Mar 17, 2010

9

தாலிக்கு அர்த்தம் என்ன?

 • Mar 17, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் மேலும் அழகாகிறாள்.

  திருமணம் முடிந்த பெண்களை நம்மாள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் அவர்கள் அணிந்திருக்கும் மங்களகரமான மஞ்சல் கயிறு (அது தான் தாலி) அதை உறுதிப்படுத்திவிடும், அது என்ன பெண்களுக்கு மட்டும் அடையாளமாக தாலி அப்ப ஆண்களுக்கு இல்லையா? முன்பெல்லாம் ஆண்கள் அவர்களின் கால் விரல்களில் பெண்கள் அணியும் மிஞ்சி (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) போல அணிவார்களாம் ஆனால் அது எப்படி நாளடைவில் இல்லாமல் போனது பற்றி போதிய தகவல்கள் இல்லை அதனால் அதை விட்டுவிடுவோம் சரி பெண்கள் மட்டும் கழுத்தில் திருமணம் முடிந்ததன் அடையாளமாக கழுத்தில் தாலி அணிகிறார்கள் ஆண்களும் காலில் மிஞ்சி அணிவதற்கு பதிலாக வேறு ஏதாவது கழுத்தில் அடையாளமாக அணிந்திருக்கலாமே என கேள்வி கேப்பவர்களுக்காக பெண்கள் பொதுவாகவே (பழங்காலத்து பெண்கள்) தரையை பார்த்துதான் நடக்கிறார்கள் (இப்பொழுதுதான் இருவரும் சரிசம்மாகிவிட்டோமே) அதனால் அவர்கள் திருமணமான ஆண்களை அடையாளம் கண்டுகொள்ளத்தான் ஆண்களுக்கு காலில் மிஞ்சி அணிந்தார்கள் ஆண்கள் எப்படி நடப்பார்கள் என்பதுதான் எல்லாருக்குமே தெரியுமே அதனால்தான் பெண்களுக்கு கழுத்தில் தாலி

  மன்னிக்கவும் நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு எங்கோ செல்கிறேன் இப்பவும் ஆண்கள் திருமணத்தின் போது பெண்களின் கழுத்தில் தாலி கட்டுகிறோம் அந்த தாலிக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் அப்படி தெரிந்தவர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்திகொள்ளவும் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் தான் இந்த பதிவு

  தாலியை நன்கு கவணித்து பாருங்கள் அதை சுற்றி மொத்தம் ஒன்பது இலைகள் உள்ளது போல தோற்றமளிக்கும் கவனிக்காதவர்கள் பார்த்துக்கொள்ளவும் அந்த ஒன்பது இலைகளும் வெரும் வடிவமைப்புக்காக செய்யப்பட்டதல்ல அவை ஒவ்வொன்றிற்கும் காயத்திரி மந்திரத்தில் ஒவ்வொரு அர்த்தம் உண்மையும் பொதிந்துள்ளது

  தாலியின் இலைகள்:
  1)வாழ்க்கையை உண்மையாக புரிந்துகொள்ளவேண்டும்
  2)மேண்மை பெற வேண்டும்
  3)ஆற்றல் மிக்கவராய் இருத்தல் வேண்டும்
  4)தூய்மை அவசியம் வேண்டும்
  5)தெய்வீகம் தேவை
  6)உத்தம குணம் தேவை
  7)விவேகம் முக்கியம்
  8)தன்னடக்கம் கட்டாயம் தேவை
  9)தொண்டு மனப்பாண்மை வேண்டும்

  மேற்சொன்ன இத்தனை அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் தாலி அதுவே பெண்களை காக்கும் வேலி

  குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்


  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  9 Comments
  Comments

  9 Responses to “தாலிக்கு அர்த்தம் என்ன?”

  buruhaniibrahim said...
  April 21, 2010 at 8:34 AM

  iththanai visayangalaiyum enge pidiththeerkal thambi enakku iththanai kalangklai theriyatha visayanggal valga valamudan


  buruhani


  ம.தி.சுதா said...
  August 21, 2010 at 10:53 PM

  நல்ல பதிவொன்று. நான் முதலே வாசித்திருந்தால் என் காயத்திரி மந்திரம் சம்பந்தமாக கட்டுரைக்கு உங்க லிங்கை கொடுத்திருப்பேன். http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_04.html


  ஜிஎஸ்ஆர் said...
  August 22, 2010 at 9:32 AM

  @ம.தி.சுதா தங்களின் அன்பிற்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி உங்களுக்கு தேவையான தகவல்கள் நம் தளத்தில் இருந்தால் அந்த உரலை பயன்படுத்துவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை


  சிகப்பு மனிதன் said...
  November 30, 2010 at 5:35 AM

  .மிஞ்சி : மெட்டி என நினைகிறேன் !

  .தவறிருப்பின் தெரிவிக்கும், நண்பரே !


  .பகின்றமைக்கு நன்றி, !


  சிகப்பு மனிதன் said...
  November 30, 2010 at 5:39 AM

  // .தவறிருப்பின் தெரிவிக்கும், நண்பரே !


  .தவறிருப்பின் தெரிவிக்கவும், நண்பரே !


  ஜிஎஸ்ஆர் said...
  December 2, 2010 at 11:12 PM

  @சிகப்பு மனிதன் நானும் அப்படித்தான் நீங்கள் சொன்னதிற்கு பிறகு நினைக்கிறேன்


  ஜிஎஸ்ஆர் said...
  December 2, 2010 at 11:13 PM

  @சிகப்பு மனிதன் நிச்சியமாய் தவறு ஏதுமில்லை


  வருணன் said...
  January 18, 2011 at 3:53 PM

  (பழங்காலத்து பெண்கள்) தரையை பார்த்துதான் நடக்கிறார்கள் (இப்பொழுதுதான் இருவரும் சரிசம்மாகிவிட்டோமே) அதனால் அவர்கள் திருமணமான ஆண்களை அடையாளம் கண்டுகொள்ளத்தான் ஆண்களுக்கு காலில் மிஞ்சி அணிந்தார்கள் ஆண்கள் எப்படி நடப்பார்கள் என்பதுதான் எல்லாருக்குமே தெரியுமே அதனால்தான் பெண்களுக்கு கழுத்தில் தாலி.
  அருமையான கருத்து.இக் கருத்து பலகோணங்களில் பார்க்கலாம்...*சிலருக்கு மட்டும் பொருந்தாது..


  வருணன் said...
  January 18, 2011 at 3:54 PM

  தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்....


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர