May 30, 2010

20

குறுந்தகடில் எழுதுவதற்கான ஆல் இன் ஆல் மென்பொருள்

 • May 30, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இவற்றை முறிக்கும் போது ஒலி இருக்காது ஆனால் பெரும் வலியை ஏற்படுத்தும்.

  நண்பர்களே சில நேரங்களில் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளை விட பலமடங்கு சிறந்ததாக இலவச மென்பொருள் இருக்கும் அந்த வகையினை சேர்ந்தது தான் இந்த மென்பொருளும் இதன் பெயர் BurnAware Free 3.0 என்பதாகும் தற்போது இது பீட்டா வெர்சன், வேண்டுமென்றால் BurnAware Free 2.4.7 என்பதை தரவிறக்கி பயன்படுத்தவும்.

  சரி இதுல என்ன பெரிசா இருக்கு இதன் வழியாக ISO Disc, UDF Disc, Boot Disk, Blue-Ray Disk, Audio CD, MP3Disc, DVD Video, Image Disc இப்படி எது வேண்டுமானலும் இந்த மென்பொருள் கொண்டு எளிதாக எரித்து விடலாம், முக்கியமாக ISO Disc ஆக மாற்றுவது எளிது ஒரு நேரத்தில் நானும் ஒரு ISO Disc மாற்ற தெரியாமல் நண்பர் முகமது இஸ்மாயில் உதவினார் ஆனால் இந்த மென்பொருள் இருந்தால் உங்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமலே ISO Disc எரித்து விடலாம் இந்த ISO Disc பூட் சிடி தயாரிப்பதற்கு பயன்படும.  மேலும் இதில் Disc Erase வசதியும் இருப்பதாக சொல்கிறார்கள் அதை நான் முயற்சி செய்து பார்கவில்லை, மற்றும் ஒரு குறுந்தகடை உங்கள் டிரைவில் இட்டு இந்த புரோகிராம் வழியாக Disc Info என்பதை தெரிவு செய்தால் அதில் உங்கள் டிரைவின் பப்பர் வேகம் மற்றும் உங்கள் குறுந்தகடை படிக்க எடுக்கும் வேகம் போன்றவற்றை அழகாக சொல்லி விடும்.

  இதன் அளவு வெறும் 3.8 MB தான் ஆனால் இதன் செயல்பாடுகள் நல்ல திறனுடன் இருக்கிறது சில பெரியவர்கள் சொல்வார்கள் கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்று அது மாதிரிதான் இந்த மென்பொருள். நண்பர்களே அவசியம் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஒரு வேளை தரவிறக்க விரும்பாதவர்கள் இந்த தள முகவரியாவது குறித்து வைத்துக் கொள்ளுங்களேன் எப்பொழுதுதாவது தேவைப்படும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  May 29, 2010

  8

  போல்டர் மற்றும் பைல்களை பாதுகாப்பாக வைக்க வழி

 • May 29, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: குட்ட குட்ட குனிபவனும் முட்டாள்,குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்.

  நண்பர் MHM NIMZATH அவர்கள் (பயனுள்ள தகவல்களை தந்தீர்கள் நன்றி.Folder ஐ Delete செய்யாமல் ஆக்குவது எப்படி? என்னை நீங்கள் மண்னிக்க வேண்டும் உங்களுடைய தகவல்களை நான் எனது இணையபக்கத்தில் இணைக்கவுள்ளேன்) இப்படியாக ஒரு கருத்துரையோடு ஒரு கேள்வியையும் எழுதியிருந்தார் சரி அவருக்காகவும் இன்னும் நமது நண்பர்களுக்காகவும் ஒரு பதிவாக எழுதிவிடாலமே என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவு.

  நாம் சாதரணமாக நம் கணினியின் வன்தட்டை இரண்டு அல்லது மூன்றாக பிரித்திருப்போம் முடிந்தவரை மூன்றாக பிரித்திருந்தால் நல்லது. இனி நீங்கள் பாதுகாப்பாக வைக்க நினைக்கும் போல்டர் டிரைவ் என்பது G:யில் இருக்கிறது என வைத்துக்கொள்வோம், இப்போது G:யை திறந்தவுடன் Gsr எனும் போல்டர் உள்ளது பின் அதன் உள்ளே உங்களின் எல்லா டேட்டாக்களும் வெவ்வேறு போல்டர்களிம் பெயர்களிலும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

  இனி நீங்கள் செய்யவேண்டியது

  ren Gsr Gsr.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} இதை காப்பி எடுத்து நோட்பேட் திறக்கவும் பேஸ்ட் செய்யவும் LOCK KEY எனும் பெயரில் BAT-ஆக சேமிக்கவும் BAT என்பது Extension குறிப்பதாகும் இதற்காக ஒன்றும் குழம்ப வேண்டியதுஇல்லை Just LOCK KEY.BAT என அடித்து சேமித்தால் போதுமானது.(Gsr என்கிற இத்தில் உங்கள் போல்டரின் பெயர் வரவேண்டும்)

  ren Gsr.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Gsr இதை காப்பி எடுத்து நோட்பேட் திறக்கவும் பேஸ்ட் செய்யவும் OPEN KEY எனும் பெயரில் BAT-ஆக சேமிக்கவும்.(Gsr என்கிற இத்தில் உங்கள் போல்டரின் பெயர் வரவேண்டும்)

  இப்பொழுது நீங்கள் ஒரு LOCK KEY.BAT மற்றும் OPEN KEY.BAT என இரண்டு பேட் பைல்கள் உருவாக்கி விட்டீர்கள் இதுதான் உங்கள் டிரைவில் உள்ள அனைத்து பைல்களையும் பாதுகாக்கபோகிறது.

  இனி நான் முன்னமே கூறியபடி Gsr எனும் போல்டரை மறைக்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் இப்பொழுது Gsr எனும் போல்டர் மற்றும் LOCK KEY.BAT மற்றும் OPEN KEY.BAT மூன்றும் ஒரே இடத்தில் இருக்கட்டும் இனி தாங்கள் LOCK KEY.BAT டபுள் கிளிக் செய்யுங்கள் Gsr எனும் போல்டர் Control Panel Icon போல மாறியிருக்கும் இப்பொழுது Gsr எனும் போல்டர் திறந்து பாருங்கள் Control Panel திறக்கும் இனி இதை திறப்பதற்கு OPEN KEY.BAT எனும் பைலை டபுள் கிளிக் செய்யுங்கள் உங்கள் பைல்கள் அனைத்தும் பார்க்க இயலும்.

  எந்த போல்டரை தாங்கள் மறைக்க விருப்புகிறீர்களோ அந்த போல்டரை மறைத்தவுடன் LOCK KEY.BAT மற்றும் OPEN KEY.BAT இரண்டையும் வேறு இடத்தில் மாற்றி வைத்துவிடுங்கள் முயற்சிக்கும் முன்பு சோதனைக்காக ஒரு டம்மி போல்டரில் செய்துபார்க்கவும்.

  இல்லை நண்பா இது கொஞ்சம் சிரமாமாக இருக்கிறது ஏதாவது ஒரு மென்பொருளாக இருந்தால் பரவாயில்லை என நினைக்கிறீர்களா? ஒன்றும் பிரச்சினையில்லை உங்களுக்கு ஒரு Free Folder Hide மென்பொருள் இனைப்பும் தந்துவிடுகிறேன் உபயோகிப்பதற்கு எளிமையாக இருக்கும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்வதில்லை இது இலவச மென்பொருள் தான் நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு நன்கொடை வழங்கலாம்.

  என்ன நண்பர்களே உங்களுக்கு இது உபயோகமில்லை என்று ஒதுக்கி விடாதீர்கள் ஏதாவது ஒரு நேரத்தில் பயன்படும் ஒரு வேளை உங்களுக்கு இது உபயோகமானது என்றால் மற்றவர்களும் பயனடைய உதவுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  May 28, 2010

  15

  (Startup Drive Checkup) ஸ்டார்ட் அப் டிரைவ் செக்கப் நிறுத்த வழி

 • May 28, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: வாழ்க்கை என்னவென்று தெரிவதற்குள் அதன் முக்கால் பகுதி கடந்து விடுகிறது.

  நண்பர் பிரபு அவர்களின் வேண்டுதலுக்காகவும் மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் நண்பர்களுக்கு வந்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவும் இந்த பதிவு எழுதப்படுகிறது.

  சில நேரங்களில் கணினி இயக்கம் ஆரம்பிக்கும் போதே நீல நிற விண்டோவில் உங்கள் கணினியின் வன்தட்டுகளை சோதிக்கிறேன் ஏதாவது ஒரு விசையை அழுத்தசொல்லி வரும் நீங்கள் இதை தவிர்க்க நினைத்தாலும் விண்டோ மாறாமல் முழு வன்தட்டையும் சோதித்த பின் தான் விண்டோ திறக்கும் நாம் பார்க்க போவது இதை தவிர்ப்பதற்கான மாற்றுவழிகளைத்தான் இப்போது பார்க்கபோகிறோம்.  முதல் வழி

  கணினியை இயக்கி F8 கீயை விட்டு விட்டு அழுத்துங்கள் உங்களுக்கு ஒரு கருப்பு விண்டோ திறக்கும் இனி அதில் Last Know Good Configuration என்பதை தெரிவு செய்து எண்டர் கொடுத்து போய் பாருங்கள் ஒரு வேளை பிரச்சினை சரியாகலாம்.

  இரண்டாவது வழி

  இல்லை இன்னும் சரியாகவில்லை என்றால் அடுத்ததாக மீண்டும் கணினியை இயக்கி Start ->Run->Programs->Accessories->System Tools->Restore என்பதை செலக்ட் செய்து புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Restore My Computer to an Earlier Time என்பதை தேர்வு செய்து ஓக்கே கொடுங்கள் இனி அடுத்த பக்கத்தில் புதிய விண்டோவில் ஒரு பக்கம் தேதியும் மறுபக்கம் நீங்கள் கணினியில் ஏற்படுத்திய மாற்றங்களும் காணப்படும் இனி நீங்கள் உங்கள் கணினியில் எந்த நாளில் உங்கள் கணினி நல்ல நிலையில் இயங்கியது என்பதை ஒவ்வொரு தேதியாக கிளிக்கும் போதும் வலது பக்கம் தெரியும் உங்களுக்கு சரியானதாக தெரியும் ஒரு தேதியை தெரிவு செய்து ஓக்கே கொடுக்கவும் இனி உங்கள் கணினி ரீஸ்டோர் செய்ய தொடங்கிவும் சிறிது நேரத்திற்க்கு பிறகு உங்கள் கணினி அனைந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகி ஒரு பாப் அப் விண்டோ போல திறக்கும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் கணினி நல்ல நிலைக்கு வந்துவிட்டாதாவென ஒரு வேளை சரியாக பட்சத்தில் மீண்டும் வேறு ஒரு தேதியை முயற்சி செய்து பார்க்கலாம் பொருமை இல்லாதவர்கள் அடுத்த முயற்சிக்கு செல்லலாம்.  மூன்றாவது வழி

  Start ->Run & Type msconfig என டைப் செய்து ஓக்கே கொடுக்கவும் இப்போது ஒரு சிறிய விண்டோ திறக்கும் அதில் Startup என்கிற டேப்பில் CHKDISK என்பது மாதிரியான பெயரில் ஏதாவது டிக் மார்க் செய்யப்பட்டுள்ளதா என பார்க்கவும் இருந்தால் மட்டும் அந்த டிக் மார்க் எடுத்துவிடுவதன் மூலம் அதை டிசாபிள் செய்யலாம் இனி கணினி ரீஸ்டோர் கேட்கும் ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி பிரச்சினை சரியாகும். ஒரு வேளை அப்படி இல்லையென்றால் ஒன்றும் பிரச்சினையில்லை அப்படியே மூடிவிடவும்.  நான்காவது வழி

  விண்டோஸ் இயக்கம் தொடங்கும் முன் எந்த டிரைவில் பிரச்சினை இருப்பதாக சொல்லி டிரைவ் செக்கிங் செய்கிறதோ அந்த டிரைவின் பிராப்பர்ட்டிஸ் திறங்கள் உதாரணமாக D டிரைவில் பிரச்சினை என்றால் D டிரைவின் வலது பக்கம் கிளிக்கி Properties என்பதை தெரிவு செய்து திறக்கும் சிறிய விண்டோவில் Tool டேப்பை கிளிக்குங்கள் அதில் Check Now என்பதை கிளிக்கி அதில் டிக் மார்க் இருந்தால் எடுத்துவிட்டு ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி உங்கள் கணினியில் இந்த பிரச்சினை இருக்காது சரி இப்பவும் சரியாகவில்லை நண்பா நான் என்ன பண்றது அப்படினு கேக்கிற நண்பர்களுக்காக அடுத்த வழிமுறையும் பார்த்துவிடலாம்.  ஐந்தாவது வழி

  இந்த முறையில் நிச்சியம் சரியாகிவிடும் நம்பிக்கையோடு செயல்படுங்கள் இனி நீங்கள் செய்ய வேண்டியது Start –> Run & Type cmd இப்போது உங்களுக்கு கமாண்ட் பிராம்ட் வந்திருக்கும் அதில் உங்களுக்கு D டிரைவ் பிரச்சினைக்குரியதாக இருக்கிறதோ அதற்கு தீர்வாக chkntfs /X D: என கமாண்ட் கொடுஙகள் இனி சரியாகிவிடும் ஒரு வேளை உங்களுடைய கணினியில் நான்கு டிரைவ்கள் அதாவது C, D, E, F என்பதாக இருக்கிறது இந்த நான்கு டிரைவிலும் பிரச்சினை இருக்கிறது அதற்கு Chkntfs /X C: D: E: F: என கொடுத்து பாருங்கள் இபோது உங்கள் கணினி இயங்கும் போது டிரைவ் செக்கிங் இருக்காது இனி இந்த கமாண்ட் கொடுப்பதிலும் பிரச்சினை இருக்கிறது ஒன்றும் கவலைப்படவேண்டாம் அடுத்து ரிஜிஸ்டரியில் மாற்றம் ஏற்படுத்தி முயற்சி செய்துபார்ப்போம்.

  ஆறாவது வழி

  உங்கள் கணினியில் Start –> Run & Type regedit என டைப் செய்து ஓக்கே கொடுங்கள் உங்களுக்கு கணினியின் இதயபகுதியான ரிஜிஸ்டரி பகுதி திறக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியது முதலில் ரிஜிஸ்டரி பேக்கப் எடுத்துவைத்துக் கொள்வதுதான் அடுத்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CURRENTCONTROLSET\CONTROL\Session Manager இதில் இந்த Session Manager கண்டுபிடித்ததும் அதை இருமுறை கிளிக்கி வலது பான் பக்கம் பார்க்கவும் அங்கு BootExecute என்கிற பெயரில் ஒரு ரெஜ் இருக்கும் இனி அதை டபுள் கிளிக் அல்லது Modify என்பதை தெரிவு செய்யுங்கள் ஏற்கனவே அங்கு autocheck autochk * என்பதாக இருக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியது D டிரைவில் பிரச்சினை என்றால் autocheck autochk /k:D * இப்படி மாற்றிவிடவும் இல்லை முறையாக மூன்று டிரைவ்களிலும் பிரச்சினை என்றால் autocheck autochk /k:C /k:D /k:E * என மாற்றிவிடுங்கள் இனி ஓக்கே கொடுத்து வெளியேறி விடுங்கள் ஒரு முறை கணினியை ரீஸ்டார்ட் செய்துவிடுங்கள் இப்போது எல்லாம் சரியாகி இருக்கும் இனியும் பிரச்சினை இருந்தால் மூன்றாம் நபர் மென்பொருள் உபயோகித்து பார்க்கலாம் இல்லையென்றால் உங்கள் விண்டோஸ் குறுந்தகடு இருந்தால் அதன் மூலமாக ரிப்பேர் செய்யலாம்.  என்ன நண்பர்களே உங்களுக்கு இது உபயோகமில்லை என்று ஒதுக்கி விடாதீர்கள் ஏதாவது ஒரு நேரத்தில் பயன்படும் ஒரு வேளை உங்களுக்கு இது உபயோகமானது என்றால் மற்றவர்களும் பயனடைய உதவுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  May 26, 2010

  8

  ராஜா சின்ன ரோஜா

 • May 26, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: நாமே பெற்றோர் ஆகும் வரை நம் பெற்றோர்களின் அன்பு நமக்கு புரியாது.

  அன்பு நண்பர்களை எதை பற்றியெல்லமோ எழுதுகிறேன் ஆனால் அது எல்லாமே உங்களுக்கு பயன்படுமே என்கிற நோக்கில் தான், இன்று நான் எழுதுவதோ என் அன்பு மகனுக்கு ஒரு கவிதை கிறுக்கல் ஏற்கனவே நான் சில சமுதாய கருத்துள்ள கவிதைகள் எழுதியிருக்கிறேன அவையெல்லாம் நான் எதிர்பார்க்காத அளவிற்கு வாக்குகளும் கருத்துரைகளும் பதிவாகியிருந்தன அந்த நம்பிக்கையோடும் என் உள்ளக்கிடக்கையும் சேர்ந்து வந்ததுதான் இந்த ராஜா சின்ன ரோஜா கவிதை கிறுக்கல்.

  ராஜா சின்ன ரோஜா

  சின்ன பூமணியே
  செந்தாழம் தேன் கனியே
  வண்டாடும் சோலைக்குள்
  புது மொட்டாய் பிறந்தாயோ
  எந்நாள் வீட்டிற்க்குள்
  தேன்சிட்டாய் உலா வருவாயோ

  காமாட்சியம்மன் குத்துவிளக்கு
  ஒளிச்சுடர் நீதானே
  இருமுடி கட்டும்
  சரணமும் நீதானே
  புதிதாய் பிறந்த சூரியன்
  அது நீதானே

  விடிவெள்ளியின்
  வெளிச்சமும் நீதானே
  தவமிருந்து பெற்ற
  செல்வம் நீதானே
  என் தவத்தின்
  வலிமையும் நீதானே

  செந்தமிழ் செல்வன்
  என் செல்லமகன் நீதானே
  செந்தாழம்பூவின் கசியும்
  தேன் துளியும் நீதானே
  கடவுள் தந்த பிள்ளை- எங்கள்
  வீட்டு சின்ன கிள்ளை நீதானே

  நீங்களும் உங்கள் செல்ல குழந்தைகளுக்காக ஒரு கவிதை எழுதித்தான் பாருங்களேன் உங்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்த ஒன்றும் எதுகை மோனையின் அவசியம் இல்லை அன்பின் ஆழம் எதுகை மோனையில் இல்லை.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...
  19

  படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல்

 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: உபயோகமில்லை என்று தூக்கியெறிந்த பின்னர் தான் அதன் அவசியம் புரியும்.

  மின்னஞ்சல் நமக்கு தெரியும் அதென்ன படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் என நினைக்கிறீர்களா நண்பர்களே நீங்கள் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் அது அவர் ஒரு முறை மட்டும் படித்தால் போதுமானது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டும் அவர் அதை பார்த்தால் போதுமென நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்காகதான் படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் எப்படி எழுதுவது என பார்க்கலாம்.

  இந்த வசதி நம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னஞ்சல்களில் இது போன்ற வசதி இல்லை மேலும் ஜிமெயிலில் மட்டும் மின்னஞ்சல் அனுப்பி சில நிமிடங்களுக்குள் திறும்ப பெறும் வசதி இருக்கிறது இதற்கு மாற்று வழியாக நிறைய தளங்கள் இது போன்ற வசதியை தருகிறது இருப்பினும் நான் இங்கு மூன்று தளங்களை மட்டும் தருகிறேன் இவை எளிமையாக இருக்கும் மேலும் நேரம் அதிகம் தேவைப்படாது.

  இந்த மூன்று தளங்களை பொருத்தவரை உங்கள் சொந்த விபரம் எதுவும் கேட்பதில்லை உறுப்பினராக சொல்லி தொந்திரவு செய்வதில்லை, இந்த வழியாக மின்னஞ்சல் அனுப்பியதும் நீங்கள் அனுப்பும் நபருக்கு எந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்புகிறீர்களோ அந்த முகவரியின் இட்டு பெறும் நபருக்கு மின்னஞ்சல் செல்லும் கூடவே அதில் ஒரு உரல் இனைக்க பட்டிருக்கும் அந்த உரலை கிளிக்கினால் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் தெரியும் அவர்கள் அதை படிக்கலாம் வேண்டுமானால் அதை அவர்கள் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளவும் முடியும் ஆனால் அவர்கள் அதை மூடிவிட்டு மீண்டும் திறக்க நினைத்தால் அவ்வளவுதான் அந்த மின்னஞ்சல் அழிக்கப்பட்டிருக்கும்.

  படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்

  sdmessage

  படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்

  destructingmessage

  படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்

  kicknotes

  என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருப்பின் உங்கள் நண்பர்களும் பயனடையட்டும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  May 23, 2010

  4

  காப்பி எடுக்கப்பட்ட என் பதிவுகள்

 • May 23, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: கைகளை மட்டுமின்றி உங்கள் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள்.

  நண்பர்களே சமீபகாலமாக நானும் ஒரு வலைப்பூவை எழுதுகிறேன் அதில் எனக்கு தெரிந்த விஷயங்களை பதிவு செய்கிறேன் அதில் எந்தவிதமான வியாபார நோக்கமும் இல்லை வெறும் அறிவுப் பகிர்தல் என்கிற முறையில் மட்டுமே எழுதுகிறேன்.

  நாமும் பதிவுகள் எழுதுகிறோமே இது எத்தனை பேருக்கு சென்றடைகிறது என்பதை நீங்கள் அளிக்கும் வாக்குகளும் மற்றும் கருத்துரைகளும் தான் தீர்மானிக்கும், நான் முன்பே கவணித்திருக்கிறேன் என் பதிவுகள் சில தளங்களில் அச்சு பிசகாமல் அப்படியே வேறு தளத்தில் இருக்கும் அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை நான் சொல்ல வருவது தன்னிலை விளக்கம் மட்டுமே, நண்பர்களே நீங்கள் என் பதிவை பயன்படுத்துவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை குறைந்த பட்ச நாகரீகமாக என் பெயரையாவது போட்டிருக்கலாம் , இன்னும் சில பதிவுகள் இருக்கின்றன அவையும் என் பதிவுகளின் சாயல் இருக்கதான் செய்கிறது இருப்பினும் அதை நான் இங்கே குறிப்பிடவில்லை.

  நண்பர்களே என் பதிவை நீங்கள் உபயோகபடுத்துவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை தயவுசெய்து வியாபார நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்த வேண்டாம்.

  இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்

  http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_8670.html

  http://www.z9tech.com/view.php?2beddnB5ddc23QQAA334aaCe0FFad0e0JXO4Yccd34mmlHn22eeh9966dce02OmM0o44b4cZZBL500

  http://shanthythas.blogspot.com/

  http://paperpediyan.blogspot.com/2010/04/blog-post_7895.html

  உங்கள் தளத்திற்கான புக்மார்க்

  http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_17.html

  http://idimulhakkam.blogspot.com/2010/04/blog-post_9369.html

  இளைஞனே மாற்றிக்காட்டு

  http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_9707.html

  http://covairamanathan.blogspot.com/2010/04/blog-post_20.html

  நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்

  http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_18.html

  http://idimulhakkam.blogspot.com/2010/04/blog-post_6600.html

  http://www.tmkudi.com/?p=674

  http://celltekpvt.blogspot.com/2010/04/blog-post_18.html

  http://thamilvideo.blogspot.com/2010/04/blog-post_19.html

  வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இலவச எஸ் எம் எஸ்

  http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_14.html

  http://www.tmkudi.com/?p=668

  கணினியில் வைரஸ்

  http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_8920.html

  http://usetamil.forumotion.com/-f4/-t3800.htm

  காணாமல் போன கண்ட்ரோல் பேனல்

  http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_07.html

  http://usetamil.forumotion.com/-f4/--t3799.htm

  ஜிமெயிலில் HTML கையெழுத்து

  http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_18.html

  http://computerthaha.blogspot.com/2010/03/html.html

  ஜிமெயில் அரட்டையில் ட்டிரிக்ஸ்

  http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_7397.html

  http://computerthaha.blogspot.com/2010/04/blog-post.html

  வன் தட்டு வேகம் அறிய

  http://gsr-gentle.blogspot.com/2010/05/blog-post_13.html

  http://acsstudy.blogspot.com/2010/05/blog-post_22.html

  யுஎஸ்பி-யில் எழுதுவதை தடுக்கலாம்

  http://gsr-gentle.blogspot.com/2010/05/blog-post_20.html

  http://acsstudy.blogspot.com/2010/05/blog-post.html

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...
  6

  (Amicus Curiae)அமிக்கஸ் குயூர்ரி தெரியுமா?

 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: மகிழ்ச்சியும் துயரமும் எப்போதும் அடுத்தடுத்தே இருக்கின்றன.

  நான் சமீபத்தில் தெரிந்துகொண்ட ஒரு விஷயத்தை இந்த பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சாதரணமாக குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை விசாரிப்பார்கள் ஆனால் சில நேரங்களில் குற்றவாளிகளுக்கே தெரியாது அவர்கள் நீதிமன்றத்தின் விசாரனையில் இருக்கிறார்கள் என்பது அது பற்றித்தான் பதிவு.

  நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த அமிக்கஸ் குயூர்ரி என்பவர் நீதிமன்றத்தின் நேரடி விருப்பம் அல்லது வருட வருமாணம் 17,000 க்கு குறைவாக உள்ளவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள், மற்றும் வழக்கறிஞர் வைத்து வாதாட வசதி இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு நீதிமன்றம் இது போன்ற அமிக்கஸ் குயூர்ரியை நியமிக்கும் அந்த அமிக்கஸ் குயூர்ரி என்பவர் ஜுடிசனல் கீழாக வருபவர் மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் இவரே ஒரு நீதிமன்றத்துக்கு சமமானவர் இவரின் விசாரனை தகவல்களை மட்டும் வைத்து சம்பந்தபட்டவரை விசாரிக்கமலே நீதிமன்றம் நீதி வழங்கலாம்.

  இந்த அமிக்கஸ் குயூர்ரி சாதரணமாக அதிக மக்கள் ஈடுபட்டுள்ள பொதுநலம் சம்பந்தபட்ட பிரச்சினைகளை மட்டும் தான் கையில் எடுக்கிறது அதாவது சமுதாயத்திற்கு அதிகம் பிரச்சினைகள் விளைவிக்க கூடியவர்கள் மற்றும் மாபியா கும்பல்கள்(சிவில் வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகள்) இவர்களுக்கு எதிராகவும் மேலும் அரசு பொதுநல வழக்குகளுக்கும் அமிக்கஸ் குயூர்ரி நியமிக்க படுகிறார்.

  அமிக்கஸ் குயூர்ரி வெறும் ஒரு வழக்கிறிஞர் மட்டுமல்லமால் இந்த நேரத்தில் ஒரு புலனாய்வு துறை அதிகாரியின் தைரியத்தோடும் சாதுரியத்துடனும் செயல்படுவார்கள் இவர்களை பிரித்து அறிவது என்பது முடியாத காரியம் மேலும் ஒரு வழக்கறிஞர் சில வழக்குகளுக்கு எதிராக தன்னையே அமிக்கஸ் குயூர்ரியாக நியமிக்க மனு கோரலாம் இருப்பினும் அதை பரிசீலித்து முடிவெடுப்பது நீதி மன்றமே.

  இந்த முறையில் இவர்கள் காண்பதே ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் காரணம் நீதிமன்றமும் தான் தனக்கு பதிலாக அமிக்கஸ் குயூர்ரியை நியமிக்கிறது அதற்காக இந்த அமிக்கஸ் குயூர்ரி சொல்வதை அவர் தரும் அறிக்கையை மட்டுமே வைத்து தீர்ப்பளிப்பதில்லை அதை ஒரு பெஞ்ச் கூடி அதனை அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவார்கள்.

  உதாரணத்துக்கு நாம் ஒரு குற்றவாளி ஆனால் நம்மீது இது வரை வழக்குகள் இல்லை எந்தவிதமான தெளிவுகள் அல்லது புகார் எதுவும் இல்லாத பட்சத்திலும் நீதிமன்றத்துக்கு தேவைப்பட்டால் நமக்கு எதிராக ஒரு அமிக்கஸ் குயூர்ரி நியமித்து குற்றத்தை வெளியே கொண்டுவருவார் மேலும் குற்றவாளியுடைய விவாதம் கேட்காமலே தீர்ப்பு வழங்கி தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...
  10

  எக்‌ஸெல் டேட்டாவை கிடைமட்டமாக ஒட்டலாம்

 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: அறிவை விட தைரியத்தினால் தான் சில பெரிய காரியங்கள் சாதிக்கபடுகின்றன.

  சாதரணம் நமக்கு எல்லோருக்குமே தெரியும் எக்‌ஷெல்லில் காப்பி எடுத்து பேஸ்ட் செய்வது ஆனால் நாம் பார்க்க போவது கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு டேட்டா உங்களிடம் செங்குத்தான வரிசையில் இருக்கிறது இதை அப்படியே காப்பி எடுத்து பேஸ்ட் செய்வதுதான் எளிதாயிற்றே அப்படியே இரண்டாவதாக இருக்கும் பத்தையும் பாருங்கள் அதாவது செங்குத்தான வரிசையில் இருந்த டேட்டாவை கிடைமட்டமாக பேஸ்ட் செய்திருக்கிறேன் அது எப்படி என பார்க்கலாம் இது எப்போதாவது உங்களுக்கு தேவைப்படும் உதாரணமாக நீங்கள் எக்‌ஷெல்லில் டேட்டா பில்ட்டர் பயன்படுத்தும் போது கிடைமட்டமாக இருந்தால் வசதியாய் இருக்கும்.

  இனி நீங்கள் மாற்ற நினைக்கும் டேட்டாவை காப்பி எடுத்துக்கொள்ளுங்கள் எலியின்(மவுஸ்) வலது பக்கம் கிளிக்கி அதில் Paste Special என்பதை தேர்ந்தெடுங்கள்.  இனி புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Transpose என்பதை தெரிவு செய்ய அதன் அருகில் உள்ள கட்டத்தில் டிக் குறி ஏற்படுத்தி ஓக்கே கொடுக்கவும்.  என்ன நண்பர்களே இப்போது பாருங்கள் மொத்த டேட்டாவும் கிடைமட்டமாக மாறியிருக்கும் என்ன நண்பர்களை இது தேவையில்லை என நினைக்கிறீர்களா? தெரிந்து கொள்வதில் தவறில்லையே! உப்யோகமான தகவல் என்றால் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடையட்டும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  May 20, 2010

  6

  பிளாக்கரில் அரட்டை அறை

 • May 20, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: அறிவாளிகள் காரணத்தை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள், முட்டாள்கள் முன்னின்று முடிவெடுப்பார்கள்.

  வணக்கம் நண்பர்களே இது பிளாக்கர் எழுதும் நண்பர்களுக்காக மற்றவர்கள் தெரிந்து கொண்டாலும் தவறில்லை. நாம் சில தளங்களில் அரட்டை அடிப்பதற்கான அரட்டை அறையையும் நிறுவியிருப்பார்கள் அதே போல் நமது வலைத்தளத்திலும் இரண்டு விதமான அரட்டை அறையை நிறுவலாம்.

  முதலாம் வழிமுறை: HTML CODE தரவிறக்கி உங்கள் பிளாக்கர் அக்கவுண்டில் நுழைந்து Layout திறந்து அதில் Add Gadget என்பதை தெரிவு செய்து புதிதாய் திறக்கும் விண்டோவில் HTML/JavaScript என்பதை தெரிவு செய்து கீழிருக்கும் கோடிங்கை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து ஓக்கே கொடுத்து விடவும்.

  <iframe width="234" frameborder="0" src="http://talkgadget.google.com/talkgadget/client?fid=gtalk0&relay=http%3A%2F%2Fwww.google.com%2Fig%2Fifpc_relay" height="350"> </iframe><p style="margin:-8px 0">
  <center> <a style="text-decoration:none;font-size:70%;" href="http://rohman-freeblogtemplate.blogspot.com/2008/01/add-google-talk-to-blog.html">Add to your blog</a></center></p>  இரண்டாவது வழிமுறை: சாட் ரோல் அரட்டை அறை இதை நாம் நிறுவிக்கொண்டால் எந்த மின்னஞ்சல் வைத்திருப்பவரும் விரும்பினால் தங்களோடு கலந்துரையாட வசதியாய் இருக்கும் இதை தங்கள் தளத்தில் நிறுவிக்கொள்ள விண்டோவை திறந்தவுடன் அதில் இருக்கும் திறக்கும் பக்கத்தில் அங்கு கேக்கும் தேவையான விபரங்களை கொடுக்கவும் இருதியில் உங்களிடன் பிளாக்கருக்கு தேவையான அரட்டை அறையின் HTML கோடு கிடைக்கும் அதை காப்பி எடுத்து நீங்கள் வழக்கம் போல பிளாக்கர் அக்கவுண்டில் நுழைந்து Layoutல் Add a Gadget என்பதை கிளிக்கி புதிதாய் திறக்கும் விண்டோவில் HTML/JavaScript என்பதை தெரிவு செய்து அதில் நீங்கள் காப்பி எடுத்த HTML கோடிங்கை பேஸ்ட் செய்யவும் அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கரில் அரட்டை அறை நிறுவப்பட்டிருக்கும்.  இனி நீங்கள் ஆன்லைனில் இருந்தால் உங்கள் பிளாக் படிப்பவர்களோடு உரையாடலாம் அவர்களின் கருத்துகளை கேக்கலாம்

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...
  19

  யுஎஸ்பி-யில் எழுதுவதை தடுக்கலாம்

 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: பிறரை நாம் கேக்காததால் அநேக விஷங்கள் தெரியாமலே போகிறோம்

  வணக்கம் நண்பர்களே முன்பு போல பதிவு எழுதமுடியவில்லை இதற்கு சில மானசீக அவஸ்தை தான் காரணம் நான் முதன் முதலில் எழுதிய பதிவுக்கு தமிழிஷில் கிடைத்த வாக்கு 12 பின்னர் அடுத்த வந்த எல்லா பதிவுகளும் சராசரியாக 15 முதல் 35 வரை பெற்றிருக்கிறது ஆனால் சமீபத்திய எனது பதிவுகள் 5 வாக்குகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது, 44 பதிவுகள் எழுதிவிட்டேன் ஆனால் இதுவரை எழுதியது சந்தோஷமாக இருந்தது இனி எழுதுவதை நிறுத்திவிடலாம் என நினைத்த போதுதான் Menporul.co.ccஅவர் எழுதிய இரண்டு கருத்துரைகள் இந்த பதிவை எழுத தூண்டியது.

  (1) Hi i know you from the days of pkp wiki. you write well. is it possible for you to move your non-tech posts to separate blog or tech posts only to separate blog so that you get into top ten computer blogs without wasting any time. your blog will get more exposure than you can imagine due to the top ten placement.

  (2) Still you have not answered my question directly. I can include in next top ten as a trial measure if you can consider separate separate blogs.

  Menporul.co.cc நண்பரே மன்னிக்கவும் என்னையும் டாப் டென் தொழில்நுட்ப பதிவுகளில் இனைக்க விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது அதே நேரத்தில் ஒரு பிளாக்கில் எழுதுவதே மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது இனி முடிந்தவரை தொழில் நுட்ப பதிவுகள் மட்டும் பிளாக்கில் இடம்பெற செய்ய முயற்சிக்கிறேன் இருப்பினும் உறுதியாக சொல்லமுடியவில்ல தயவசெய்து மன்னிக்கவும் தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி.

  இன்று கையில் யுஎஸ்பி இல்லாதவர்கள் குறைவு என்பதை விட இல்லாதவர்கள் இல்லை என்று சொல்வதே சரியாக இருக்கும் அந்த அளவிற்கு நாம் இதை பயன் படுத்த தொடங்கியிருக்கிறோம் சரி அதற்கும் இந்த பதிவிற்க்கும் என்ன சம்மந்தம் என நினைக்கவேண்டாம். நம்முடைய கணினியை சில நேரம் நமக்கு தெரிந்த நபர்கள் உபயோகிப்பார்கள் அந்த நேரத்தில் நம் கணினியில் இருக்கும் கோப்புகளை அவர்கள் காப்பி எடுத்துக்கொண்டால் உங்களுக்கு தெரியுமா? தெரியாதுதானே! சரி அதற்கு அந்த யுஎஸ்பி-யில் எழுதவிடாமல் செய்துவிட்டால் காப்பி எடுக்க முடியாமல் தடுத்துவிடலாமே.

  சரி முதலில் அதை எப்படி செயல்படுத்துவது என பார்க்கலாம் இதற்காக மென்பொருள் ஒன்றும் அவசியமில்லை நமது ரிஜிஸ்டரியில் சிறிய மாற்றம் செய்துவிட்டால் போதும் நான் இங்கு இரண்டு விதமான ரிஜிஸ்டரி தருகிறேன் ஒன்று எழுதவிடாமல் தடுக்க மற்றொன்று எழுதுவதை அனுமதிக்க.

  யுஎஸ்பி-யில் எழுதவிடாமல் தடுக்க:

  Windows Registry Editor Version 5.00

  [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
  "WriteProtect"=dword:00000001

  இதை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (Windows Key + R then type notepad) பேஸ்ட் செய்யவும் பின்னர் சேமிக்கும் போது உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பெயர் கொடுத்து எக்ஸ்டென்ஷன் .reg என்பதாக சேமிக்கவும் இனி இதை செயல்படுத்த டபுள் கிளிக் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் கணினியில் இருந்து உங்களுக்கு தெரியாமல் யுஎஸ்பி-யில் காப்பி எடுக்கமுடியாது.

  யுஎஸ்பி-யில் எழுத அனுமதிக்க:

  Windows Registry Editor Version 5.00

  [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
  "WriteProtect"=dword:00000000

  இதை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (Windows Key + R then type notepad) பேஸ்ட் செய்யவும் பின்னர் சேமிக்கும் போது உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பெயர் கொடுத்து எக்ஸ்டென்ஷன் .reg என்பதாக சேமிக்கவும் இனி இதை செயல்படுத்த டபுள் கிளிக் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இனிமேல் உங்கள் கணினி யுஎஸ்பி-யில் எழுத அனுமதிக்கும்.

  என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்களை போன்ற மற்ற நண்பர்களுக்கும் சென்றடையட்டும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  May 17, 2010

  14

  தடை செய்யப்பட்ட இனையதளம் மற்றும் வாய்ப்(VoIP) பயன்படுத்தலாம்

 • May 17, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: அவசரத்தில் செய்யப்பட்ட சபதங்கள் அமைதியில் மறக்கபடும்.

  வணக்கம் நண்பர்களே தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து வரும் நேரம் அதிலும் கணினி நுட்பங்கள் ஒரு பக்கம் எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவந்து கொண்டு இருக்கிறது இனி விஷயத்துக்கு செல்வோம் நாம் சாதரணமாக சில நேரங்களில் எதையாவது இனையத்தில் தேடுவோம் ஆனால் அந்த இனையமோ உங்களுக்கு இனைய இனைப்பு வழங்கியிருக்கும் சர்வீஸ் புரைவைடர்களால் ஏதாவது ஒரு காரணத்தினால் தடை செய்யப்பட்டிருக்கும் ஆனால் அதையும் இப்போது சாதரணம் ஒரு கணினி தொழில்நுட்பம் தெரியாதவர்கள் கூட திறந்துவிடும் அளவுக்கு இப்போதைய தொழில்நுட்பம் வழி வகுத்து இருக்கிறது .

  இனையத்தில் கண்ட நான்கு விதமான புராக்ஸி மென்பொருள்களை பற்றி இங்கு குறிப்பு தருகிறேன் நீங்களும் இதை செய்தி எனும் அடிப்படையில் இதை தெரிந்துகொள்ளுங்கள் Ultra VPN , Hotspot Sheild , Freegate இப்படி இனையத்தில் மென்பொருள்கள் கிடைக்கின்றன , இன்னும் சில வகையான தளங்கள் மென்பொருள் வடிவில் இல்லாமால் நேரடியாக அவர்கள் தளத்தில் இருந்தபடியே தடைசெய்யப் பட்ட தளங்களை திறக்கும் வகையில் செயல்படுகிறது.

  என் நண்பர் ஒருவர் ஒரு நாள் உங்கள் தளம் தடை செய்யபட்டிருக்கிறது என்பதாக செய்தி வருவதாக சொன்னார் நம் தளத்திலோ அப்படி தவறான வழியிலான எந்த தகவலும் தளத்தில் இல்லை பின்னர் எப்படி இப்படி ஆயிற்று என ஆராய்ந்து பார்த்தால் சில பதிவுகள் செக்ஸ் தொல்லை பற்றிய சில பதிவுகள் அவர்களால் பில்டர் செய்யப்பட்டிருப்பதை நான் யூகித்து கொண்டேன் அது முதல் பதிவுகள் எழுதும் போது மிக கவணமாக எழுதுகிறேன் ஏதோ ஒரு பதிவில் இருக்கும் ஒரு வார்த்தை நம் மொத்த தளத்தையும் தடை செய்ய காரணமாகி விட கூடாதே.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  May 13, 2010

  11

  கணினி பயன்பாட்டு வேகம் அதிகரிக்க

 • May 13, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: உண்மை ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்குள் வதந்தி உலகை சுற்றி வரும்.

  வன் தட்டின் வேகம் அதிகரிப்பதன் மூலம் நாம் பைல்கள் இயக்கும் நேரத்தை துரிதப்படுத்தலாம் இதனால் கணினியின் இயக்கத்தில் வித்யாசம் வரும், சரி நண்பர்களே முதலில் நீங்கள் உங்கள் கணினியின் வன் தட்டு தற்போதைய வேகம் அறிந்துகொள்ள Disk Speed தரவிறக்கி இயக்கி பாருங்கள் இரண்டு நிமிடங்களில் உங்கள் வன் தட்டின் வேகத்தை விளக்கி விடும் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் புரியும். வன் தட்டின் வேகம் சோதிக்கும் போது வேறு புரோகிராம்கள் இயங்காமல் பார்த்துக்கொள்ளவும்.

  இனி நீங்கள் டெஸ்க்டாப்பின் இடதுபுறம் இருக்கும் Start பட்டன் கிளிக்கி அதில் Run என்பதை தேர்ந்தெடுத்து அதில் sysedit.exe என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும்.  இபோது உங்களுக்கு புதிதாக ஒரு விண்டோ திறந்து அதன் மேலே நான்கு விண்டோக்கள் இருக்கும் அதில் நீங்கள் C:\windows\system.ini எனகிற விண்டோவை கண்டுபிடிக்கவும் அநேகமாக கடைசி விண்டோவாக இருக்கும், என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா சரி இதில் நாம் புதிதாக ஒரு வார்த்தையை சேர்க்க போகிறோம் அந்த விண்டோவில் [386enh] என்கிற வரியை கண்டுபிடியுங்கள் அதன் கீழே அடுத்த வரியாக Irq14=4096 (அதாவது Interrupt request) எழுதி சேர்த்து சேமித்து பின் மூடி விடுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.  இனி கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்யுங்கள் இப்போது மீண்டும் உங்கள் கணினியின் வேகத்தை சோதித்து பாருங்கள் புரியும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  May 10, 2010

  8

  கீலாக்கர் அபாயமும் அதற்கான பாதுகாப்பும்

 • May 10, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: எல்லாவற்றிற்கும் கணக்கு பார்ப்பவன் ஒருபோதும் மண்ணில் கலப்பையை வைக்கமாட்டான்.

  அசுரத்தனமான விஞ்ஞான வளர்ச்சியில் இன்று கணினியின் வளர்ச்சியும் ஒன்று இந்த கணினி என்பதே இன்று இனையம் சார்ந்த ஒன்றாகி விட்டது அதனாலோ என்னவோ இனையத்தில் பாதுகாப்பு தன்மை என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது என்றால் மிகையில்லை, இனையத்தை திறந்தால் இனைய வழி திருட்டு அதாவது நாம் அறியாமல் நம் தகவல்களை திருடுவது இதில் ஆன்லைன் வங்கி திருட்டும் அடங்கும் இன்னும் இது போல எத்தனையோ, முன்பெல்லாம் வைரஸ் என்பது பெரிய பிரச்சினையாக இருந்து இப்போதெல்லாம் வைரஸ் கூட பெரிய பிரச்சினை இல்லையென்றே நĬ7;னைக்க தோன்றுகிறது அந்தளவிற்கு கீலாக்கரின் பிரச்சினை இருக்கிறது. நீங்கள் இனைய வழி மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளையும் இந்த கீலாக்கர் மென்பொருள் அழகாய் மின்னஞ்சல் செய்து விடும் இதை பதிந்த நபருக்கு, கூகுளில் தேடிப்பார்த்த போது இதை மின்னஞ்சல் வழியாகவும் கணினியில் பதிந்துவிட முடியுமாம்.

  இதில் கவணிக்க வேண்டியது என்னவென்றால் வைரஸ் நம் கணினியில் இருந்தால் ஏதாவது ஒரு அறிகுறி வழியாக தெரிந்துவிடும் ஆனால் இந்த கீலாக்கர் நம் கணினியில் பதிந்துவிட்டால் அது இயக்கத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாது இந்த புரோகிராம் ஸ்டார்ட் மெனுவிலோ அல்லது கண்ட்ரோல் பேணலிலோ காணமுடியாது ஆனால் டாஸ்க் மேனேஜர் வழியாக இயங்கும் புரோகிராம்களை நாம் தெரிந்துகொள்ள முடியும் அதுவும் எல்லா பெயர்களையும் வாசித்து பார்த்து பின் கூகுளில் தேடிப்பார்த்தால் உண்மை தெரிந்துவிடும் ஆனால் இது எல்லோருக்கும் முடிவதில்லையே.

  இப்போது இந்த கீலாக்கரின் விபரீதம் உங்களுக்கு புரிந்திருக்கும் சரி முதலில் உங்கள் கணினியில் கீலாக்கர் நிறுவப்பட்டுள்ளதா என அறிந்துகொள்ள கீலாக்கர் டிடெக்டர் தரவிறக்கி பரிசோதித்து பார்க்கவும் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது உங்கள் கணினியில் கீலாக்கர் இருந்தால் காட்டிகொடுத்துவிடும் ஆனால் அதை அழிப்பதற்கான வசதி இல்லை இருந்தாலும் என்ன வகையான கீலாக்கர் என்று தெரிந்துகொண்டு கூகுளில் தேடினால் அதற்கு வழி கிடைக்கும்(சரியான தீர்வு கொடுக்க முடியவில்லை காரணம் 62;வ்வொரு கீலாக்கரின் ரிமூவ் செய்யும் முறையும் மாறுபடுகிறது). உங்களால் முடியாத பட்சத்தில் கீலாக்கர் கில்லர்தரவிறக்கி அழிக்க முயற்சிக்கவும் நீங்கள் தவறாக அழிக்கும் நேரத்தில் கணினியின் இயங்குதளம் மீண்டும் பதிய நேரலாம் எனவே கவணம் அவசியம்.

  சரி நண்பர்களே உங்கள் கணினியில் இனி உங்களை அறியாமல் மீண்டும் வந்துவிட்டாலும் உங்களை பாதிக்காமல் இருப்பதற்காக கீ ஸ்கிராம்பிலர் தரவிறக்கி கணினியில் பதியவும் இது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் நெருப்பு நரியில் சிறப்பாக செய்ல்படுகிறது இதை கணினியில் நிறுவியவுடன் கீழே டாஸ்க் பாரில் வந்து அமர்ந்துகொள்ளும் நீங்கள் இனையத்தை உபயோகிக்கும் போது மட்டும் ஒரு ஐகான் வந்திருக்கும் நீங்கள் டைப் செய்யும் போது அந்த எழுத்துகளை என்கிரிப்ட் செய்துவிடும் நீங்கள் உப்யோகிக்கும் போது உங்களுக்கே புரியும், நீங்கள் நெருப்பு நரி மட்டும் உப்யோகிக்கிறீர்கள் என்றால் கீ ஸ்கிராம்பிலர் ஆட் ஆன் பதிந்துகொள்ளவும் இனி நீங்கள் தைரியமாக இனையவழியில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம், நீங்கள் டைப் செய்யும் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டுவிடும்.

  மேலதிகமாக இன்னும் ஒரு தகவலையும் எழுதிவிடுகிறேன்விண் பாட்ரோல் மென்பொருளையும் கணினியில் பதிந்துவிடுங்கள் எந்த மென்பொருளும் உங்கள் அனுமதியில்லாமல் உள்ளே நுழையமுடியாது, மேலும் உங்கள் ஆண்டிவைரஸ் மென்பொருளை எப்போதும் மேம்படுத்திய நிலையிலே வைத்திருங்கள், கூடுமானவரை பிரவுசிங் செண்டரிலோ அல்லது அறிமுகமில்லாத நபர்களின் கணினியிலோ வங்கி கணக்கை பயன்படுத்த வேண்டம்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  May 4, 2010

  13

  உலகெங்குக்குமான அவசர உதவி எண்

 • May 4, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: வாழ்க்கை பயணம் செய்யும் வழியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  ஒவ்வொரு நாட்டிலும் அதில் உள்ள மாநிலங்களிலும் மக்களின் சேவைக்காக அவசர உதவி எண் வழங்கபட்டிருக்கும் இதில் மருத்துவ வசதி, தீயனைப்பு படை, அவரச போலீஸ், ஆம்புலன்ஸ் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுத்து இருப்பார்கள் நாம் ஒவ்வொருவரும் இதுபோல அவசர உதவி எண்களை ஞாபகம் வைத்திருக்கிறோமா என்றால் நிச்சியம் இல்லையென்கிற பதிலாகத்தான் இருக்கும்.

  நாம் நமது தமிழ்நாட்டில் உள்ள அவசர உதவி எண்களை நாம் எப்படியாவது தெரிந்து வைத்துகொள்ளலாம் ஒரு வேளை நீங்கள் வேறு ஒரு மாநிலம் அல்லது வேறு நாட்டிற்கு சென்றிருக்கிறீர்கள் அங்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது அப்போது உங்களுக்கு அவசர உதவி எண் இருந்தால் எளிதாக தொடர்பு கொள்ளலாமே அதை தெரியப்படுத்த தான் இந்த பதிவு.

  உங்கள் அலைபேசியில் 911 என்கிற இந்த மூன்று இலக்க அவசர அழைப்பு எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்த எண் எப்படி எல்லா நாட்டிற்கும் பொருந்தும் என நினைக்கிறீர்களா ஒவ்வொரு நாட்டிற்குமான தொலை தொடர்பு சேவையில் இந்த 911 என்கிற அவசர அழைப்பு எண் இருக்கும் நீங்கள் அலைபேசி சேவையை உபயோகிப்பவர்களாக இருந்தாலும் இந்த எண் அழைப்பதற்கு தடையில்லை.

  நீங்கள் 911 அழைக்கும் போது அதுவாகவே உங்களுக்கு அருகில் உள்ள உதவிக்கான மையத்தை சென்றடையும் பின்னர் அதன் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்க்கூடும் மேலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களால் அழைப்பு ஏற்படுத்தி பேசி உதவி கேட்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 911 என்கிற எண்ணிற்கு அழைப்பு ஏற்படுத்தி விட்டீர்கள் என்றால் அவர்களாகவே உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

  மேலும் ஒரு சின்ன தகவல் உங்கள் அலைபேசி நம்பர்பேட் (Keypad) பூட்டு (Lock) இடப்பட்டிருந்தாலும் இந்த 911 என்கிற எண் மட்டும் டயல் செய்ய இயலும் வேறு எந்தவொரு எண்ணும் இது போல டயல் செய்ய முடியாது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த எண்ணின் அவசியம், நண்பர்களே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு இது பயன்படக்கூடும், இது உங்களுக்கு புதியதாக அல்லது உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  May 2, 2010

  11

  டோரண்ட் தேடலும் ஓப்ரா தரவிறக்கமும்

 • May 2, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: நீ சிரித்தால் உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும், அழுதால் நீ மட்டுமே அழவேண்டும்.

  நாம் சில கணினி புரோகிராம்கள் மற்றும் இன்னும் பிற தகவல்கள் சில நேரம் ரோரண்ட் பைலாக இருக்கும் அது பற்றி தெரிந்தவர்கள் எளிதாக தரவிறக்கி விடுவார்கள் தெரியாதவர்கள் என்னவென்று புரியாமல் அல்லது முயற்சிக்காமல் விட்டு விடுவார்கள் இருப்பினும் எல்லோருக்கும் எளிதாக பயன்படுத்தும் வகையில் நான் இங்கு சில குறிப்புகளை தருகிறேன் நிச்சியமாக உங்களுக்கு உதவியாக இருக்கும், கூகுளில் தேடி கிடைக்காதவை கூட டோரண்டில் கிடைத்த அனுபவம் இருக்கிறது.

  சரி நண்பர்களை டோரண்டில் எப்படி தேடுவது நீங்கள் சாதரணமாக Bittorrent அல்லது UTorrent கிளையண்ட் வழியாக தரவிறக்கமோ தேடுதலோ மேற்கொள்வீர்கள் ஆனால் நாம் பார்க்கபோவது இந்த இரண்டும் இல்லாமல் எளிதாக தேடி தரவிறக்குவது என்பது பற்றித்தான்.

  முதலில் நீங்கள் ஓப்ரா பிரவுசர்
  தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் அதிக வேகமான பிரவுசர் என்கிற அறிவிப்போடு இருக்கிறது மேலும் இதில் டர்போ எஞ்ஜின் பயன்படுத்தபட்டிருக்கிறது தளம் திறக்கும் வேகம் நன்றாக இருக்கிறது, மேலும் தற்போது ஓப்ராவில் மட்டுமே நேரடியக டோரண்ட் தரவிறக்க வசதி இருக்கிறது ஆனால் தமிழ்மொழியில் எழுத்து பிரச்சினை இருக்கிறது.

  இனி உங்கள் ஓப்ரா பிரவுசரை திறந்து டோரண்ட் தேடுதளமான ஐ எஸ் ஓ ஹண்ட்
  தளம் செல்லுங்கள் இனி தேடுதல் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய புரோகிராம் அல்லது அதன் பெயர் கொடுத்து தேடுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் புரியும்.  இபோது நீங்கள் தேடிய புரோகிராம் மேலே அடையாளம் காட்டியுள்ளபடி வந்திருக்கும் இனி அதை கிளிக்குங்கள் அடுத்த்தாக கீழே இருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு விண்டோ திறக்கும் அதில் நான் அடையாளம் காட்டியுள்ள DOWNLOD.TORRENT என்பதை கிளிக்கினால் அடுத்து ஒரு சிறிய விண்டோ படத்தில் உள்ளபடி திறக்கும் அதில் Opera என்பதை தேர்வு செய்து Save என்பதற்கு பதிலாக Open என்பதை தெரிவு செய்யவும்.  இனி கீழிருக்கும் படம் போல ஒரு விண்டோ திறந்திருக்கிறதா அதில் Choose என்பதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தெரிவு செய்து yes கொடுக்கவும் இனி என்ன தானகவே டோரண்ட் பைல் தரவிறங்க தொடங்கிவிடும்.  இப்போது ஒரு புதிய பிரவுசர் விண்டோ திறந்து அதில் Download எனும் பெயரில் நாம் தரவிறக்க நினைத்த பைல் தரவிறங்கி கொண்டிருக்கிறதா அப்படியே படத்தின் கீழே பாருங்கள் எத்தனை Seeds எத்தனை Peers என்பதையும் காணலாம்.  என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருப்பின் மற்றவர்களுக்கும் சென்றடையட்டும். மேலும் Bittorrent:, UTorrent: இவையிரண்டும்தான் எங்களுக்கு வசதியாக இருக்கிறது என நினைப்பவர்கள் வேண்டுமானால் Azureus
  உபயோகப்படுத்தி பார்க்கவும், ஆனால் என்னுடைய தேர்வு ஓப்ரா பிரவுசர் வழி ஐ எஸ் ஓ ஹண்டில் தேடி டோரண்ட் தரவிறக்குவது மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் இருக்கிறது இதை விட எளிமையான வழிமுறை இருந்தால் கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர