Dec 30, 2010

27

புது வருட வாழ்த்துகள்-2011

  • Dec 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வேலை செய்யாமல் அதிர்ஷ்டமில்லை என புலம்புவதில் பலனில்லை.

    வணக்கம் நண்பர்களே புதிய வருடம் பிறக்க போகிறது இந்த நேரத்தில் நமது வலைத்தளம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துகளை தங்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடம் உங்களுக்கு சகல செல்வத்தையும் மன அமைதியையும் தரட்டும், எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் திறன் கிடைக்கட்டும், உங்கள் குடும்பத்தாருடனும் நட்புகளுடனும் நெருங்கிய பந்தம் நிலைக்கட்டும்.

    புது வருடம்-2011



    பூத்தது புது வருடம்
    பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்

    நடந்து முடிந்தது முடிந்தது - இனி
    நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.

    எதிர்காலத்தை திட்டமிடுவோம்
    எண்ணங்களை வசப்படுத்துவோம்

    கடந்த வருடம்- நம்
    கஷ்டங்களை கொண்டு போகட்டும்

    புது வருடம் – பல
    புதுமைகள் காண உதவட்டும்

    நினைவுகளாய் இருக்கும் கனவுகள்
    நிஜமாய் மாறட்டும்

    இன்னொரு ஜென்மம் உண்டென்றால்
    இந்த சொந்தங்கள் தொடரட்டும்

    நம் வீட்டு சொந்தங்கள்
    நலம் வாழ நாளும் பிராத்திப்போம்


    இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவனமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Dec 28, 2010

    24

    மதுரை மீனாட்சியம்மன் மற்றும் சுவாமி ஐய்யப்பன் கோவிலை சுற்றிப்பார்க்கலாம்.

  • Dec 28, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: எல்லாம் வல்லவன் இறைவன்.

    வணக்கம் நண்பர்களே நான் வழக்கமாய் எழுதும் பதிவில் இருந்து இந்த பதிவு முற்றிலும் மாறுபட்டது நான் என்னுடைய சில பதிவுகளில் கடவுளை பற்றிய என சிந்தனைகளை எழுதியிருக்கிறேன் ஆனால் இந்த முறை பெரிதாக நான் ஒன்றும் எழுதபோவதில்லை உங்களுக்கு இரண்டு தளங்களை அறிமுகம் செய்கிறேன் நீங்கள் உங்கள் கணினியில் இருந்தபடியே மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலையும், அருள்மிகு மணிகண்டன் ஐய்யப்பனையும் காண்பதற்கு ஏற்ற வகையில் மிகச்சிறப்பாக பனோரமா தளங்கள் இரண்டை உருவாக்கி இருக்கிறார்கள் அதிலும் மதுரை மீனாட்சியம்மன் தளத்தை பார்க்கும் போது என்னையறியாமல் ஒரு நெருக்கம் இருப்பதாய் உணர்கிறேன் ஒருவேளை நான் அடிக்கடி கடந்த சென்ற பாதையாய் இருக்கலாம் அதோடு சுவாமி ஐய்யப்பனின் தளத்தை நுழைந்தால் ஒலிக்கும் பாடல் நம்மை கோவிலுக்குள் இருப்பதாகவே உணரச்ச்செய்கிறது தொலைவில் இருக்கும் நண்பர்கள் இந்த ஆலயங்களுக்கு வரமுடியாதவர்கள் இந்த தளங்களை பாருங்கள் நீங்கள் நேரடியாக சென்று வந்த அனுபவத்தை உணர்வீர்கள்.

    முதலாவதாக Madurai Meenachi Amman Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.



    இரண்டாவதாகSwamy Iyyappan Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.



    என்ன நண்பர்களே புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்ல எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் சூழ்நிலை சிலருக்கு ஒத்துவராமல் இருக்கலாம் அதனால் என்ன இனையம் வழியாகவே மீனாட்சியம்மனையும், ஐய்யப்பனையும் தரிசிக்கலாமே. தளம் பயனுள்ளதாய், மனதிற்கு நிறைவு அளிப்பதாக இருந்தால் அவசியம் உங்கள் கருத்துக்களையும், இன் ட்லியில் வாக்கும் அளிப்பதன் மூலம் நீங்கள் பெற்ற மன நிறைவை மற்றவர்களும் பெறட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Dec 27, 2010

    22

    கீறல் விழுந்த சிடியில் காப்பி எடுத்தல் 1

  • Dec 27, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: எல்லாவற்றிற்கும் காலம் மாற்று வழியை வைத்திருக்கிறது.

    வணக்கம் நண்பர்களே நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம் அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.

    நண்பர்களே இது கீறல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கலாம் அதே நேரத்தில் உங்களிடம் இருக்கும் குறுந்தகடு உட்புறத்தில் உடைந்திருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதை தேடுவதை தவிர வேறு வழி இல்லை.

    முதலாவதாக Bad Copy தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் நான் முயற்சித்து பார்த்த வரை சிறப்பாகத்தான் இருக்கிறது.



    இரண்டாவதாக Un Stoppable இது ஒரு இலவச மென்பொருள் வேகம் சிறப்பாக இருக்கிறது.



    மூன்றாவதாக Any Reader தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் அவசியம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதன் தேவை ஏற்படலாம்.



    இதில் சில மென்பொருள் தரவிறக்கி உபயோகிப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ அல்லது பதிவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் முடிந்தவரை உதவுகிறேன். பதிவு உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றியாதான் உங்கள் கருத்தையும் இன்ட்லியில் வாக்கும் அளித்துச்செல்லுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Dec 24, 2010

    26

    எதிர்காலத்தில் பணம் எப்படி இருக்கும்? எனது பார்வையில்!

  • Dec 24, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.

    வணக்கம் நண்பர்களே நம் வாழ்க்கையில் பணம் எனும் அத்யாவசிய தேவையை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த விரும்பும் வசதிகளுக்கேற்ப பணத்தின் தேவை கூடியோ அல்லது தேவைக்கோ தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதே நேரத்தில் நாம் முன்னோர்கள் உப்யோகித்த நாணயமும் நாம் இப்போது உபயோகிக்கிற நாணயமும், முன்னோர்கள் உபயோகித்த பணத்திற்கும், நாம் இப்போது உபயோகித்து கொண்டிருக்கும் பணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அதில் நம் நாகரிகத்தின் வளர்ச்சியும் நம் சிந்தனையின், அறிவு கூர்மையின் வளர்ச்சியையும் ஒத்ததாக தான் வடிவமைப்பு இருந்திருக்கிறது ஆனால் நாம் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போவது எதிர்காலத்தில் பணத்தின் அடையாளம் எப்படி இருக்கும் அல்லது அதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றிய எனது சிந்தனை மட்டுமே இது மற்றவர்களோடு ஒத்து போகவேண்டுமென்பதில்லை.

    நான் கொடுத்திருக்கும் படங்கள் கூகுள் வழியாக இனையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை படத்தில் உள்ள நாணயங்கள் மற்றும் கரண்சிகள் பல காலக்கட்டத்தை சேர்ந்தவை வெறும் உதாரணத்துக்கு மட்டுமே படம் இனைத்திருக்கிறேன்









    மேலும் படங்களிற்கு கூகுலில் தேடுங்கள் கொட்டிக்கிடக்கிறது.என்ன நண்பர்களே மேலே உள்ள படத்தை பார்த்தீர்கள் தானே இனி எதிர்காலத்தில் நமது பணம் எப்படி இருக்க போகிறது என்பதையும் கிழே பாருங்கள்.








    என்ன வெற்றிடமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா?ஆம் உண்மைதான் இன்னும் 20 வருடங்களில் இந்த பணத்திற்கான வடிவமோ,தாளோ இருக்காது இனி இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

    நாம் இப்போதே பணத்தை கண்ணில் பார்க்கும் வாய்ப்பை குறைத்து கொண்டே வருகிறோம் அதற்கு இப்போதுள்ள கணினி வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் வலுச்சேர்க்கிறது உதராணமாக நீங்கள் ஒரு அரசு ஊழியர் அல்லது தனியார் நிறுவணங்களில் வேலை பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் வேலைக்கான கூலி நேரடியாக வங்கியில் செலுத்தி விடுகிறார்கள் அதன் பின் தேவைப்படுபவர்கள் பணத்தை கையில் எடுக்கிறார்கள் இன்னும் சிலர் பற்று அட்டை (Debit Card) வழியாக பொருள்கள் வாங்குகிறார்கள் செலுத்த வேண்டிய தொகையை வங்கி கணக்கில் இருந்தே செலுத்தி விடுகிறார்கள் ஒரு வகையில் இதை பாதுகாப்பாக உணர்கிறார்கள் இன்னும் சிலர் கடன் அட்டை வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள் இதில் இன்னும் ஒரு படி மேலே போய் பணத்தை அலைபேசி வழியாக செலுத்துபவர்களும் இருக்கிறார்கள் இந்த வகையினரும் பணத்தை கையில் வைத்திருப்பதை விரும்பவில்லை ஆனால் இதில் நான் சாதரண தொழிலாலர்களை இந்த வகையில் உட்படுத்த முடியாது அதற்க்கு தான் நாம் மேலே சொன்ன 20 வருடங்கள்.

    இனி எப்படி சில ஆண்டுகளில் பணம் மொத்தத்தையும் நிறுத்தி வெறும் எண்கள் வரும் என்பதை பார்க்கலாம் இப்படியாக நடக்கும் போது நிச்சியம் நம் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை கருப்பு பணம் லஞ்சம் இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் இந்தியாவில் இருந்து கருப்பு பணமாக ஒரு பைசா கூட வெளியில் செல்லமுடியாது ஆனால் எல்லாவற்றிற்கும் அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் புதிய நியமங்கள் கொண்டுவரவேண்டும், அதற்கான சாத்தியகூறுகள் நிறையவே இருக்கின்றன நமது இந்தியாவில் இப்போது அமுலுக்கு கொண்டு வந்திருக்கும் அடையாள அட்டையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டி வரும், அதை இப்போதே இன்போசிஸ் நிறுவணத்தினர் அரசின் உத்தரவின் பேரில் சில மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் ஆனால் அதையும் நிறைய மேம்படுத்த வேண்டி இருக்கும்.

    முன்பு ஒரு முறை வருடமோ யாருடையை ஆட்சி என்பதை நினைவில் கொண்டுவர முடியவில்லை 1000 ரூபாய் கள்ள நோட்டு அதிகமாக் புழக்கத்தில் இருந்த போது அரசு ஒரு சிறப்பான முடிவை எடுத்தது அதில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு விதித்து தங்களிடம் இருக்கும் 1000 ரூபாயை வங்கியில் ஒப்படைத்து அதற்கு பதிலாக வேறு பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி ஒரு தேதியையும் அறிவித்த்து அந்த தேதிக்கு பின்னால் அந்த பணத்தின் மதிப்பு வெறும் பூஜ்யம் என்பதை தெளிபடுத்தி ஆனையிட்டது அரசு எதிர்பார்த்தது போலவே கறுப்பு பணம் அரசுக்குள் வந்துவிட்டது அப்படி செலுத்தாதவர்களின் பணம் வெறும் பேப்பராக மாற்றிவிட்டிருந்தது.

    இனி இந்தியனுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் அடிப்படை தகவல்கள், சொந்த விபரங்கள், சொத்து விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், மருத்துவ விபரங்கள் இன்னும் பிற இத்யாதிகள் அடங்கியதாக இருக்கும் அதன் வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டிவரும், கடைக்கு சென்று விளக்கெண்ணைய் வாங்குவதென்றாலும் தீப்பெட்டி வாங்குவதென்றாலும் ஒவ்வொரு பரிமாற்றமும் அரசினால் வழங்கப்படும் அடையாள அட்டையில் இருக்கும் வங்கி கணக்கின் வழியாகவே மேற்கொள்ளப்படும், இந்த அடையாள அட்டை இல்லாமல் எந்த ஒரு வங்கி கணக்கோ, பணப் பரிவர்த்தனையோ அல்லது வேறு தகவல்களோ பரிமாற்றம் செய்யமுடியாத வகையில் இருக்கும்.

    ஒரு இடம் வாங்க நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் உரிய விலை கொடுக்காமல் நிலத்தை வாங்க முடியாது அப்படி நிலம் வாங்கும் போது அதற்கான பரிவர்த்தனை அரசின் அடையாள அட்டையின் வழியால் நடைபெறுவதால் உங்களால் அரசுக்கான வரியை ஏய்ப்பு செய்ய முடியாது அப்படி செய்ய நினைத்தாலும் அரசுக்கு கண்டுபிடிப்பதில் எந்த பிரச்சினையும் வராது இதனால் சில இடங்களில் கருப்பு பணம் சேர வழியில்லை.

    மொத்த பண பரிவர்த்தனையும் வங்கியின் வழி மேற்கொள்வதால் கள்ளப்பணம் வெளியிட முடியாது காரணம் பணத்திற்கான வடிவம் காணமல் போய் அரசால் நியுமரிக் எண்கள் வழங்கப்பட்டிருக்கும் அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் நியுமரிக் எண்ணில் இடைச்செறுகலாக ஒரே எண்ணில் மீண்டும் ஒரு எண்ணை உட்செலுத்த முடியாது சரி புதிதாக எண்களை வழங்க நினைத்தாலும் அரசின் இயந்திரங்கள் அதை அனுமதிக்காது யோசித்து பாருங்கள் அரசியல்வாதியோ பெறும் பண முதலைகளோ அரசை ஏமாற்றி பணத்தை வெளியில் கொண்டு செல்லமுடியுமா?பணத்தை வேறு ஒரு நாட்டு பணமாக மாற்ற நினைத்தாலும் அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியுமா?ஆக பணம் என்பது வெறும் எண்களாகவும் கண்களில் பார்க்க முடியாததாகவும், நம்முடைய பணம் வெளி நாட்டில் இருந்தால் பத்திரங்களாக மாறியிருக்கும் ஆக இதன் வழியாக வெளிநாட்டில் இருந்து அந்நிய நாட்டு பணத்தையும் அரசின் அனுமதி இல்லாமல் உள்ளே கொண்டு வரமுடியாது!

    சரி நம் அடையாள அட்டை காணமால் போய்விட்டது அல்லது அடுத்தவர்களால் களவாடப்பட்டது என்றாலும் நமக்கு பாதிப்பு இருக்காது காரணம் அடையாள அட்டையை பயன்படுத்துவதற்கு நம் கண், கைரேகை மற்றும் கூடுதலாக கடவுச்சொல்லும் பயன்படுத்தினால் மட்டுமே நம் தகவல்கள் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதாக இருந்தால் திருடுவது எளிமையான விஷயமா? இதையும் உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.

    இனி எப்படி இதன் வளர்ச்சியும் சாதகமும், பாதகமும் இருக்குமென்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் ஆனால் இந்த நேரத்தில் பிக் பாக்கெட் திருடன் போய் நிறைய ஹைடெக் கணினி திருடர்கள் நிறைய முளைத்திருப்பார்கள். என்ன நண்பர்களே இது சாத்தியமில்லை என நினைக்கிறீர்களா? அல்லது சாத்தியம் என நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் இவையெல்லாம் சாத்தியப்படும் போது நாம் நிச்சியமாய் எவராலும் அசைக்க முடியாத வல்லரசாய் இருப்போம்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Dec 21, 2010

    35

    மனதை படிக்கும் மந்திரம்

  • Dec 21, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மனம் ஒரு குரங்கு முயன்றால் வசப்படுத்தலாம்.

    வணக்கம் நண்பர்களே மனதை படிக்கும் மந்திரம் என்றவுடன் எளிதாக யார் மனதையும் படித்து விடலாம் என நினைக்கவேண்டாம் ஆனால் அதே நேரத்தில் நாம் மிகவும் நேசிக்கும் விரும்பும் நபர்களை நாம் நினைக்கும் நேரத்தில் நமது எண்ண அலைகளை அவர்களுக்கு எளிதாய் உணர்த்த முடியும். பொதுவாக இந்த வகையான அலைகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கும் ஆனால் யாரும் அதை சரியாக புரிந்து வைத்திருப்பதில்லை.

    இந்த மாதிரியான அனுபவங்களை நாம் ஒவ்வொருவரும் பல தருணங்களில் உணர்ந்திருப்போம் ஆனால் அதை ஆழமாய் சிந்தித்திருக்க மாட்டோம்.கொஞ்சம் சுருக்கமாக எளிதாக புரியும் வகையில் சொல்வதென்றால் நாம் நினைக்கும் நேரத்தில் நாம் நினைத்த நபர் நம்மை நினைப்பார் இதைத்தான் விஞ்ஞானிகள் இதற்கென இருக்கும் சைக்கிகள் டெலிபதி என்கிறார்கள் இதையே வேறுவிதாமக சைக்காலிச்சிக்கலாக பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.

    இதிலும் கொஞ்சம் ஒரு படி மேலே போய் பார்த்தால் இதைவிட அதிசியம் இருக்கும் உதாரணமாக நமக்கு நெருங்கிய நண்பர், உறவினர் இப்படி யாராவது ஒருவருக்கு ஆபத்து என்றாலும் நாம் உணரமுடியும், நான் உணர்ந்திருக்கிறேன் நாம் அன்றாடம் சந்திக்கும் சில நபர்களிடமிருந்து சில உரையாடல்களை கவணித்தால் நமக்கு தெரியும் சிலர் சொல்லக்கூடும் என்னையறியாமல் என் கண் முன்னால் படக்காட்சி ஓடுவது போல தெரிந்தது ஆனால் அதைபோலான ஒரு சம்பவம் அருகிலோ அல்லது வேறு எங்கோ நடந்திருக்கும் அதை அவர்களே கூட பத்திரிகையிலோ அல்லது யாரவது சொல்லியோ கேட்டிருப்பார்கள் பொதுவாக மனிதனின் மனதில் இருந்து வெளிவரும் அலையானது மிகச்சக்தி வாய்ந்ததாக இருக்கிறது நம் மனதை ஒருமுகபடுத்தினால் யார் மனதையும் எளிதாக படிக்க முடியும் இதைத்தான் பண்டைய காலத்தில் நாம் புராணக்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் வழியாக பல சம்பவங்களை கேட்டிருப்போம் முனிவனின் தவம், அரக்கனின் தவம் கூட இந்த வழிமுறைதான்.

    சில நேரங்களில் நாம் எதையாவது முழுமையாக யோசித்துக்கொண்டிருப்போம் திடீரென அந்த விஷயத்தை மறந்தே விட்டிருப்போம் ஆனால் நாம் மீண்டும் எத்தனை முயற்சித்தாலும் நம்மால் அந்த நினைவை மீட்டெடுக்க முடியாது அந்த மாதிரியான நேரங்களில் நாம் விஷயத்தை சொல்லாமலேயே தொண்டை வரை இருக்கிறது ஆனால் வெளியில் வரவில்லை என்பதாக சொல்லும் போது நம் வீட்டில் உள்ளவர்களோ அல்லது அருகில் இருக்கும் நமது நண்பனோ அந்த விஷயத்தை சரியாக நமக்கு நினைவு படுத்துவான் அதற்கு பெயரும் மனதை படிக்கும் மந்திரம் தான்.

    நீங்கள் முழுமையாக நேசிக்க தொடங்கினால் நீங்கள் பார்த்திராத ஒருவரின் குரலை மட்டும் வைத்து அவர் உருவத்தையும் உணரமுடியும். இப்படித்தான் நம் வலைத்தளம் வழியாக நான் ஓரிரு நண்பர்களோடு ஜிமெயில் அரட்டையில் உரையாடி இருக்கிறேன் இதை நீங்கள் நம்புவீர்களா எனபதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் நான் அந்த தம்பியிடம் பேசியபோது என் மனதிற்குள் இருந்த குரலைத்தான் அவரிடம் கேட்டேன். பொதுவாக வலைத்தளத்தை பொருத்தவரை இரு முகங்களாகத்தான் இருக்கின்றனர் ஒருவரின் எழுத்தை வைத்தெல்லாம் ஒருவரை நல்லவர் கெட்டவர் என்பதை தீர்மானிக்க முடியவில்லை நாம் சில நேரங்களில் நல்லவர் என நினைத்தால் அவர்களின் நடவடிக்கை அதற்கு நேர்மாறாக இருக்கிறது எழுத்துக்களில் கடுமையை வீசுபவர்கள் எதார்த்தத்தில் மிக அருமையானவர்களாய் இருக்கிறார்கள் மேலும் பொதுவாகவே வலைத்தளம் வாயிலாக நிறைய நண்பர்களை சந்திக்கலாம் ஆனால் அவர்கள் எல்லாம் எந்தளவிற்கு உண்மையானவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே!

    இரு நபர்களுக்குள் பரஸ்பரம் அன்பும் புரிதலும் காதலும் இருந்தால் தொலைவில் இருந்தாலும் நமக்கு வேண்டியவர் நம்மை நினைக்கும் போதே நாம் அதை உணர்ந்து விடுவோம் அதே நேரத்தில் நமக்கு வேண்டியவர் பிணியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நம் மனம் நமக்கு அதை அறிவிக்கும் ஆனால் இவையெல்லாம் சாதிப்பதற்கு உண்மையான அன்பு வேண்டும். உங்களை சுற்றியுள்ளவர்களை நேசியுங்கள், உன்மையாய் இருங்கள் இந்த விஷயங்களையே கொஞ்சம் தீவிரமாக செயல்படுத்தினால் யார் மனதையும் எளிதாக படித்துவிட முடியும்.

    இதைப்பற்றி இனையத்தில் தேடும் போது நமது சைக்காலிச்சிக்கல் திறனை மதிப்பிடும் வகையில் ஒரு தளத்தை கண்டேன் ஆனால் இதை அப்படியே நம்பி விடவேண்டாம் சும்மா ஒரு டிரையல் பார்க்க நினைப்பவர்கள் இங்கு சென்று பார்க்கலாம்.

    இந்த படத்தில் காட்டியிருக்கும் பச்சை நிற பட்டனை கிளிக்கி மேலிருக்கும் ஏதாவது ஒரு படத்தை தெரிவு செய்து பாருங்கள் உங்களால் எந்தளவிற்கு சைக்காலிச்சிக்களாக சிந்திக்க முடிகிறது என்பதை பார்க்கலாம்.



    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Dec 16, 2010

    26

    வங்கி லோன் கால்குலேட்டர் (EMI Calculator)

  • Dec 16, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: சுத்தம் என்பது உடுத்தும் உடையில் மட்டுமல்ல உள்ளத்திலும் வேண்டும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக வெறும் 32 கேபி அளவுள்ள ஒரு குட்டி மென்பொருள் பற்றி பார்க்கலாம் இதன் வழியாக நீங்கள் வங்கியில் கடன் பெற நினைத்தால் உங்களுக்கு எந்த விகிதத்தில் கடன் தருகிறார்கள் என்பதையும் நீங்கள் கடனை திருப்பி கொடுக்க நினைக்கும் கால அவகாசத்தையும் கணக்கில் வைத்து ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலுத்தவேண்டும் என்பதை எளிதாக அறியலாம் இந்த மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யவேண்டியதில்லை நேரடியாகவே இயங்கும்.

    இனி Loan Calculator தரவிறக்குங்கள் இப்போது 5 கேபி அளவு மட்டுமே இருக்கும் இனி இதை வின்ரார் உபயோகபடுத்தி கோப்பை எக்ஸ்ட்ராக்ட் செய்து மென்பொருளை இயக்குங்கள் உங்களுக்கு தேவையான வட்டி விகிதத்தை நொடியில் கணக்கிடுங்கள்.



    என்ன நண்பர்களே இந்த குட்டி மென்பொருள் தஙகளுக்கு இப்பொழுது பயன்படாது என நினைக்கிறேன் முடிந்தவரை இதன் தேவை தங்களுக்கு வராமல் இருக்கட்டும் ஒரு வேளை சுப காரியாமாக வீடு கட்ட நினைத்தால் அந்த நேரத்தில் வங்கியில் லோன் எடுக்க வேண்டி வரும் (முடிந்தவரை சிக்கனமாக இருந்து சேமித்து வையுங்கள் நாம் வாழ்வது நமக்காக மட்டுமே மற்றவர்களுக்காக ஆடம்பரமாக இருந்து கடனாளியாகி விடாதீர்கள்) பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இன்ட்லியில் வாக்கும் அளித்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Dec 12, 2010

    32

    அடையாள அட்டை உருவாக்கலாம் II (ID Card Creator II)

  • Dec 12, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் அதிக வித்யாசம் இருப்பதில்லை.

    வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே அடையாள அட்டை உருவாக்கலாம் I (ID Card Creator)எழுதியிருந்தேன் அந்த பதிவிலேயே இன்னும் சில மென்பொருள்கள் இருக்கிறது அதையும் விரைவில் எழுதுகிறேன் என்பதை குறிப்பிட்டதோடு பின்னர் எழுத மறந்தே விட்டிருந்தேன் சரி இந்த நேரத்தில் புதிதாக ஒன்றும் எழுதவில்லை அதற்கு பதிலாக இதையாவது எழுதலாமே என்கிற எண்ணம் தான் இந்த பதிவு நான் இப்போது பதிவுகள் அதிகம் எழுதுவதில்லை இருந்தாலும் தொடர்ந்து நம் தளத்திற்கு வந்து செல்லும் நண்பர்களுக்கு நன்றி சொல்லி அந்நியபடுத்த விரும்பவில்லை மாறாக தொடர்ந்து இனைந்திருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    முதலாவதாக Visual Business Cards பற்றி பார்க்கலாம் Visual Business Cards தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இதில் லோகோ எதுவும் இனைக்கமுடியாது.



    இரண்டாவதாக Eximious Soft Business Card Designer பற்றி பார்க்கலாம் Eximious Soft Business Card Designer தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இவற்றில் எல்லா வசதியும் இருக்கிறது.



    மூன்றவதாக Advanced Business Card Maker பற்றி பார்க்கலாம் Advanced Business Card Maker தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இவற்றில் எல்லா வசதியும் இருக்கிறது.



    இந்த மூன்று மென்பொருளிலும் நிறைய வசதிகள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக செய்து பார்த்தால் இதில் நீங்கள் நிறைய வழிகளை கற்றுக்கொள்ள முடியும். பயன்படுத்தி பார்த்து இதன் வித்யாசம் புரிந்து உங்களுக்கு சரியானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

    நண்பர்களே இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.


    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Dec 6, 2010

    17

    எக்‌ஷெல்லில் படிவம் (Excel Form)

  • Dec 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: செல்வம் வேண்டாததற்குப் பயன்படுத்தப்பட்டாலும் வேண்டாம் என்று சொல்லப்படுவதில்லை.

    வணக்கம் நண்பர்களே இதை பற்றி உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம் அப்படி தெரிந்தவர்கள் இதில் தவறிருந்தால் எப்படி மேம்படுத்துவதென சொல்லுங்கள் போதிய நேரமின்மையால் இதனை தெரிந்துகொள்ள முடியாமல் இருந்த நண்பர்கள் கீழே தொடருங்கள் இந்த பதிவை நம் தளத்தின் நண்பர் திரு.சிகப்பு மனிதன் அவர்கள் மின்னஞ்சலில் ஒரு பதிவாக எழுதி அனுப்பியிருந்தார்கள் அவருக்கு நன்றியை தெரிவிப்பதோடு பதிவிற்குள் செல்ல்லாம்.

    உங்களுக்கு ஒரே மாதிரியான தகவல்கள் excel’எக்‌ஷெல்லில் உள்ளீடு செய்ய வேண்டுமெனில், அதன் கட்டங்களினால் (Cellells) உள்ளீடு செய்யும் பொழுது உங்களுக்கு சிலவேளைகளில் சிரமமாகலாம். உங்கள் கண்களுக்கு கூட எரிச்சல் பலவேளைகளில் ஏற்படும். இவற்றில் இருந்து தப்பிக்க அதே நேரத்தில், வேலையையும் மிக வேகமாக முடிக்க உதவுவதுதான் இந்த formsபடிவம் (Form)

    முதலில் forms படிவத்தை குயிக்லாஞ்ச் பகுதிக்கு கொண்டு வந்தால், பின்னாளில் உபயோகம் செய்ய எளிமையாக இருக்கும். அதற்கு, பின்வரும் செயலை செய்யவும். இந்த வழிமுறை தான் எக்‌ஷெல் 2003,2007,2010 மூன்றிலும் ஓரே மாத்ரியாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் ஆனால் இதில் எக்‌ஷெல் 2007 தான் இதன் வழிகாட்டுதலுக்காக எடுத்துக் கொள்ளப்படிருக்கிறது. முதலில் படிவத்த்தை முகப்பு பக்கத்திற்கு கொண்டு வந்துவிடலாம் , கீழிருக்கும் படங்கள் சிறிதாக இருப்பதாக நினைத்தால் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி காணலாம்.

    எக்‌ஷெல்லை திறந்து ஆபிஸ் பட்டனை கிளிக்குவதன் மூலம் Excel Options என்பதை தெரிவு செய்யுங்கள்.



    இனி இப்படியாக திறக்கும் அதில் நீங்கள் செய்யவேண்டிய படி நிலைகளை எண்கள் வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கிறது அதன் படியே செய்யுங்கள் எக்‌ஷெல் 2003, எக்‌ஷெல் 2010 கொஞ்சம் மாறுதலாய் இருக்கும்.



    இப்பொழுது உங்கள் எக்‌ஷெல்லில் நான் கீழிருக்கும் படத்தில் அடையாளப்படுத்தியுள்ளது போல ஒரு ஐகான் உங்கள் குயிக் லாஞ்ச் ரிப்பனில் வந்து அமர்ந்திருக்கும்.



    இனி எப்படி படிவத்தை உபயோகபடுத்துவது என பார்க்கலாம் உதரணமாக உங்களிடம் இருக்கும் டேட்டாவானது Sl.No, Item, INV, Remarks என்பதான நிலைகளை கொண்டது என்பதாக நினைவில் கொள்ளுங்கள், முதலில் அதற்கான பெயரை கொடுத்து விடுங்கள் அடுத்ததாக நீங்கள் செய்யவேண்டியது நான் கட்டமிட்டு அடையாள எண் 9 என குறித்திருக்கிறேன் பாருங்கள் அந்த இடத்தில் ஏதாவது ஒரு செல்லில் கிளிக்கி நாம் முன்னமே குயிக் லாஞ்ச் ரிப்பனில் இனைத்த படிவத்தை கிளிக்கினால் ஒரு பாப் அப் திறக்கும் அதில் ஓக்கே கொடுத்து விடுங்கள்.



    நீங்கள் ஓக்கே கொடுத்ததும் படத்தில் உள்ளது போல ஒரு படிவம் வந்திருக்கும் இதன் வழியாக நீங்கள் கொடுக்க வேண்டிய டேட்டாக்களை பூர்த்தி செய்யலாம் இதன் வழியாக தேடுதல் வசதியும் இருக்கிறது.



    நான் உதாரணத்துக்கு மட்டுமே இந்த வகையில் பதிவு செய்துள்ளேன் நீங்கள் உங்கள் விருப்பதிற்கேற்றார் போல படிவத்தை தயார் செய்து கொள்ளலாம்

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் எனக்கு தெரியாததை நண்பர் சிகப்பு மனிதன் அவர்களிடம் கேட்டு சொல்கிறேன். பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இன்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Dec 5, 2010

    30

    அத்தை மகனே

  • Dec 5, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கடவுள் மனிதனை படைத்து அவனை சந்தோஷபடுத்த கொடுத்த அன்பளிப்பே காதல்.

    வணக்கம் நண்பர்களே இந்த காதலை பற்றி எவ்வளவோ எழுதலாம் காதல் ஒருவரின் வாழ்க்கையை மாற்றிவிடும் அது உயர்வாக இருக்காலம் சில நேரங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம் வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதல் வயப்பட்டிருப்போம் ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் இளைஞிகள் காதல் என்பதை ஏதோ ஒரு கட்டாமயாக உண்ண வேண்டிய மருந்தாய் உபயோகிக்க நினைக்கிறார்கள் அதன் விளைவுதான் புரிதல் இல்லாத காதல், அங்கங்கே நடக்கும் ஏமாற்றம். காதல் வெறும் உடல் சார்ந்த இச்சை இல்லை அப்படி இருந்தால் அது காதலாகவே இருக்கமுடியாது. காதல் உணர்வுகளில் இருந்து வருவது அதற்கு அழகு, பணம், நிறம் இப்படி எதுவும் தேவையில்லை இதற்கு உதாரணமாக நிறைய விஷயங்கள் இருக்கிறது ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே காதல் என்பதில்லை நாம் இயல்பாய் நேசிக்கும் ஐந்தறிவு ஜீவனுடன் இருக்கும் அன்பின் பெயரும் காதல் தான். காதல் இல்லாத உலகத்தை யோசித்து பாருங்கள் எப்படியிருக்கும்!.

    இதற்கு நான் வைத்த பெயர் கவிதை அப்படி நினைத்து தான் எழுதுகிறேன் ஒரு பெண் தன் காதலனை நினைத்து அவனுக்காக ஒரு கவிதையை எழுதுவதாய் படித்து பாருங்கள் அல்லது முதல் மற்றும் கடைசி வரியில் ஒரு வார்த்த்தையை மாற்றினாக் ஒரு ஆண் பெண்ணுக்கு எழுதுவது போல இருக்கும் ஒருவேளை அது உங்களுக்கும் பிடிக்கலாம்.

    அத்தை மகனே

    உன்னைப்பற்றிய
    தவறான செய்திகளிலும்
    நிஜமான தகவல்களிலும்
    பலமுறை சிதறிப்போயிருக்கிறேன்...



    நீ இருக்கும் இடம் என் வசந்தம்
    அது மட்டுமே என் சொந்தம்
    நீ வரும் திசை கிழக்கு
    நீ மறைந்து போகும் திசை மேற்கு...

    நீ வந்து போனால் தெருவெல்லாம் காதல் வாசம்
    அதனாலோ எனக்குள்ளும் காதல் வாசம்
    பூக்களின் வாசம் மறந்து போயிற்று
    உன் வாசம் எனக்குள் உறைந்து போயிற்று...

    உதட்டில் நீ இட்ட முத்தம்
    இன்னமும் தித்திக்கிறது
    உன் ஸ்பரிசம் நினைக்கையில்
    உடல் சில்லிட்டு கொள்கிறது...



    தென்றலாய் என்னை தீண்டு-என்
    வறண்ட நெஞ்சம் ஈரமாகட்டும்
    தொலை தூர மழைச்சாரலாய் இல்லாமல்
    என்னுள் மழையாய் வா...

    மேகமாய் மறைந்து போகாமல்
    சந்திரணாய் குளிரூட்டவா
    மின்னலாய் மறைந்து போகாமல்
    அழகான வானவில்லாய் வந்து போ...

    விழி ஈட்டியில் எனக்குள்
    உன் காதலை எழுது
    அமராவதியாய் நானிருக்க
    அம்பிகாவதியாய் எனக்குள் வா...



    ஆடிக்காத்து அசைக்கும் முன்
    புதுத் தையில் என் கரம் பிடி...


    சிநேகமுடன்
    XXXXXXXXXX

    என்ன நண்பர்களே படிக்கிற மாதிரியாவது இருந்துச்சா? இப்பொழுதெல்லாம் எழுதுவதற்கான ஆர்வம் குறைந்தே வருகிறது இருந்தாலும் எந்த வித நிர்பந்தபடுத்தலுக்கோ அல்லது நான் உங்கள் தளத்தில் இனைகிறேன் நீங்கள் என் தளத்தில் இனைந்துகொள்ளுங்கள் என்கிற சித்தாந்தத்தில் இல்லாமல் இதுவரை தானகவே இனைந்த நண்பர்களுகாகவும், மின்னஞ்சல் வழி படிக்கும் நண்பர்களுக்காகவும் மற்றும் நம் தளத்தை விரும்பி படிக்கும் நண்பர்களுக்காவும் அவசியம் விரைவில் நல்ல கணினி தகவல்கள் மட்டும் அதிலும் அவசியமுள்ளதை மட்டுமே எழுதுகிறேன் இது வரை அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் ஒன்றிரண்டு பதிவுகள் விதி விலக்காக இருக்கும். சரி இதை பற்றியாதான உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், பரவாயில்லை என நினைத்தால் இன்டிலியில் வாக்கு அளித்து செல்லுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Dec 1, 2010

    28

    யுஎஸ்பி-யில் கோப்பை மறைக்க பார்ட்டீசியன் உருவாக்கலாம்

  • Dec 1, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: எதிரிகள் இல்லாமல் செய்ய ஓரே வழி அவர்களையும் நண்பர்களக்குவது தான்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெண் டிரைவில் ஒரு பார்ட்டிசியன் உருவாக்கி நம் ரகசிய கோப்புகளை மறைத்து வைக்கலாம் இதனால் என்ன பயன் நீங்கள் உபயோகப்படுத்தும் பெண் டிரைவை நண்பர்கள் அல்லது அலுவல் வேலையாக யாரிடமாவது பகிர்ந்துகொள்ள நேரிடலாம் அந்த நேரத்தில் உங்கள் கோப்புகள் திறந்த வெளியில் இருக்குமானால் அதை யாரும் எளிதாக திறந்து பார்க்கலாம் அதே நேரத்தில் நாம் பெண் டிரைவை யாரிடமாவது கொடுக்கும் போது நாம் மறைத்துள்ள கோப்புகள் வெளியே தெரியக்கூடாது அதே நேரத்தில் மற்ற கோப்புகளை நாம் பகிர்ந்துகொள்ளவும் முடியும் அதற்காக நான் இரண்டு வித மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.

    முதலாவதாக SafeHouseExplorer இதை கணினியில் நிறுவி விடுங்கள் மிக எளிமையாக இருக்கிறது இதில் என்ன ஒரு விஷேசம் இருக்கிறதென்றால் நீங்கள் பார்ட்டிசியன் செய்து முடித்து கோப்புகளை மறைத்ததும் எப்போது நீங்கள் கணினியில் பெண் டிரைவை இனைக்கிறீர்களோ அப்போது இரண்டு பெண் டிரைவ் ஐகான் வந்திருக்கும் அதில் ஒன்று நாம் பார்ட்டிசியன் உருவாக்கியது இது எந்த கணினியில் இந்த மென்பொருளை நிறுவியிருக்கிறீர்களோ அந்த கணினியில் மட்டுமே இந்த பார்ட்டிசியன் தெரியும் அல்லாத கணினிகளில் இந்த பார்ட்டிசியன் வெளியே தெரியாது.



    இரண்டாவதாக Remora USB File Guard இது கொஞ்சம் வித்யாசம் இருக்கிறது இதைப் பொருத்தவரை இப்படியான ஒரு பார்ட்டிசியன் இருப்பதை வெளியே காண்பிக்கும் ஆனால் அதை அவர்கள் அனுகி திறக்க முடியாது பயன்படுத்தி பாருங்கள் எது உங்கள் தேவையை சரியாக தீர்க்கிறதோ அதையே பயன்படுத்துங்கள் ஆனால் இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் கோப்புகளை திறக்க முடியும் காரணம் இதற்கான நிறுவல் உங்கள் யுஎஸ்பியில் தான் நிறுவுகிறீர்கள் ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது நாம் நமது கோப்புகளை திறக்க ஒவ்வொரு முறையும் நாம் பயன்படுத்தும் கணினியில் எக்ஸ்ட்ராக்ட் செய்யவேண்டி வரும் அதை கவணமாக அழித்துவிடுங்கள் இல்லையென்றால் நீங்கள் பாதுக்காப்பாக வைக்க நினைத்த கோப்புகள் மற்றவர்கள் காணக்கூடும்.



    மேலும் தங்களின் உபயோகத்திற்காக இன்னும் இரண்டு வகையான மென்பொருளையும் உங்கள் கவணத்திற்கு தருகிறேன் ஆனால் இந்த இரண்டு மென்பொருளும் எதை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் எனபதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை இனி USB True crypt மற்றும் ImationLOCK இரண்டையும் சோதித்து பார்க்க விரும்பும் நபர்கள் முயற்சித்து பாருங்கள் அது பற்றியதான தகவலை நம் தளத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    நான் ஏற்கனவே நம் தளத்தில் இனைந்திருக்கும் நண்பர்கள் என்ன காரணத்தால் வெளியேறி விடுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை நான் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தேன் அதன் பின் தான் நான் நம் தளத்திற்காக புரியாத கிறுக்கல்கள் வழிகாட்டி என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நான் நினைத்தேன் இதைப்பற்றி தெரியாத நண்பர்கள் தான் வெளியேறுகிறார்கள் என்று ஆனால் மிக சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன் சில பதிவர்கள் தான் நம் தளத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் அவர்களின் சரியான நோக்கத்திற்கு நன்றி. இதை நான் இன்டிலியில் இருந்து தான் கண்டுபிடித்தேன் இன்டிலியில் என்னை ஒரு பதிவர் பின் தொடர்ந்தார் அவர் ஏற்கனவே நான் பதிவு எழுத தொடங்கிய காலத்திலேயே நம் தளத்தில் பாலோவராகவும் இனைந்திருந்தார் அவரை போன்ற பதிவர்கள் தான் காழ்ப்புணர்ச்சி அல்லது நம்மிடம் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்து கிடைக்காததால் வெளியேறியிருக்கிறார்கள் அவர்களை போன்ற நண்பர்களுக்கு மிக்க நன்றி நீங்கள் வெளியேறியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை இதை நான் இங்கு எழுத காரணம் நான் உங்களை புரிந்துகொண்டேன் என்பதை உணர்த்துவதற்காக தான்.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இன்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர