்லையென்றால் அது வெறும் நரகமாத்தான் இருக்கும் ஒவ்வொரு குட்டி விஷங்களுக்கும் அய்யோ அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் கேலி பேசுவார்களோ என என்னி மற்றவர்களை பார்த்து வாழ்வதில் வாழ்க்கையின் அர்த்தம் இல்லை உங்களுக்கு பிடிச்சமாதிரியும் இல்லாம மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரியும் இல்லாம இருக்குறதுல யாருக்கு என்ன சந்தோஷம்?வாழ்க்கையின் கடைசி தருணத்தில் அய்யோ அப்படி வாழ்ந்திருக்கலாமே எனக்கு பிடித்தைகூட நான் செய்யவே இல்லையே என சாகும் நேரத்தில் வருத்தபடுவதோ யோசிப்பதிலோ இழந்த வாழ்க்கையை திரும்பவும் மீட்டெடுக்க முடியுமா?

  நடைபாதையில் இருக்கும் பிச்சை எடுப்பவர்களை பாருங்கள் அவர்களுக்குள்ளாக நடக்கும் சம்பாஷைனைகளை பாருங்கள் (யாரும் தான் கவனிப்பதில்லையே) அவர்களின் சந்தோஷம் புரியும் அவர்களின் தேவையை அவர்கள் சரியாக உணர்ந்திருக்கிறார்கள், நாம் தான் அப்படி இல்லையே நமக்குதான் தேவைகள் அதிகரிக்குமே தவிர போதுமென்ற மனப்பான்மை வருவதில்லையே அப்புறம் எப்படி மனதுக்குள் சந்தோஷம் வரும், இன்னும் சிலர் சிரிக்கவே யோசிப்பார்கள் (காரணம் அவர்கள் பெரிய மனிதர்களாம்) மற்றவர்கள் பார்த்துவிடுவார்களே! உங்களுக்கும் தெரியும் சிரிப்பை விட மிகப்பெரிய மருந்து உலகில் இல்லை

  இந்த வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை என்னனு புரிஞ்சு வாழ பழகுங்க இந்த நிமிஷம் உங்க கைகளில் இருக்கு அது போனதுக்கு அப்புறம் யோசிப்பதில் பலன் இல்லை ஒவ்வொரு நொடியையும் அனுபவிச்சு வாழ பாருங்க ,அதிகமா யோசிக்கிறேனு மன அழுத்தம் வந்தா அது கொலஸ்ட்ரால் ஆக மாறும் கொலஸ்ட்ரால் கூடினால் இரத்த அழுத்தம் அதிகமாகும் அப்புறம் மாத்திரை மருந்து சாப்பிடவேண்டிவரும் இதெல்லாம் எதுக்குங்க மனதை சந்தோஷமா வச்சுக்கங்க ஓஷோ ரஜினிஸ் சொன்னமாதிரி உங்களை நீங்களே கொண்டாடுங்க.

  (உங்கள் ஆரோக்கியதிற்கு தண்ணீர் அதிகம் அருந்துங்கள்,தினமும் நடைபயிற்சி செய்யுங்கள் உங்கள் மனம் புத்துணர்வு அடைவதை நீங்களே உண்ர்வீர்கள்)

  குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

  வாழ்க வளமுடன்


  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  9 Comments
  Comments

  9 Responses to “வாழத்தான் வாழ்க்கை”

  ம.தி.சுதா said...
  October 31, 2010 at 11:08 PM

  ஃஃஃஃஃஃஎத்தனையோ மனிதர்கள் பேருக்காகவும் புகழ்ச்சிக்காகவும் பந்தாவாக நான் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என மேடையில் அளந்து விடுவார்கள், வறுமையை ஒழிக்க வேண்டும் அதற்கு என்னால் முடிந்தததை தருகிறேன்ஃஃஃஃ உண்மை தான் இவர்கள் (முக்கியம் அரசியல்வாதிகள்) சமுதாயத்திற்க கிடைத்த சாபக் கேடுகள்...


  ஜிஎஸ்ஆர் said...
  November 1, 2010 at 11:48 AM

  @ம.தி.சுதாஇப்போது தான் என் பழைய பதிவுகளை பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன் நன்றி நண்பா

  அரசியல்வாதிகள் நாட்டின் சாபக்கேடுகள் இந்த நிலை மாறவேண்டும். என்று மாறுமோ இந்த நிலை? கேள்வியிலே வெந்து தனியுமே இந்த பிண்ட சிலை


  சிகப்பு மனிதன் said...
  November 30, 2010 at 5:20 AM

  \\ சிரிப்பை விட மிகப்பெரிய மருந்து உலகில் இல்லை


  .நானும் ஓர் மருத்துவர் தான் !


  ஜிஎஸ்ஆர் said...
  December 2, 2010 at 11:15 PM

  @சிகப்பு மனிதன்சந்தோஷம் தாங்கள் மருத்துவரா? மகிழ்ச்சியளிக்கிறது தஙகளை போன்ற நண்பர்கள் நட்பு கிடைத்தது சந்தோஷம்


  சிகப்பு மனிதன் said...
  December 2, 2010 at 11:49 PM

  .நண்பரே !

  .நான், ஒரு கணினி-மேற்படிப்பை, படிக்கும் மாணவன் ! (mca student - final year)

  .சிரிப்பு எனும், மருந்தை, பிறருக்கு வழங்குவதால், நான், மருத்துவன் எனக் கூறினேன்,


  ஜிஎஸ்ஆர் said...
  December 5, 2010 at 9:04 AM

  @சிகப்பு மனிதன் நல்லது


  சிகப்பு மனிதன் said...
  December 7, 2010 at 7:01 AM

  .தங்களின், சரியான புரிதலுக்கு நன்றி, நண்பரே !


  வருணன் said...
  January 18, 2011 at 5:13 PM

  முன்னெச்சரிக்கை பேர்வழி
  நான் இந்த பேர்வழிதான்...
  ஆப்ரகாம் லிங்கனின் கருத்துக்கள் அருமையானது...
  இக்கட்டுரை எனக்கு புத்துணர்ச்சி அளிக்குகிறது....


  இராஜராஜேஸ்வரி said...
  February 18, 2011 at 8:36 PM

  நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும் - ஆப்ரகாம் லிங்கன்)

  அருமையான கருத்துக்கள்.


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர