Mar 31, 2010

3

ரன் கட்டளைகள் உருவாக்கலாம்

  • Mar 31, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:இறைவன் மன்னிக்கவில்லையென்றால் சொர்க்கம் காலியாயிருக்கும்

    கணினியில் சாதரணமாக ரன் கட்டளைகள் இருக்கும் அவை விண்டோஸின் உள்ளேயே பதிந்து வந்திருக்கும் சரி அப்ப நாமகவே நமக்கு ஞாபகத்தில் வைக்கும்படியாக உருவாக்கிகொள்ள முடியுமா என்ற கேள்விக்கு விடையளிப்பதே இந்த பதிவின் நோக்கம் (கவனிக்க விண்டோஸின் கட்டளைகளை மாற்றுவது பற்றி அல்ல) உதாரணமாக நீங்கள் உங்கள் கணினியில் D:\ போல்டரில் Run Command என்கிற பெயரில் ஒரு மைக்ரோசாப்டின் வேர்டு பைல் சேமித்துள்ளீர்கள் நாம் பார்க்கபோவது இதை எப்படி ரன் கட்டளை வழியாக அதுவும் நமக்கு பிடித்த பெயரில் கட்டளை உருவாக்கி திறப்பது பற்றித்தான் அதாவது D:\ ல் இருக்கும் Run Command என்கிற பைலை ரன் கட்டளையில் gsr என கொடுத்தால் Run Command என்கிற பைல் திறக்கும் இந்த வழியில் நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் புரோகிராம்களுக்கும் பொருந்தும்.


    சரி விஷயத்துக்கு செல்வோம் கணிணியில் Local Disk(C:) திறந்து C:\WINDOWS அல்லது (Start –Run - %windir%) செல்லுங்கள் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் File எனபதை தெரிவு செய்து அதில் New என்பதில் Shortcut எனபதை தேர்ந்தெடுக்கவும் புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Browse என்பதை கிளிக்குங்கள்




    இனி கீழே இருக்கும் படத்தில் உள்ளதுபோல திறக்கும் விண்டோவில் நீங்கள் ரன் கட்டளை உருவாக்க நினைக்கும் பைலிற்கு பிரவுஸ் செய்து ஓக்கே கொடுத்தவுடன் அடுத்து ஒரு விண்டோ திறந்திருக்கும் அதில் Browse என்பதன் அருகில் தங்களின் பைல் இருக்கும் இடத்தை காண்பிக்கும் படத்தை பாருங்கள் புரியும் அடுத்து Next கொடுக்கவும்



    இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்களுக்கு வசதியான ஞாபகத்தில் வைக்க்கூடிய ஒரு பெயர் கொடுத்து சேமித்து விடவும் அது எண்களாக எழுத்தாக எப்படி வேண்டுமானலும் இருக்கலாம் நான் gsr என சேமித்துள்ளேன்



    இப்போது நீங்கள் உங்களுக்கு தேவையான ஒரு பைலிற்கு ரன் கட்டளை உருவாக்கி விட்டீர்கள் இனி Start– Run (Windows key + R) திறந்து நீங்கள் கொடுத்த கட்டளை பெயரை கொடுத்து ஓக்கே கொடுத்துபாருங்கள் ( நான் ரன் கட்டளையில் gsr என கொடுத்தால் Run Commandஎன்கிற பைல் திறக்கும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் பதியவும்

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    4

    மை கம்ப்யூட்டர் பிராப்பர்ட்டிஸ் ட்டிரிக்ஸ்

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:வாழ்க்கை பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் சிரிப்புகளால் தூவுங்கள்

    தகவல்:மோனாலிசாவை படைத்தவர் லியாண்டர் டாவின்ஸி
    எகிப்திய ஆண் கடவுள் : அமோன் (Amon)
    எகிப்திய பெண் கடவுள் : லிஸ் (Liss)
    இரண்டையும் சேர்த்துதான் மோனாலிசா அதாவது ஆண் பெண் கூட்டு (Androgyny)


    சாதரணமாக நமது கணினியில் My Computer-ல் வலது கிளிக்கில் Properties திறந்து பார்த்தால் இப்படித்தான் இருக்கும்



    இனி நாம் பார்க்கபோவது இந்த பிராபர்ட்டிஸ் செட்டிங்கிற்குள் சில மாற்றங்கள் செய்து நமது போட்டோ மற்றும் பெயர் அட்ரஸ் இன்னும் தேவையான தகவல்களை எப்படி கொண்டு வருவது என பார்க்கலாம்
    -------------------------------------------------------------------------
    [General]
    Manufacturer=Your Name Here
    [Support Information]
    Line1=Name
    Line2=Mobile Number
    Line3=Website
    Line4=City
    Line5=Address
    Line6=
    Line7=
    Line8=
    Line9=
    Line10=
    ------------------------------------------------------------------------
    மேலே உள்ளதை அப்படியே காப்பி எடுத்து புதிதாக ஒரு நோட்பேட் திறந்து அதில் பேஸ்ட் செய்துவிடுங்கள்

    அதில் உங்களுக்கு தேவையான தகவல்களை கீழே சொல்வது போல செய்யவும்
    Line1=ஞானசேகர்(ஆங்கிலத்தில் எழுதவும்)
    Line2=+91-xxxxxxxxxxx
    Line3=http://gsr-gentle.blogspot.com


    இப்படி வரிசையாக உங்களுக்கு எத்தனை Line வேண்டுமானாலும் சேர்த்துகொண்டு சேமிக்கும் போது oeminfo.ini இப்படி சேமிக்கவும், இதில் oeminfo எனபது பெயர் .ini என்பது அதன் எக்ஸ்டென்சன் ஆகும்


    அடுத்து போட்டோஷாப்பில் புதியதாக width : 160 pixels , Height : 120 pixels , Resolution 300-க்குள் இருக்கட்டும் நான் சொல்கிற அளவுக்கு குறைந்தால் பிரச்சினை இல்லை அதற்கு மேலாக இருக்கும் போது பிரார்பர்ட்டிஸ் அளவிற்குள் பொருந்தாமல் இருக்கும், இனி இந்த அளவுக்குள் நீங்கள் விரும்புகிற மாதிரி உங்கள் பெயரையோ அல்லது உங்கள் போட்டோவையோ தயார் செய்து oemlogo.bmp என்று சேமிக்கவும் இதில் oemlogo எனபது பெயர் .bmp என்பது அதன் எக்ஸ்டென்சன் ஆகும்
    இப்போது தாங்கள் ஒரு oeminfo.ini மற்றும் oemlogo.bmp சேமித்துவிட்டீர்கள் அடுத்ததாக இந்த இரண்டு பைல்களையும் C:\WINDOWS\system32 என்கிற போல்டரில் சேமித்துவிடவும் அவ்வளவுதான்.


    இனி ஒன்று மட்டும் மீதம் இருக்கிறது இது அவசியமில்லை தேவைப்பட்டால் மட்டும் உபயோகிக்கவும்
    ------------------------------------------------------------------------

    Option Explicit

    Set ws = WScript.CreateObject("WScript.Shell")
    Dim ws, t, p1, p2, n, g, cn, cg
    Dim itemtype

    p1 = "HKLM\Software\Microsoft\Windows NT\CurrentVersion\"

    n = ws.RegRead(p1 & "RegisteredOwner")
    g = ws.RegRead(p1 & "RegisteredOrganization")
    t = "Change Owner and Organization Utility"
    cn = InputBox("Type new Owner and click OK", t, n)
    If cn <> "" Then
    ws.RegWrite p1 & "RegisteredOwner", cn
    End If

    cg = InputBox("Type new Organization and click OK.", t, g)
    If cg <> "" Then
    ws.RegWrite p1 & "RegisteredOrganization", cg
    End If
    -------------------------------------------------------------------------

    நோட்பேட் திறந்து மேலே கொடுத்துள்ள கோடிங்கை அப்படியே காப்பி எடுத்து பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது Register.vbs என சேமிக்கவும் இதில் Register என்பது பெயர் (உங்கள் விருப்ப பெயர் வைக்கலாம்) .vbs என்பது அதன் எக்ஸ்டென்சன் ஆகும், இனி சேமித்த Register.vbs என்பதை இருமுறை கிளிக்கி அதில் தேவைப்படுவதை பூர்த்திசெய்துவிடுங்கள் இனி கம்ப்யூட்டர் பிராப்பர்ட்டிஸ் திறந்து பாருங்கள் புதிய மாற்றங்களை அறிவீர்கள்


    புதிய பிராப்பர்ட்டிஸ் இப்படி இருக்கும்



    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Mar 30, 2010

    13

    ஜிமெயிலில் HTML கையெழுத்து

  • Mar 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
    இந்த வாசகம் பிகேபி தளத்தில் படித்தது

    ஜிமெயிலில் கட்டற்ற வசதிகள் இருந்தாலும் இதுவரை HTML ஹெச் டி எம் எல் சப்போர்ட் வசதி இல்லை இதனால் ஜிமெயில் கையெழுத்து பகுதியில் நாம் விரும்பியபடி நமக்கு விருப்பமான போட்டோவையோ அல்லது நிறுவனத்தின் அடையாள சின்னத்தையோ இனைக்கமுடியாது வேறு சில வழிகளில் இனைக்கலாம் என்றாலும் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் தனித்தனியாக இனைப்பதில் கால விரயம் ஏற்படும் அதற்கான மாற்றுவழிகள் இரண்டு உள்ளன தெரிந்தவர்களுக்கு இது உபயோகப்படாது தெரியாதவர்களுக்கு நிச்சியம் உதவியாக இருக்கும்

    முதலில் ஜிமெயிலில் தங்கள் பெயர் மற்றும் முகவரி மட்டும் போதும் என நினைப்பவர்களுக்காக

    உங்கள் மின்னஞ்சலை திறந்து வலது பக்கம் மேல் மூலையில் இருக்கும் செட்டிங்ஸ் திறந்து அதில் முதலாவதாக வரும் ஜெனரல்General டேப்பில் கீழே பாருங்கள் Signature என இருக்கும் அதில் தங்கள் பெயர் மற்றும் தேவையான விபரம் கொடுத்து சேமித்துக்கொள்ளவும் இனி தாங்கள் எப்போது புதிதாய் மின்னஞ்சல் Compose செய்ய திறந்தாலும் அங்கே தாங்கள் பதிந்த விபரங்கள் இருக்கும் இந்த முறையில் எந்த கணிணியில் இருந்து திறந்தாலும் செட்டிங்ஸ் மாறாது

    இனி எனக்கு இது முன்பே தெரியும் ஆனால் ஜிமெயில் கையெழுத்து பகுதியில் நான் விருப்பப்படும் போடோவோ அல்லது நிறுவண முத்திரையோ எனக்கு வரவேண்டும் என நினைப்பவர்களுக்காக இரண்டு வழிகள் இருக்கின்றன இந்த இரண்டு வழிமுறைகளுமே எந்த கணிணியில் இருந்து இந்த செட்டிங்ஸ் மேற்கொள்கிறீர்களோ அந்த கணியில் மட்டுமே செயல்படும்(அதில் எந்த பிரச்சினையும் வராது) ஆனால் இந்த செட்டிங்ஸ் மேற்கொள்ளாத வேறு ஒரு கணிணியில் உங்களால் நீங்கள் பதிந்த விபரங்கள் காண இயலாது

    வழிமுறை 1

    உங்கள் மின்னஞ்சலை திறந்து வலது பக்கம் மேல் மூலையில் இருக்கும் செட்டிங்ஸ் திறந்து அதில் Laps என இருக்கும் டேப்பை திறந்து அதன் கீழே பாருங்கள் Inserting Image , Canned Responses என இரண்டையும் Enable செய்து சேமித்துவிடவும் கீழே படத்தை பாருங்கள்






    புரிந்ததா நண்பர்களே இனி நீங்கள் புதிதாய் மின்னஞ்சல் Compose செய்ய திறக்கும் போது கீழே உள்ள படத்தை பாருங்கள் நான் வட்டமிட்டு காண்பித்துள்ள இரண்டு புதிய வசதிகள் வந்திருக்கும்.



    இனி கீழே உள்ள படத்தை பாருங்கள் 1 என குறிப்பிட்டுள்ள படத்தை Insert செய்வதற்கான வழிமுறையில் பிரவுஸ் செய்து தங்களுக்கு வேண்டிய படத்தை தேர்வு செய்து கொள்ளவும் வேண்டுமென்றால் நான் கீழே எழுதியுள்ளது போல் உங்களுக்கு தேவையான விபரத்தையும் உள்ளீடவும் சரி எல்லாம் முடிந்தாயிற்று அடுத்து என்ன செய்வது Canned Responses என்பதை கிளிக்குங்கள் படத்தில் உள்ளது போல வரும் அதில் உங்களுக்கு பிடித்தமான பெயர் கொடுத்து சேமித்துக்கொள்ளவும்



    இனி புதிதாய் மின்னஞ்சல் Compose செய்ய திறக்கும் போது நாம் சேமித்த தகவல்கள் எதுவும் தானக வராது அதனால் வழக்கம் போல புதிய மின்னஞ்சல் எழுதி முடித்துவிட்டு மேலே படத்தில் உள்ளதுபோல் Canned Responses என்பதை தேர்ந்தெடுத்தால் அதில் புதிதாய் இரண்டு வசதிகள் வந்திருக்கும் ஒன்று Insert மற்றொன்று Delete இனி Insert என்பதை தேர்ந்தெடுத்தால் நீங்கள் முன்னமே பதிந்து வைத்த தகவல் படமும் உள்பட வந்திருக்கும் இதே அடிப்படையில் எத்தனை வேண்டுமானலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்

    வழிமுறை 2

    இந்த முறை நெருப்பு நரி(FireFox) பயன்படுத்துபவர்களுக்கே பயன்படும் வழக்கம் போல இனையத்தை திறந்துகொண்டு நெருப்பு நரியில் உள்ள Tools மெனுவில் Add-Ons எனபதை தேர்ந்தெடுத்து அதில் புதிதாய் ஒரு விண்டோ திறக்கும்.



    கீழே படத்தை பாருங்கள் அதில் உள்ளது போல Wisestamp என கொடுத்து தேடுங்கள் படத்தில் உள்ளது போலவே வந்திருக்கும் அதை என்பதை தேர்வு செய்து இன்ஸ்டால் செய்துவிடுங்கள் இன்ஸ்டால் முடிந்த்தும் தானகவே நெருப்பு நரி இயக்கம் முடிந்து மீண்டும் திறக்கும்



    இனி நீங்கள் செய்யவேண்டியது மிகவும் எளிது உங்களுக்கு தேவையான படம் அல்லது அடையாள அட்டை எதுவேண்டுமானலும் உங்களுக்கு பிடித்த தளத்தில் அப்லோட் செய்து அந்த URL முகவரியை படத்தில் வட்டமிட்டது போல உள்ள இடத்தில் கிளிக்கி புதிதாக திறக்கும் விண்டோவில் நீங்கள் போட்டோ அப்லோட் செய்தபோது குறித்து வைத்த URL முகவரியை உள்ளீட்டு சேமித்து விடவும் இதில் வேண்டுமென்றால் HTML உபயோகபடுத்தலாம்.



    இனி புதிய மின்னஞ்சல் எழுத திறக்கும்போதே நாம் ஏற்கனவே உள்ளிட்ட நமது கையெழுத்து தானகவே வந்திருக்கும் இதிலும் பிரச்சினை இருக்கிறது உங்கள் கணிணியில் பத்து நபர்கள் தாங்கள் சொந்த மின்னஞ்சலை திறக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம் யார் திறந்தாலும் அவர்கள் புதிதாய் திறக்கும் மின்னஞ்சலில் நாம் மேற்கொண்ட செட்டிங்ஸ் இருக்கும் எனக்கு வேறு வழிமுறைகள் தெரியவில்லை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பதியலாம் அனைவருக்குமே உதவியாக இருக்கும்.

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Mar 29, 2010

    4

    ஜிமெயில் அரட்டையில் ட்டிரிக்ஸ்

  • Mar 29, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:கற்றுக்கொள்வது ஒரு கசப்பான வேர்.ஆனால் அது இனிய கனிகளைச் சுமந்துள்ளது

    இனையத்தில் கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாது அப்படி தெரிந்தவர்கள் அதன் சேவைகளை பயன்படுத்தாதவர்கள் இருக்கமுடியாது அவர்களின் சேவையில் உள்ள GTALK பற்றித்தான் இந்த பதிவு நம் நண்பர்கள் சிலரை பார்த்திருப்போம் அவர்கள் ஆப்லைனில் இருந்துகொண்டே நம்முடன் அரட்டையடித்து கொண்டிருப்பார்கள் அது எப்படி அவர்களுக்கு சாத்தியப்படுகிறது சரி அப்படி மறைந்து இருப்பவர்களை நாம் எப்படி ஆன்லைனில் இருக்கிறாரா,இல்லையா என கண்டறிவது என பார்க்கலாம்.

    முதலில் GTALK New தரவிறக்கி வழக்கம்போல கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள் சரி அடுத்து என்ன? எப்பவும் போல மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழையவும் இப்பொழுது புதிதாய் விண்டோ திறந்திருக்கிறதா அதில் படத்தில் உள்ளது போல Invisible எனபதை தேர்ந்தெடுங்கள் இனி நீங்கள் உங்கள் நண்பர்களின் ஜிமெயில் அரட்டையில் ஆப்லைனாக இருப்பீர்கள் உங்களுக்கு தேவைப்படும்போது மட்டும் நண்பர்களோடு அரட்டையடிக்கலாம் மற்றவர்கள் உங்களை தொடர்புகொள்ளமுடியாது ஆனால் இதை பற்றி தெரிந்தவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்



    இனி உங்களுக்கு தெரியாமல் உங்கள் நண்பர்கள் யாராவது ஆனலைனில் இருக்கிறார்களா என எப்படி தெரிந்துகொள்வது என பார்க்கலாம் ஆப்லைனில் இருப்பவர்களை தெரிந்துகொள்ள நீங்கள் தெரிந்துகொள்ள நினைக்கும் நபரின் பெயரை தேர்வு செய்யவும் அதில் படத்தில் காட்டியுள்ளதுபோல் Go Off the record என்பதை தேர்ந்தெடுக்கவும் படத்தை பாருங்கள் புதிய டேப் ஒன்று திறந்திருக்கும் முன்பெல்லாம் தனியாக ஒரு விண்டோ திறக்கும் இதில் டேப் முறையை பயன்படுத்தியிருக்கிறார்கள் மற்றும் ஸ்மைலி முறையும் கொடுத்திருக்கிறார்கள்.

    இனி GO Off the record என்பதை தேர்ந்தெடுத்த பின் வழக்கம்போல மெஜேஜ் அனுப்பும் முறையில் அனுப்பவும் அப்பொழுது உங்களுக்கு “அவருடைய பெயர்” may not have received your message என வருமேயானால் அவர் நிச்சியமாக ஆப்லைனில் தான் இருக்கிறார் ஒருவேளை உங்களுக்கு எந்தவிதமான Reply-யும் இல்லாதிருக்குமானால் அவர் ஆன்லைனில் இருந்துகொண்டு Invisible-ஆக இருக்கிறார் நீங்கள் அனுபிய தகவல் அவர் பெற்றுக்கொண்டார் என்பதே அதன் அர்த்தம்



    மேலும் சில புதிய வசதிகளையும் இனைத்திருக்கிறார்கள் அது என்னவென்று நான் சொல்வதை விட நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன்



    சரி ஜிமெயில் அரட்டையில் எழுத்துகளை போல்டு மற்றும் இட்டாலிக் முறையில் எப்படி அனுப்புவது எப்படி என பார்க்காலாம்

    *ஞானசேகர்* இப்படி எழுதினால் ஞானசேகர்
    _ஞானசேகர்_ இப்படி எழுதினால் ஞானசேகர்
    _*ஞானசேகர்*_ இப்படி எழுதினால் ஞானசேகர்
    நண்பர்களே புரிந்திருக்குமென்றே நம்பிகிறேன்

    ஒரு கொசுறு தகவல் நாம் ஒரு நண்பருக்கோ அல்லது அலுவல் சம்பந்தபட்ட ஒரு தகவலையோ மின்னஞ்சல் செய்கிறோம் அப்படி நாம் அனுப்பிய மின்னஞ்சலை படித்து விட்டார்களா இல்லையா என தெரிந்துகொள்ள
    Spypig தளம் செல்லுங்கள் உங்களை ஏமாற்றமுடியாது

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    5

    விண்டோஸ் போல்டரை மாற்றலாம்

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து :நேரம் விலை உயர்ந்தது. ஆனால், உண்மை நேரத்தை விட விலை உயர்ந்த்து

    சாதரணமாக நமது கணிணியில் புதியதாக ஒரு போல்டர் திறந்தால் கீழே உள்ள படம் போலத்தான் இருக்கும் அதை நமக்கு வேண்டுமானால் நமது விண்டோஸில் உள்ள சில ICONகளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் அதற்கான வழிமுறை

    Image and video hosting by TinyPic

    சரி இதுல இருக்குறது ஒன்னுமே நமக்கு பிடிக்கல நமக்கு பிடிச்ச மாதிரி நம்முடைய போட்டோவையோ அல்லது நம் குழந்தைகள் போட்டோவோ இருந்தா நல்லாயிருக்குமே கீழே பாருங்கள் நான் எனது கீழே பாருங்கள் நான் எனது பெயரின் சுருக்கெழுத்தை வைத்திருக்கிறேன்

    Image and video hosting by TinyPic

    இதை எப்படி கொண்டுவருவது என பார்க்கலாம் தங்கள் கணிணியில் போட்டோஷாப் மென்பொருள் அவசியம் இருத்தல் வேண்டும்

    வழிமுறை

    போட்டோஷாப்பை திறந்து புதிய பைல் திறந்து File – New அல்லது CTRL+N எனக்கொடுத்து புதிதாய் திறக்கும் விண்டோவில் படத்தில் உள்ளது போல Pixels என்பது 48 X 48 என்கிற அளவில் இருக்கட்டும் அதற்கு குறைந்து இருந்தாலும் பிரச்சினை இல்லை அதற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் Resolution என்பதை விருப்பப்படி வைத்துக்கொள்ளவும்

    Image and video hosting by TinyPic

    Image and video hosting by TinyPic

    இனி திறக்கும் விண்டோவில் தங்களுக்கு பிடித்தமான போட்டோ அல்லது ஏதாவது எழுதவிரும்பினால் எழுதிக்கொள்ளவும் படத்தின் அளவு அல்லது எழுத்தின் அளவை கூட்ட, குறைக்க Show Buunding Box என்பதை தேர்ந்தெடுத்துகொண்டால் அதை சுற்றி ஒரு கட்டம் போல வரும் அதில் எலியை (மவுஸ்) வைத்து ஷிபிட் கீ-யை அழுத்திபிடித்துகொண்டு அளவை மாற்றலாம் அவ்வளவுதான்

    Image and video hosting by TinyPic

    சரி இனி என்ன நாம் தயார் செய்த பைலை சேமித்துவிடவேண்டியதுதான் சேமிக்கும்போது வழக்கமான முறையான JPEG அல்லது PSD பைலாக அல்லாமல் ICO என்கிற பார்மட்டில் சேமித்துவிடுங்கள்

    Image and video hosting by TinyPic

    இனி நாம் முதலிலேயே பார்த்தமாதிரி Folder Properties சென்று திறக்கும் வின்டோவில customize செலக்ட் செய்து அதன் கீழே உள்ள Change Icon என்பதை தேர்ந்தெடுத்து புதிதாய் திறக்கும் விண்டோவில் Browse என்பதை தேர்ந்தெடுக்கவும் இனி தாங்கள் போட்டோஷாப்பில் தயார் செய்து சேமித்த ICO பைலை தேர்ந்தெடுக்கவும் ஓக்கே கொடுக்கவும் இனி நீங்கள் தேர்வு செய்த படமே உங்கள் போல்டராக தெரியும்

    Image and video hosting by TinyPic

    பார்த்தீர்களா நான் எனது பெயரின் சுருக்கெழுத்தை வைத்திருக்கிறேன் இந்த முறையில் உங்களுக்கு பிடித்தமாதிரி கற்பனைக்கு ஏற்றால்போல் மாற்றி வச்சுங்க

    Image and video hosting by TinyPic

    போட்டோஷாப் மென்பொருள் இல்லாதவர்கள் இந்த மென்பொருள் உபயோகித்து பார்க்கலாம் சந்தேகம் இருப்பின் கேள்விகளை கருத்துரையில் பதியவும்

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Mar 25, 2010

    8

    எங்கே என் தேசம்

  • Mar 25, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஓரு வரி கருத்து:பேச்சு மனிதனின் இயற்கை குணம் அதில் எழுதிய மொழியிலிருக்கும் செயற்கை குணம் இருக்காது

    நம்ம நாடு ஊழல் பட்டியலில் உலகிலேயே பத்தொன்பதவாது நாடாக இருக்கிறதாம் இன்னும் சில ஆண்டுகளில் நாம் வல்லரசாக மாறுகிறோமோ இல்லையோ நிச்சியம் ஊழல் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துவிடுவோமோ என பயமாயிருக்கிறது இந்த நேரத்தில் இந்தியன் என்கிற படத்தில் உள்ள வசனம் தான் ஞாபகம் வருகிறது எல்லா நாடுகளிலும் ஊழல் இருக்கதான் செய்கிறது என்ன அங்கெல்லாம் அதாவது ஒரு வேலையை வரம்பு மீறி செய்துமுடிக்க கைக்கூலி இங்கே ஒருவன் அவன் வேலையே செய்வதற்கே கைக்கூலி கொடுக்கவேண்டும்

    எங்கே என் தேசம்

    அறிஞர் அண்ணாவின்
    கையிலிருக்கும் புத்தகம் வாசிக்கும்
    காக்கைக்கும் தெரிந்திருக்கும்
    நம் தேசத்தின் அவலம்

    காஷ்மீர் யுத்தத்தில்
    தொடங்கியது பேரம்
    எதிரிகளை அழிக்க செல்ல
    வாங்கிய வாகனத்தில் ஊழல்

    விவாசாயிக்கு உரம்
    மானையத்தில் வழங்குவோமென
    துருக்கி கம்பெனியில்
    வாங்காத யூரியாவில் ஊழல்

    பணம் பண்ணலாமென
    கனவோடு பங்கு வர்த்தகம்
    சென்றால் அங்கேயும்
    பங்கு பத்திர ஊழல்

    உலகத்தை உள்ளங்கையில்
    நிறுத்திய அலைபேசியில்
    அலைக்கற்றை வழங்கியதில்
    முறைகேடான ஊழல்

    பொங்கலுக்கு புதுச்சேலை
    கிடைக்குமென காத்திருந்த
    பொக்கைவாய் கிழவியின்
    சந்தோஷத்திலும் ஊழல்

    பேருந்தில் சில்லரை
    இல்லையென்கிற பெயரில்
    நாம் அறிந்தே நடக்கும்
    பகற்கொள்ளை ஊழல்

    இறந்தவனே அலறி எழுந்து
    ஆச்சரியப்படும்
    அளவிற்கு இருந்தது
    சுடுகாட்டு ஊழல்

    யுத்தத்தில்
    இறந்தவனை- அடக்கம்
    செய்த சவப்பெட்டியிலும்
    சவப்பெட்டி ஊழல்

    எங்கே போய் சொல்ல
    நம் பாதுகாப்புக்காக
    வாங்கிய பீரங்கியிலும்
    இருந்ததாம் ஊழல்


    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்



    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Mar 24, 2010

    10

    பழைய டயரி கிறுக்கல்

  • Mar 24, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஓரு வரி கருத்து:நமக்காக பொய் சொல்கிறவன் நாளை நமக்கு எதிராகவும் பொய் சொல்வான்

    காதல் இந்த வார்த்தையை சொல்லும்போதே ஒரு சிலிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது காதல் என்ற வார்த்தையை கேட்டவுடன் நினைவுகள் பழைய ஞாபகங்களை நோக்கி செல்வதை தடுக்கமுடியவில்லை! உங்களுக்கும் அப்படித்தானா? அது ஒரு உணர்வு அனுபவித்தவர்களுக்கு அதன் தாக்கம் தெரியும், காதல் என்கிற உணர்வே எனக்கு வந்ததில்லையேனு யாராவது சொல்லமுடியுமா? சே, சொல்லவே முடியாதுங்க ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு தருணத்தில் அனுபவபட்டிருப்போம், அது சந்தோஷமா, துக்கமா, வலியா எப்படிவேணாலும் இருக்குமுங்க காதலை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை, எப்பாவது பார்க்கும்போது ஏற்படுகிற சந்தோஷம் பார்க்கமுடியாதப்ப இருக்குற தவிப்பு, பேசமுடியாத நேரங்களில் ஏற்படும் ஏமாற்றம் இதெல்லாம் சுகமா, சுமையா அப்படினு கேட்டா சொல்லதெரியல ஆனால் அந்த வலி இப்படித்தான் இருக்கும் என கிறுக்கியது

    பழைய டயரி கிறுக்கல்

    விதையாய் விழுந்து
    ஆலமரமாய் வளர்ந்து- எனை
    அசைத்து பார்க்கும்
    ஆடி மாத காற்றே!

    நெஞ்சுக்குள் கண்டிராத
    புது சந்தோஷம் தந்தவளே
    எதேச்சையாய் புன்னகைத்தோம்
    எதார்த்தமாய் பழகினோம்

    எனக்குள் காதல் வருமென்று
    எதிர்பார்த்ததில்லை!
    எதிர்பார்க்காமல் வந்த காதலை
    எதிர்நோக்கவும் முடியவில்லை

    ஒவ்வொரு முறை
    உன்னை கடக்கும் போதும்
    என் உயிரை உன்னிடம் விட்டு
    நடைபிணமாய் செல்கிறேன்

    என் காதலில் நீயும்
    நானும் மட்டும் தான் – எனினும்
    உன்னிடம் பேச தயக்கம்,கவலை
    காரணம் என்னவென்று நீயறிவாய்

    சில நேரம் சிரித்து பேசி
    சிரிக்க வைக்கிறாய் – என்னை
    சில நேரம் எதையோ பேசி
    சித்தனாக்கி போகிறாய்

    உன் மீது கோபமில்லை
    ஆனாலும் எனக்குள் சோகம்
    யாரோ எய்த அம்புக்கு
    என்னவள் நீ எப்படி பொருப்பாவாய்!

    உன் நினைவுகள்
    கர்ப்பத்தில் வெளிவந்த
    என் காதலின்
    முதல் பிரசவம்

    என்னங்க படிச்சுடிங்களா? உங்களுக்கு பழைய காதல் ஞாபகம் வந்துச்சாங்க? காதல் அப்படினா என்ன அன்பு, சரி அன்பு இல்லாத மனுஷன் யாராவது இருக்காங்களா எனக்கு தெரிஞ்சவரை யாரையாவது ஒருத்தரை நாம காதலிச்சுகிட்டுதான் இருக்கோம் அது அப்பா,அம்மா,மனைவி,சகோதர சகோதரி சரி இப்படி யாருமேலையவது நாம நமக்கு தெரியாம அன்பு வச்சுருப்போம் என்ன சில நேரம் வெளிக்காட்ட தெரியாம இருப்போம். எனக்குள்ள அன்பு இருக்குனு உள்ளேயே வச்சுகிட்ட யாருக்கு தெரியும் அன்பை வெளிக்காட்டுங்கள் அதற்காக போலியாய் நடிக்காதீர்கள்

    வள்ளுவர் சொன்னபடி
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு


    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்



    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Mar 23, 2010

    19

    நீங்களும் இசையோடு பாடலாம்

  • Mar 23, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து :அதிர்ஷ்டம் தராததையெல்லாம் திருப்தியிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்

    ஆரோக்கியத்திற்கு : உணவில் உப்பையும் எண்ணெயையும் குறைத்துக்கொள்ளுங்கள்

    நாம் எல்லோருமே ஏதாவது பிடித்தமான பாடல் கேக்கும்போது நம்மையும் அறியாமால் பாடிவிடுவோம் சிலரின் குரல் இனிமையாக இருக்கும் சிலருக்கு குரல் கரகரப்பாக இருக்கும் இருந்தாலும் எல்லோருக்குமே பாடல் படிக்க விருப்பம் இருக்கும் அதிலும் பெரிய இசை மேதைகளின் இசையில் நமது குரலும் ஒலித்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் சரி நாம ஆசைப்படுறதெல்லாம் நடக்கவா செய்யுது சரி இனையத்தில் கிடைக்கும் கரோக்கி பாடல்களை தரவிறக்கி நாம் நாமாகவே அவர்கள் இசையில் பாடினால் என்ன? பின்னனியில் பாடலாம் அதற்கான மென்பொருள் தொகுப்புகள் இனையத்தில் கிடைக்கின்றன ஆனால் எல்லாம் டாலர் சரி நல்லா பாடுறவங்களுக்கு இது தடையாய் இருக்ககூடாது நேரடியா இசையமைப்பாளர்களின் முன்னிலையில் பாடுவேன் என இருந்தால் உடனே நடக்கிற காரியமா? யூடியூப்-ல் பாருங்கள் நிறைய பேர் தங்களின் சொந்த குரலில் பாடி வலையேற்றியிருக்கிறார்கள் அதில் அவர்களின் திறமையையும் வெளிக்காடியிருக்கிறார்கள், யாருக்கு தெரியும் இந்த முயற்சி உங்கள் இசைபயணத்தின் தொடக்கமாககூட இருக்கலாம் சரி இதுக்காக பணம் கொடுத்தெல்லாம் மென்பொருள் வாங்கவேணாம் இலவசமாக ஆடியோசிட்டி எனும் மென்பொருள் இருக்கிறது இலவசம் என்பதற்காக குறைத்து மதிப்பிடவேண்டாம்
    இனி நீங்கள் Audacity தளம் சென்று படத்தில் நான் சிவப்பு நிறம் கொண்டு அடையாளம் காண்பித்துள்ள இரண்டு பைலகளையும் தரவிறக்கி அதில் இன்ஸ்டாலேசன் செய்வதற்கான .EXE பைலை தங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளவும் எல்லாமே வழக்கம்போலத்தான் கணிணியில் நிருவிக்கொளவதில் பிரச்சினை ஒன்றும் இருக்காது நிறுவி முடித்த்தும் புரோக்கிராமினை இயக்க தொடங்குங்கள்



    கீழே இருக்கும் படத்தை பருங்கள் அதில் உள்ளது போல Edit எனபதை தேர்வு செய்து Preference என்பதை தேர்ந்தெடுத்து Play other tracks while recording new one என்பதற்கு அருகில் உள்ள கட்டத்தில் டிக் மார்க் கொடுத்து ஓக்கே கொடுக்கவும்



    இனி அடுத்ததாக கீழே இருக்கும் படத்தை பாருங்கள் Project எனபதை Import Audio என்பதை கிளிக்கியவுடன் புதிதாய் திறக்கும் விண்டோவில் உங்களுக்கு பிடித்தமான பாடலை பிரவுஸ் செய்து பாடலை உள்ளிடவும்



    இனி கீழே படத்தில் உள்ளது போல வந்திருக்கும்



    இதுதான் இனி நீங்கள் பாடப்போகும் பகுதி படத்தில் அடையாளம் காண்பித்துள்ள இரண்டு ரேடியோ பட்டனை பாருங்கள் முதலாவது ரேடியோ பட்டன் ரெக்கார்டிங் (அவசியம் ஹெட்போன் தேவை) இரண்டாவது ரேடியோ பட்டன் ரெக்கார்டிங் நிறுத்துவதற்காக நீங்கள் ஹெட்போன் வழியாக பாட்தொடன்கியதும் கீழே ஒரு புதிய விண்டோ திறக்கும் படத்தை பாருங்கள் நான் பகுதியிலே நிறுத்திவிட்டதால் சிறிய ஒலி அலைகள் இருக்கும் நீங்கள் முழுவதும் பாடும்போது மேலே உள்ள ஒலி அளவுக்கு கீழேயும் வந்துவிடும் பாடி முடித்தவுடன் ரெக்கார்டிங் ரேடியோ பட்டனை நிறுத்த மறக்க வேண்டாம்



    ரெக்கார்டிங் முடிந்து உங்கள் சொந்த குரலிலே இசையோடு பாடியாகிவிட்டது இனி அதை சேமிக்க வேண்டுமே அதற்கு File மெனுவில் Export As MP3 அல்லது Export As WMV என்பதை தேர்ந்தெடுக்கவும் நான் Export As MP3 எனபதை தேர்ந்தெடுத்திருக்கிறேன் உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தேர்ந்தெடுங்கள் இனி புதிதாக ஒரு விண்டோ திறக்கும் அதில் SAVE எனும் வசதி இருந்தாலும் உங்களால் சேமிக்கமுடியாது அதற்கு நாம் முன்னமே தரவிறக்கிய lame_enc.dll என்கிற சப்போர்ட்டிங் பைலை பிரவுஸ் செய்து உள்ளிடவும் இனி சேமிப்பதில் தடை இருக்காது உங்களுக்கு விருப்பமான பெயர் கொடுத்து ஏதாவது ஒரு டிரைவில் சேமித்துக்கொள்ளவும்



    நீங்கள் சேமித்து முடிந்தவுடன் கீழே உள்ள விண்டோ ஒன்று திறக்கும் அதில் உங்களுக்கு தேவையென்றால் விபரங்களை பூர்த்தி செய்யவும் தேவையில்லையென்றாலும் விட்டுவிடலாம்



    என்ன ப்பிரியப்பட்ட நண்பர்களே நீங்கள் பாட முடிவெடுத்து விட்டீர்களா சரி இப்பொழுதே தொடங்குகள் இந்த ஆடாசிட்டி மென்பொருளில் நிறைய வசதிகள் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள் குறைந்தபட்சம் உங்கள் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள இவர்களுக்காவது உங்கள் திறமை வெளிப்படட்டுமே யாருக்கு தெரியும் ஒருவேளை நீங்கள் இதன் மூலம் பிரபலமாகக் கூட ஆகலாம் சந்தேகம் இருப்பின் கருத்துரையிடவும்

    கரோக்கி பாடல் கிடைக்கும் தளங்கள்
    smashits , tamilkaraoke , music.pz10 , punchapaadam , music.cooltoad , karaokemusicindia , tamilkaraokeclub , tamilkaraoke , makemykaraoke , tamilkaraokecds , meragana , tamilmidi , paraparapu , tamilkaraokeworld , iniyathamizh

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    9

    வாழத்தான் வாழ்க்கை

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில். (பிகேபி தளத்தில் படித்தது)

    நாம் பிறந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு தருணங்களிலும் எத்தனை எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்,சந்தோஷம்,துக்கம் என எல்லாவிதமான அனுபவங்கள் கிடைத்தாலும் நம்மை அதிகம் பாதிப்பது ஏமாற்றமும்,துக்கம் கலந்த வலியும்தான், நாம் ஒரு நாளாவது நாம் நாமாகவே இருக்கிறோமா என கேட்டால் நிச்சியாமாய் இல்லயென்று சொல்வதை தவிர வேறு வழியில்லை,எதிர்கொள்ளும் ஒவ்வொரு காரியங்களிலும் சந்தர்பங்களிலும் நாம் நாமாய் இருப்பதை விட மற்றவர்களுக்காக வாழ்வது(நடிப்பது) தான் இன்று நடக்கிறது சரி மற்றவங்களுக்காக வாழ்வது நல்ல காரியம்தானே அதை ஏன் தவறு என சொல்லனும்,நீங்க யாருமில்லாத பத்து நபரை உங்கள் கவனிப்பில் பராமரித்து வருகிறீர்கள் அவர்களுக்கு எல்லமுமாய் நீங்கள் இருந்து உங்கள் நேரத்தையும் கணிவான அன்பையும் அவர்களுக்காக மாற்றி வைத்தீர்களேயானல் அது வரவேற்க வேண்டியதுதான் அப்படி இல்லாமல் வெறும் புகழ்ச்சிக்காக சமுதாயத்தில் நானும் உன்னதமான நிலையில் இருக்கிறேன் என உங்களை வெளிப்படுத்துவதற்காக போடும் நாடகங்கள் எத்தனை நாட்களுக்கு தாக்குபிடிக்கும் என நம்புகிறீர்கள்? அதனால் என்ன பெரிய நிம்மதியையோ சந்தோஷத்தையோ அடைந்துவிடமுடியும்?

    நாம் அன்றாடம் பார்க்கதான் செய்கிறோம் எத்தனையோ மனிதர்கள் பேருக்காகவும் புகழ்ச்சிக்காகவும் பந்தாவாக நான் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என மேடையில் அளந்து விடுவார்கள், வறுமையை ஒழிக்க வேண்டும் அதற்கு என்னால் முடிந்தததை தருகிறேன் என மக்கள் மத்தியில் பெரிதாக பேசுவார்கள் என் விருப்பமே வறுமையை ஒழிப்பது தான் அதோடு மட்டுமல்லாமல் ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களையும் சமூகத்தில் பெருமைக்குறியவர்களாக மாற்றுவது தான் என் நோக்கம் என்பார்கள் மக்கள் கூட்டம் கலைந்து அவர்களிடம் நன்கொடை புத்தகத்தை கொண்டு சென்றால் அய்யோ இன்று நான் பணம் எடுத்துவரவில்லை நாளை வீட்டில் வந்து வாங்கி செல்லமுடியுமா என பல் இளித்து பேசுவார்கள்(வீட்டிற்கு பணம் வாங்க செல்பவனின் நிலைமயை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்) இல்லையென்றால் காசோலை தருகிறேன் பேர்வழி என ஒரு தொகையை எழுதி கொடுப்பார்கள் வங்கிக்கு சென்றால் தான் பணம் இல்லை என திரும்பி வரும் இதற்கெல்லாம் ஆதரமாக தினம் ஏதாவது ஒரு செய்த்தித்தாளில் பிரமுகர் கொடுத்த போலி காசோலை என வந்துகொண்டுதான் இருக்கிறது நான் கேக்கிறேன் எதற்காக இந்த நாடகம் யாரை சந்தோஷப்படுத்த உங்களை நீங்களே சந்தோஷப்படுத்துவா?

    இன்னும் சிலர் இருக்கிறார்கள் இவர்கள் முன்னெச்சரிக்கை பேர்வழி எப்பொழுதும் இப்ப இருக்கிற நிமிஷம் மட்டுமே நமக்கு சொந்தம் என தெரியாத மூடர்கள் இவர்கள் எப்பொழுதும் எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே சிந்திப்பாக சொல்லி நிம்மதியை இழந்து தானும் நிம்மதியாய் வாழாமல் தன் உடன் இருப்பவர்களின் நிம்மதியையும் கெடுத்துவிடுவார்கள் சரி கொஞ்சம் தெளிவாகவே இதை பார்ப்போம் ஒருவர் தனக்கு நோய் வந்துவிடுமோ என வராத நோய்க்காக(முன்னெச்சரிக்கை உணர்வாம்)வைத்தியம் பார்ப்பது அய்யோ நான் இன்னும் கொஞ்ச நாளில் இறந்துவிடுவேன் என புலம்புவது அப்புறம் ஒருவர் அவருக்கு இரு பெண்குழந்தைகள் வயது மூன்று தான் ஆகிறது அவர்கள் படித்து வளர்ந்து திருமணம் செய்வதற்கு எத்தனையோ ஆண்டுகள் இருக்கிறது அதற்காக நான் சிக்கனமாய் இருக்கவேண்டும் என சொல்லி தானும் கவலைப்பட்டு தன் குடும்பத்தையும் சிக்கனம் என்ற பெயரில் கொடுமை செய்வது சரியா? நான் கேக்குறேன் நாம உயிரோடு இருந்தாதானே இதெல்லம் நடக்கும் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையமுடியும்.

    வேறு சிலர் இவர்களும் முன்னர் பார்த்தவர்கள் போலத்தான் ஆனால் இது ஒரு வகை நோய் என்று தான் தோன்றுகிறது வீட்டை பூட்டிவிட்டு வெளியில் கிளம்புவார்கள் போகும்பொதே பூட்டை இழுத்து பார்த்துவிட்டுதான் கிளம்பிபோவார்கள் கொஞ்சதூரம் சென்றதும் மீண்டும் இவர்களுக்கு நாம் கதவை சரியாக பூட்டினோமா என சந்தேகம் வந்து விட்டிற்கு திரும்பி வந்து அலுவலகம் செல்வார்கள் அங்கு சென்ற பின் தான் தெரியும் மேலாலர் சரிபார்க்க சொல்லியிருந்த முக்கியமான அலுவலக கோப்பை முந்தைய நாள் வீட்டிற்கு எடுத்துசென்று இன்று அதை மறந்து அலுவலகம் வந்திருப்பது பார்த்தீர்களா அதீத முன்னெச்சரிக்கை உணர்வின் நிலைமையை!

    வாழ்க்கையில் முன்னெச்சரிக்கை உணர்வு தப்பா அப்படினு கேக்காதீங்க முன்னெச்சரிக்கை வேனும் அதுக்காக நான் எப்பவும் முன்னெச்சரிக்கையோடு தான் இருப்பேன் என அடம்பிடிக்காதீர்கள் வாழ்க்கையை எதார்த்தமா வாழப்பழகுங்கள் பிரச்சினைகள் வரும் பொழுது அதை பற்றி சிந்தியுங்கள் சந்தோஷமாக போய்கொண்டிருக்கும் வாழ்க்கையில் இல்லாத பிரச்சினையை குறித்து அதற்கு தீர்வு காண்கிறேன் என இருக்கும் சந்தோஷத்தை தொலைத்துவிடாதீர்கள் எனக்கு தெரிந்த ஒருவர் எந்த பொருள் வாங்கவேண்டுமென்றாலும் அது குறித்து பலரிடம் கேள்வி கேட்டு (நல்ல பொருளாக வாங்க வேண்டுமாம்) விலை அறிந்து சரியான சில்லரையோடு (சில்லரையை மாற்றிக்கொண்டு செல்வார் ஒருவெளை கடையில் சில்லரை இல்லாமல் இருக்கலாமம்) கடைக்கு செல்வார் ஒரு வேளை விலையில் பத்து ரூபாய் குறைந்து இருந்தால் அவருக்கு மிக அதிஷ்டமுள்ளதாக சந்தோஷப்பட்டுக்கொள்வார் மாற்றி ஒருவேளை ஒரு ரூபாய் கூடி இருந்தாலும் கடைக்காரரிடம் கேள்விகள் கேட்டு சண்டை போடுவார், சந்தோஷத்தையும் இழப்புகளையும் ஒரு போல எடுத்துகொள்ள பழகவேண்டும்.

    அதுக்காக மகன் தேர்வில முதல் மதிப்பென் பெற்றிருக்கிறான் அது சந்தோஷமான தருணம் அந்த நேரத்தில் அதை எளிதாக எடுத்துகொள்கிறேன் பேர்வழி என இருந்தால் பார்ப்பவர்கள் மூளை இல்லையோ என நினைத்துவிடுவார்கள் ஒரு சந்தோஷம் உங்களை மட்டுமல்லாமல் உங்களை சுற்றி இருக்குறவங்களையும் சந்தோஷப்படுத்துமானால் அந்த விஷயங்களை கொண்டாடுங்கள், வீட்டில் ஒரு வயதான பாட்டி இறந்து விட்டார் அதற்காக என்ன செய்வது மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருப்பதா இல்லை நான் சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரு போலதான் எடுத்துகொள்வேன் என இருப்பதா இந்த நேரத்தில் தான் கொஞ்சம் யோசிக்கவேண்டும் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் இயற்கையான ஒன்று அதை உணருங்கள் சின்ன சின்ன சந்தோஷத்தையும் பெரிசா கொண்டாடுங்க பெரிய துக்கத்தையும் எளிமையாக எடுத்துக்க பழகுங்க.

    இதில் இன்னொரு ரகம் இருக்கிறது மற்றவ்ர்களை திருப்திபடுத்துவதற்காக அவர்களுக்கு ஜால்ரா போடுவது ஒரு விஷயம் பிடிக்குது இல்லை பிடிக்கல இப்படி எதுவுமே இவங்களுக்கு இல்லை எப்பவும் மற்றவர்களை பற்றி அறிவதிலும் அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொளவதிலும் தான் இவர்களுக்கு சந்தோஷம் வாழ்க்கையில் உயர்வு வேண்டும் என்பதற்காக யார் காலையும் பிடிப்பார்கள் தான் யாருக்கும் உதவி செய்ய தயங்கமாட்டேன் என்பார்கள் கவனித்து பார்த்தால் தெரியும் இவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் என்ன கிடைக்கும் இவரிடம் எப்படி காரியம் சாதிப்பது என்கிற என்னமே மேலோங்கி இருக்கும் இதுக்கு பேருதான் வாழ்க்கையா? நீ உன்னை நம்பு உழைப்பை நம்பு நேர்மையாய் இருக்க பழகு மற்றவர்களிடம் நல்லவன் போல நடிப்பதில் என்ன கிடைச்சுரும் அது நிரந்தரமா?

    சினிமா பாட்டுல வர மாதிரி வாழ்க்கையை எட்டு எட்டு பிரிக்கலைனாலும் வாழ்கிற நாட்களை மூன்று பகுதியா பிரிக்கலாம் அது நீங்க நினைக்கிற மாதிரி குழந்தைபருவம்,இளமைபருவம்,முதுமைபருவம் என்பதல்ல நான் இதை வேறுவிதமாகத்தான் பார்க்கிறேன் 1.அறியா பருவம் 2.தேடும் பருவம் 3.அமைதி பருவம்(நாமளும் எழுதுறோம்ல அதனாலதான் இப்படி)இந்த அறியா பருவம் என்பது ஒரு வயசு முதல் இருபது வயசு வரையாக கணக்கெடுத்துக்குவோம் இது மகிழ்ச்சியான காலகட்டம் இதுல எதை பத்தியுமே கவலைபடமா பிடிச்சமாதிரி இருக்குறது காரணம் தப்பு பண்ணினாலும் சரி என்ன பன்றது சின்ன வயசு பிள்ளைங்க ஏதோ அறியாத வயது என்ன பன்றதுனு மன்னிச்சுவிட்டுருவாங்க இந்த நேரத்தில இவங்க உலமே தனிதான், அடுத்து தேடும் பருவம் இது ஒரு ஆபத்தான பகுதி இதுலதாங்க அதாவது இருபத்திரண்டு வயசு முதல் ஐம்பது வயது வரை இந்த காலகட்டம் தான் இதுலதான் பணம்,பொருள் ,செல்வாக்கு ஆஸ்தி, அந்தஸ்து இப்படி ஒவ்வொன்று மேலையும் வெறிகொண்டு தேடித்திரியும் நாட்கள் ஆனா பாருங்க இதுல எதுவுமே நாம இறந்த கூட வரப்போறதில்லை ஆனாலும் ஆசை யாரை விட்டது இந்த நேரத்திலதான் பொறாமை பொய் பித்தலாட்டம் என சகல விஷயங்களும் நடக்கும் தவறு என தெரிந்தும் அந்த தவறை சரியாய் செய்வதாய் நினைத்து மற்றவர்களையும் நம்ப வைத்து தானும் கெட்டுப்போவது, அடுத்து அமைதி பருவம் முதல் இரண்டு பருவங்களில் செய்த அனைத்தையும் நினைத்து அசைபோடுவது ஆனால் பாருங்க இந்த காலகட்ட்தில் தான் ஞானம் பொறக்கும் செய்த தவறுகள் நினைவுக்கு வரும்(சாகப்போற காலத்துல) நாம் வாழ்க்கையை சரியாக முறையாக வாழ்ந்திருக்கவில்லையென்றால் பெத்த பிள்ளைங்க கிட்ட கூட பாசம் கிடைக்காது அவ்வளவு ஏங்க சாப்பிட சோறு கிடைக்காது.

    எல்லாமே முடிஞ்ச பின்னால ஞானம் வந்து என்ன பன்ன? வாழ்க்கையை வாழும்போதே நல்லவனாய் நேர்மையானவனாய் வாழனும் ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவச்சு வாழ பழகுங்க நம்மை கடந்த நிமிஷங்களும் வரப்போகிற நிமிஷங்களும் நம்ம கையில் இல்லை இந்த நிமிஷம் இந்த நொடி உங்கள் கைகளில் தான் இருக்கிறது இப்ப இருக்குற வாழ்க்கையை முழுசா அனுபவிக்க பழகுங்க முடிந்தளவுக்கு சந்தோசமா இருங்க உங்கள் சந்தோஷம் மற்றவர்களையும் தொற்றிக்கொண்டால் அதுதான் உங்கள் வெற்றி கோடிகள் இருந்தாலும் மனதில் சந்தோஷமில்லையென்றால் அது வெறும் நரகமாத்தான் இருக்கும் ஒவ்வொரு குட்டி விஷங்களுக்கும் அய்யோ அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் கேலி பேசுவார்களோ என என்னி மற்றவர்களை பார்த்து வாழ்வதில் வாழ்க்கையின் அர்த்தம் இல்லை உங்களுக்கு பிடிச்சமாதிரியும் இல்லாம மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரியும் இல்லாம இருக்குறதுல யாருக்கு என்ன சந்தோஷம்?வாழ்க்கையின் கடைசி தருணத்தில் அய்யோ அப்படி வாழ்ந்திருக்கலாமே எனக்கு பிடித்தைகூட நான் செய்யவே இல்லையே என சாகும் நேரத்தில் வருத்தபடுவதோ யோசிப்பதிலோ இழந்த வாழ்க்கையை திரும்பவும் மீட்டெடுக்க முடியுமா?

    நடைபாதையில் இருக்கும் பிச்சை எடுப்பவர்களை பாருங்கள் அவர்களுக்குள்ளாக நடக்கும் சம்பாஷைனைகளை பாருங்கள் (யாரும் தான் கவனிப்பதில்லையே) அவர்களின் சந்தோஷம் புரியும் அவர்களின் தேவையை அவர்கள் சரியாக உணர்ந்திருக்கிறார்கள், நாம் தான் அப்படி இல்லையே நமக்குதான் தேவைகள் அதிகரிக்குமே தவிர போதுமென்ற மனப்பான்மை வருவதில்லையே அப்புறம் எப்படி மனதுக்குள் சந்தோஷம் வரும், இன்னும் சிலர் சிரிக்கவே யோசிப்பார்கள் (காரணம் அவர்கள் பெரிய மனிதர்களாம்) மற்றவர்கள் பார்த்துவிடுவார்களே! உங்களுக்கும் தெரியும் சிரிப்பை விட மிகப்பெரிய மருந்து உலகில் இல்லை

    இந்த வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை என்னனு புரிஞ்சு வாழ பழகுங்க இந்த நிமிஷம் உங்க கைகளில் இருக்கு அது போனதுக்கு அப்புறம் யோசிப்பதில் பலன் இல்லை ஒவ்வொரு நொடியையும் அனுபவிச்சு வாழ பாருங்க ,அதிகமா யோசிக்கிறேனு மன அழுத்தம் வந்தா அது கொலஸ்ட்ரால் ஆக மாறும் கொலஸ்ட்ரால் கூடினால் இரத்த அழுத்தம் அதிகமாகும் அப்புறம் மாத்திரை மருந்து சாப்பிடவேண்டிவரும் இதெல்லாம் எதுக்குங்க மனதை சந்தோஷமா வச்சுக்கங்க ஓஷோ ரஜினிஸ் சொன்னமாதிரி உங்களை நீங்களே கொண்டாடுங்க.

    (உங்கள் ஆரோக்கியதிற்கு தண்ணீர் அதிகம் அருந்துங்கள்,தினமும் நடைபயிற்சி செய்யுங்கள் உங்கள் மனம் புத்துணர்வு அடைவதை நீங்களே உண்ர்வீர்கள்)

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Mar 18, 2010

    8

    தாய்க்கு தாயாவோம்

  • Mar 18, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:மற்ற எந்த அறிமுக கடிதத்தையும் விட அன்பே சிறந்த பரிந்துரை.

    தாய்க்கு தாயாவோம்

    இந்த உலகத்தில் நம்மை புதிதாய் படைத்தவள் உயிர் கொடுத்து தன் வயிற்றில் சுமக்கும் போதும் நமது உதைகளையும் அசைவுகளையும் வலியிலும் அழகாய் ரசித்து சந்தோசமாக ஏற்றுக்கொண்டவள் உதிரத்தை பாலாய் மாற்றும் சக்தி பெற்றவள்,படைப்பதிலே தாயும் பிரம்மாதான்,நமது ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்டு பூரித்து போவாள் அப்படிப்பட்ட தாய்க்கு நம்மாள பெருசா என்ன செய்திடமுடியும் கடவுளை பிராத்திப்போம் மறு ஜென்மத்திலாவது தாய்க்கு தாயாக.

    என் தாய்க்கு தாயாவேன்

    என்னை
    கருவரையில் தாங்கிய
    என் தெய்வம்

    துக்கங்களை தூரத்தள்ளி
    எனக்காய் –சந்தோசமாய்
    இருக்க முயன்றவள்

    நிம்மதியாய்
    நான் தூங்க – பல
    இரவுகளை தூங்காமல் விழித்தவள்

    பவுர்னமி சிதறல்களில்
    வெளிச்சம் காட்டி
    பால்சோறு ஊட்டியவள்

    புரியாத பாஷையில்
    நான் பேசும் அத்தனையையும்
    புரிந்துகொள்ளும் அற்புத மனுஷி

    தன் உதிரத்தையை
    பாலாய் மாற்றி
    என் பசியாற்றியவள்

    கருவரையில் கல்லாய் இருக்கும்
    சிலை அல்ல தெய்வம்
    தாய்தான் உயிருள்ள தெய்வம்

    வரும் ஜென்மத்திலாவது
    என் தாய்க்கு நான் தாயகி
    அவள் என் சேயாக வேண்டும்

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவை பல மடங்கு அதிகரிக்கும், பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.




    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Mar 17, 2010

    4

    மேல்மட்டம் கீழ்மட்டம்

  • Mar 17, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நிதானமாக சிந்திக்க வேண்டும் ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.

    வணக்கம் எனதருமை அன்புள்ளங்களே எனக்கு தெரிந்ததை ஏதோ பெரிய எழுத்தாளர் அளவிற்கு முடியாவிட்டாலும் எனக்கு தெரிந்த எழுத்து நடையில் என் கருத்துகளை எழுதி வருகிறேன் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும், சமுதாயத்தில் மேல்மட்ட கீழ்மட்ட மக்களின் எதார்த்தத்தை பிரதிபலிப்பதற்காகத்தான் இந்த இடுகை ஏதோஎனக்கு தெரிந்த வரையில் எழுதியிருக்கிறேன்

    மேல்மட்டம் கீழ்மட்டம்

    என்ன என்ன
    இது என்ன வேதனை
    நித்தம் நித்தம்
    வந்து போகும் சோதனை
    கணவினில் கேள்விகள் ஆயிரம்
    நிஜத்தினில் பதில்கள் இல்லையே!

    என்ன சமுதாயம் இது
    நித்தமும் சல்லாப உல்லாசம் அங்கே
    ஒரு வேளை சோற்றுக்கும்
    உயிர் விடும் கூட்டம் இங்கே

    மண்ணை விற்றாலும்
    விலை போகும் அங்கே
    மாணம் விற்றால்தான்
    விலை போகும் இங்கே

    வெட்டி போட்டாலும்
    வேடிக்கை பார்க்கும் கூட்டம் அங்கே
    சரிந்தவன் உதிரம் கண்டு
    துடிதுடிக்கும் கூட்டம் இங்கே

    லட்சம் லட்சம் கண்டும்
    நிம்மதியில்லை அங்கே
    ஒருவேளை சோற்றில்
    உழைப்பின் நிம்மதி இங்கே

    நெஞ்சம் இருந்தும்
    நீதி இல்லை அங்கே
    நெஞ்சத்தில் நீதி இருந்தும்
    நீதிக்கு கண் இல்லை இங்கே

    என்ன என்ன
    இது என்ன வேதனை
    நித்தம் நித்தம்
    வந்து போகும் சோதனை
    கணவினில் கேள்விகள் ஆயிரம்
    நிஜத்தினில் பதில்கள் இல்லையே!

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவை பல மடங்கு அதிகரிக்கும், பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    9

    தாலிக்கு அர்த்தம் என்ன?

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் மேலும் அழகாகிறாள்.

    திருமணம் முடிந்த பெண்களை நம்மாள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் அவர்கள் அணிந்திருக்கும் மங்களகரமான மஞ்சல் கயிறு (அது தான் தாலி) அதை உறுதிப்படுத்திவிடும், அது என்ன பெண்களுக்கு மட்டும் அடையாளமாக தாலி அப்ப ஆண்களுக்கு இல்லையா? முன்பெல்லாம் ஆண்கள் அவர்களின் கால் விரல்களில் பெண்கள் அணியும் மிஞ்சி (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) போல அணிவார்களாம் ஆனால் அது எப்படி நாளடைவில் இல்லாமல் போனது பற்றி போதிய தகவல்கள் இல்லை அதனால் அதை விட்டுவிடுவோம் சரி பெண்கள் மட்டும் கழுத்தில் திருமணம் முடிந்ததன் அடையாளமாக கழுத்தில் தாலி அணிகிறார்கள் ஆண்களும் காலில் மிஞ்சி அணிவதற்கு பதிலாக வேறு ஏதாவது கழுத்தில் அடையாளமாக அணிந்திருக்கலாமே என கேள்வி கேப்பவர்களுக்காக பெண்கள் பொதுவாகவே (பழங்காலத்து பெண்கள்) தரையை பார்த்துதான் நடக்கிறார்கள் (இப்பொழுதுதான் இருவரும் சரிசம்மாகிவிட்டோமே) அதனால் அவர்கள் திருமணமான ஆண்களை அடையாளம் கண்டுகொள்ளத்தான் ஆண்களுக்கு காலில் மிஞ்சி அணிந்தார்கள் ஆண்கள் எப்படி நடப்பார்கள் என்பதுதான் எல்லாருக்குமே தெரியுமே அதனால்தான் பெண்களுக்கு கழுத்தில் தாலி

    மன்னிக்கவும் நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு எங்கோ செல்கிறேன் இப்பவும் ஆண்கள் திருமணத்தின் போது பெண்களின் கழுத்தில் தாலி கட்டுகிறோம் அந்த தாலிக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் அப்படி தெரிந்தவர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்திகொள்ளவும் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் தான் இந்த பதிவு

    தாலியை நன்கு கவணித்து பாருங்கள் அதை சுற்றி மொத்தம் ஒன்பது இலைகள் உள்ளது போல தோற்றமளிக்கும் கவனிக்காதவர்கள் பார்த்துக்கொள்ளவும் அந்த ஒன்பது இலைகளும் வெரும் வடிவமைப்புக்காக செய்யப்பட்டதல்ல அவை ஒவ்வொன்றிற்கும் காயத்திரி மந்திரத்தில் ஒவ்வொரு அர்த்தம் உண்மையும் பொதிந்துள்ளது

    தாலியின் இலைகள்:
    1)வாழ்க்கையை உண்மையாக புரிந்துகொள்ளவேண்டும்
    2)மேண்மை பெற வேண்டும்
    3)ஆற்றல் மிக்கவராய் இருத்தல் வேண்டும்
    4)தூய்மை அவசியம் வேண்டும்
    5)தெய்வீகம் தேவை
    6)உத்தம குணம் தேவை
    7)விவேகம் முக்கியம்
    8)தன்னடக்கம் கட்டாயம் தேவை
    9)தொண்டு மனப்பாண்மை வேண்டும்

    மேற்சொன்ன இத்தனை அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் தாலி அதுவே பெண்களை காக்கும் வேலி

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Mar 10, 2010

    15

    வாழ்க்கையில் எதிர் நீச்சல்

  • Mar 10, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி சில சமயம் இருட்டு சில சமயம் முழு நிலவு.

    நான் எழுத்துலகிற்கு புதியவன் அதனால் நான் சொல்ல வருபவை ஒருவேளை கோர்வை இல்லாமல் இருக்கலாம்

    நாம் எல்லோருக்குமே வாழ்க்கையில் பிரச்சினை இருக்கதான் செய்கிறது அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் ஆட்கொண்டு நம்மை முடக்குகிறது, அதுதான் எங்க எல்லாருக்குமே தெரியுமே நீ என்ன புதுசா சொல்லிடப்போறேனு நீங்க மனசுல நினைக்கிறத என்னால புரிந்துகொள்ள முடிகிறது இருந்தாலும் எனக்கு தெரிஞ்சத உங்களோட பகிர்ந்துகொள்ள விரும்பினேன், உங்களுக்கு இதை படிக்கனும்னு தோனுதா தாரளமா படிங்க சரி எனக்கு இதெல்லாம் விருப்பமில்லைனு நினைக்கிறவங்க தாரளமாக உங்களுக்கு பிடித்தவற்றை படிங்க, மற்றவர்கள் சொல்றதுக்காகவோ அல்லது அறிவுறுத்தலுக்காகவோ எதையும் செய்யாதிங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருங்க உங்க மனசுல ஒரு விஷயம் சரியாக தோன்றினால் அதையே பின்பற்றுங்க அதுக்காக தவறான வழியில போகக்கூடாது முடிந்தளவுக்கு நேர்மையான வழியில் நடங்க இந்த உலகத்தில் நேர்மையா வாழ நினைச்சா அதுக்கு நிறைய இழக்க வேண்டிவரும் ஆனால் ஒவ்வொரு இழப்புகளிலும் நீங்கள் வாழ்க்கையின் ஒரு உன்னதமான பாடத்தை படித்துவிட்டீர்கள் அதுதான் உண்மை இன்று நாம் உதாரணத்துக்கு நாம் கூறும் பலரும் அவர்களிடம் கேட்டால் எல்லாமே அனுபவம்தான் கற்றுக்கொடுத்த்து என்பார்கள்

    சரி நீங்க நல்ல படிப்பு நல்ல மதிப்பென் எடுத்து படிப்பில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் உங்களுக்கு பிடிச்ச துறையில் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்கிறீர்கள் அங்கு என்ன நடக்கும் உங்கள் கல்விச்சான்றிதழ் சோதனை அப்புறம் உங்களிடம் கேள்விகள் கடைசியா இதுக்குமுன்னாடி எங்கே வேலை பார்த்தீர்கள் என்னவாக வேலை பார்த்தீர்கள் இதுதான் உங்களுக்கான வேலையை தீர்மானிக்கும் கேள்வி சரி நீங்க சொல்றிங்க இப்பொழுதுதான் முயற்சி செய்கிறேன் உடனே அவர்கள் பதில் எப்படியிருக்கும் இந்த துறை மிகவும் கடினமானது முன் அனுபவம் இருந்தால் தங்களுக்கு வேலை தருவதில் எங்களுக்கு எந்த தடையும் இல்லை அல்லது தங்களின் படிப்புக்கோ தகுதிக்கோ பொருந்தாத ஒரு வேலையை வழங்கலாம்

    நாம் அந்த சூழ்நிலையில் என்ன செய்வோம் ஒன்று கிடைத்த வேலையில் இருந்துகொண்டு நமக்கு சரியான இலக்கை அடைய முயல்வோம் இல்லையென்றால் இது நமக்கு சரியான வேலை இல்லை என நினைத்து வேறு முயற்சி செய்ய தொடங்குவோம் சரி நமது தேர்வு கிடைத்த வேலையில் இருக்கலாம் என முடிவு எடுத்தால் உங்களுக்கு வருமானம் பின்னர் அனுபவம் இந்த இரண்டுமே கிடைக்கும் சரி படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற ஒரு வேலை தான் பார்க்கனும்னு நாம அடம்பிடிச்சா என்ன நடக்கும் வருமானம் இழப்பு அதைவிட அனுபவம் கிடைக்காது அனுபவம் இல்லையென்றால் என்றுமே நீங்கள் செல்கின்ற துறைக்கு புதியவர்தான் உதாரணமாக நீங்கள் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் உங்களின் நிறுவனத்திற்கு ஆள் எடுக்க நினைக்கிறீர்கள் வருகின்றவர்கள் நல்ல படிப்பு, நல்ல மதிப்பென் உடையவர் ஆனால் வேலைக்கோ புதியவர் மற்றவர் படிப்பு குறைவுதான் என்றாலும் முன் அனுபவம் உள்ளவர் நீங்கள் இப்பொழுது யாரை தேர்ந்தெடுப்பீர்கள்

    இந்த உலகத்தில் பணம் யாருக்காகவது தேவையில்லாமல் இருக்கா? அல்லது எனக்கு இது போதும் என்று சொல்கிற மனம் தான் இருக்கா? நூறு ரூபாய் வருமானம் வந்தால் நூற்றைம்பது கிடைத்தால் ஒருவிதம் சிரம்மமில்லாமல் வாழ்க்கையை கொண்டு செல்லாலாம் அப்படினு நினைப்போம் அப்ப நீங்கள் எதிர்பாரத நேரத்தின் உங்களின் நிறுவனத்தில் சம்பள உயர்வு கொடுக்கிறார்கள் அப்பொழுது உங்கள் வருமானம் இருநூறு கிடைக்கிறது அந்த முதல் மாதம் மட்டுமே உங்களுக்கு அது போதுமானதாக இருக்கும் ,மீண்டும் அடுத்த மாதம் கிடைக்கும் பணம் வாழ்க்கை செலவுகளுக்கு போதவில்லையே எனதான் நினைக்க தோன்றும் சரி இதுக்கு என்னதான் வழி? கதவை திற காற்று வரட்டும் அப்படினு அடுத்த வீட்டு கதவை திறக்கிறதா இல்லை வங்கியை திற பணம் கொட்டும் அப்படினு வங்கிய திறக்கிறதா இரண்டுக்குமே காவல்துறை உங்கள் வாசல் தட்டும் சரி அப்ப எதைத்தான் திறக்கலாம் இதுக்கு என் பதில் மனதை திற மகிழ்ச்சி பொங்கட்டும்

    சந்தோஷம் எதுல இருக்கு பணத்துலையா? அப்ப ஏன் பணம் அதிகமா இருக்கிறவங்க கண்ட கண்ட போலிச்சாமிகிட்ட போய் எனக்கு வாழ்க்கையில நிம்மதியே இல்லை எனக்கு நிம்மதி வேனும்னு பணத்தை கொண்டு போய் போலிகள் கிட்ட கொடுத்துட்டு பின்னாடி வருத்தப்படனும், சாமினு சொல்றவங்க எல்லாம் என்ன கடவுளோட அங்கீகாரத்தோட நிம்மதி விக்கிறவங்களா? அதுக்காக நான் கடவுள் இல்லைனு சொல்ற ஆளா நிச்சியாமா இல்லை நான் கடவுளை நம்புறேன் ஆனால் நான் கடவுளென சொல்லித்திரியும் போலி மனிதர்களை நம்புவதிலை (போலிச்சாமி என சொல்வது கூட சரியாக இருக்காது கடவுள் என்பது ஒன்றே அதில் போலிக்கு வேலையில்லை)

    என்னடா இவன் மனதை திறக்க சொல்லிட்டு அத சொல்லவேயில்லேயே நினைக்கிறிங்களா? பெரிசா ஒன்னுமே இல்லைங்க உங்க மனைவியோட மனம் விட்டு பேசுங்க உங்க குழந்தைகளோடு அன்பா இருங்க அந்த சந்தோஷம் தானகவே உங்கள ஓட்டிக்கும் நண்பர்களோடு உண்மையா இருங்க சும்மா சொல்றதுக்கெல்லாம் தலையாட்டாதிங்க தவறு என பட்டால் சுட்டிகாட்டுவதற்கு தயங்கவே வேண்டாம் உங்க வாழ்க்கையில் சந்தோஷம் உங்க்கிட்ட மட்டும்தான் இருக்கு சந்தோஷத்தை உங்களுக்குள்ள வச்சிக்கிட்டு வேறு எங்கேயோ தேடினா எப்படிங்க கிடைக்கும்

    சரி தலைப்பு எதிர் நீச்சல்-னு வச்சுட்டு வேற எதெயெல்லாமோ எழுதிகிட்டு இருக்கேன் சரி அத பத்தியும் இரண்டு வரி பேசலாம் ஒரு ஆற்றில் நாம் படகில போய்க்கிட்டு இருக்கோம் அப்ப நாம் போகவேண்டிய திசைக்கு எதிராக கடுமையான வெல்லபெருக்கு வருகிறது அப்ப நாம் அதே திசையில் போக முயற்சி பண்ணினால் நம்மால் போக நினைக்கிற இடத்துக்கு போய் சேரமுடியுமா? அப்படினா என்ன பண்ணனும் ஆற்றுவெல்லம் போகிறபோக்கில் கடலில் போய் மூழ்கி சாவதா? நிச்சியாமாய் அப்படி போய்விடக்கூடாது போகும் வழியில் நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கரை சேரவேண்டும்

    நான் எழுதியதையும் இத்தனை நேரமாக பொருமையாக படித்த முதல் நபர் நீங்கள்தான் தங்களின் வாசிப்புக்கு நன்றி உங்களால் முடிந்தால் கருத்துரை இட்டுச்செல்லவும்.

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர