Jun 19, 2010

5

நானும் எதிர் வீட்டுக்காரியும்

 • Jun 19, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். வாழ்க்கையே ஒரு பாடம் தான் அதில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு சில சேட்டைகள் இருக்கத்தான் செய்யும்.

  நேற்றய இரவு வேலை முடிந்து உறங்கு நேரம் இரவு 12.30 தொட்டுவிட்டிருந்தது காலையில் எழுந்து வழக்கம் போல செல்ல மகனை கொஞ்சி கிடந்த போது தான் மனைவியின் குரல் என்னங்க நேரம் என்னாச்சுனு பார்த்திங்களா என கேட்ட போது தான் நேரம் எட்டு மணி ஆகியிருந்தது அப்படியே ரோட்டு பக்கம் இருக்கும் ஜன்னலை திறந்து எதேச்சையாய் எதிர்வீட்டை கவனித்த போதுதான் வீடு திறந்திருந்ததையும் புதிதாய் ஒரு குரல் கேட்பதையும் கவனித்தான் அப்பொழுதே ஆர்வம் பற்றிக்கொண்டது எப்படியும் அந்த புதிய குரலின் சொந்தக்காரியை காண வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாய் பற்றிக்கொண்டது இருந்தாலும் காலையில் வேலைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அது குறித்து அதிகம் சிந்திக்க முடியாமல் வேலைக்கு செல்வதில் கவணத்தை திருப்பி இடையில் மனைவியிடம் சிறிதாக விசாரித்து வைத்தான்.

  காலை உணவை முடித்துகொண்டு இரு சக்கர வாகனத்தின் சாவியை தேடும் போது தான் நேற்று இரவு வண்டி பஞ்சர் ஆனது நினைவில் வந்தது ஒரு வழியாய் ஒரு ஆட்டோவை அழைத்து வரச்சொன்ன போதுதான் ஏங்க அப்படியே நம்ம மகனையும் ஸ்கூலில் விட்டுறிங்களா? எனக்கு வீட்டு வேலை அதிகமாக இருக்கு என்றால் மனைவி சரி மகனையும் அழைத்து கொண்டு அவனை அவனுடைய ஸ்கூலில் விட்டு அப்படியே மகனிடம் ஒரு அன்பு முத்தத்தையும் பெற்றுக்கொண்டு அலுவலகம் சென்றபோது மணி 9.30 ஆகியிருந்தது வழக்கம் போல அலுவல் வேலைகளில் மூழ்கிப்பவன் இடையில் தன் மைத்துணனை அலைபேசியில் அழைத்து வண்டி பஞ்சர் விபரத்தை சொல்லி பார்த்துவைக்க சொனான் பின்னர் மீண்டும் அலுவலக பணிக்குள் மூழ்கிப்போனவனை அலுவலக நண்பர் வந்து அழைத்த போதுதான் மதியம் சாப்பாட்டுக்கான நேரம் ஆகிவிட்டதை அறிந்தான் மீண்டும் ஒரு ஆட்டோவை அழைத்து அப்படியே மகனின் ஸ்கூலுக்கு சென்று அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான் வீட்டில் சாதமும் சாம்பாரும் கேரட் பொறியலும் இருந்தது சாப்பிட்டு விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு கிளம்பும் போதுதான் மனைவி ஒரு இனிப்பு பலகாரத்தை கொண்டுவந்து கொடுத்து எதிர் வீட்டுக்காரர்களின் விஷயத்தை சொன்னால் மறந்து போனதை மீண்டும் ஞாபகத்திற்கு வந்ததும் எப்படியும் இன்று சீக்கிரமே வந்து அவளை பார்க்கவேண்டும் என்கிற ஆவலுடன் அலுவலகம் சென்றான்.

  ஏதேதோ அலுவல் வேலை காரணமாக எல்லாம் மறந்து விட்டிருந்தான் மீண்டும் எதேச்சையாய் அன்று ஞாயிற்று கிழமை மனைவிக்கு உதவியாய் துணி காயப்போட மொட்டை மாடி சென்றபோதுதான் அவளையும் அவளின் அம்மாவையும் கண்டான் அவளோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள் அவள், அவளின் மெல்லிய கால்கள் அதில் ஒரு சின்ன கொழுசு கைகளில் வளையல், புருவத்தில் மை இட்டதன் அடையாளம் தெரிந்தது மேலும் மெலிதான ஆடை இட்டிருந்தாள் இடையிடையே அவள் அம்மாவிடம் ஏதோ கையை ஆட்டி பேசுவது போல் தெரிந்தாலும் என்ன சொல்லுகிறாள் என்பது தெரியவில்லை நான் அவளையே கவணித்ததை என் மனைவியும் கவணிக்க தவறவில்லை, இடையிடையே அவள் என்னை நோக்கி பார்ப்பதும் சிறிதாக கையை அசைப்பது போல எனக்கு தோன்றினாலும் எனக்கு ஒன்றும் புரியவில்லை இந்த நேரத்தில் என் மனைவியும் அவளின் அம்மாவும் நட்போடு சிரித்து கொண்டார்கள் அதை நான் கவணிக்க தவறவில்லை அப்போதே நினைத்துகொண்டேன் இன்று சாயங்காலம் ஏதாவது இனிப்பு பலகாரம் மற்றும் பரிசுப்பொருள்கள் வாங்கிகொண்டு அவளின் வீட்டிற்கு சென்று அவளை அருகில் இருந்து பார்த்துவிட வேண்டியதுதான் அப்படியே மனைவியின் காதிலும் போட்டு வைத்தேன் எதிர் வீட்டுகாரர்கள் தான் என்றாலும் நான் அதிகம் அவர்களிடம் பேசியதில்லை அதற்காக நான் அகங்காரம் பிடித்தவன் இல்லை போதிய நேரமின்மையே காரணம்.

  சாயங்காலம் 6.30 மணி அளவில் கொஞ்சம் பழம் வகைகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் பரிசுப்பொருள்களை வாங்கி கொண்டு நானும் என் மனைவியும் என் மகனுமாக அவள் வீட்டிற்கு சென்றோம் அவளின் அப்பாதான் முதலில் எங்களை பார்த்து வரவேற்றார் கொஞ்சம் நல விசாரிப்புகள் முடிந்ததும் ஒரு மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் நேரமின்மையால் தான் முன்னமே வந்து பார்க்க முடியவில்லை என்பதாக அவரும் அதை பெருந்தன்மையாக இதற்கெல்லாமா மன்னிப்பு என கேட்டு விட்டு அவர் மனைவியை அழைத்து உணவு தயார் செய்ய சொன்னார் நான் மெதுவாக அவரின் மகளை பற்றி விசாரித்தேன் உறங்குவதாக சொன்னார் நானும் ஆவலில் அவளை பார்க்கவேண்டும் என்றேன் சரி என படுக்கை அறைக்கு அழைத்து சென்றார் அவள் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் நான் மெதுவாக அவளை தொட்டதும் தூக்கம் கலைந்தவள் நெடுநாட்கள் என்னை அறிந்தவள் போல என் கையை பிடித்துக்கொண்டு சிரித்தாள் அவள் சிரிப்பை கண்ட எனக்கு கடவுளை கண்ட பக்தன் போல என மனசெல்லாம் ஒரே சந்தோஷம் இருக்காத பின்னே ஆறு மாத பச்சிளங்குழந்தை என் கையை பிடித்துகொண்டு என்னை பார்த்து சிரிக்கும் போது மனசு எங்கேயோ பறப்பது போல தானே இருக்கும் அதனால் தானே குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள் அது உண்மைதானே! குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்திருக்கிறீர்களா அவர்களின் கள்ளமில்லா சிரிப்புக்கு முன்னால் நாம் சம்பாதிக்கும் இலட்சங்களுக்கு விலை இருக்கிறதா என்ன? குழந்தைகளை நேசியுங்கள் அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள் அவர்களின் திறமைகளை கொண்டாடுங்கள்.

  என்ன நண்பர்களே இதில் நீங்கள் வேறு ஏதாவது எதிர்பார்த்து வந்திருந்தால் அதற்கு நான் பொருப்பல்ல எத்தனை நாட்களுக்கு தான் கணினி பற்றிய பதிவேயே எழுதிக்கொண்டிருப்பது அதுவும் வரவேற்பு இல்லாமால் எனவே தான் இது புது முயற்சி.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  5 Comments
  Comments

  5 Responses to “நானும் எதிர் வீட்டுக்காரியும்”

  சிகப்பு மனிதன் said...
  November 27, 2010 at 12:55 PM

  .நீங்களும், என்னை போலவே இருக்குறீர்கள் !!  .தங்கள் மகன், என்ன படிக்கிறார் ?


  ஜிஎஸ்ஆர் said...
  November 29, 2010 at 11:05 AM

  @சிகப்பு மனிதன்இப்பொழுது தான் முதல் பிறந்த தினம் கொண்டாடி இருக்கிறார் இது முழுவதும் கறபனையே


  சிகப்பு மனிதன் said...
  December 3, 2010 at 2:48 AM

  .கற்பனையிலே புகுந்து விளையாடுகிறீர்கள் !


  ஜிஎஸ்ஆர் said...
  December 5, 2010 at 8:59 AM

  @சிகப்பு மனிதன் காசா? சும்மா முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே!


  சிகப்பு மனிதன் said...
  December 7, 2010 at 6:57 AM

  .தாங்கள், கூறுவதும், சரி தான், நண்பரே !


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர