Jun 30, 2010

11

நினைவுகளில் வாழ்ந்திருக்கிறேன்

 • Jun 30, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: வீணாய்ப்போன அன்பு என்று சொல்லாதே, அன்பு என்றும் வீணாய் போனதில்லை.

  நான் ஒன்றும் மிகப்பெரிய கவிஞன் இல்லை மனதில் உள்ளதை வார்த்தையாய் கொண்டு வந்திருக்கிறேன் அவ்வளவுதான் இது சிலருக்கு பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் எல்லோரும் ஒரு விஷயத்தை ஓரே மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது இல்லையே? என்னடா இவன் முன்னல்லாம் தொழில்நுட்ப பதிவுகள் அதிகம் எழுதுவான் இப்ப ரெண்டு நாளா கவிதை எழுதுறேனு கிறுக்கி தொலைக்கிறானே என நினைக்கும் நண்பர்கள் மன்னிக்கவும் இது வரை எழுதியது மற்றவர்கள் பயன்பெறுவதற்கு இது எனக்கு வடிகால்.

  நினைவுகளில் வாழ்ந்திருக்கிறேன்

  என் பார்வையில் நீ படும்
  ஒவ்வொரு விநாடியும் ஒரு சுகம்தான்
  ரயில் பயணங்களில் தூக்கத்தினுடே
  கலவரபடுத்தும் நீ வரும் கணவுகள்

  சில நேரம் உன் முகம்
  மறந்து போயிருக்கும் –ஆனால்
  உன் நினைவுகளால் மட்டுமே
  நான் வாழ்ந்திருக்கிறேன்

  என்ன நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் வாக்கும் இது பற்றிய தங்களின் மேலான கருத்தும் எழுதுங்களேன்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 29, 2010

  8

  கரிசகாட்டு சிறுக்கி

 • Jun 29, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: அன்பு கொடுப்பவரையும் பெறுகிறவரையும் குணம்டையச் செய்கிறது.

  வணக்கம் நண்பர்களே இந்த வாரம் புரியாத கிறுக்கல்களின் கவிதை கிறுக்கல்கள் வாரம் இதெல்லாம் நான் ஒரு 8 வருடங்களுக்கு முன்னர் எழுதியது இன்று எதார்த்தமாக டைரியை புரட்டிய போது சரி இதேயே பதிவாக இட்டு நம் நண்பர்களின் கருத்தை அறியலாமே என நினைத்து பதிந்தும் விட்டேன் இனி நீங்கள் தான் கருத்தை சொல்லவேண்டும் பிடித்திருந்தால் வாக்கு அளிக்கவும்.

  கரிசகாட்டு சிறுக்கி

  கரிசல் காட்டில்
  என்னில் கவிதையாய் வந்தவள்

  பால் சிந்தும் பவுர்ணமியில்
  பகல் சூரியனாய் வந்தவள்

  பூச்சூடும் தலையோரத்தில்
  என்னை தொடுத்து வந்தவள்

  என்னை உன் ஞாபக முடிச்சுகளில்
  பின்னச்செய்த மந்திரமென்ன

  பூக்களின் வாசத்தை
  எனக்குள் புதைத்த ரகசியமென்ன

  பெயர் தெரியாமல் உன் பின்னால்
  பல காலம் சுற்றச்செய்த விசித்திரமென்ன

  வெட்கம் பிடுங்கிய கணங்களில்-எனை
  நொருக்கிய உணர்வுகளின் மாயமென்ன

  என்னை சலனப்படுத்தி
  சருகாக்கிய உன் சரித்திரமென்ன

  என்ன நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் வாக்கும் இது பற்றிய தங்களின் மேலான கருத்தும் எழுதுங்களேன்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...
  10

  சின்ன சின்ன ஆசைகள்

 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: அன்பு மின்னல் மாதிரி அது விழும் வரை எங்கே அடிக்குமென்று சொல்லமுடியாது.

  வணக்கம் நண்பர்களே பதிவுலகத்திற்கு எழுத வந்து 31/2 மாதங்கள் ஆகிற நிலையில் இது வரை 75 பதிவுகள் எழுதிவிட்டேன் 28,500 ஹிட்ஸை நெருங்கிவிட்டேன் அதிலும் சமீப நாட்களாக என் தளத்திற்கு நேரடியாக வருபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது இந்த நேரத்தில் நண்பர்களாக இனைந்திருக்கும் 79 பாலோவர்கள் மின்னஞ்சல் சந்தாதாரர்களாக இனைந்திருக்கும் 194 நபர்கள் மேலும் பதிவை படிக்கின்ற நபர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் ஒவ்வொரு பதிவிற்க்கும் வாக்கு அளித்து பிரபல பதிவாக்கும் நண்பர்கள் அவர்களை குறிப்பிட்டு பெயர் சொல்ல முடியவில்லை காரணம் என் ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொரு விதமான நபர்களே வாக்களித்திருக்கிறார்கள் கருத்துரையும் அதேபோலத்தான் எனக்கு சந்தோஷமாய் இருக்கிறது காரணம் நான் எதை எழுதினாலும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து அருமை என சொல்லாமால் பதிவை பிடித்தவர்கள் மட்டுமே வாக்களிக்கிறார்கள் என்பதையும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தான் வாக்கும் கருத்துரையும் அளிக்கிறார்கள் என்பது என்னைபொருத்தவரை சந்தோஷமாகதானிருக்கிறது இந்த நேரத்தில் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை பதிவு செய்கிறேன்.

  சரி என்ன எழுதுவது என யோசிக்கும் போதுதான் எனக்கே நினைவு வந்தது நம் தளத்தின் பெயரே புரியாத கிறுக்கல்கல் தானே பேசாமல் கவிதை எனும் பெயரில் நான் முன்னர் கிறுக்கிய கிறுக்கல்கள் படித்து பாருங்கள் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

  சின்ன சின்ன ஆசைகள்

  நீ சூடி உதிர்ந்த ரோஜா இதழ்களை
  என் வீட்டு வரவேற்பறையில் வைத்திட ஆசை

  உன் கூந்தலில் முகம் புதைத்து
  நறுமண ரகசியம் தெரிந்திட ஆசை

  என்னை வசீகரிக்கும் தேன் இதழில்
  அழுத்தமாய் முத்தமிட ஆசை

  உன் மார்பினில் ஒட்டியிருக்கும்
  கச்சையாய் பிறந்திட ஆசை

  உன் பிஞ்சுவிரல் சொடுக்கி
  சிம்பொனி இசைத்திட ஆசை

  உன் மெல்லிய இடையில் பூத்திருக்கும்
  வெண் முத்துக்களை ருசித்திட ஆசை

  உன் கால் விரல் நகங்களை
  கடித்து விட ஆசை

  என்றாவது ஒரு நாள்!

  உன் மடியில் தலைசாய்த்தபடியே
  மரித்து விட ஆசை.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 23, 2010

  27

  பதிவுலக அனுபவத்தில் கற்றது

 • Jun 23, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • நீங்கள் பிரபல பதிவர் எனும் போர்வையில் இருப்பவரா உங்களுக்கு வாசகர்கள் மற்றும் பாலோவர்கள் அதிகம் இருக்கிறர்களா அப்படியானால் இது உங்களுக்கு இல்லை உங்களுக்கு இது உதவாது காரணம் நீங்க ஒரு பூஜ்ஜியம் எனபதை படம் போட்டு இனைத்தாலும் உங்களுக்கு ஓட்டு போட ஆள் இருக்கிறார்கள் அதை புகழ்ந்து கருத்துரை எழுத ஒரு பெரிய கூட்டமே இருக்கும் இது முழுக்க முழுக்க புதிதாக பதிவு எழுத வரும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமே.

  1)நல்ல பதிவுகளை நீங்கள் படித்தாலும் அதற்கு வாக்கோ அல்லது கருத்துரை எழுதாதீர்கள் அப்படியே எழுதினாலும் பதிவை பற்றிய கருத்து வராமல் பார்த்துக்கொள்ளவும்.

  2)உங்களுக்கு பிடித்த பதிவர் என்றால் பதிவை படிக்காமலே முதலில் வாக்கு அளித்து விட்டு பின்னர் கருத்துரையும் எழுதி விடுங்கள்.

  3)அறிமுகம் இல்லாத பதிவர்கள் நல்ல பதிவுகள் எழுதினாலும் அதை புறக்கணியுங்கள் அப்போது தான் அவர் ஆர்வத்தை தடை செய்ய முடியும்.

  4)காணும் எல்லா வலைபதிவுகளிலும் சேர்ந்துகொள்ளுங்கள் ஒரு வேளை அவர்கள் உங்கள் தளத்தில் இனையக்கூடும்.

  5)ஆயத்த நிலையிலான கருத்துரை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அது இப்படியும் இருக்கலாம் ஆஹா அருமை சூப்பர் என இருந்தால் நன்றாயிருக்கும்

  6)தமிழிஷில் உங்கள் புதிய பதிவை இனைக்கும் நாட்களில் அன்று வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் முடிந்தவரை வாக்களியுங்கள் அவர்களும் உங்களுக்கு வாக்களிப்பார்கள்

  7)மறந்தும் நல்ல பதிவுகளுக்கு ஆதரவாக இருக்காதீர்கள் முடிந்தால் ஜால்ரா போட பழகுங்கள்
  இதை அப்படியே செயல்படுத்துங்கள் உங்கள் எல்லா பதிவுகளும் பிரபல பதிவாக மாறிவிடும்

  இதை அப்படியே செயல்படுத்துங்கள் உங்கள் எல்லா பதிவுகளும் பிரபல பதிவாக மாறிவிடும் சந்தேகம் இருந்தால் பொருமையாக வலையுலகத்தில் நடப்பதை கவணித்து புரிந்துகொள்ளுங்கள்
  Read more...
  46

  யூ டோரண்ட் தரவிறக்க வேகம் அதிகரிக்க (Torrent Speed 25% முதல் 40%)

 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: நேரம் விலை உயர்ந்தது ஆனால் உண்மை நேரத்தை விட விலை உயர்ந்தது.

  நண்பர்களே நாம் இனையத்தில் எப்படி கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாதோ அப்படியே இந்த டோரண்டை பற்றி அறியாதவர்கள் குறைவாகவே இருப்பார்கள் இந்த டோரண்டின் வழியாக இலவச மென்பொருள்கள் முதல் கல்வி குறிப்புகள் வரை இலவசமாக கிடைக்கும் இது ஒரு கிளையண்ட் இது பற்றி தெரியாதவர்கள் இங்கு
  தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும் மேலும் சில உதவிகளுக்கு இங்கு
  பார்க்கவும்.

  சாதரணமாக உங்கள் இனைய இனைப்பின் வேகம் மற்றும் Seeders எண்ணிக்கையை பொருத்தே உங்கள் தரவிறக்க நேரம் மற்றும் வேகம் இரண்டும் இருக்கும் மேலும் இதில் நீங்கள் ஏதாவது ஒன்றை தரவிறக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அந்த தரவிறக்கம் முடிந்ததும் உங்கள் கணினியும் யூ டோரண்டின் வழங்கி போல செயல்பட ஆரம்பித்து விடும் அதாவது நீங்கள் ஒன்றை தரவிறக்கி முடித்தவுடன் அது மற்றவர்களுக்கு அப்லோட் செய்ய ஆரம்பித்துவிடும் ஒரு விதத்தில் நல்லதுதான் மற்றவர்கள் நமக்கு அப்படி வழங்குவதால் தானே நமக்கு கிடைக்கிறது ஆனால் உங்கள் இனைய கணக்கு குறிப்பிட்ட அளவு வரையரை நிர்னயிக்கப்பட்டிருந்தால் நிறுத்தி வைத்துவிடுவது நல்லது இல்லையேல் உங்கள் இனைய தொகை அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.

  சரி நாம இப்ப பார்க்க போவது ஒரு வீடியோ அல்லது ஏதாவது அவசியமான ஒன்றை கொஞ்சம் வேகமாக தரவிறக்க பிட் ரேட் அதிகரிப்பது பற்றித்தான் இதனால் என்ன நண்மை உங்கள் தரவிறக்க வேகம் 20கேபியில் இருந்தால் நாம் செய்யப்போகும் மாற்றங்களில் 20கேபி வேகம் என்பது 40 முதல் 50ஆக கூடிய வாய்ப்பிருக்கிறது இனி கொஞ்சம் கவணமாக கீழே செய்யப்போகும் மாற்றங்களை நீங்களும் செய்து விடவும்.

  முதலில் Options கிளிக்கி அதில் Preference என்பதை கிளிக்கவும் இப்பொது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் General என்பதை கிளிக்கி படத்தில் இருப்பது போல இருக்கிறதா என பார்க்கவும் அப்படி இல்லையென்றால் இதன் படியே மாற்றிக்கொள்ளவும.  அடுத்ததாக Connection எனபதை கிளிக்கி Post used for Incoming Connections என்பதில் 47624 என மாற்றிவிடவும் அடுத்து Enable UPnP port mapping எனபதில் டிக் மார்க் இருந்தால் அதை எடுத்து விடவும்.  அடுத்து Bandwidth என்பதில் கிளிக்கி Maximum upload rate (kB/s):[0: unlimited] என்பதின் நேராக உள்ள கட்டத்தில் 65 என மாற்றவும், அடுத்ததாக அதன் கீழே பாருங்கள் அதில் Global maximum number of connections: என்பதில் 1890 என மாற்றவும் அடுத்து Maximum number of connected peers per torrent என்பதில் 2329 என மாற்றவும், அடுத்து Number of upload slots per torrent:என்பதில் 14 என மாற்றிவிடவும்.  அடுத்ததாக BitTorrent என்பதை கிளிக்கி Protocol Encryption என்பதை Enabled செய்துவிடுங்கள்.  இனி Advanced என்பதை கிளிக்கி பின்வரும் மாற்றங்களை நிதானமாக ஒவ்வொன்றாக செய்யவும்.

  bt.allow_same-ip-----True

  bt.enable_tracker-----True

  bt.gracefull_shutdown-----False

  bt.send_have_to_seed-----False

  gui.bypass_search_redirect-----True

  ipfilter.enable-----False

  net.max_halfopen-----66

  net.outgoing_port-----50

  net.wsaevents-----150

  peer.disconnect_inactive_interval-----900

  queue.dont_count_slow_dl-----False

  queue.dont_count_slow_ul-----False

  தங்கள் பார்வைக்காக படத்தையும் இனைத்துள்ளேன்  நண்பர்களாக என் தளத்தில் 76 பாலோவர் 168 மின்னஞ்சல் வழி தளம் வருபவர்கள் என இருக்கிறீர்கள் தயவு செய்து ஒரு நிமிடம் செலவழித்து உங்கள் வாக்கையும் கருத்துகளையும் பதிவு செய்வதன் மூலம் மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கலாமே இது உங்களால் முடியும்தானே? நீங்கள் அளிக்கும் ஒரு வாக்கு மேலும் அதிக நபர்களுக்கு சென்றடைய அடிப்படையாய் இருக்கும் உங்களுக்கு தமிழிஷின் பிரபல பகுதி பற்றி தெரியும்தானே ஒரு நிமிடம் செலவழிக்க யோசிக்காதீர்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 22, 2010

  17

  புரொபசனல் டிவிடி கன்வெர்ட்டர் + ரைட்டர்

 • Jun 22, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக செய்தாலும் சரிவர செய்வது மேல்.

  வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது புரொபசனல் டிவிடி ரைட்டர் பற்றித்தான் சாதரணமாக நாம் சில ஒரிஜினல் டிவிடி பார்த்தோமேயானால் அதில் உள்ள மெனு மற்றும் பிரேம் போன்றவை சிறப்பாக இருக்கும் இலவச பொருள்களில் இருக்கத்தான் செய்கிறது ஆனால் பணம் செலுத்தி பெறும் புரொபசனல் மென்பொருளில் இருக்கும் வசதிகள் நிச்சியமாய் சில மென்பொருள்களில் இருப்பதை இங்கே மறுப்பதற்கில்லை.

  இனி நீங்கள் விருப்பபட்டால் புரொபசனல் டிவிடி ரைட்டர் தரவிறக்கி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள் அடுத்ததாக HELP திறந்து Enter License Key என்பதை தெரிவு செய்து சீரியல் எண் கொடுத்து பதிவு செய்துவிடுங்கள்.

  நீங்கள் சாதரணமாக ரோரண்டில் சினிமா தரவிறக்குவீர்கள் நீங்கள் வீடியோ தரவிறக்கும் போது .avi, .mp4, .mkv போன்ற பார்மட்களாக உள்ள வீடியோ என்றால் தரமும் நன்றாக இருக்கும் கன்வெர்சன் செய்தால் சிறப்பாக இருக்கும் ஆனால் இந்த தொழிலநுட்ப உலகத்தில் எந்த பார்மட் வீடியோவையும் எந்த பார்மட்டுக்கும் மாற்றிவிடலாம் ஆனால் அதில் பயன் இருக்காது எனவே முடிந்தவரை நான் மேலே கொடுத்துள்ள பார்மட்டுகளாக இருந்தால் மட்டும் தரவிறக்கி முயற்சிக்கவும் டோரண்ட் எப்படி தேடுவது என தெரியாதவர்கள் நமது தளத்தின் முந்தைய பதிவை பாருங்கள்.

  இதை பற்றி நான் அதிகமாக எழுதுவதாக இல்லை காரணம் இது உங்களுக்கு உபயோகிப்பதற்கு எந்த பிரச்சினையும் இருக்காது மேலும் அவசியம் நான் இதை சொல்லியாக வேண்டும் இந்த மென்பொருளை உபயோகிக்கும் போது கணினியில் வேறு வேலைகள் செய்யாமல் இருப்பது நல்லது காரணம் இது உபயோகிக்கும் மெமரியின் அளவு அதிகமாக இருக்கிறது.

  என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் என்னை பொருத்தவரை நிச்சியம் இது ஒரு நல்ல மென்பொருள் உபயோகித்து பாருங்கள் நீங்களும் விரும்புவீர்கள்.

  நண்பர்களாக என் தளத்தில் 73 பாலோவர் 168 மின்னஞ்சல் வழி தளம் வருபவர்கள் என இருக்கிறீர்கள் தயவு செய்து ஒரு நிமிடம் செலவழித்து உங்கள் கருத்துகளையும் வாக்கையும் பதிவு செய்வதன் மூலம் மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கலாமே இது உங்களால் முடியும்தானே?

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 20, 2010

  41

  பிடிஎப் வெட்டு ஒட்டு எடிட் என்னவேணாலும் பண்னு

 • Jun 20, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து:மின்னுவதெல்லாம் பொன்னல்ல மண்ணெல்லாம் வெறும் மண்ணல்ல.

  இந்த பதிவுலகத்திற்கு வந்து சரியாக 103 நாட்கள் ஆகிவிட்டது 70 பதிவுகள் எழுதிவிட்டேன் இதனால் என்ன சாதித்தேன் இதனால் மன உளைச்சல் இல்லாது வேற ஒரு ம*&%$#ம் இல்லை வெறுப்பா இருக்கு ஒவ்வொரு முறை பதிவு எழுதும் போதும் நினைக்கிறேன் இதுவே கடைசியாய் இருக்கட்டுமென ஆனால் எழுத்து சிரங்கு பிடித்தவன் போல மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறேன் இந்த ம*&%$#று எழுத வந்ததுக்கு அப்புறம் வேலையில் கூட சரியாக கவணம் செலுத்த முடியவில்லை.

  உங்கள் எல்லோருக்குமே பிடிஎப் பற்றி தெரியும் ஆனால் ஒரு பிடிஎப் பைலை ஒவ்வொரு பக்கமாக பிரிக்கவோ அல்லது தனித்தனியாக உள்ள பிடிஎப் பைல்களை ஒன்று சேர்க்கவோ அல்லது அதில் உங்களை கையெழுத்தை சேர்க்கவோ அல்லது பிடிஎப் என்கிரிப்ட் செய்யவோ, என்கிரிப்ட் செய்ததை மீண்டும் டிகிரிப்ட் செய்யவோ பக்கங்களின் வரிசை எண் மாற்றவோ எத்தனையோ ஆன்லைன் தளங்கள் இருக்கிறது அதில் உங்களுக்கு நேரம் விரயம் அதிகம் ஆகும் மேலும் இலவசமாக கிடைப்பதில்லை அதற்கு எல்லாம் தீர்வாக நான் பரிந்துரைக்கும் மென்பொருள் இருக்கும் இனி நீங்கள் பிடிஎப் உருவாக்கவோ அல்லது அதை எடிட் செய்வதோ மிக எளிது இதில் ஒரு பிரச்சினை தமிழ் மட்டும் எடிட் செய்ய நினைத்தால் தமிழ் யூனிகோட்டை ஆதரிக்க மறுக்கிறது பரவாயில்லை விரைவிலேயே அதற்கான தீர்வு வரும் என நம்புவோம்.

  எடிட் வெட்ட ஒட்ட ஸ்டாம்பிங்

  பிடிஎப் டூல்ஸ் தரவிறக்கி கணினியில் நிறுவி விடுங்கள் இதன் வழியாக ஒரு பிடிஎப் பைலை பிரிக்கவோ அல்லது சேர்க்கவோ என்கிரிப்ட்,டிகிரிப்ட் செய்யவோ அல்லது XMLலை பிடிஎப் ஆக மாற்றுவது மிக எளிது உபயோகித்து பாருங்கள் நிச்சியம் உங்களுக்கு இது உபயோகமானதாக இருக்கும்.  பிடிஎப் உருவாக்க மட்டும்

  கியூட் ரைட்டர் தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவி விடுங்கள் இது உங்கள் பிரிண்டர் செட்டிங்ஸ் உள்ளே வந்து விடும் எந்த பைலை பிடிஎப் ஆக மாற்ற நினைக்கிறீர்களோ அதை பிரிண்ட் கொடுப்பது போல கொடுத்தால் வரும் பிராப்பர்ட்டியில் Cute Printer என்பதை தேர்ந்தெடுக்கவும் மிகவும் எளிமையாக இருக்கும் பயன்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.  எடிட் பண்ணலாம்

  பிடிஎப் சூட் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி விடுங்கள் இதில் என்ன ஒரு விஷேசம் இருக்கிறதென்றால் உங்கள் பிடிஎப் பைலில் ஏதாவது ஒரு வார்த்தையை சேர்க்கவேண்டும் அல்லது நீக்க வேண்டும் இந்த இரண்டும் இதில் எளிதாக செய்துவிடலாம் என்ன தமிழில் மட்டும் எழுத்துரு பிரச்சினை வருகிறது ஆனால் நிச்சியம் இது ஒரு நல்ல மென்பொருள்.

  நண்பர்களாக என் தளத்தில் 66 பாலோவர் 153 மின்னஞ்சல் வழி தளம் வருபவர்கள் என இருக்கிறீர்கள் தயவு செய்து ஒரு நிமிடம் செலவழித்து உங்கள் கருத்துகளையும் வாக்கையும் பதிவு செய்வதன் மூலம் மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கலாமே இது உங்களால் முடியும்தானே?

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 19, 2010

  5

  நானும் எதிர் வீட்டுக்காரியும்

 • Jun 19, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். வாழ்க்கையே ஒரு பாடம் தான் அதில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு சில சேட்டைகள் இருக்கத்தான் செய்யும்.

  நேற்றய இரவு வேலை முடிந்து உறங்கு நேரம் இரவு 12.30 தொட்டுவிட்டிருந்தது காலையில் எழுந்து வழக்கம் போல செல்ல மகனை கொஞ்சி கிடந்த போது தான் மனைவியின் குரல் என்னங்க நேரம் என்னாச்சுனு பார்த்திங்களா என கேட்ட போது தான் நேரம் எட்டு மணி ஆகியிருந்தது அப்படியே ரோட்டு பக்கம் இருக்கும் ஜன்னலை திறந்து எதேச்சையாய் எதிர்வீட்டை கவனித்த போதுதான் வீடு திறந்திருந்ததையும் புதிதாய் ஒரு குரல் கேட்பதையும் கவனித்தான் அப்பொழுதே ஆர்வம் பற்றிக்கொண்டது எப்படியும் அந்த புதிய குரலின் சொந்தக்காரியை காண வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாய் பற்றிக்கொண்டது இருந்தாலும் காலையில் வேலைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அது குறித்து அதிகம் சிந்திக்க முடியாமல் வேலைக்கு செல்வதில் கவணத்தை திருப்பி இடையில் மனைவியிடம் சிறிதாக விசாரித்து வைத்தான்.

  காலை உணவை முடித்துகொண்டு இரு சக்கர வாகனத்தின் சாவியை தேடும் போது தான் நேற்று இரவு வண்டி பஞ்சர் ஆனது நினைவில் வந்தது ஒரு வழியாய் ஒரு ஆட்டோவை அழைத்து வரச்சொன்ன போதுதான் ஏங்க அப்படியே நம்ம மகனையும் ஸ்கூலில் விட்டுறிங்களா? எனக்கு வீட்டு வேலை அதிகமாக இருக்கு என்றால் மனைவி சரி மகனையும் அழைத்து கொண்டு அவனை அவனுடைய ஸ்கூலில் விட்டு அப்படியே மகனிடம் ஒரு அன்பு முத்தத்தையும் பெற்றுக்கொண்டு அலுவலகம் சென்றபோது மணி 9.30 ஆகியிருந்தது வழக்கம் போல அலுவல் வேலைகளில் மூழ்கிப்பவன் இடையில் தன் மைத்துணனை அலைபேசியில் அழைத்து வண்டி பஞ்சர் விபரத்தை சொல்லி பார்த்துவைக்க சொனான் பின்னர் மீண்டும் அலுவலக பணிக்குள் மூழ்கிப்போனவனை அலுவலக நண்பர் வந்து அழைத்த போதுதான் மதியம் சாப்பாட்டுக்கான நேரம் ஆகிவிட்டதை அறிந்தான் மீண்டும் ஒரு ஆட்டோவை அழைத்து அப்படியே மகனின் ஸ்கூலுக்கு சென்று அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான் வீட்டில் சாதமும் சாம்பாரும் கேரட் பொறியலும் இருந்தது சாப்பிட்டு விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு கிளம்பும் போதுதான் மனைவி ஒரு இனிப்பு பலகாரத்தை கொண்டுவந்து கொடுத்து எதிர் வீட்டுக்காரர்களின் விஷயத்தை சொன்னால் மறந்து போனதை மீண்டும் ஞாபகத்திற்கு வந்ததும் எப்படியும் இன்று சீக்கிரமே வந்து அவளை பார்க்கவேண்டும் என்கிற ஆவலுடன் அலுவலகம் சென்றான்.

  ஏதேதோ அலுவல் வேலை காரணமாக எல்லாம் மறந்து விட்டிருந்தான் மீண்டும் எதேச்சையாய் அன்று ஞாயிற்று கிழமை மனைவிக்கு உதவியாய் துணி காயப்போட மொட்டை மாடி சென்றபோதுதான் அவளையும் அவளின் அம்மாவையும் கண்டான் அவளோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள் அவள், அவளின் மெல்லிய கால்கள் அதில் ஒரு சின்ன கொழுசு கைகளில் வளையல், புருவத்தில் மை இட்டதன் அடையாளம் தெரிந்தது மேலும் மெலிதான ஆடை இட்டிருந்தாள் இடையிடையே அவள் அம்மாவிடம் ஏதோ கையை ஆட்டி பேசுவது போல் தெரிந்தாலும் என்ன சொல்லுகிறாள் என்பது தெரியவில்லை நான் அவளையே கவணித்ததை என் மனைவியும் கவணிக்க தவறவில்லை, இடையிடையே அவள் என்னை நோக்கி பார்ப்பதும் சிறிதாக கையை அசைப்பது போல எனக்கு தோன்றினாலும் எனக்கு ஒன்றும் புரியவில்லை இந்த நேரத்தில் என் மனைவியும் அவளின் அம்மாவும் நட்போடு சிரித்து கொண்டார்கள் அதை நான் கவணிக்க தவறவில்லை அப்போதே நினைத்துகொண்டேன் இன்று சாயங்காலம் ஏதாவது இனிப்பு பலகாரம் மற்றும் பரிசுப்பொருள்கள் வாங்கிகொண்டு அவளின் வீட்டிற்கு சென்று அவளை அருகில் இருந்து பார்த்துவிட வேண்டியதுதான் அப்படியே மனைவியின் காதிலும் போட்டு வைத்தேன் எதிர் வீட்டுகாரர்கள் தான் என்றாலும் நான் அதிகம் அவர்களிடம் பேசியதில்லை அதற்காக நான் அகங்காரம் பிடித்தவன் இல்லை போதிய நேரமின்மையே காரணம்.

  சாயங்காலம் 6.30 மணி அளவில் கொஞ்சம் பழம் வகைகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் பரிசுப்பொருள்களை வாங்கி கொண்டு நானும் என் மனைவியும் என் மகனுமாக அவள் வீட்டிற்கு சென்றோம் அவளின் அப்பாதான் முதலில் எங்களை பார்த்து வரவேற்றார் கொஞ்சம் நல விசாரிப்புகள் முடிந்ததும் ஒரு மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் நேரமின்மையால் தான் முன்னமே வந்து பார்க்க முடியவில்லை என்பதாக அவரும் அதை பெருந்தன்மையாக இதற்கெல்லாமா மன்னிப்பு என கேட்டு விட்டு அவர் மனைவியை அழைத்து உணவு தயார் செய்ய சொன்னார் நான் மெதுவாக அவரின் மகளை பற்றி விசாரித்தேன் உறங்குவதாக சொன்னார் நானும் ஆவலில் அவளை பார்க்கவேண்டும் என்றேன் சரி என படுக்கை அறைக்கு அழைத்து சென்றார் அவள் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் நான் மெதுவாக அவளை தொட்டதும் தூக்கம் கலைந்தவள் நெடுநாட்கள் என்னை அறிந்தவள் போல என் கையை பிடித்துக்கொண்டு சிரித்தாள் அவள் சிரிப்பை கண்ட எனக்கு கடவுளை கண்ட பக்தன் போல என மனசெல்லாம் ஒரே சந்தோஷம் இருக்காத பின்னே ஆறு மாத பச்சிளங்குழந்தை என் கையை பிடித்துகொண்டு என்னை பார்த்து சிரிக்கும் போது மனசு எங்கேயோ பறப்பது போல தானே இருக்கும் அதனால் தானே குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள் அது உண்மைதானே! குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்திருக்கிறீர்களா அவர்களின் கள்ளமில்லா சிரிப்புக்கு முன்னால் நாம் சம்பாதிக்கும் இலட்சங்களுக்கு விலை இருக்கிறதா என்ன? குழந்தைகளை நேசியுங்கள் அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள் அவர்களின் திறமைகளை கொண்டாடுங்கள்.

  என்ன நண்பர்களே இதில் நீங்கள் வேறு ஏதாவது எதிர்பார்த்து வந்திருந்தால் அதற்கு நான் பொருப்பல்ல எத்தனை நாட்களுக்கு தான் கணினி பற்றிய பதிவேயே எழுதிக்கொண்டிருப்பது அதுவும் வரவேற்பு இல்லாமால் எனவே தான் இது புது முயற்சி.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 17, 2010

  10

  இன்பாக்ஸில் தடையப்பட்ட இனையதளம்

 • Jun 17, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: காதல் வந்தால் அம்மை தழும்பும் அதிர்ஷட குறியாய் தெரியும்.

  நான் ஏற்கனவே தடை செய்யப்பட்ட தளங்களை எப்படி திறப்பது என ஒரு பதிவிட்டிருந்தேன் ஆனால் சில நாடுகளில் இந்த முறையும் செயல்படுத்த முடியவில்லை என்பதை சில நண்பர்கள் மூலமாக அறிகிறேன் சரி அந்த மாதிரியான நேரத்தில் தடை செய்யப்பட்ட தள தகவல்களை எப்படி தெரிந்துகொள்வது சில இடங்களில் கணினி தகவல் சம்பந்தப்பட்ட தளங்களை கூட இண்டர்நெட் சரிவீஸ் புரைவைடர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக தடை செய்திருப்பார்கள் அந்த நேரத்தில் புராக்ஸி சர்வரும் கூட உதவாது அதற்காக தான் இப்போது இந்த சேவையை பற்றி பார்க்க போகிறோம்.

  உங்களிடம் அவசியம் ஒரு மின்னஞ்சல் முகவரி இருக்கவேண்டும் சரி உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இல்லையா இலவச ஜிமெயில் ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள் இன் உங்கள் மின்னஞ்சலை திறந்து அனுப்ப வேண்டிய முகவரியில் www@web2mail.com என்பதை எழுதவும் இனி சப்ஜெகட் என்பதில் தடை செய்யப்பட்ட இனையதளத்தின் முகவரியை கொடுக்கவும் இனி வேறு ஒன்றும் செய்யவேண்டாம் அப்படியே மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள் குறைந்த பட்சம் நான்கு மணி நேரத்திற்குள் தடை செய்ப்பட்ட தளத்தில் உள்ள தகவல்கள் உங்கள் இன்பாக்ஸில் இருக்கும் சில நேரம் நேரம் கூடுதல் ஆகலாம் ஆனாலும் தகவல் வந்துவிடும் மேலும் எப்படி அனுப்புவது என்ற சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பார்க்கவும்.  இதில் ஒரு பிரச்சினையும் இருக்கிறது நீங்கள் பார்க்க விரும்பும் தளத்தில் வீடியோ அல்லது இமேஜ் இருக்குமானால் அவை உங்கள் இன்பாக்ஸிற்கு வராது டெக்ஸ்ட்டுகள் மட்டுமே வரும் என்ன செய்ய எல்லா தொழில் நுட்பங்களிலும் இது போன்ற ஏதாவது பிரச்சினை இருக்கதானே செய்கிறது.

  சரி என்ன நண்பா தடை செய்யப்பட்ட தளம் திறக்க வழி சொல்கிறீர்கள் நமக்கு வேண்டாத இனையதளத்தை நமது கணினியில் மென்பொருள் உதவி இல்லாமல் தடை செய்ய ஏதாவது வழி இருக்கிறதா என கேட்க்கும் நண்பர்களுக்காக எனது முந்தைய பதிவை பார்க்கவும் இதே வழிமுறையை பின்பற்றி இனையத்தில் தொல்லை கொடுக்கும் பாப் அப் விளம்பரங்களையும் தடையலாம்.

  நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்களை போல மற்ற நண்பர்களும் பயனடைய வாக்கு கருத்துரை அளிப்பதன் மூலம் நிறைய நபர்களை சென்றடைய நீங்களும் ஒரு காரணியாக இருங்கள் நான் எழுதுவதால் மட்டும் எல்லோருக்கும் சென்றடையாது நீங்களும் மனது வைத்தால் மட்டுமே அதிகம் நபர்களை சென்றடைய வழி இருக்கிறது.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 16, 2010

  20

  வேர்டில் குறுக்கு வழி(Word Shortcut)

 • Jun 16, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: இரத்தத்தில் கையை நனைத்தால் கண்ணீரால் தான் கழுவ வேண்டும்.

  நண்பர்களே இது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும் இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவட்டுமே என்கிற எண்ணமே பதிவின் நோக்கம், மைக்ரோசாப்ட் வேர்டிற்கு ஆயிரக்கணக்கான ஷார்ட்கட்கள் இருக்கின்றன நாம் அத்தனையையும் தெரிந்து ஞாபகத்தில் வைப்பது என்பது இயலாத காரியம் ஆனாலும் ஆர்வம் இருப்பவர்கள் தெரிந்துகொளவதில் ஒன்றும் தப்பில்லை. நான் இப்போது உங்களுக்கு 20 குறுக்குவழிகள் மட்டுமே பரிந்துரை செய்யப்போகிறேன் இந்த 20 குறுக்குவழிகள் மட்டும் ஞாபகத்தில் வைத்தால் போதும் உங்களுக்கு எலியின்(மவுஸ்) அவசியம் கூட தேவையிருக்காது என்பதை நிச்சியம் படித்து முடிக்கும் போது உணர்வீர்கள்.

  நான் தமிழ்படுத்துகிறேன் பேர்வழி எதற்கான கமாண்ட் என்பதை தமிழில் எழுதியிருக்கிறேன் ஏதாவது சந்தேகம் இருந்தால் கருத்துரையில் பதியவும்.

  புதிதாக வேர்ட் பைல் திறக்க --------- Windows Key+R then Type winword

  திறந்த பின் மீண்டும் புதிது------------Ctrl+N

  தேதி -----------------------------Alt+Shift+D

  வார்த்தை நடுமயம் வர -------------Ctrl+E

  வார்த்தை வலது பக்கம் வர------------Ctrl+R

  வார்த்தை இடது பக்கம் வர------------Ctrl+L

  வார்த்தையின் கீழ் கோடிட-------------Ctrl+U

  எழுத்தை போல்டாக்க------------------Ctrl+B

  காப்பி எடுக்க--------------------------Ctrl+C

  காப்பி எடுத்ததை ஒட்ட --------------Ctrl+V

  பார்மட் மெனு-------------------------Ctrl+Shift+F

  எழுத்து அளவு பெரிதாக்க---------------Ctril+Shift+>

  எழுத்து அளவு சிறிதாக்க----------------Ctrl+Shift+<

  எழுத்தை பார்மட் செய்ய----------------Shift+F3

  மாற்றங்கள் திரும்ப வர ----------------Ctrl+Z

  மாற்றங்கள் மீண்டும் வர----------------Ctrl+Y

  பிரிண்ட் பிரிவியூ-----------------------Ctrl+F2

  பார்மட் பெயிண்ட் பிரஷ் காப்பி-----------Ctrl+Shift+C

  பார்மட் பெயிண்ட் பிரஷ் பேஸ்ட்---------Ctrl+Shift+V

  சேமிக்க--------------------------------Ctrl+S

  வேறொரு பைலாக சேமிக்க--------------F12

  அச்சிட---------------------------------Ctrl+P


  என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் தானே இனி மற்றவர்கள் முன்னிலையில் எலியை(மவுஸ்) பயன்படுத்தாமலே மைக்ரோசாப்ட் வேர்டில் உங்கள் பணி நடக்கட்டும்.முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிக்கொடுங்கள் நேரம் இல்லாவிட்டால் குறைந்தபட்சம் தம் தளத்தியாவது உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 15, 2010

  11

  கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு

 • Jun 15, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: பதவி உங்களுக்கு பெருமை தருவதை விட அந்த பதவியை நீங்கள் பெருமைபடுத்துங்கள்.

  கணினியில் சில சிறிய விஷயங்களில் சின்ன மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் இனையவேகத்தை கொஞ்சம் அதிகரிக்கலாம் அதற்கு நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம் இதற்கான இலவச DNS (Domain Name System) நான்கு நிறுவனங்கள் வழங்குகின்றன இவர்கள் தரும் முகவரியை மாற்றுவதன் மூலம் இனையவேகத்தை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

  இனி நீங்கள் செய்யவேண்டியது My Network Places என்பதின் பிராப்பர்ட்டிஸ் தேர்வு செய்யுங்கள் இப்போது உங்களுக்கு Local Area Connection என்பதாக ஒரு விண்டொ திறக்கும் அதில் மீண்டும் வலது கிளிக்கில் அதனுடைய பிராப்பர்ட்டிஸ் கிளிக்கவும்.  இப்போது உங்களுக்கு கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் நீங்கள் General என்கிற டேப்பை திறந்து Internet Protocol (TCP/IP) என்பதை தெரிவு செய்து படத்தில் நான் காண்பித்துள்ளது போல Properties என்பதை கிளிக்குங்கள்.  இப்போது மீண்டும் ஒரு பாப் அப் விண்டோ திறக்கிறதா இங்குதான் உங்கள் கணினியின் IP Address மற்றும் செர்வரின் முகவரி இருக்கும் நீங்கள் ஐபி-யை ஒன்றும் செய்யவேண்டாம் நான் படத்தில் அடையாளம் காண்பித்துள்ள இடத்தில் நீங்கள் கீழே கொடுத்துள்ள ஏதாவது ஒரு நிறுவனத்தின் DNS முகவரியை டைப் செய்யவும்.  நான் மேலே சொன்ன நான்கு நிறுவனங்களும் அவர்கள் இலவசமாக வழங்கும் DNS முகவரிகளும் ஒவ்வொன்றாக மாற்றிப்பார்த்து உங்களுக்கு எது வேகத்தை அதிகரிப்பதாக நினைக்கிறீர்களோ அதையே உங்கள் கணினியின் DNS முகவரியாக வைத்துக்கொள்ளுங்கள் வேண்டுமானல் தற்போதைய DNS முகவரி தெரிந்துகொள்ள Start -> Run -> டைப் cmd திறக்கும் கமாண்ட் பிராம்ப்ட்டில் ipconfig/all என டைப் செய்தால் உங்கள் கணினியின் ஐபி மற்றும் DNS முகவரி இருக்கும். உங்கள் இனையவேகத்தை சோதனை செய்து பார்க்க இனைய சோதனை 1 , இனைய சோதனை 2சென்று சோதித்து பார்க்கவும்.

  நிறுவனங்களும் இலவச செர்வர் முகவரிகளும்

  1.ScrubIT DNS Service

  Preferred DNS Server 67.138.54.100
  Alternate DNS Server 207.225.209.66

  2.Dnsadvantage DNS Service

  Preferred DNS Server 156.154.70.1
  Alternate DNS Server 156.154.71.1

  3.OpenDNS DNS Service

  Preferred DNS Server 208.67.222.222
  Alternate DNS Server 208.67.220.220

  4.Google DNS Service

  Preferred DNS Server 8.8.8.8
  Alternate DNS Server 8.8.4.4

  வழக்கம் போல இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பயனுள்ளது என நினைத்தால் உங்கள் நண்பர்களுக்கும் நம் தளத்தை அறிமுகபடுத்துங்கள் மேலும் வாக்கும் கருத்துரையும் அளித்து நம் தளத்தின் நண்பர்கள் பட்டியலில் இனைவதன் மூலம் உங்கள் ஆதரவை வெளிக்காட்டுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 14, 2010

  9

  விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking

 • Jun 14, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: வாழ்க்கை சிலருக்கு நாடகமாக இருக்கிறது, நாடகம் சிலருக்கு வாழ்க்கையாக இருக்கிறது.

  கணினியில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் புதிதாக ஒரு போல்டர் உருவாக்கும் போது அதன் பெயர் New Folder என்பதாக இருக்கும் நாம் இப்போது பார்க்கபோவது அந்த New Folder என்பதற்கு பதிலாக நாம் விரும்பும் படியான ஒரு பெயரில் போல்டர் உருவாகினால் நன்றாய் இருக்கும்தானே அதுதான் இந்த முயற்சி.

  முதலில் நீங்கள் தரவிறக்கி கொள்ளவும் இதன் உள்ளே ஒரு Resource Hacker மற்றும் Replacer இரண்டும் வைத்துள்ளேன் கணினியில் உள்ள dll கோப்புகளை திறக்க Resource Hacker அவசியம் என்ன நண்பர்களே தரவிறக்கம் செய்தாகிவிட்டதா? முதலில் Resource Hacker மென்பொருளை இயக்கி File என்பதில் கிளிக்கி Open என்பதை தெரிவு செய்து திறக்கும் பாப் அப் விண்டோவில் இதை C:\WINDOWS\system32\shell32.dll (C:\WINDOWS\system32\shell32.dll உங்கள் இயங்குதளம் D:\யில் நிறுவப்பட்டிருந்தால் D:\WINDOWS\system32\shell32.dll என்பதாக இருக்கும்) காப்பி எடுத்து File Name என்பதில் ஒட்டி Open என்பதை கிளிக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.  இனி இடது பக்கம் பாருங்கள் String Table என இருக்கும் அதில் போல்டர் பெயர் 1896 அதை கிளிக்கி டேபிள் 1033 கிளிக்கி வலது பக்கம் பாருங்கள் முதல் இரண்டு வரிசையில் தான் நாம் மாற்றம் மேற்கொள்ள போகிறோம் நான் New Folder என்பதை Gsr என மாற்றியிருக்கிறேன் அடுத்ததாக New Shortcut என்பதை Gsr Shortcut என மாற்றியிருக்கிறேன் நீங்கள் உங்களுக்கு பிடித்த பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் இனி அடுத்ததாக Compile Script என்பதை தெரிவு செய்து ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி இதை File என்பதில் கிளிக்கி அதில் Save as என்பதை தெரிவு செய்து shell32.dll என்கிற பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் சேமித்து விடுங்கள்.  சரி கணினியின் dll கோப்பில் மாற்றம் செய்தாகிவிட்டது இனி அடுத்து நீங்கள் முன்னமே தரவிறக்கிய கோப்பில் Replacer என்கிற பெயரில் ஒரு Command பைல் இருக்கிறதல்லவா அதை வழக்கம் போல இருமுறை கிளிக்கவும் இபோது கமாண்ட் விண்டோ திறந்திருக்கும் இனி சொல்வதை கொஞ்சம் கவணமாக செய்துவிடுங்கள் C:\WINDOWS\system32 (C:\WINDOWS\system32 உங்கள் இயங்குதளம் D:\யில் நிறுவப்பட்டிருந்தால் D:\WINDOWS\system32 என்பதாக இருக்கும்) சென்று அங்கு இருக்கும் shell32.dll என்கிற பைலை (Drag & Drop) இழுத்து நாம் திறந்து வைத்திருக்கும் கமாண்டில் இழுத்து விட்டு ஒரு எண்டர் கொடுக்கவும் அடுத்ததாக நாம் முன்னமே Save as மூலமாக ஒரு shell32.dll என்பதை டெஸ்க்டாப்பில் சேமித்திருந்தோம் அது நினைவிருக்கிறதா இப்போது அந்த shell32.dll பைலை (Drag & Drop) கமாண்டிற்குள் இழுத்து விடவும் இப்போது நீங்கள் இதை மாற்ற விரும்புகிறீர்களா என்பதாக ஒரு செய்தி வரும் அதில் ஆம் என்பதற்கு Y வேண்டாம் என்பதற்கு N என இருக்கும் நீங்கள் Y என கீபோர்டில் அழுத்தவும் இனி உங்கள் கமாண்டில் சிறிய பேக்கப் நடப்பதை காணலாம் எல்லாம் முடிந்ததும் உங்கள் கணினியை (Reboot) ரீஸ்டார்ட் செய்து விடுங்கள் அவ்வளவுதான்.  மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு இதே செயல்முறையை பின்பற்றவும் என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கிறதா இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடைய உதவுங்கள் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயவுசெய்து கருத்துரையில் பதியவும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 13, 2010

  12

  நாலு வரி நாற்பதாயிரம் அர்த்தம்

 • Jun 13, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: அழுதுகொண்டே பிறக்கிறோம். குறை கூறிக்கொண்டே வாழ்கிறோம். ஏமாற்றத்துடனே சாகிறோம். இடையில் என்ன சாதித்தோம்?

  வணக்கம் நண்பர்களே சில நேரங்களில் பத்து பக்கங்களில் எழுதி புரியவைக்க வேண்டியதை சில வரிகளில் எழுதி விடுவார்கள் சிலர் அப்படித்தான் இந்த இரண்டும்.

  இது என் சொந்த படைப்பு இல்லை


  பிரிவும் காதலும்

  பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்
  உன்னை பிரியக்கூடாதென்று
  பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்
  உன்னை ஏன் பார்த்தோமென்று.


  ரசனை

  உலகில் ரசிக்க
  ஆயிரம் இருந்தாலும்
  அனைத்தையும்
  மறந்து ரசித்தேன்
  உன் நினைவுகளை மட்டும்


  நண்பர்களே சிறிது நேரம் ஒதுக்கி இந்த கவிதையை குறித்தான கருத்துகளை எழுதுங்களேன்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...
  27

  இலவச வன்தட்டு (Free Hard Drive)

 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: உண்மையான நட்பு நம் ஆரோக்கியம் போன்றது இழக்கும் வரை அதன் அருமை புரிவதில்லை.

  எனக்கும் பதிவுலக போதை பிடித்துவிட்டது என்றே நினைக்க தோன்றுகிறது தமிழிஷ் வாக்குகளும் கருத்துரைகளும் குறைகிற போது எழுதுவதற்கான வேகம் குறைகிறது அதிலும் கடந்த சில பதிவுகள் பெற்ற வாக்குகள் இனிமேல் எழுதத்தான் வேண்டுமா என சிந்திக்கவும் வைத்து விட்டது இது போன்ற விரக்தியுடன் ஒரு பதிவை எழுதும் போது சில நேரம் மக்கள் என்றும் இல்லாத திருநாளாக வாக்கும் கருத்துரையும் அளிபார்கள் ஆனால் அடுத்த பதிவில் மறந்து விடுவார்கள் நானும் ஒரு நாள் கிடைத்த போதையிலே சொக்கிபோய் மீண்டும் அதே போதைக்கு ஏங்குவேன், இது போன்ற நேரங்களில் என்னை நானே கேட்கும் கேள்வி இது தேவைதானா?

  இலவச வன்தட்டு என்றவுடன் யாரும் எப்படி அனுப்பி வைபார்கள் என யோசிக்க வேண்டாம் இது கூகுளின் ஜிமெயில் டிரைவ் இதை இங்கே தரவிறக்கவும் இனி வழக்கம் போல உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும் இனி உங்கள் கணினியில் உங்களிடம் ஏற்கனவே இருக்கும் வன்தட்டு போல புதிதாக ஒரு வன்தட்டு வந்திருக்கும் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.  இனி அதில் படத்தில் காண்பித்துள்ளது போல டிரைவில் வலது கிளிக்கில் Login As என்பதில் கிளிக்கவும் இனி உங்களுக்கு ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் உங்களின் ஜிமெயில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கவும் தேவையானால் அதில் Auto Login கட்டத்தில் ஒரு மார்க் குறியீடு ஏற்படுத்துவதின் மூலம் Login பிரச்சினையை தவிர்க்கலாம்.

  இதன் அளவு 7.30GB ஆகும் இதில் என்ன ஒரு விஷேசம் நம் கணினியில் வந்து அமர்ந்து கொள்வதுதான் இதன் சிறப்பு மற்றபடி நம் கணினியில் இருக்கும் வன்தட்டோடு இதன் வேகத்தை ஒப்பிட்டு பார்க்க முடியாது வேகம் சிறப்பாக இல்லை ஆனாலும் பயன்படுத்துவதற்க்கு ஒன்றும் பிரச்சினை இருக்காது இந்த முறையில் ஒன்றை மட்டுமே இனைக்க முடியும்.  இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் தகவல்களை இதில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கு சென்றாலும் உங்களால் எளிதாக பயன்படுத்த முடியும் மேலும் இதனை பயன்படுத்த அவசியம் இனைய இனைப்பு வேண்டும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 10, 2010

  6

  அனானி மின்னஞ்சல் அனுப்பலாம்

 • Jun 10, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: தோல்வியை ஓப்புக்கொள்ள தயங்காதே, தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது- லெனின்

  இது நான் ஏற்கனவே எழுதிய படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் பற்றி பதிட்டிருந்தேன் அன்று நல்ல வரவேற்பு பெற்றிருந்தது இப்போது நான் அறிமுகப்படுத்துவது அதே போலத்தான் தான் ஆனால் கொஞ்சம் வித்யாசம் இருக்கிறது இதில் மின்னஞ்சல் அனுப்ப உங்கள் மின்னஞ்சல் முகவரியும் அவசியமில்லை நீங்கள் அனானியாகவே மின்னஞ்சல் அனுப்பலாம்.

  இந்த தளத்தில் உங்களை ரிஜிஸ்டர் செய்ய சொல்வதில்லை உங்களுடைய சொந்த தகவல் கேட்பதில்லை பாப் அப் தொல்லை இல்லை ஒரு முறை உபயோகித்துதான் பாருங்களேன், இது எந்த மாதிரியான நேரத்தில் உங்களுக்கு உதவலாம் ஏதாவது ஒரு செய்தியை பத்திரிகைக்கோ அல்ல வேறு சில முக்கியமான பிரச்சினைகளின் ஆதராங்களையே உங்களை வெளிப்படுத்தாமல் அனுப்ப உதவும்.

  படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்
  நண்பர்களை நல்லவற்றிற்கே பயன்படுத்தவும் தவறான வழிக்கு முயற்சிக்க வேண்டாம் அதன் பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...
  7

  பதின்மம் மற்றும் இருமம்

 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: மனிதனின் பலவீனமே தன்னை அதி புத்திசாலியாக நினைப்பதுதான்.

  நண்பர்களே இது வரை என் தளத்திற்கு வந்து படித்து,என் பதிவுகளுக்கு வாக்களித்து, ஓட்டளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி எல்லோரையும் போலதான் நானும் இந்த பதிவுலகத்துக்கு வந்தேன் எனக்கு தெரிந்ததை எழுதினேன் ஆனாலும் எனக்கு திருப்தி இல்லை என்னுடைய ஆசை என் பதிவுகள் நிறைய நபர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான்(இது பேராசையாகவும் இருக்கலாம்) ஆனால் அதை பாழாய் போன ஓட்டு தடுத்து விடுகிறது, மேலும் நான் யாருடைய பதிவிற்கும் சென்று கும்மியடிப்பதோ கொட்டம் அடிப்பதோ இல்லை, ஒரு வேளை இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், இந்த பதிவுலகில் நான் பதிவு எழுதுபவர்களின் வாக்குகளையோ அல்லது கருத்துரையையோ எதிர்பார்ப்பதில்லை என்னுடைய நோக்கம் வாசகர்களை கண்டுபிடித்து அவர்களிடம் என் பதிவை கொண்டு செல்வதுதான் ஆனால் நான் தோற்று விட்டேன் என்னால் எனக்கான வாசகர்களை கண்டுபிடிக்க முடியவில்லை (அவர்களை கவரும் விதத்தில் என் பதிவுகள் இல்லை). ஒன்றுமில்லாத வெற்று பதிவுகள் பெறும் வரவேற்பு கூட நல்ல சில பதிவுகளுக்கு கிடைப்பதில்லையே என நினைக்கும் போது வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

  இந்த தகவலும் ஏற்கனவே நான் நண்பர் பிகேபி தளத்தில் பகிர்ந்துகொண்டதுதான் தமிழிஷ் திரட்டியிலும் இனைக்கபட்டது தான் இதை ஏற்கனவே படித்தவர்கள் மன்னிக்கவும் தெரியாதவர்கள் தொடரவும்.

  நாம் ஒரு கணிப்பான் (கால்குலேட்டர்) வழியாக 27 + 12 என அடித்து கொடுத்தால் அடுத்த நொடியில் 39 என வந்துவிடும் ஆனால் இந்த விடையை சொல்லும் முன் கணிப்பான் அல்லது கணிணி என்ன செய்கிறது என பார்ப்போம்.

  அதற்கு முன் தசாமிசம்(decimal) இருமம் (Binary) எப்படி பயன்படுத்தப்படுகிறது என பார்க்கலாம் நாம் கொடுக்கும் பதின்மம்(decimal) எண்கள் இரும்மாக (Binary) மாற்றப்பட்டு பின்னர்தான் கணக்கிடப்படுகிறது.

  முதலில் பதின்மம்(decimal) எப்படி இருமம் (Binary) மாற்றப்படுகிறது என் பார்க்கலாம்.

  உதாரணத்திற்கு 29 என்ற எண்னை எடுத்துக்கொள்ளலாம்

  29÷2=14 – 1
  14÷2=7 – 0
  7÷2=3 – 1
  3÷2=1 – 1
  1÷2=0 – 1

  29 என்பதன் இருமம் 10111
  29 - 11101

  அதாவது 29÷2=14.5 என வரும் ஆனால் நீங்கள் 14.5 என்ற எண்ணில அடுத்த குறைந்த முழுமையான எண் 14 என்பதை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் மீதமுள்ள .5 என்பதை நீங்கள் 1 என எடுத்துக்கொள்ளவும் அதேபோல் 1÷2=0 – 1
  ஒன்றிலிருந்து 2 வகுபடமுடியாது எனவே அதற்கான விடை 0 தான் ஆனால் நான் மேலே சொன்னபடி -1 என்பதை முழு எண்ணாக கணக்கில் எடுத்துக்கொள்ளவும் மேலே உள்ள கணக்கை பார்த்தால் புரியும் இருதியில் நாம் 27 என்பது இரும்மாக மாற்றினால் 27 என்பது 11101 என கிடைக்கும் இந்த 10111 என்பதை வலது பக்கத்தில் இருந்து எண்களை மாற்றி எழுத வேண்டும்.

  10111 என்பதை 11101 என எழுதவேண்டும் இனி தாங்கள் செய்தது சரிதான என தெரிந்து கொள்ள கணிணியில் உள்ள கணிப்பானை (கால்குலேட்டர்) திறந்து அதில் இருமம் Binary என்பதை தேர்ந்தெடுத்து 11101 என அடித்து பதின்மம்(decimal) என்பதை தேர்ந்தெடுங்கள் இப்பொழுது பதின்மமாக மாற்றப்பட்ட எண் 29 என இருக்கும்.

  மீண்டும் உதாரணத்திற்கு 12 என்ற எண்னை எடுத்துக்கொள்ளலாம்.

  12÷2=6 – 0
  6÷2=3 – 0
  3÷2=1 – 1
  1÷2=0 – 1

  12- 0011
  விடை : 1100

  இனி இருமம்Binary எண்னை எப்படி பதின்மமாக (decimal) மாற்றுவதை பார்க்கலாம்.

  மேலே குறிப்பட்டுள்ள படி 29 தசாம்சம்- 11101 இருமம் எண்ணாக மாற்றப்பட்டது இனி அப்படி மாற்றப்பட்ட எண் அதாவது இருமம் 11101 என்பது எப்படி பதின்மமாக 29 என வருகிறது என பார்க்கலாம்
  1 1 1 0 1 (இது இருமம் எண்)

  2(4) 2(3) 2(2) 2(1) 2(0) (ஒவ்வொரு எண்ணின் கீழ் இது போல எழுதிக்கொள்ளுங்கள் எத்தனை எண்கள் இருக்கிறதோ அதற்கு ஏற்றார்போல பெருக்கும் முறையில எண்களை கூட்டிக்கொண்டே செல்லவும் 1 ,2,3,4, எழுதியது போல அடுத்தடுத்து வரும் எண்களுக்கு 5,6,7 என கூட்டிச்செல்லவும்)

  16 8 4 2 1 (இதை பொருத்தவரை 2(0)பெருக்கினால் 0 வரும் ஆனால் இதில் மேலே குறிப்பிட்டுள்ளபடி 0 என்பதை 1 என மாற்றிகொள்ளவும் அடுத்து 2(1) என்பது 2 , 2(2) என்பது 4 , என பெருக்கி எழுதவும்)
  16 +8 +4 +1 = 29

  இப்பொழுது மூன்று வரிசைகள் இருக்கின்றன முதல் வரிசை இருமம் எண் இரண்டாவது வரிசை இருமம் சூத்திரப்படி நாம் எழுதியது அடுத்து மூன்றாவது வரிசை இரண்டாவது வரிசையின் சூத்திரப்படி பெருக்கி வரும் தொகை நான்காவது வரிசையை பாருங்கள் இதில் நான் என்ன செய்திருக்கிறேன் என்றால் முதல் வரிசையில் உள்ள இருமம் எண்ணில் எந்த இடத்தில் 1 என இருக்கிறதோ அதற்கு கீழாக உள்ள மூன்றாவது வரிசையில் எந்த எண் இருக்கிறதோ அதை எழுதவும் 0 என எங்கெல்லாம் வருகிறதோ அவை இருக்குமிடத்தின் கீழ் உள்ள மூன்றாவது வரிசையில் உள்ள எண்ணை கணக்கில் எடுத்துகொள்ளவேண்டியது இல்லை.

  மீண்டும் உதாரணத்திற்கு பதின்மம் Decimal 12 என்ற எண் இருமம் Binary 1100 ஆக மாற்றப்பட்டது இனி Binary 1100 என்பதை Decimal எண்ணாக மாற்றலாம்.

  1 1 0 0
  2(3) 2(2) 2(1) 2(0)
  8 4 2 1

  விடை : 8 + 4 = 12

  இனி இப்படி சோதனை செய்து பாருங்கள்
  29 – 12 = 17

  29ன் இருமம் 11101 – 12ன் இருமம் 1100 என கணிப்பான் (கால்குலேட்டர்) வழியாக இருமம் தேர்வு செய்து கழித்து பின்னர் அந்த எண்ணை (decimal) பதின்மமாக மாற்றிப்பார்க்கவும்.

  கணிணியில் 0 மற்றும் 1 என்பது இல்லையென்றால் கணிணியே இல்லையென்று சொல்லலாம் மேலை பார்த்தாலே தெரிந்திருக்கும் 0 மற்றும் 1 என்பதே கணிணியில் பிரதானம்.

  என்ன நண்பர்களே குழப்புவது போல இருக்கிறத ஒன்றிற்கு இரண்டு முறை வாசித்து பாருங்கள் நிச்சியம் புரிந்துவிடும் மேலும் இது நமக்கு உபயோகப்படுவதில்லை இருப்பினும் தெரிந்துகொள்வதில் தவறில்லையே?

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 9, 2010

  14

  கவிதை இப்படித்தான் இருக்கனுமா?

 • Jun 9, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கி விடும்.

  கவிதை

  வடக்கத்தி மங்கையர் போல
  முழுவதும் மூடாமல்
  கேரள பெண்கள் போல
  முழுவதும் திறந்து விடாமல்
  தமிழநாட்டு பெண்கள் போல
  மூடியும் மூடாமலும்
  அழகு காட்டவேண்டும் கவிதை.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 8, 2010

  16

  வேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு

 • Jun 8, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: பிரச்சினை வரும் வரை ஒருவனின் பலமும் பலவீனமும் தெரியாது.

  நண்பர்களே நாம் சில நேரங்களில் நம்முடைய தகவல்கள் அடங்கிய வேர்டு மற்றும் எக்ஸெல் பைல்களை ஏதாவது ஒரு காரணத்திற்காக யாரும் படிக்க அனுமதிக்காமல் இருக்க அதற்கு கடவுச்சொல் கொடுத்து திறக்கவிடாதபடி செய்வோம் அதை இங்கு தெரியாத நண்பர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறேன் இது பற்றி முன்பே தெரிந்தவர்கள் தயவுசெய்து மன்னிக்கவும்.

  சரி இங்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பு 2003 மற்றும் 2007 இரண்டுக்குமே அதற்கான வழிகளை பார்க்கலாம் முதலில் 200 வேர்ட், எக்ஸெலில் கடவுச்சொல் கொடுப்பதை பார்க்கலாம்.

  மைக்ரோசாப்ட் வேர்ட் 2003

  படத்தில் காண்பித்துள்ளபடி Tools கிளிக்கி அதில் Options தெரிவு செய்யுங்கள்.  இனி இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் அதில் Password to open என்பதில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை கொடுங்கள் நீங்கள் விரும்பினால் மட்டும் Advanced என்பதை கிளிக்கி தேவையான மாற்றங்கள் செய்யுங்கள் ஆனால் அது உங்களுக்கு தேவைப்படாது எனவே Password to openல் கடவுச்சொல் கொடுத்ததும் கீழே இருக்கும் ஓக்கே பட்டனை அழுத்தி ஓக்கே கொடுத்து விடுங்கள்.  இனி இப்படியாக திற்க்கிறதா நீங்கள் முன்னர் கொடுத கடவுச்சொல்லை இங்கேயும் கொடுங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் வேர்ட் பைல் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.  மைக்ரோசாப்ட் எக்ஸெல் 2003

  படத்தில் காண்பித்துள்ளபடி Tools கிளிக்கி அதில் Options தெரிவு செய்யுங்கள்.  இனி இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் அதில் Security டேப்பை திறந்து Password to open என்பதில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை கொடுங்கள் நீங்கள் விரும்பினால் மட்டும் Advanced என்பதை கிளிக்கி தேவையான மாற்றங்கள் செய்யுங்கள் ஆனால் அது உங்களுக்கு தேவைப்படாது எனவே Password to openல் கடவுச்சொல் கொடுத்ததும் கீழே இருக்கும் ஓக்கே பட்டனை அழுத்தி ஓக்கே கொடுத்து விடுங்கள்.  இனி இப்படியாக திற்க்கிறதா நீங்கள் முன்னர் கொடுத கடவுச்சொல்லை இங்கேயும் கொடுங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் எக்ஸெல் பைல் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.  மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் எக்ஸெல் 2007

  இதில் மைக்ரோசாப்ட்டின் ஆபிஸ் பட்டனை கிளிக்கினால் கீழிருப்பது போல திறக்கும் அதில் நீங்கள் கடவுச்சொல கொடுக்கவேண்டிய பைலை திறந்து Prepare என்பதில் கிளிக்கி அதில் வரும் Encrypt Document என்பதை தேர்வு செய்யவும்.  இனி உங்களுக்கு இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் இதில் நீங்கள் கடவுச்சொல்லை கொடுத்து ஓக்கே கொடுத்ததும் மீண்டும் ஒரு பாப் அப் திறந்து உங்கள் கடவுச்சொல்லை ஊர்ஜிதம் செய்ய சொல்லும் அதையும் செய்து விடுங்கள் அவ்வளவுதான் இனி மைக்ரோசாப்ட் 2007 லிலும் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.  என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா மேலும் பல நண்பர்களுக்கு சென்றடைய உதவுங்கள் குறைந்தபட்டம் உங்கள் நண்பர்களோடு அறிவுப்பகிர்தலாவது செய்துகொள்ளுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 7, 2010

  6

  இஷ்டத்துக்கு ஐகான் மாத்தலாம்

 • Jun 7, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: அகம்பாவம் பொல்லாத குதிரை அதில் சவாரி செய்ய நினைத்தால் கீழே விழ வேண்டியதுதான்.

  நண்பர்களே சாதரணமாக கணினியில் உள்ள ஐகான்களை நமக்கு இஷ்டமான ஒரு படத்தை நாம் விரும்பும் வகையில் மாற்றமுடியாது மேலும் போட்டோஷாப் தெரிந்தவர்கள் அவர்களுக்கு தேவையான விதத்தில் வடிவமைத்துக்கொள்ள முடியும் அது பற்றி இங்கே என் முந்தைய பதிவு இன்னும் சில மூன்றாம் நபர் மென்பொருள் கொண்டு வடிவமைக்கலாம் ஆனால் அவை யாவும் எனக்கு தெரிந்த வரையில் சிறப்பாக எளிதாக செயல்படுவது போல தெரியவில்லை.

  சாதரணமாக நாம் நமது கணினியில் ஒரு போல்டர் ஐகான் மாற்ற வேண்டுமானால் இப்படியாக செய்வோம் அதற்கான் விளக்கபடம் கீழே பாருங்கள் புரியும்.  சரி நண்பர்களே நான் எப்பவுமே இப்படித்தான் விரிவாக சொல்கிறேன் என்கிற பெயரில் வழ வழ்வென்று சொல்லிகொண்டிருப்பேன் தயவுசெய்து மன்னிக்க வேண்டும் இனி ஐகான் மேக்கர் தரவிறக்கி கொள்ளுங்கள் தரவிறக்க கிளிக்க வேண்டிய இடத்தை கீழே படத்தில் அடையாளம் காட்டியிருக்கிறேன் பாருங்கள்.  இதில் நீங்கள் செய்யவேண்டியது நீங்கள் ஐகானாக மாற்ற விரும்பும் படத்தை டிராக் செய்து கட்டத்தினுல் விட வேண்டியதுதான் உடனடியாக ஐகானாக மாற்றப்பட்டு சேமிக்கபடும் இதில் எத்தனை பெரிய அளவு படங்களை இழுத்து விட்டாலும் பிரச்சினையில்லை மேலும் JPG, BMB,GIF இப்படி எந்த படங்களாக பார்மட் ஆக இருந்தாலும் இவன் கவலைப்படுவதில்லை அழகாக மாற்றி தந்துவிடும் பின்னர் படம் 1ல் காண்பித்துள்ள படி நீங்கள் உருவாக்கிய ஐகானை நீஙகள் மாற்ற விரும்பும் போல்டரில் பயன்படுத்தவும்.

  என்ன நண்பர்களே எத்தனை நாட்களுக்கு தான் இப்படி அவர்கள் கொடுத்த ஐகானையே உப்யோகிப்பது இப்போது நமக்கு பிடித்த நபர்களின் போட்டோவை கூட ஐகானாக மாற்றி சேமித்துவிடலாம் தானே! இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்களும் பயணடையட்டும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 6, 2010

  8

  வன்தட்டை (Hard Drive) துண்டு துண்டா வெட்டலாம்

 • Jun 6, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: பிரச்சினை உள்ளவர்க்கே அதன் தாக்கம் புரியும் வெளியில் இருந்து பார்த்தால் ஒரு கதை போலவே தோன்றும்.

  நண்பர்களே இன்று நாம் பார்க்கபோவது நமது கணினியில் உள்ள வன் தட்டை எப்படி பிரிப்பது இது என்ன பெரிய விஷயம் கணினியில் இயங்கு தளம் நிறுவும் போதே நமக்கு தேவையான அளவில் வன் தட்டுகளை பிரித்து விடலாமே! நீங்கள் நினைப்பது சரிதான் ஆனால் இது நாம் இயங்குதளம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள கணினியில் எப்படி பிரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

  விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் இதற்கான வசதிகள் உள்ளதாக நாம் அறிகிறோம் ஆனால் எக்ஸ்பியில் இந்த வசதி இல்லை ஆனால் நமது கணினியில் ஏற்கனவே இரண்டு பார்ட்டிசியன் அதாவது C,D என இருக்கிறது என வைத்துக்கொள்வோம் நமக்கு வேண்டுமானால் D டிரைவை மேலும் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரிக்கலாம் ஆனால் அதில் உள்ள டேட்டா அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் நான் அதைப்பற்றி இங்கு விளக்கபோவதில்லை காரணம் வேறு ஒரு வழிமுறை இருக்கும் போது அதன் அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.

  இனி பார்ட்டிசியன் மேனேஜர் வெறும் 11எம்பி அளவுதான் தரவிறக்கி உங்கள் கணினியில் சாதரண மென்பொருள் நிறுவுவது போல நிறுவிக்கொள்ளவும் இனி இந்த பார்ட்டிசியன் மேனேஜரை திறந்து உங்கள் வன் தட்டை நீங்கள் விரும்பும் வகையில் பிரித்து கொள்ளலாம் உதாரணமாக உங்கள் வன் தட்டு 160ஜிபி உள்ளதாக இருக்கிறது ஒரே டிரைவாக இருக்கிறது என வைத்துக்கொள்ளலாம் உங்களுக்கு தேவையான அளவில் பார்ட்டிசியன் செய்வதற்கு விண்டோஸ் இயங்கு தள குறுந்தகடு தேவையில்லை மேலும் கரப்ட் ஆகிவிடுமோ என்கிற அச்சம் வேண்டியது இல்லை உங்களுக்கு எத்தனை டிரைவாக பிரிக்க வேண்டுமா அத்தனை டிரைவாக பிரிக்கலாம்.  மேலே இருக்கும் படத்தை பாருங்களேன் இதில் ஏற்கனவே மூன்று டிரைவ்கள் பிரித்து இருக்கிறது இதை பற்றி கவலைப்பட வேண்டாம் இனி நீங்கள் C டிரைவை பிரிக்க நினைக்கிறீர்கள் அதற்கு C டிரைவை செலக்ட் செய்து பின்னர் இடது பக்கம் இருக்கும் Resize / Move Partition என்பதை கிளிக்கி புதிதாய் திறக்கும் விண்டோவில் அதன் அளவை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.  என்ன நண்பர்களே மாற்றிவிட்டீர்கள் இனி என்ன ஓக்கே கொடுத்து விடுங்கள் இப்போது உங்கள் C டிரைவின் அளவை பாருங்கள் மாறியிருக்கிறதா மேலும் இப்போது புதிதாக Un Allocated என்கிற பெயரில் ஒரு டிரைவ் வந்திருக்கும் அதில் பெயர் எதுவும் இருக்காது இனி இந்த Un Allocated என்பதை தெரிவு செய்து நீங்கள் விரும்பும் அளவில் இடத்தை கொடுத்து மேலே இருக்கும் Create பட்டனை அழுத்துங்கள் இதில் பெயர் கேட்க்கும் அதில் உங்கள் கணிணி NFTS , FAT32,FAT இதில் எந்த வகை என்பது அதிலேயே இருக்கும் அதன் பெயர் கொடுத்து டிரைவ் லெட்டருக்கு உங்களுக்கு பிடித்த எழுத்தை கொடுத்து ஓக்கே கொடுக்கவும் சிறிது நேரத்தில் அடுத்த டிரைவ் தயாராகி இருக்கும். இனி அது போலவே மீதம் உள்ள இடத்திற்கும் கொடுத்து சேமித்து விடுங்கள் இறுதியில் சேமிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்களை சேமிக்கவா என கேட்கும் ஆமாம் என்பதை கொடுத்து சேமித்து விடுங்கள் இனி உங்கள் கணினி ரீபூட் அதாவது ரீஸ்டார்ட் செய்ய தொடங்கும் எல்லாம் முடிந்து.

  இனி உங்கள் கணினியை இயக்கி உங்கள் வன்தட்டு பகுதியை பாருங்கள் நீங்கள் விரும்பியவாறே எல்லாம் மாறியிருக்கும், மீண்டும் டிரைவை அழிக்க நினைக்கிறீர்களா அதற்கும் வசதி இருக்கிறது. எப்போதும் விண்டோஸ் இயங்குதளத்தை மட்டும் C டிரைவில் வைத்துக்கொண்டும் Dயில் நீங்கள் நிறுவ விரும்பும் மூன்றாம் நபர் மென்பொருள்களை நிறுவிக்கொள்ளவும் Eல் உங்கள் சொந்த டேட்டாக்களை பாதுக்காப்பாக வைத்துக்கொள்ளவும் இதனால் உங்கள் கணினியில் இயக்கத்தின் வேகம் அதிகம் பாதிக்கப்படாது நண்பர்களை இது எளிமையான மென்பொருள் என்பதால் தான் இது பற்றி அதிகம் விள்க்கவில்லை உங்களுக்கே பார்த்தால் எளிதில் புரிந்துவிடும் ஒருவேளை ஏதாவது சந்தேகம் இருப்பின் தயவுசெய்து தயங்காமல் கருத்துரையில் பதியவும்.

  இது உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் இது உங்களை போல உள்ள மற்ற நபர்களுக்கும் சென்றடைய உதவுங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 5, 2010

  8

  மானிட்டர்ல ஒட்டு மஞ்சல் ஸ்டிக்கர்

 • Jun 5, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: மற்றவர் பேசும் போது உங்கள் காதை கொடுங்கள் ஆனால் எல்லோரிடமும் உங்கள் வாயை கொடுக்கதீர்கள்.

  நண்பர்களே இது உங்கள் எல்லோருக்கும் வேறு பெயர்களில் உங்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம் ஆனால் இதில் அனிமேசன் தொல்லை இல்லை மேலும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்வதில்லை மேலும் இதை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது இது ஒரு சிறிய 980 கேபி உள்ள மென்பொருள் இதை தரவிறக்கி வழக்கம் போல உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இனி உங்கள் மானிட்டரின் வலது பக்கம் கீழ் பாருங்கள் ஒரு மஞ்சல் நிற ஸ்டிக்கர் போல இருக்கிறதா அதில் ஆப்ஷன்ஸ் தெரிவு செய்யுங்கள்.  இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்களுக்கு தேவையானதை தெரிவு செய்து தேவையான பெயர் கொடுத்து ஓக்கே கொடுத்துவிடுங்கள்.  இனி கீழிருக்கும் மஞ்சல் ஸ்டிக்கரை கிளிக்கி உங்களுக்கு தேவையான விபரத்தை கொடுத்து விடுங்கள் இதை நீங்கள் நீள்வட்டமாகவோ அல்லது கிடைமட்டமாகவோ மாற்றிக்கொள்ளலாம் உங்களுக்கு மஞ்சல் கலர் எரிச்சலாக இருந்தால் அதையும் மாற்றிக்கொள்கும் வசதி இருக்கிறது் மேலும் அலாரம் செட் செய்யும் வசதி இருக்கிறது

  என்ன நண்பர்களே இது உங்களுக்கு அலுவலக பணிக்கு உபயோகமாக இருக்குமென்றே நம்புகிறேன் இது உங்களுக்கு எளிதாக நினைவூட்ட கூடியதாக இருக்கும் நானும் இதைத்தான் உபயோகிக்கிறேன்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jun 3, 2010

  16

  நீங்கள் பதிவுலக வாசகரா?

 • Jun 3, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையை தயார் செய்கிறது.

  நண்பர்களே ஓவ்வொரு நாளும் பதிவர்கள் எழுதும் பதிவை பலரும் படிக்கின்றனர் சிலர் அதற்கு கருத்துரைகள் எழுதுகின்றனர் சிலர் எழுத நேரமின்மை அல்லது தெரியாமை போன்ற காரணங்களாலும் இன்னும் சிலர் வெரும் வாசிப்போடு நிறுத்தகொள்வார்கள் அப்படிபட்ட நண்பர் என்னிடம் உங்கள் தளத்தில் எப்படி கருத்துரை எழுதுவது என மின்னஞ்சல் வழி கேட்டிருந்தார் இது பற்றி பதிவர்களுக்கு மிக நன்றாக தெரியும் ஆனால் பதிவு எழுதாத வாசகர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை தானே அதற்காகத்தான் இந்த பதிவு தெரிந்தவர்கள் மன்னிக்கவும.

  என் தளத்திற்கு வருகின்ற வாசகர்கள் நீங்கள் விரும்பினால் Post a Comment என்கிற ஒரு கட்டம் காணப்படும் அதில் நீங்கள் உங்கள் கருத்துகளை தட்டச்சு செய்து நீங்கள் உபயோகப்படுத்தும் மின்னஞ்சல் மூலம் கருத்துரை இடலாம்.  சரி நீங்கள் தினமும் விரும்பி படிக்கும் பதிவர் புதிதாக ஏதாவது பதிவு எழுதியிருக்கிறாற என தெரிந்துகொள்ள ஒவ்வொரு முறையும் தளத்திற்கு சென்று பார்க்க முடியாது தானே அதற்காக தான் இந்த கூகுள் வழங்கும் Feed Burner வசதி இருக்கிறது இதில் நீங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து ஒப்புதல் கொடுத்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு செய்தி வரும் அதில் ஒரு தொடுப்பு இருக்கும் அதில் கிளிக்கி உறுதிபடுத்தி விடுங்கள் இனி உங்கள் விருப்ப பதிவர் பதிவை எழுதி வெளியிட்டதும் அதற்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சலில் வந்துவிடும்.  உஙகளுக்கு பிடித்தமான வலைத்தளத்தில் நீங்களும் பங்காளி ஆக விரும்புகிறீர்கள் அதாவது அவர்களின் தளத்தில் இனைந்திருக்க விரும்புகிறீர்கள் இதனால் என்ன நண்மை ஒன்றுமில்லை நீங்கள் விரும்பும் பதிவருக்கு உங்கள் ஆதரவை வழங்குகிறீர்கள் படத்தை பாருங்கள் இதில் Follow என்பதில் கிளிக்கி உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்வதன் மூலம் நீங்கள் அந்த தளத்தின் பெருமைக்குறியவர்கள் ஆகிறீர்கள் அதன் மூலம் அந்த தளம் நல்ல தளம் என நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.  நீங்கள் ஒரு தளத்தில் ஒரு கருத்துரையை எழுதியிருக்கிறீர்கள் சரி அதற்கு அவர் தங்களுக்கு அவர் என்ன பதில் அளித்திருக்கிறார் என தெரிந்துகொள்ள நீங்கள் அந்த தளத்தில் இருக்கும் Comment RSS என்கிற சேவையை பயன்படுத்துங்கள்.  தமிழிஷ் தள ஓட்டு பட்டையை நீங்கள் விரும்பும் தளத்தில் இனைத்திருந்தால் அதில் வாக்களிக்க தமிழிஷ் தளம் சென்று ரிஜிஸ்டர் செய்துவிடுங்கள் ஒரு வேளே நீங்கள் ஏற்கனவே தமிழிஷில் பதிவு செய்திருந்தால் Login என்பதை கிளிக்கி உள்ளே செல்லவும்.  வாக்கு அளிக்க விருப்பிய பதிவிற்கு Voted என்பதில் கிளிக்கினால் போதும் ஒரு பதிவிற்கு நீங்கள் ஒரு முறை மட்டுமே வாக்கு அளிக்க இயலும் இப்படி நீங்கள் வாக்கு அளிப்பதால் நீங்க்ள் விரும்பும் பதிவு தமிழிஷின் பிரபல பகுதிக்கு வந்துவிடும் இதன் மூலம் மேலும் அதிக நபரை சென்றடையும் மேலும் இதில்More from என்பதை கிளிக்கினால் அவருடைய மற்ற பதிவுகளையும் காணலாம்.  தமிழிஷில் மேலே வலது பக்க மூலையில் இருக்கும் Log In செய்தபிறகு Profile என்பதை கிளிக்கி திறக்கும் விண்டோவில் Modify என்பதை தெரிவு செய்து அதில் உங்களை பற்றிய சுய விபரங்களை கொடுக்கலாம் இதன் மூலம் நீங்கள் விரும்பும் பதிவர் உங்களை பற்றி அறிந்துகொள்ள உதவியாய் இருக்கும்.  என்ன நண்பர்களே உங்கள் வாக்குகளும் கருத்துரையும் தான் ஒரு தளத்தின் மிகச்சிறந்த மதிப்பீடாக இருக்கமுடியும் நீங்கள் அளிக்கும் ஒரு வாக்கின் மூலம் அந்த பதிவு மேலும் பலரை சென்றடைய வாய்ப்பிருக்கிறது நீங்கள் எழுதும் பதிவை பற்றிய கருத்துரைகள் மேலும் அதன் நம்பகத்தன்மையை உறுதிபடுத்துவதாக இருக்கும் முடிந்தவரை நல்ல பதிவுகளை ஆதரியுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...
  7

  தமிழில் எழுதுவது எப்படி?

 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: எல்லோரும் உலகத்தை மாற்றவே முயற்சிக்கிறோம் ஆனால் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சிப்பதே இல்லை.

  வணக்கம் நண்பர்களே சமீபத்தில் என் நண்பன் கேசவன் இப்படியாக கேட்டான் “நீ எப்படிடா தமிழில் எழுதுற?” என் நண்பனை போல இன்னும் எத்தனையோ நண்பர்களுக்கு இது கொஞ்சம் கடினமாக தெரியும் காரணம் அடிப்படையில் தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு கொஞ்சம் கடினமாகவே தெரியும் ஆனால் இப்போதெல்லாம் தமிங்கிழிஷ் முறையை தான் பயன்படுத்துகிறார்கள் எனவே ஏன் இது பற்றி ஒரு பதிவாக எழுதக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவு இதை தெரிந்த நண்பர்கள் மன்னிக்கவும் தெரியாத நண்பர்கள் தொடரவும்.

  நான் இங்கு குறிப்பிட போகும் அனைத்து மென்பொருள்கலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க கூடியவை அதாவது நீங்கள் ஆங்கிலத்தில் ammaa என டைப் செய்தால் உங்களுக்கு அம்மா என்பதாக வரும் முதலில் உங்களுக்கு கொஞ்சம் சிரம்மமாக தெரியும் ஆனால் கொஞ்ச நாள் பழகி விட்டால் நீங்கள் ஆங்கிலத்தை தட்டச்சு செய்வது போல தமிழிலும் தட்டச்சு செய்யலாம்.

  கூகுள் தமிழ் எழுதி இது இனைய ஜாம்பாவனின் தமிழ் எழுது மென்பொருள் எப்பவும் போல இதுவும் மிகவும் பயன்படுத்த எளிமையானது தவறான வார்த்தைகள் டைப் செய்யும் போது சரியான வார்த்தைகளை நமக்கு காண்பிக்கும் இதற்கானகூகுள் உதவி பக்கம் போதிய நேரமின்மையால் நான் இதற்கான படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

  மைக்ரோசாப்ட் தமிழ் எழுதி விண்டோஸ் ஜாம்பவானின் மென்பொருள் இதை பற்றியும் அதிகம் சொல்ல தேவையில்லை எதிலும் எளிமை அது இதிலும் தொடர்கிறது தவறான வார்த்தைகள் டைப் செய்யும் போது சரியான வார்த்தைகளை நமக்கு காண்பிக்கும் இதற்கானமைக்ரோசாப்ட் உதவி பக்கம் இதற்கும் படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

  NHM தமிழ் எழுதி மற்ற இரண்டையும் விட இது உபயோகிப்பதற்கு எளிமையாய் இருக்கும் ஆனால் இதில் தவறாக டைப் செய்தால் திருத்தி காண்பிக்கும் வசதி இல்லை ஆனால் சிறப்பாக செயல்படும் இதற்கானNHM உதவி பக்கம் இதில் உங்கள் கணினியின் வலது பக்க மூலையில் ஒரு மணி வந்திருக்கிம் அதில் Tamil Phonetic என்பதை தெரிவு செய்து அல்லது Alt+2 அழுத்தி டைப் செய்ய தொடங்கலாம் இதற்கும் படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

  திருவின் தமிழ் எழுதி இதை பற்றி விரிவாக சொலவதற்கு ஒன்றுமில்லை என சொல்லிவிட முடியாது இருப்பினும் இதையும் நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன் இதற்கான உதவி பக்கம் இங்கேயே இருக்கிறது இது பற்றியும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

  அழகி தமிழ் எழுதி ஒரு நேரத்தில் பணம் செலுத்தி பெறும் மென்பொருளாக இருந்தது இப்போது இலவசமாகவே கிடைக்கிறது இதில் நிறைய வச்திகள் இருக்கின்றன ஆனால் இதில் மட்டுமே போட்டோஷாப் மென்பொருளில் தமிழை உள்ளிடும் வசதி இருக்கிறது இதற்கான் உதவி பக்கம் இந்த தளத்திலேயே இருக்கிறது மேலும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

  என்ன நன்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் மேலும் இது தெரியாத நபர்களையும் சென்றடையும் விதமாக உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...
  4

  ரெசல்யூசன் பிரச்சினையா?

 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: ஏன் என்கிற கேள்வியில் தான் பல தத்துவங்கள் பிறந்திருக்கின்றன.

  நண்பர்களே இது ஏற்கனவே பிகேபி தளம் வாயிலாக பகிர்ந்து கொண்து தான் இபோது மீண்டும் இத்துடன் இன்னும் வேறு சில வழிமுறைகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள போகிறேன். 17”எல் சி டி மானிட்டர் அல்லது அதற்க்கும் மேலான அளவுகளில் மானிட்டர் வாங்கிய நண்பர்களுக்கு அதன் ரெசல்யூசன் பிரச்சினை ஒரு தலைவலியாகத்தான் இருக்கும் சாதரணமாக அதில் உள்ள செட்டிங்ஸ் வழியாக முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள் அதிகபட்சமாக 1280 x 1024 என கிடைத்திருக்கும் ஆனால் நமக்கு வேண்டியதோ 1440 X 900, எனக்கும் முதலில் 1280 x 1024 தான் கிடைத்தது எனக்கு தெரிந்த எல்லா வழிகளும் கைகொடுக்கவில்லை சரி நம்ம பெரிய அண்ணாச்சி கூகுள் கிட்டே கேட்டுபார்த்தாலும் சரியான பதில் கிடைக்கல எனக்கு தெரிந்த கணினி சம்பந்தபட்ட தளங்களில் எல்லாம் எனது கேள்வியை பதிந்தேன் எல்லா இடத்திலும் பதில் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது இறுதியில் நானகவே வெவேறு வழிகளில் முயற்சி செய்ய தொடங்கினேன் அப்பொழுதுதான் நமது கணிணியிலேயே எந்த சிரமமும் இல்லாமல் நாம் எதிர்பார்க்கிற ரெசல்யூசன் கொண்டு வரமுடியும் என்பதை தெரிந்து கொண்டேன் இதை படித்து முடிக்கும் போது நீங்களும் ஆச்சரியபடத்தான் போகிறீர்கள்.

  இனி விஷயத்துக்குள் செல்லலாம் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன் இந்த முறை எனக்கு சாத்தியமாயிற்று எல்லோருக்கும் இது சாத்தியாமா என்பது குறித்து சரியாக தெரியவில்லை இருப்பினும் நான் பரிந்துரைக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வழிமுறை நிச்சியம் உங்களுக்கு உதவும்.

  முதல் வழிமுறை

  கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு இடத்தில் வலது கிளிக் செய்து அதன் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும்.  புதிதாக திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் சென்று அட்வான்ஸ்டு பட்டன் திறக்கவும்.  இனி புதிய விண்டோவில் (இண்டெல் (ஆர்) எக்ஸ்டிரிம் கிராப்பிக்ஸ் டேப் கிளிக்கவும் அதில் உள்ள Download the Latest Intel Software and Driver என்பதை தேர்ந்தெடுக்கவும்.  இனி இண்டர்நெட் வழியாக இந்த தளம் திறக்கும் அதில் உள்ள Check your system for the Latest updates என்பதை கிளிக்கவும் ஒருவேளை அந்த லிங்க் திறக்கவில்லையென்றால் அதன் கீழே உள்ள Are you having trouble running the intel (R )driver update utility? என்பதை தேர்ந்தெடுத்து ஜாவா இன்ஸ்டால் செய்யவும்.  இனி Check your system for the Latest updates இந்த முறையில் பிரச்சினை இருந்தால் மட்டும் Are you having trouble running the intel (R )driver update utility? என்பதை செலக்ட் செய்வீர்களேயானால் இந்த தளம் திறக்கும் இதில் தங்களின் உலவிக்கானதை தேர்ந்தெடுக்கவும்.  இனி மீண்டும் Check your system for the Latest updates என்பதை தேர்ந்தெடுக்கவும் இனி தங்களின் கணிணிக்கான லேட்டஸ்ட் டிரைவர் மற்றும் மென்பொருளுக்கான ஸ்கேனிங் நடக்கும்.  ஸ்கேனிங் முடிந்தவுடன் பின்வருமாறு தளம் திறந்து இருக்கும் அதில் நமது கணிணியில் இருக்கும் அனைத்து டிரைவர்களுக்கும் லேட்டஸ்ட் அப்டேட் இருக்கும் அதில் நமக்கு தேவையானது கிராப்பிக்ஸ் டிரைவர் கீழே உள்ள படத்தை பாருங்கள் புரியும் , படத்தில் Graphics Driver என்பதற்கு அருகில் Download என இருக்கும் இனி Download என்பதை கிளிக்கி தரவிறக்கம் செய்யவும் பின்னர் வழக்கம் போலவே இன்ஸ்டால் செய்யவும் (இந்த படத்தில் அதுபோல இருக்காது ஏற்கனவே செய்தாகிவிட்டது )  இனி கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு இடத்தில் வலது கிளிக் செய்து அதன் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும் settings செல்லவும் கீழே உள்ள ரெசல்யூசன் அளவை 1440 x 900 என மாற்றிக்கொள்ளவும் தாங்கள் டவுன்லோட் செய்த பைலை Resolution 1440 x 900 என போல்டர் உண்டாக்கி அதில் சேமித்து வைத்துக்கொள்ளவும் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.  இரண்டாவது வழிமுறை

  இது மிகவும் எளிமையானது ஆனால் இது முயற்சிக்கும் முன்பு நீங்கள் மேலே கொடுத்துள்ள முதல் வழிமுறையை செய்திருக்க வேண்டும் எதற்காக என்றால் புதிய டிஸ்பிளே டிரைவர் இருந்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும் அப்பொழுதுதானே இந்த 1440 X 900 கிடைக்கும், நீங்கள் செய்ய வேண்டியது கணினியை இயக்கி விண்டோஸ் திறந்ததும் மானிட்டரில் இனைக்கப்பட்டிருக்கும் மின்சார இனைப்பை துண்டித்து மீண்டும் இனைக்கவும் (அதாவது மானிட்டரில் இனைத்துள்ள பிளக் உருவி மீண்டும் இனைக்கவும்) இபோது வேறு எந்த செயல்பாடுகளும் மேற்கொள்ள வேண்டாம் இனி மானிட்டரில் வெற்று இடத்தில் எலியால் வலது கிளிக்கி பிராப்பர்ட்டிஸ் எடுக்கவும் இனி அதில் Settings என்கிற டேப்பை திறந்து அதன் கீழே Advanced டேப்பை திறக்கவும்.  இப்போது இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் Intel® Extreme Graphics அதில் Graphics Properties என்பதை திறக்கவும்.  இப்போது கீழிருக்கும் விண்டோவை பாருங்கள் அதில் Schemes என்பதை கிளிக்கி 1440 X 900 (60Hz) என்பதை தெரிவு செய்து ஒக்கே கொடுக்கவும் அல்லது கீழிருக்கும் இரண்டாவது படத்தையும் பாருங்கள் இந்த இரண்டில் ஒரு முறையை பின்பற்றி உங்களுக்கு வேண்டிய ரெசல்யூசன் சரி செய்து கொள்ளுங்கள்.

  மூன்றாவது வழிமுறை

  இந்த வழிமுறையில் நிச்சியம் உங்கள் ரெசல்யூசன் பிரச்சினை தீர்ந்திருக்கும் இதில் கொஞ்சம் நீங்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் ஒவ்வொரு கணினியில் உள்ள டிஸ்பிளே டிரைவர்களுக்கும் டிரைவர்கள் இரண்டு விதமாக இண்டேல் வழங்குகிறது ஒன்று எக்ஸிக்கியூட்டபிள் அதாவது Exe ஆக கிடைக்கும் மற்றது Zip பைலாக கிடைக்கும் அதற்கு முன் உங்கள் டிஸ்பிளே டிரைவர் குறித்து அறிய Start -> Run-> type
  Dxdiag இப்போது ஒரு புதிய விண்டோ திறக்கும் அதில் Display என்பதை கிளிக்கி உங்கள் டிரைவர் பெயர் தெரிந்துகொண்டு தேடவும் இதில் நீங்கள் செய்யவேண்டியது இந்த Zip பைலாக கிடைக்கும் டிரைவரை தரவிறக்க வேண்டும்.  இனி இந்த Zip பைலை எக்ஸ்ட்ராக்ட் செய்து அதில் igxp32.inf பைலை தேடி கண்டுபிடிக்கவும் இதில் inf என்பது எக்ஸ்டென்ஷன் ஆகும் இனி நீங்கள் செய்ய வேண்டியது நான் படத்தில் அடையாளம் காட்டியுள்ள இடத்தை கண்டு பிடிக்கவும் முதல் அடைப்புக்குள் உள்ளவற்றில் இரண்டாவதாக இருக்கும் 0 என்பதிற்கு பதிலாக 5 என மாற்றிவிடவும்.

  இப்படியாக இருக்கும்
  HKR,, TotalDTDCount, %REG_DWORD%, 0 ; This shows number of DTDs to be used. ; 0-->Disable the feature.

  மாற்றவேண்டியது
  HKR,, TotalDTDCount, %REG_DWORD%, 0 ; This shows number of DTDs to be used. ; 5-->Disable the feature.

  அடுத்து இரண்டாவதாக இருக்கும் அடைப்புகுறியை பாருங்கள் அங்கு அதாவது 5வது வரிசையில் உள்ள வரிக்கு பதிலாக நான் கீழே கொடுத்திருக்கும் வரியை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து விடுங்கள் அவ்வளவுதான் இனி மூடி விடுங்கள்.

  HKR,, DTD_5,%REG_BINARY%, 97,29,A0,D0,51,84,20,30,50,98,13,00,00,00,00,00,00,1C,37,01 ;1440×900@60  இனி நாம் தரவிறக்கிய Zip பைல் உள்ளே Setup என்பதை இருமுறை கிளிக்கி இன்ஸ்டால் செய்து விடுங்கள் இனி உங்கள் கணினியில் ரெசல்யூசன் பிரச்சினை வராது.  நண்பர்களே இந்த தகவல் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்குமென்று நம்புகிறேன் இது மற்றவர்களுக்கும் சென்றடைய நீங்கள் கருத்துரையும் வாக்கும் அளிப்பதன் மூலம் நிறைய நபர்களை சென்றடைய உதவுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர