Jun 16, 2010

20

வேர்டில் குறுக்கு வழி(Word Shortcut)

  • Jun 16, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: இரத்தத்தில் கையை நனைத்தால் கண்ணீரால் தான் கழுவ வேண்டும்.

    நண்பர்களே இது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும் இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவட்டுமே என்கிற எண்ணமே பதிவின் நோக்கம், மைக்ரோசாப்ட் வேர்டிற்கு ஆயிரக்கணக்கான ஷார்ட்கட்கள் இருக்கின்றன நாம் அத்தனையையும் தெரிந்து ஞாபகத்தில் வைப்பது என்பது இயலாத காரியம் ஆனாலும் ஆர்வம் இருப்பவர்கள் தெரிந்துகொளவதில் ஒன்றும் தப்பில்லை. நான் இப்போது உங்களுக்கு 20 குறுக்குவழிகள் மட்டுமே பரிந்துரை செய்யப்போகிறேன் இந்த 20 குறுக்குவழிகள் மட்டும் ஞாபகத்தில் வைத்தால் போதும் உங்களுக்கு எலியின்(மவுஸ்) அவசியம் கூட தேவையிருக்காது என்பதை நிச்சியம் படித்து முடிக்கும் போது உணர்வீர்கள்.

    நான் தமிழ்படுத்துகிறேன் பேர்வழி எதற்கான கமாண்ட் என்பதை தமிழில் எழுதியிருக்கிறேன் ஏதாவது சந்தேகம் இருந்தால் கருத்துரையில் பதியவும்.

    புதிதாக வேர்ட் பைல் திறக்க --------- Windows Key+R then Type winword

    திறந்த பின் மீண்டும் புதிது------------Ctrl+N

    தேதி -----------------------------Alt+Shift+D

    வார்த்தை நடுமயம் வர -------------Ctrl+E

    வார்த்தை வலது பக்கம் வர------------Ctrl+R

    வார்த்தை இடது பக்கம் வர------------Ctrl+L

    வார்த்தையின் கீழ் கோடிட-------------Ctrl+U

    எழுத்தை போல்டாக்க------------------Ctrl+B

    காப்பி எடுக்க--------------------------Ctrl+C

    காப்பி எடுத்ததை ஒட்ட --------------Ctrl+V

    பார்மட் மெனு-------------------------Ctrl+Shift+F

    எழுத்து அளவு பெரிதாக்க---------------Ctril+Shift+>

    எழுத்து அளவு சிறிதாக்க----------------Ctrl+Shift+<

    எழுத்தை பார்மட் செய்ய----------------Shift+F3

    மாற்றங்கள் திரும்ப வர ----------------Ctrl+Z

    மாற்றங்கள் மீண்டும் வர----------------Ctrl+Y

    பிரிண்ட் பிரிவியூ-----------------------Ctrl+F2

    பார்மட் பெயிண்ட் பிரஷ் காப்பி-----------Ctrl+Shift+C

    பார்மட் பெயிண்ட் பிரஷ் பேஸ்ட்---------Ctrl+Shift+V

    சேமிக்க--------------------------------Ctrl+S

    வேறொரு பைலாக சேமிக்க--------------F12

    அச்சிட---------------------------------Ctrl+P


    என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் தானே இனி மற்றவர்கள் முன்னிலையில் எலியை(மவுஸ்) பயன்படுத்தாமலே மைக்ரோசாப்ட் வேர்டில் உங்கள் பணி நடக்கட்டும்.முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிக்கொடுங்கள் நேரம் இல்லாவிட்டால் குறைந்தபட்சம் தம் தளத்தியாவது உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    20 Comments
    Comments

    20 Responses to “வேர்டில் குறுக்கு வழி(Word Shortcut)”

    Anonymous said...

    June 16, 2010 at 10:28 AM

    நிச்சயம் உபயோகமான பதிவுதான்!


    உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
    June 16, 2010 at 11:00 AM

    அருமை


    Saran R said...
    June 16, 2010 at 1:47 PM

    மிகவும் அருமையான பதிவு

    வாழ்த்துக்கள்

    http://SaranR.in


    தமிழார்வன் said...
    June 16, 2010 at 5:10 PM

    நண்பர் ஞானசேகர் அவர்களுக்கு வணக்கம்,

    எழுத்தை பார்மட் செய்ய----------------Shift+F3
    மாற்றங்கள் திரும்ப வர ----------------Ctrl+Z
    மாற்றங்கள் மீண்டும் வர----------------Ctrl+Y
    பிரிண்ட் பிரிவியூ-----------------------Ctrl+F2
    பார்மட் பெயிண்ட் பிரஷ் காப்பி-----------Ctrl+Shift+C
    பார்மட் பெயிண்ட் பிரஷ் பேஸ்ட்---------Ctrl+Shift+V

    போன்ற தெரியாததை தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு.

    தங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் ஒருவன். தங்கள் பதிவுகளின் முன்னோட்டங்கள் எனது மின்னஞ்சலுக்கு தானே வந்துவிடும். கருத்துரைகள் அதிகம் வழங்கியது இல்லை என்றாலும் பதிவுகளை படிக்க தவறியதில்லை.

    மேலும் தங்களது பழைய பதிவு ஒன்றில் ஓட்டு மற்றும் கருத்துரை வழங்குவது குறித்து தங்களது ஆதங்கத்தை படித்தேன். நல்லதை மக்கள் மெதுவாகவே புரிந்து கொள்வர்.

    தங்கள் பதிவுகள் பணிகள் தொடரட்டும்...

    அன்புடன்
    தமிழார்வன்.


    ஜிஎஸ்ஆர் said...
    June 16, 2010 at 5:11 PM

    @ஆர்.கே.சதீஷ்குமார்

    தங்களை போன்றவர்களின் கருத்துரையும் வாக்கும் நிறைய நபர்களை சென்றடைய உதவும்.


    ஜிஎஸ்ஆர் said...
    June 16, 2010 at 5:17 PM

    @உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)

    தங்களை போன்றவர்களின் கருத்துரையும் வாக்கும் நிறைய நபர்களை சென்றடைய உதவும் தாங்கள் தொடர்ந்து தரும் பங்களிப்பிற்கு மிக்க நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    June 16, 2010 at 5:18 PM

    @Saran

    நன்றி சகோதரா


    ஜிஎஸ்ஆர் said...
    June 16, 2010 at 5:30 PM

    @தமிழார்வன்

    மகிழ்ச்சியாய் இருக்கிறது தங்களின் கருத்துரை நிச்சியமாக நம் தளத்தில் இன்னும் நல்ல தகவல்களை எல்லோருக்கும் கொண்டு செல்லவேண்டும் எனப்தே என் ஆசை. உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் எதிர்பார்த்த ஹிட்ஸ் வாக்குகள் இல்லாத போது மீண்டும் அடுத்த பதிவு எழுதுவதற்கான வேகம் குறைந்து விடுகிறது என்பதுதான் உண்மை. பொதுவாக வலைத்தளத்தை பொறுத்தவரை வாக்குகளும் கருத்துரைகளும் மேலும் பாலோவருமே ஒரு தளத்தின் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கும் மேலும் நான் இனிமேல் எழுதுவதா வேண்டாமா என யோசித்த போதுதான் நண்பர் ஷிர்டி சாய்தாசன் suthanthira-ilavasa-menporul.blogspot.com அவர்கள் ஒரு பின்னுட்டம் இட்டார் அதுதான் மீண்டும் எழுத தூண்டியது.

    தங்கள் கருத்துரைக்கு நன்றி


    தமிழார்வன் said...
    June 16, 2010 at 5:37 PM

    நண்பரே தங்களை கவர்ந்த ஷிர்டி சாய்தாசன் அவர்களின் பின்னூட்டத்தை இணைக்க முடியுமா?


    ஜிஎஸ்ஆர் said...
    June 16, 2010 at 5:48 PM

    @தமிழார்வன்

    நண்பா இங்கே பாருங்கள் http://gsr-gentle.blogspot.com/2010/05/blog-post_20.html


    தமிழார்வன் said...
    June 16, 2010 at 6:02 PM

    நண்பரே,

    ஷிர்டி சாய்தாசன் அவர்களின் கருத்துகளை படித்தேன். அவர் சொன்னது போல "புரியாத கிறுக்கல்கள்" வலைப்பூவானது மிகச்சிறந்த 10 தொழில்நுட்ப வலைப்பூக்களில் ஒன்றாக வர வாழ்த்துக்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    "முயற்சியுடையார் இகழ்ச்சிய‌டையார்"

    அன்புடன்
    தமிழார்வன்.


    Riyas said...
    June 17, 2010 at 12:28 AM

    GOOD POST


    ஜிஎஸ்ஆர் said...
    June 17, 2010 at 9:00 AM

    @தமிழார்வன்

    தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா “மிகச்சிறந்த 10 தொழில்நுட்ப வலைப்பூக்களில் ஒன்றாக வர வேண்டும்” என்கிற பேராசையெல்லாம் இல்லை ஆனால் நமக்கு தெரிந்த தகவல்களை அதிக நபர்களோடு பகிர்ந்துகொள்ளவே விரும்புகிறேன் அதற்கு இந்த வலைப்பூ உதவியாய் இருக்கிறது

    தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    June 17, 2010 at 9:01 AM

    @Riyas

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நண்பர்களாய் இனைந்ததற்கும் நன்றி நண்பரே


    EU-JAVA said...
    June 17, 2010 at 9:10 AM

    some more
    ctrl+I = italics
    ctrl+J = text justification
    ctrl+A = select all
    Ctrl+x = cut

    Nandri


    ஜிஎஸ்ஆர் said...
    June 17, 2010 at 9:50 AM

    @VEU

    நீங்கள் குறிப்பட்டுள்ளது சரிதான் என் கவணக்குறைவால் விடுபட்டுவிட்டது மேலும் இது போன்ற தவறுகள் வராது மன்னிக்கவும்


    மு.ம.ராஜன் said...
    July 4, 2010 at 11:45 AM

    arupaimaiya thevaiyana pathivu


    ஜிஎஸ்ஆர் said...
    July 5, 2010 at 8:59 AM

    @தமிழன்நன்றி நண்பரே


    Vengatesh TR said...
    November 27, 2010 at 1:04 PM

    .புடிபிட்டமைக்கு(revise) நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:04 AM

    @சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர