Jun 13, 2010

27

இலவச வன்தட்டு (Free Hard Drive)

  • Jun 13, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: உண்மையான நட்பு நம் ஆரோக்கியம் போன்றது இழக்கும் வரை அதன் அருமை புரிவதில்லை.

    எனக்கும் பதிவுலக போதை பிடித்துவிட்டது என்றே நினைக்க தோன்றுகிறது தமிழிஷ் வாக்குகளும் கருத்துரைகளும் குறைகிற போது எழுதுவதற்கான வேகம் குறைகிறது அதிலும் கடந்த சில பதிவுகள் பெற்ற வாக்குகள் இனிமேல் எழுதத்தான் வேண்டுமா என சிந்திக்கவும் வைத்து விட்டது இது போன்ற விரக்தியுடன் ஒரு பதிவை எழுதும் போது சில நேரம் மக்கள் என்றும் இல்லாத திருநாளாக வாக்கும் கருத்துரையும் அளிபார்கள் ஆனால் அடுத்த பதிவில் மறந்து விடுவார்கள் நானும் ஒரு நாள் கிடைத்த போதையிலே சொக்கிபோய் மீண்டும் அதே போதைக்கு ஏங்குவேன், இது போன்ற நேரங்களில் என்னை நானே கேட்கும் கேள்வி இது தேவைதானா?

    இலவச வன்தட்டு என்றவுடன் யாரும் எப்படி அனுப்பி வைபார்கள் என யோசிக்க வேண்டாம் இது கூகுளின் ஜிமெயில் டிரைவ் இதை இங்கே தரவிறக்கவும் இனி வழக்கம் போல உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும் இனி உங்கள் கணினியில் உங்களிடம் ஏற்கனவே இருக்கும் வன்தட்டு போல புதிதாக ஒரு வன்தட்டு வந்திருக்கும் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.



    இனி அதில் படத்தில் காண்பித்துள்ளது போல டிரைவில் வலது கிளிக்கில் Login As என்பதில் கிளிக்கவும் இனி உங்களுக்கு ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் உங்களின் ஜிமெயில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கவும் தேவையானால் அதில் Auto Login கட்டத்தில் ஒரு மார்க் குறியீடு ஏற்படுத்துவதின் மூலம் Login பிரச்சினையை தவிர்க்கலாம்.

    இதன் அளவு 7.30GB ஆகும் இதில் என்ன ஒரு விஷேசம் நம் கணினியில் வந்து அமர்ந்து கொள்வதுதான் இதன் சிறப்பு மற்றபடி நம் கணினியில் இருக்கும் வன்தட்டோடு இதன் வேகத்தை ஒப்பிட்டு பார்க்க முடியாது வேகம் சிறப்பாக இல்லை ஆனாலும் பயன்படுத்துவதற்க்கு ஒன்றும் பிரச்சினை இருக்காது இந்த முறையில் ஒன்றை மட்டுமே இனைக்க முடியும்.



    இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் தகவல்களை இதில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கு சென்றாலும் உங்களால் எளிதாக பயன்படுத்த முடியும் மேலும் இதனை பயன்படுத்த அவசியம் இனைய இனைப்பு வேண்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    27 Comments
    Comments

    27 Responses to “இலவச வன்தட்டு (Free Hard Drive)”

    Anonymous said...

    June 13, 2010 at 10:35 AM

    அதிலும் கடந்த சில பதிவுகள் பெற்ற வாக்குகள் இனிமேல் எழுதத்தான் வேண்டுமா என சிந்திக்கவும் வைத்து விட்டது //
    போட்டாச்சு போட்டாச்சு ஓட்டு போட்டாச்சு..இனிமே அழாம எழுதுங்க தல


    யூர்கன் க்ருகியர் said...
    June 13, 2010 at 11:17 AM

    //இது தேவைதானா?
    //

    இது ஒரு நல்ல கேள்வி..



    ஒட்டு மற்றும் கருத்துக்கள் அதிகளவு போடவில்லை எனினும் படித்து கொண்டுதான் உங்கள் இடுகைகளை இருக்கிறோம்.

    பார்த்துக்கங்க !


    Ganesan Coimbatore said...
    June 13, 2010 at 1:30 PM

    megavum arumai


    kannan said...
    June 13, 2010 at 2:11 PM

    முடியல் தம்பி ...நானும் எப்படிஎல்லமோ என் கருத்தை பதிவு சிய முயற்சிக்கிறேன் ...முடியல ..இன்னும் எளிமை படுத்துங்கள் ...கருத்துகளை பதிவு விட ....


    kannan said...
    June 13, 2010 at 2:16 PM

    அப்படி என் கருத்துகள் வெளி வந்து விட்டது...ஓகே ...இனி நீங்கள் ஓட்டை பற்றி கவலை படாமல்... உங்களுக்கு தெரிந்ததை ..எழுதுங்கள்...அது பயனுள்ள தகவலாக தான் உள்ளது...மற்றவர்கள் எழுதுவது போல் ...தினசரி நீங்கள் சந்திக்கும் பிரச்சிநகல் ...அனுபவங்கள்...இப்படி எவ்வளோவோ எழுதலாம்...அதில் சுவாரசியம் வேண்டும் ..அவ்வளவு தான்...அவியல்...கிச்சடி ...என இன்னும் எழுதுங்கள்...படிக்க நாங்கள் இருக்கிறோம்...


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 4:59 PM

    @ஆர்.கே.சதீஷ்குமார்

    வாக்குகள்தானே அதிகம் நபர்களை சென்றடைய வழி வகுக்கிறது அதிலும் தமிழிஷ் தள வாக்குகள் வலையில் தவிர்க்க முடியாதது என்பது நான் கண்ட உண்மை சராசரியாக என் பதிவு 500 முதல் 1000 ஹிட்ஸ் வரும் ஆனால் அந்த பதிவுகள் தமிழிஷின் பிரபல பகுதிக்கு வந்தால் மட்டுமே சாத்தியம் கருத்துரை எழுதும் போது ஆதங்கத்தை புரிய மறுத்தாலும் நக்கலான வார்த்தைகளை தவிர்க்கலாமே


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 5:02 PM

    @யூர்கன் க்ருகியர்
    நீங்கள் என் பதிவை படிக்கிறீர்கள் என்பதில் மிக்க சந்தோஷம். உண்மையில் இது வரை இந்த பதிவு பிரபலமாவதற்கு தாங்களும் ஒரு காரணம்


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 5:03 PM

    @GS INTERNATIONAL

    நன்றி தோழா


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 5:05 PM

    @kannan


    தங்கள் கருத்துரைக்கு நன்றி இருப்பினும் தாங்கள் சொல்ல வருவது என்னவென்று புரியவில்லை மன்னிக்கவும்


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 5:15 PM

    @kannan

    தங்கள் அன்புக்கு நன்றி நான் முடிந்தவரை கணினி சம்பந்தபட்ட அவசியமான பதிவுகள் தான் எழுதுகிறேன் மேலும் தாங்கள் சொல்வது போல வேறு சில பதிவுகளும் எழுதியிருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள்


    Unknown said...
    June 13, 2010 at 8:56 PM

    நண்பரே பயனுள்ள தகவல் நன்றி...

    வாழ்க வளமுடன்

    பிரபு


    Unknown said...
    June 13, 2010 at 8:59 PM

    hello sir eppadi irkuriga?


    ஜிஎஸ்ஆர் said...
    June 14, 2010 at 9:23 AM

    @myblog

    வாங்க பிரபு நான் நலமாய் இருக்கிறேன் நீங்களும் நலமாய் இருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.


    calmmen said...
    June 14, 2010 at 10:36 AM

    என்னை பாராட்டியதற்கு மிக்க நன்றி ,
    உங்களது தளம் மிக அருமை , உபயோகமாக உள்ளது

    http://karurkirukkan.blogspot.com/


    புலிகுட்டி said...
    June 14, 2010 at 10:56 AM

    கடமையை செய் பலனை எதிர்பார்காதே.பலன் எங்களுக்கு.சோர்ந்து போகாமல் தொடர்ந்து எழுதுங்கள்.நாங்கள் காத்திருக்கிரோம்.நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    June 14, 2010 at 12:22 PM

    @m.lakshan kumar

    பலனாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை குறைந்த பட்சம் நீங்கள் படித்தீர்கள் என்பதற்கு ஆதாரமாக உங்களிடம் கருத்துரையையும் வாக்கும் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது யாரும் வாக்கோ அல்லது கருத்துரையிடமல் இருந்தால் யாரும் படிக்கவில்லை என்று தானே அர்த்தம்.


    ஜிஎஸ்ஆர் said...
    June 14, 2010 at 12:23 PM

    @BOSS

    நல்லவற்றை எனக்கு பிடித்தவற்றை நான் உடனே பாரட்டிவிடுவேன்


    பிரகாசம் said...
    June 21, 2010 at 12:44 AM

    பதிவுக்கு நன்றிகள். நான் 1999லேயே xdrive என்று ஒரு தளத்தைப் பயன்படுத்திவந்தேன். சில ஆண்டுகளாகப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இப்போது அந்தத் தளம் இயக்கத்தில் இல்லை.


    ஜிஎஸ்ஆர் said...
    June 21, 2010 at 9:36 AM

    @பிரகாசம்
    தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா உங்களுக்கு தெரிந்த தகவலகளயும் நீங்கள் நம் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாமே


    Vengatesh TR said...
    November 27, 2010 at 1:28 PM

    . // எனக்கும் பதிவுலக போதை பிடித்துவிட்டது

    .எனக்கும் தான், !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:01 AM

    @சிகப்பு மனிதன்இந்த போதை பிடிக்காமல் இருப்பது நல்லது


    Rajesh said...
    December 5, 2010 at 1:30 PM

    நன்றாக இருக்கிறது.பயன்படுத்திப்பார்க்கிறேன்.


    Rajesh said...
    December 5, 2010 at 1:33 PM

    //இதில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கு சென்றாலும் உங்களால் எளிதாக பயன்படுத்த முடியும் //

    இதைப்பற்றி இன்னும் விவரமாக விளக்குங்களேன்.


    ஜிஎஸ்ஆர் said...
    December 6, 2010 at 10:34 AM

    @Rajesh நல்லது அப்படியே ஆகட்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    December 6, 2010 at 10:34 AM

    @Rajeshஇதைவிட இது உங்களுக்கு சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன் http://gsr-gentle.blogspot.com/2010/11/blog-post_28.html


    avvavm said...
    December 14, 2010 at 5:40 PM

    இலவச வன்தட்டு (Free Hard Drive) அருமை !! அருமை !!!!நான் தேடிய ஒன்று


    ஜிஎஸ்ஆர் said...
    December 16, 2010 at 9:26 AM

    @avvavmஇப்பொழுது இதை விட சிறப்பாக செயல்படும் அளவிற்கு வேறு ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் இதை பாருங்கள்

    http://gsr-gentle.blogspot.com/2010/11/blog-post_28.html


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர