Jun 14, 2010

9

விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking

  • Jun 14, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை சிலருக்கு நாடகமாக இருக்கிறது, நாடகம் சிலருக்கு வாழ்க்கையாக இருக்கிறது.

    கணினியில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் புதிதாக ஒரு போல்டர் உருவாக்கும் போது அதன் பெயர் New Folder என்பதாக இருக்கும் நாம் இப்போது பார்க்கபோவது அந்த New Folder என்பதற்கு பதிலாக நாம் விரும்பும் படியான ஒரு பெயரில் போல்டர் உருவாகினால் நன்றாய் இருக்கும்தானே அதுதான் இந்த முயற்சி.

    முதலில் நீங்கள் தரவிறக்கி கொள்ளவும் இதன் உள்ளே ஒரு Resource Hacker மற்றும் Replacer இரண்டும் வைத்துள்ளேன் கணினியில் உள்ள dll கோப்புகளை திறக்க Resource Hacker அவசியம் என்ன நண்பர்களே தரவிறக்கம் செய்தாகிவிட்டதா? முதலில் Resource Hacker மென்பொருளை இயக்கி File என்பதில் கிளிக்கி Open என்பதை தெரிவு செய்து திறக்கும் பாப் அப் விண்டோவில் இதை C:\WINDOWS\system32\shell32.dll (C:\WINDOWS\system32\shell32.dll உங்கள் இயங்குதளம் D:\யில் நிறுவப்பட்டிருந்தால் D:\WINDOWS\system32\shell32.dll என்பதாக இருக்கும்) காப்பி எடுத்து File Name என்பதில் ஒட்டி Open என்பதை கிளிக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.



    இனி இடது பக்கம் பாருங்கள் String Table என இருக்கும் அதில் போல்டர் பெயர் 1896 அதை கிளிக்கி டேபிள் 1033 கிளிக்கி வலது பக்கம் பாருங்கள் முதல் இரண்டு வரிசையில் தான் நாம் மாற்றம் மேற்கொள்ள போகிறோம் நான் New Folder என்பதை Gsr என மாற்றியிருக்கிறேன் அடுத்ததாக New Shortcut என்பதை Gsr Shortcut என மாற்றியிருக்கிறேன் நீங்கள் உங்களுக்கு பிடித்த பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் இனி அடுத்ததாக Compile Script என்பதை தெரிவு செய்து ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி இதை File என்பதில் கிளிக்கி அதில் Save as என்பதை தெரிவு செய்து shell32.dll என்கிற பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் சேமித்து விடுங்கள்.



    சரி கணினியின் dll கோப்பில் மாற்றம் செய்தாகிவிட்டது இனி அடுத்து நீங்கள் முன்னமே தரவிறக்கிய கோப்பில் Replacer என்கிற பெயரில் ஒரு Command பைல் இருக்கிறதல்லவா அதை வழக்கம் போல இருமுறை கிளிக்கவும் இபோது கமாண்ட் விண்டோ திறந்திருக்கும் இனி சொல்வதை கொஞ்சம் கவணமாக செய்துவிடுங்கள் C:\WINDOWS\system32 (C:\WINDOWS\system32 உங்கள் இயங்குதளம் D:\யில் நிறுவப்பட்டிருந்தால் D:\WINDOWS\system32 என்பதாக இருக்கும்) சென்று அங்கு இருக்கும் shell32.dll என்கிற பைலை (Drag & Drop) இழுத்து நாம் திறந்து வைத்திருக்கும் கமாண்டில் இழுத்து விட்டு ஒரு எண்டர் கொடுக்கவும் அடுத்ததாக நாம் முன்னமே Save as மூலமாக ஒரு shell32.dll என்பதை டெஸ்க்டாப்பில் சேமித்திருந்தோம் அது நினைவிருக்கிறதா இப்போது அந்த shell32.dll பைலை (Drag & Drop) கமாண்டிற்குள் இழுத்து விடவும் இப்போது நீங்கள் இதை மாற்ற விரும்புகிறீர்களா என்பதாக ஒரு செய்தி வரும் அதில் ஆம் என்பதற்கு Y வேண்டாம் என்பதற்கு N என இருக்கும் நீங்கள் Y என கீபோர்டில் அழுத்தவும் இனி உங்கள் கமாண்டில் சிறிய பேக்கப் நடப்பதை காணலாம் எல்லாம் முடிந்ததும் உங்கள் கணினியை (Reboot) ரீஸ்டார்ட் செய்து விடுங்கள் அவ்வளவுதான்.



    மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு இதே செயல்முறையை பின்பற்றவும் என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கிறதா இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடைய உதவுங்கள் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயவுசெய்து கருத்துரையில் பதியவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    9 Comments
    Comments

    9 Responses to “விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking”

    MHM Nimzath said...
    June 14, 2010 at 5:14 PM

    GSR உங்களிடம் நான் இரண்டு கேள்விகளை கேட்டுள்ளேன்

    1.ஒரு சீடியை மற்றொருவர் Write பன்னாமல் ஆக்குவது எப்படி?

    2.சிவாஜி திரைப்படத்தில் வரும் Voice password

    இந்த இரண்டு கேள்விகளுக்கும் தயவு செய்து விடையளியுங்கள்.


    ஜிஎஸ்ஆர் said...
    June 14, 2010 at 7:23 PM

    @Nimzath

    1.ஒரு சீடியை மற்றொருவர் Write பன்னாமல் ஆக்குவது எப்படி?

    பதில் : குறுந்தகடில் எழுதும் போதே அந்த தகவலை என்கிரிப்ட் செய்துவிடலாம் இது நேரோவில் இருக்கிறது என நினைக்கிறேன் இல்லையென்றாலும் இதற்கென மென்பொருள் இருக்கிறது

    2.சிவாஜி திரைப்படத்தில் வரும் Voice password

    பதில்: நீங்கள் மடிக்கணினியை உபயோகிக்கிறீர்களா இல்லை மேஜைகணினி உபயோகிக்கிறீர்களா இப்போது வரும் மடிக்கணினிகளில் இது இனைந்தே வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன் நான் இது வரை கண்டதில்லை எனவே அதிகம் விளக்கம் தரமுடியவில்லை நீங்கள் மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில் இதுவரை இனைக்கபடவில்லை என்றே நினைக்கிறேன் இது குறித்தும் போதுமான தகவல் இல்லை ஒரு வேளை போதுமான தகவல் கிடைக்குமானால் நிச்சியம் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்

    மேலும் இந்த இரண்டு தளங்களை பார்க்கவும் ஒரு வேளை உங்களுக்கு உதவலாம்

    http://www.all-freeware.com/details/43781/voicemate-professional.html

    http://www.tucows.com/preview/241715


    மு.ம.ராஜன் said...
    July 4, 2010 at 11:20 AM

    thanks
    nanri
    nalla pathivu

    ennai ponrorukku migavum pidiththamana pathivugal..


    ஜிஎஸ்ஆர் said...
    July 5, 2010 at 8:54 AM

    @தமிழன்நன்றி நண்பரே


    Mohamed Faaique said...
    July 13, 2010 at 12:16 PM

    portable software உருவாகுவது எப்படி? can u pls make & snd nhm writter as a portable . i cnt install anythng in my office "faaique@yahoo .co .uk "


    ஜிஎஸ்ஆர் said...
    July 14, 2010 at 5:05 PM

    @Faaique Najeeb

    ஒன்றும் பிரச்சினையில்லை விரைவிலேயே தங்களுக்கு போர்ட்டபிள் மென்பொருள் உருவாக்குவது பற்றி விரிவான பதிவு எழுத இருக்கிறேன்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 1:15 PM

    .மாற்றி விட்டேன், என் கணினியில் !

    .பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:02 AM

    @சிகப்பு மனிதன்சந்தோஷம்


    Unknown said...
    September 1, 2013 at 1:51 PM

    sir
    எனக்கு ஹாக்கிங் செய்வது பற்றி தெரிய வேண்டும்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர