Dec 30, 2012

20

தங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்! சுங்க வரியும்!

  • Dec 30, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஒரு மரத்திலுள்ள பழங்களை எண்ணி விடலம் . ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை எண்ண முடியாது.

    வணக்கம் நண்பர்களே பல மாதங்களாக எழுத முடியாத நிலை இப்பொழுதும் கூட அதே நிலை தான் ஆனால் சமீபத்தில் பேஸ்புக் தளத்தில் தங்கத்தை பற்றிய ஒரு கட்டுரையை காண நேர்ந்தது அதன் உந்துதல் தான் இந்த பதிவு. இந்த பதிவையே உங்களை வாழ்த்துவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு உங்களை வாழ்த்த விரும்புகிறேன் . அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் -2013, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

    நம் எல்லோருக்கும் தெரியும், நாம் வாங்கும் ஆபரணங்கள் பெரும்பாலும் 22 கேரட் வகையை சேர்ந்தது அதைத்தான் 916 என்பார்கள், இன்னும் சில இடங்களில் KDM அதாவது (Cadmium) இதில் இந்த KDM நகைகள் தற்போது அதிகளவில் மார்கெட் செய்யப்படுவதில்லை பல நாடுகளில் தங்கத்தில் KDM பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு விட்டது.

    KDM என்றால் என்ன? எதனால் இது தங்கத்தொழிலில் தடை செய்யப்பட்டது இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு இப்ப வந்திருக்கும் தானே? KDM (Cadmium) ஒரு கெமிக்கல் கலவை அதாவது சாதரணமாக தங்கத்தோடு வெள்ளி, மற்றும் செம்பு மட்டுமே கலந்து ஆபரணங்கள் செய்வார்கள், ஆனால் KDM நகையை பொருத்த வரை தங்கத்தோடு கலப்பதற்கு Cadmium எனும் ரசயானக்கலவையை பயனபடுத்துவார்கள், இதனால் தங்கத்தின் நிறம் பளிச்சென இருக்கும் ஆனால் இதை தொழில் முறையாக செய்பவருக்கு நிச்சியம் உடல் நிலை பாதிக்க படும் மற்றபடி இதை அணிபவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    பொதுவாக தங்கம் 8 Ct , 9 Ct, 10 Ct, 12 Ct, 14 Ct, 15 Ct, 16 Ct, 18 Ct, 19 Ct ,20 Ct, 21 Ct, 21.6 Ct, 22 Ct ,23 Ct, 24 Ct இந்த நிலைகளில் மட்டுமே காணப்படுகிறது 8 Ct க்கு கீழே இருப்பவற்றை தங்கம் என்பதாக கணக்கில் எடுப்பதை விட ஏதோ ஒரு உலோகம் என்று வேண்டுமானல் வைத்துக்கொள்ளலாம். நமது நாட்டை பொருத்தவரை 18 Ct முதல் 24 Ct Purity தங்கம் மட்டுமே பெரும்பாண்மையாக பயன்படுத்த படுகிறது அதே நேரத்த்தில் 8 Ct முதல் 16 Ct வரையிலான Purity தங்கம் மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பயன்படுத்த படுகிறது.

    தங்கத்தை பொருத்தவரை 24 Ct என்பது சுத்த தங்கம் அதாவது இதன் Purity என்பது 999.99% என்பதாகும் அதாவது 24 Ct தங்கத்தில் 0.01% வெள்ளியும், செம்பும் கலக்கபட்டிருக்கும், ஆனால் உலக அளவில் 99.9% Purity என்பது 24 Ct சுத்த தங்கமாக ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது, ஆனால் மிகவும் மென்மையாக இருப்பதால், 24 Ct தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது இந்த 24 Ct தங்கத்தை தொழில்முறை ரீதியாக 24 பார்ட் என்கிறார்கள் அதாவது 24 பார்ட் என்பது 999.99% Purity தஙகமாகும் இதில் வெறும் 0.01% அளவு மட்டுமே வேறு உலோகம் சேர்க்கபட்டிருக்கிறது, 22 Ct என்பது 22 பார்ட் அதாவது 91.66 Purity தங்கமாகும். அதாவது சுருக்கமாக சொலவதானால் ஒரு பார்ட் என்பது 4.1666 % Purity ஆக கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் வெளி நாட்டு நகைகளில் உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகள் (வளைகுடா நாடுகள்) மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் 22 Ct தங்கம் 91.7 % Purity ஆக காணப்படும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது. ஆனால் நம் ஊரை பொருத்த வரை 91.66 % Purity என்பது அப்படியே இருந்தால் சந்தோஷம் தான்.

    தங்கத்தின் Purity-யை எப்படி தெரிந்துகொள்வது?

    24 Ct X 4.1666 = 99.99 % Purity
    23 Ct X 4.1666 = 95.83 % Purity
    22 Ct X 4.1666 = 91.66 % Purity
    20 Ct X 4.1666 = 83.33 % Purity
    18 Ct X 4.1666 = 74.99 % Purity

    இதை முறையை வேறு விதமாகவும் கையளாலம்.

    24 Ct / 24 Ct = 100 % Purity
    23 Ct / 24 Ct = 95.83 % Purity
    22 Ct / 24 Ct = 91.66 % Purity
    20 Ct / 24 Ct = 83.33 % Purity
    18 Ct / 24 Ct = 0.75 % Purity

    மேலே சொன்னது உங்களுக்கு புரித்திருக்கும் தானே? இப்படியே 8 Ct முதல் 22 Ct வரையிலான தங்கத்தின் Purity-யை தெரிந்துகொள்ளலாம். வழக்கமான கணித முறைகள் போலவே புள்ளிகளுக்கு அடுத்த வரும் இலக்கங்களை முழுமையான எண்ணாக மாற்றிக்கொள்ளலாம், உதாரணத்திற்கு 18 X 4.1666 = 74.99 % Purity என்பதை 75 % Purity என்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

    சரி நீங்கள் 22 Ct தங்கத்தில் 1 Gram அளவில் தங்க நகையை வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் இந்த 22 Ct தங்கம் முழுவதும் தங்கம் தானா? இந்த 1 Gram தங்கத்தில் உண்மையில் எத்தனை கிராம் சுத்தமான தங்கமும், எத்தனை மில்லி கிராம் செம்பும், வெள்ளியும் கலக்கபட்டிருக்கிறது என்பதை எந்த நகை கடையும் சொல்வதில்லை, ஆனால் அவர்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும் 916 KDM அல்லது 22 Ct என்று மட்டும் தான் சொல்வார்கள் எத்தனை பேருக்கு தெரியும் இது தான் தங்கத்தின் Purity என்பது, பெரும்பாலோனோர் இதை ஒரு தரப்படுத்தும் குறியீடாக தான் புரிந்து வைத்திருக்கிறார்கள் (ISO முத்திரை போல) என்பது நான் கண்ட உண்மை.

    உங்க கிட்ட 1 Gram (22 Ct) இருந்தால், அதை 24 Ct Purity தங்கமா மாத்தும் போது எத்தனை கிராம் 24 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.

    Formula 1: 1 Gram x 22 Ct / 24 Ct = 0.917 Milli Gram
    Formula 2: 1 Gram / 1.09 = 0.917 Milli Gram

    இதில் இரண்டாவது பார்முலா என்பதில் 1.09 என்பது எப்படி வந்தது என கேள்வி எழுமேயானால் அதற்கான பதில் இது தான் 24 Ct / 22 Ct = 1.09, இதில் சிறிய அளவிலான மைக்ரோ மில்லி கிராம் அளவில் சிறிய மாறுதல்கள் இருக்கும்.

    இதே போல உங்க கிட்ட 1 Gram (24 Ct) இருந்தா அதை நீங்க 22 Ct நகையா மாத்தும் போது எத்தனை கிராம் 22 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.

    Formula 1: 1 Gram X 24 Ct / 22Ct = 1.09 Gram (22 Ct)
    Formula 2: 1 Gram / 0.9166 = 1.09 Gram (22 Ct)

    தங்கத்தில் உலோகம் கலக்கும் அளவு.

    • 24 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 0.01% அளவில் கலந்து இருக்கும்.
    • 22 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 8.3 % அளவில் கலந்து இருக்கும்.
    • 18 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல் சேர்ந்து 25% அளவில் கலந்து இருக்கும்.
    • 14 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல், துத்தநாகம் மற்றும் பல்லேடியம் போன்றவை சேர்த்து 41.5 % அளவில் கலந்து இருக்கும்..

    நம்மில் பலரும் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்க சென்றால் ஆயிரம் கேள்வி கேட்டு, கத்தரிக்காயை அமுக்கி பார்த்து, வெண்டைக்காயை உடைச்சு பார்த்து வாங்குற நாம நகைக்கடைக்கு போன அந்த தங்கம் சுத்தமானது தானா? அதன் Purity சரிதானா? என எதையும் யோசிக்க மாட்டோம், கடைக்காரன் கொடுக்கிற ஒரு கூல்ட்டிரிங்க்ஸோ அல்லது டீயையோ குடிச்சிட்டு அவன் சொல்ற விலைக்கு வாங்கிட்டு வந்துகிட்டே இருப்போம், இப்படி நாம நம்புற ஒரு நகை கடைக்காரன் நம்ம கிட்ட எப்படி கொள்ளையடிக்கிறான் தெரியுமா, நம்மள ஏமாத்துறதுக்காகவே செய்கூலி, சேதாரம் வச்சுருக்காங்க.

    சேதாரம்னா என்ன ஒரு பொருளை இனி உபயோகிக்கவே முடியாத என்கிற அளவில் இருப்பதை தான் சேதாரமாகி விட்டது என்று எடுத்துக்கொள்லலாம். 1 கிராம் நகை எடுக்கிறதுக்கு 30 % செய்கூலி சேதாரம் கொடுக்க வேண்டியிருக்கு அதாவது பொருளோட மதிப்புக்கு 3/1 பாகத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்கு 1000 ரூபாய்க்கு நகை வாங்கின 300 ரூபாய் செய்கூலி சேதாரமா கொடுக்க வேண்டியிருக்கு.

    ஒரு பொருளை செய்வதற்கு செய்கூலி என்பது நியாயமானது வெறும் தங்க துகள்களாக, தங்க கட்டிகளாக இருப்பதை நமக்கு பிடித்த விதத்தில் டிசைன்கள் செய்து தருவதற்கு நாம் நிச்சியம் செய்கூலி கொடுத்து தான் ஆகவேண்டும். ஆனால் இதில் சேதாரம் என்பது தான் பகல் கொள்ளையாக இருக்கிறது தங்கத்தை பொருத்தவரை கழிவு என்பதே இல்லை, அப்படியே பயன்படுத்த முடியாத தங்கமாக இருந்தால் அதை நம்மிடம் தந்துவிட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொள்வது தானே முறை, ஆனால் பொருளை நமக்கு தராமலே அவர்களே வைத்துக்கொண்டு நம்மிடம் சேதாரம் என்பதாக பணம் பறிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

    உங்களுக்கு தெரியுமா தங்க பட்டறைகளில் கூட்டி பெருக்கி குப்பயை கூட வெளியே அள்ளி போட்டு விடமாட்டார்கள் அத்தனையும் சேர்த்து வைத்து சலித்து விடுவார்கள், சலித்து முடித்தவுடன் குப்பையை வெளியே அள்ளி போட்டு விடுவார்கள் என நினைத்தால் அது தான் இல்லை அதையும் அவர்கள் இதற்கென்றே இருக்கும் சிறிய தொழிலாளிகளிடம் விற்று விடுவார்கள். இந்த குப்பை மண்ணை வாங்கியவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இதில் இருந்து ஏதாவது கிடைக்க கூடும், அப்படி கிடைக்குமென்று தான் நினைக்கிறேன் இல்லையென்றால் இந்த கழிவை வாங்க மாட்டார்கள் தானே? ஆக எப்படி பார்த்தாலும் நகை பட்டறைகளில் இருந்து சில பல மில்லி கிராம் தங்க துகள்கள் வெளியில் செல்லுமே தவிர கிராம் கணக்கில் போவதற்கான வாய்ப்பு மிக குறைவு, ஆனால் நாம் நகை வாங்கும் போது 30% செய்கூலி சேதாரம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் உண்மையில் நெடு நாட்களாக நகை கடைகளில் வாடிக்கையாளனை நூதனமாக ஏமாற்றி கொள்ளை அடிக்கபடுகிறது, எல்லாவற்றுக்கும் சட்டம் போடும் அரசு கூட இந்த பகல் கொள்ளை விஷயத்தில் அக்கரை எடுத்ததாய் தெரியவில்லை ஒருவேளை அரசு அதை மறைமுகமாக மனப்பூர்வமாக நகைக்கடை வியாபாரிகளை அனுமதிக்கிறது என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

    இந்தியாவில், தமிழகத்தில் பெரிய சில கடைகளில் மட்டுமே தங்கத்தின் Purity தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது மற்ற பெரும்பாலன கடைகளில் Purity பற்றி தெரிந்துகொள்ள வசதியில்லை, ஆனால் வெளி இடங்களில் Purity சோதனை செய்வதற்காகவே சில கடைகள் இயங்குகின்றன, ஆனால் நகை ஒரு இடத்தில் வாங்கி அதன் பின்னர் வேறொரு கடைக்கு சென்று சோதனை செய்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியம்.. நம்பிக்கையோடு நகையை வாங்கும் நம்மை போன்ற மக்களை மறைமுகமாய் இப்படி பகல் கொள்ளை அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

    வெளி நாட்டில் இருப்பவர்கள் ஆபரண தங்கம் வாங்க நினைத்தால் அங்கேயே 22Ct நகைகளாக வாங்குவது நல்லது, தங்கத்திற்கான Purity உத்ராவாதம் கிடைக்கும், செய்கூலியும் குறைவாய் இருக்குமென்று கேள்விபட்டிருக்கிறேன், அதே நேரத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாய் தங்க பிஸ்கட் வாங்கி வந்து ஊரில் செய்து கொள்ளலாம் என நினைத்தால் Purity-க்கு எந்த இந்தியாவில் எந்த உத்ரவாதமும் இல்லை வெளிநாட்டு நண்பர்கள் வாயிலாக அறிந்த வரை இந்தியாவில் தான் செய்கூலி சேதாரம் என்பது மிகவும் அதிகம். அதே நேரத்தில் வணிக நோக்கோடு தங்கம் வாங்க நினைத்தால் தங்க பிஸ்கெட்கள் வாங்கி வருதல் நலம், இந்தியாவில் நல்ல விலையும் கிடைக்கும். ஆனால் மத்திய அரசின் புதிய விதிப்படி ஆண் நபர் ஒருவர் இந்திய ரூபாய் 10,000 மதிப்பிலான தங்கம் மட்டுமே கொண்டு வரமுடியும், பெண் நபர் ஒருவர் 20,000 ரூபாய் மதிப்பிலான நகை மட்டுமே கொண்டு வரமுடியும் அதற்கு மேல் இருந்தால் கஸ்டம்ஸில் பணம் கட்ட வேண்டியதிருக்கும் ஒவ்வொரு பத்து கிராம் நகைக்கும் 450 ரூபாய் வீதம் + 3% வரி உட்பட கட்ட வேண்டியிருக்கும், பணம் கட்டி நகையை கொண்டு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் உங்கள் ஆபரணங்களை ஏர்போர்ட்டிலேயே வைத்து அதற்கான அடையாள சீட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் திரும்பி செல்லும் போது உங்கள் நகையை பெற்றுக்கொள்ள முடியும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Feb 28, 2012

    16

    MP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.

  • Feb 28, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கோபம் வாயை திறக்க வைக்கும் ஆனால் கண்களை மூடி விடும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக MP3 பாடலில் ஒரு போட்டோவை எப்படி இனைப்பது என்பது பற்றி பார்க்கலாம். உங்களில் சிலராவது சில MP3 பாடல்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கும் போது விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் அந்த பாடலின் படத்துடைய போட்டோவோ அல்லது பாடிய நபரின் போட்டோவோ பார்த்திருக்க கூடும் இல்லையா? இதைப்பற்றி சிலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு எப்படி என்ற கேள்வி இருக்குமேயானால் அதற்கான விடையைத்தான் இப்போது பார்க்க போகிறோம். இதற்கான வழிமுறைகள் மூன்று விதங்களில் இருக்கிறது நாம் முதல் இரண்டு வழிகளை பார்க்கலாம்.

    சரி ஏதாவது ஒரு MP3 பாடலை உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் திறந்து கீழிருக்கும் படத்தில் இருப்பது போல Media Library கிளிக் செய்து நீங்கள் போட்டோ இனைக்க விரும்பும் டிராக்கை தெரிவு செய்து இடது கிளிக் செய்வதன் மூலமாக திறக்கும் மெனுவில் Advanced Tag Editor செலக்ட் செய்யவும்.



    இப்பொழுது கீழிருப்பது போல ஒரு பாப் அப் விண்டோ திற்க்கும் அதில் Picture டேப் திறந்து நீங்கள் விரும்பும் போட்டோவை பிரவுஸ் செய்து அப்ளை கொடுத்து ஓக்கே கொடுக்கவும்.



    இது நான் உங்களுக்காக இனைத்திருக்கும் படம் வலது பக்கம் பாருங்கள் ஒரு போட்டோ இனைத்திருக்கிறேன்.



    இரண்டாவதாக MP3
    மென்பொருள் இருக்கிறது தேவைப்படுபவர்கள் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து அப்ளிகேஷனை ரன் செய்யவும் இதில் நீங்கள் போட்டோ இனைக்க விரும்பும் MP3 பாடல்களை ஏதாவது ஒரு போல்டரில் வைத்து கீழிருக்கும் படத்தில் குறிப்பிட்டு இருப்பது போல செய்து விடவும் அவ்வளவு தான் இனி உங்கள் MP3 பாடலை விண்டோஸ் மீடியா பிளேயரிலோ அல்லது www.videolan.org
    இயக்கினால் கூடவே நீங்கள் இனைத்த போடோவையும் காணமுடியும்.



    VLC பிளேயரில் நான் ஒரு MP3 பாடலை ஓட விட்ட போது நான் இனைத்திருக்கும் போட்டோவும் கூடவே தெரிகிறது.



    நண்பர்கள் கவணத்திற்கு சில நேரங்களில் உங்கள் VLC Player ஒருவேளை போட்டோவை காண்பிக்காமல் இருக்கலாம் அதற்கான தீர்வு http://forum.videolan.org
    அல்லது http://forums.mp3tag.de
    இருக்கிறது முயற்சித்து பாருங்கள் வேறேதுனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் கேளுங்கள் எனக்கும் தெரிந்தால் நிச்சியம் பதில் அளிக்கிறேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Feb 5, 2012

    8

    எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு.

  • Feb 5, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: தன்னை புகழந்து கொள்வதும். பிறரை இகழ்வதும் பொய்க்கு இனையானது.

    வணக்கம் நண்பர்களே எக்‌ஷெல் பற்றி நம்மில் அநேகருக்கு தெரியும் கிட்டதட்ட இதுவும் ஒரு கடல் போலத்தான் எக்‌ஷெல்லில் எத்தனையோ விதமான காரியங்களை செய்யமுடியும் அந்தளவுக்கு அதன் திறன் இருக்கும், சொல்லப்போனால் எக்‌ஷெல்லுக்கென்றே ஒரு தளம் ஆரம்பித்து எழுதலாம் ஆனாலும் நான் இந்த பதிவின் வாயிலாக ஒரு எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களை மட்டும் எப்படி எடிட் செய்யவிடாமல் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    நான் உபயோகிப்பது மைக்ரோசாப்ட்டின் ஆபிஸ் தொகுப்பு2010 (Microsoft Office 2010) ஆனால் இதே வழிமுறைதான் மற்ற தொகுப்புகளிலும் இருக்கும் சரி இப்போது புதிதாய் ஒரு எக்‌ஷெல் திறந்து கொள்ளுங்கள் (Start ->Run->type excel then enter) இனி பட்த்தில் காண்பித்திருப்பது போல மேலே இடது பக்கம் மூலையில் சிறிய கட்டம் போல இருக்கும் இடத்தில் இடது கிளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+A என்பதை அழுத்துவது மூலமாகவோ Format Cells என்பதை தெரிவு செய்யவும்.



    இப்போது தங்களுக்கு படத்தில் இருப்பது போல ஒரு பாப் அப் விண்டோ திறந்திருக்கும் அதில் Protection என்கிற டேப் திறந்து அதில் இருக்கும் Locked என்பதன் அருகில் இருக்கும் டிக் குறியை (Tick Mark) எடுத்துவிட்டு ஓக்கே கொடுக்கவும்.



    இனி எக்‌ஷெல் பைலில் தாங்கள் எந்த பகுதியை அல்லது எந்த செல்களை பூட்ட விரும்புகிறீர்களோ அந்த பகுதியை செலக்ட் செய்யவும் உதாரணமாக இரு வேறு பகுதிகளில் இரண்டு விதமான செல்களை பூட்ட நினைத்தால் முதலில் ஒரு பகுதியை செலக்ட் செய்த பின்னர் அடுத்த பகுதிக்கு செல்ல Ctrl கீயை அழுத்திக்கொண்டு அடுத்த பகுதியையும் செலக்ட் செய்யமுடியும். இப்படி செலக்ட் செய்த பின்னர் செலக்ட் செய்த பகுதியில் மவுஸ் பாயிண்டர் கொண்டு வந்து அந்த இடத்தில் மவுஸால் இடது கிளிக் செய்வதன் மூலம் மீண்டும் Format Cells தெரிவு செய்வதன் மூலம் திறக்கும் பாப் அப் விண்டோவில் Protection என்கிற டேப் திறந்து அதில் இருக்கும் Locked என்பதன் அருகில் ஒரு டிக் மார்க்(Tick Mark) குறியை ஏற்படுத்த்தி ஓக்கே கொடுக்கவும்.



    இனி நாம் இதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து சேமித்து விட்டால் மற்றவர்கள் இந்த பைலில் நீங்கள் பூட்டியிருக்கும் செல்லில் எந்தவிதமான மாற்றஙக்ளையும் செய்யமுடியாது ஆனால் உங்கள் பைலை திறக்க முடியும். இறுதிகட்டமாக நீங்கள் செய்யவேண்டியது உங்கள் எக்‌ஷெல் டூல் வரிசையில் Review என்பதாக இருக்கும் டூல் கிளிக்குவதன் மூலம் அதிலிருக்கும் Protect Sheet என்பதை கிளிக்கி திறக்கும் பாப் அப் விண்டோவில் Select Unlocked Cells என்பதன் அருகில் ஒரு டிக் மார்க் (Tick Mark) கொடுத்து மேலே பாஸ்வேர்டுக்கான இடத்தில் பாஸ்வேர்ட் கொடுத்து ஓக்கே கொடுத்தால் மீண்டும் பாஸ்வேர்ட் கன்பர்மேசன் கேட்கும் அதையும் கொடுத்தால் அவ்வளவுதான்.



    என்ன நண்பர்களே இப்போது நீங்கள் உங்கள் எக்‌ஷெல் பைலை சோதித்து பாருங்கள் நீங்கள் பூட்டியிருக்கும் செல்களில் எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது. சரி மொத்தமாவே பைலை யாரும் திறக்க முடியாத படி செய்யனுமா? வேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு பாருங்க உங்களுக்கு உதவியாய் இருக்கும். பதிவு உபயோகமா இருக்கா? நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Jan 30, 2012

    15

    வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும்.

  • Jan 30, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஆபத்திற்கு உதவுவது எப்பொழும் சொந்தமல்ல நட்பு மட்டுமே.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களுக்காக, உங்களில் சிலர் சில வலைத்தளங்களில் ஏதாவது ஒரு தகவலை காப்பி எடுத்து வேர்ட் பைலிலோ அல்லது இன்ன பிறவற்றில் பேஸ்ட் செய்யும் போது நாம் காப்பி எடுத்த தகவலோடு அந்த பதிவின் உரலும் (Read more :-http://gsr-gentle.blogspot.com) கூடவே உங்கள் கிளிப்பேர்டில் வந்து இருக்கும் நாம் இந்த பதிவின் வழியாக பார்க்க போவதும் இதைப்பற்றி தான். நான் என்ன சொல்கிறேன் என்பது சரியாக புரியாதவர்கள் என் தளத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து பாருங்கள் புரியும்.

    இனி நீங்கள் செய்ய வேண்டியது tynt™ publisher tools தளத்திற்கு சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்து உங்களுக்கென ஒரு அக்கவுண்ட் உருவாக்கவும்.



    நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கியதும் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் திறக்கும் அதில் உங்கள் தளத்துக்கான ஸ்கிரிப்ட் வந்திருக்கும், ஸ்கிரிப்ட் காப்பி எடுத்து உங்கள் பிளாக்கர் தளம் திறந்து Design-> Edit Html சென்று Ctrl +F அழுத்தி <head> என்பதை கண்டுபிடித்து அதற்கு மேலாக நீங்கள் காப்பி எடுத்த ஸ்கிரிப்ட்டை பேஸ்ட் செய்து விடவும் அவ்வளவு தான். முடிந்தால் ஸ்கிரிப்ட் பேஸ்ட் செய்யும் முன், ஸ்கிரிப்டின் தொடக்கத்தில் <!—XXXXXXX Start--> ஸ்கிரிப்டின் முடிவில் <!—XXXXXXX End--> இப்படியாக சேர்த்து விடுங்கள் XXXXXXX என்பதில் உங்களுக்கு புரியும் வகையிலான தலைப்பை கொடுத்து விடுங்கள் பின்னாளில் தேவையில்லையென்றால் நீக்குவதற்கு ஸ்கிரிப்ட் கண்டுபிடிக்க உதவியாய் இருக்கும்.



    நீங்கள் இதில் கூடுதலாக மாற்றங்கள் செய்ய விரும்பினால் Customize Attribution கிளிக்குவதன் மூலம் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ள முடியும்.

    கூடவே ஒரு செய்தி இதை வைப்பதால் மட்டும் காப்பி எடுத்தவர்கள் உங்கள் பதிவின் உரலை இனைப்பார்கள் என்று கணவு காண வேண்டாம் அழகாக டெலிட் செய்து விடுவார்கள் அது மட்டுமல்லாமல் இது போன்ற தளங்களில் காப்பி எடுக்கும் போது கூடவே வரும் URL வராமல் செய்வதற்கான வழிகளும் இனையத்தில் இருக்கிறது.

    என்ன நண்பர்களே பதிவு உங்களுக்கு உதவியானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Jan 10, 2012

    3

    தங்க நாணயம் 99

  • Jan 10, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மனிதன் பிறப்பது மெய்ஞனாக ஆனால் இறப்பதோ வஞ்சகனாக.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ஒரு கதையின் வழியாக இன்றைய எதார்த்த மனிதனின் நிலையை சொல்லிவிட முடியுமா என்றால் சொல்லிவிட முடியும் என்பது தான் உண்மை முன்பெல்லாம் குறும்படம் பற்றி அதிகம் தெரியாது ஆனால் இப்பொழுது யூடியுப்பில் நான் அதிகம் விரும்பி தேடி பார்ப்பது குறும்படங்களை தான்.. உண்மையில் ஆச்சரியமாய் இருக்கிறது 10 நிமிடத்திற்குள் எத்தனை அழகாய் ஆழமாய் அந்த உணர்வுகளை நமக்குள் உள்வாங்க வைத்துவிடுகிறார்கள் அதிலும் கனேஷ்குமார் டீம் ஒன்று இருக்கிறது அவர்களின் நகைச்சுவை குறும்படங்கள் நன்றாயிருக்கும் நேரமிருந்தால் பாருங்களேன்.

    நான் விரும்பும் தளங்களில் pkp
    , urssimbu
    , www.mybloggertricks.com
    இவைகளும் அடங்கும் இதில் பிகேபி
    குறித்தும் சிலம்பரசன்
    குறித்தும் சில பதிவுகளில் சுட்டிக்காட்டியிருக்கிறேன் ஆனால் பலமுறை பாகிஸ்தான் நண்பர் Mohammad Mustafa Ahmedzai எழுதும் www.mybloggertricks.com
    குறித்து ஏதாவது ஒரு பதிவில் வெளிப்படுத்த நினைப்பேன் ஆனால் குறிப்பிடுவதற்கான இடம் இல்லாததால் இதுவரை அவரை பற்றி குறிப்பிடமுடியவில்லை மேலும் அவர் எழுதுவது எல்லாமே பிளாக்கர் தொழில்நுட்பம், HTML நிரல்கள் தான் என்பதால் அதை எடுத்து மீண்டும் ஒரு மறுபதிப்பு செய்வதில் விருப்பமில்லை இவருடைய தள பதிவுகள் அதிலும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவுகள் பரவலாய் இனையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பேதமில்லாமல் பரவிக்கிடக்கிறது. மேலும் பிளாக்கர் தொழில்நுட்ப தளங்களின் தகவல்களுக்கு பிளாக்கர் தொழில்நுட்ப தளங்கள்
    .

    இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் Mohammad Mustafa Ahmedzai
    ஒரு குட்டி கதையை தன் தளத்தில் சொல்லியிருந்தார் அதையே கொஞ்சம் சுருக்கமாக நமது நடையில் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு வேளை நான் விரும்பியது போல யோசித்த்து போல உங்களையும் யோசிக்க வைக்கலாம்.

    ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் 80% நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலைபார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள் ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை ஆனால் என்ன குறை என்பதையும் அவரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை ஆனால் தன்னிடம் கூலி வாங்கி ஜீவணம் செய்யும் கூலித்தொழிலாளி தன் குழந்தையுடன் குடும்ப சந்தோஷமாக இருக்கிறானே இது எப்படி முடிகிறது என தன் வீட்டு மேனேஜரிடம் கேட்கிறார் உடனே மேனேஜர் அதற்கான ஒரு காரணத்தை சொல்லுகிறார் மேலும் கூடவே ஒரு ஆலோசனையும் சொல்லுகிறார்.

    ஆலோசனையின் படியே 99 தங்க்காசுகளை ஒரு பையில் இட்டு அதை அந்த ஏழை கூலித்தொழிலாளியின் வீட்டு வாசலில் இரவிலேயே போட்டுவிடுகிறார்கள் விடிந்த்தும் கூலித்தொழிலாளி கதவை திறக்கும் போது வாசலில் ஒரு பை இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் எடுத்து பிரித்து பார்க்கிறார் அதில் 99 தங்க காசுகள் ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் அதிர்ச்சி ஆனால் சந்தோஷத்தை கொண்டாடமல் மீண்டும் அந்த தங்க காசுகளை எண்ணி பார்க்கிறார் அதே 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது ஆனாலும் மீண்டும் எண்ணி பார்க்கிறார் அப்போதும் 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது அங்கும் இங்கும் தேடிப்பாத்தும் 100 தங்கக்காசுகள் கிடைக்கவில்லை ஆனால் இப்போது இவருக்கு 99 தங்கக்காசு கிடைத்த போது சந்தோஷப்படாமல் இல்லாத ஒரு தங்க காசுக்கு ஏங்குகிறார் 99 தங்க்காசுகளை 100 ஆக எப்படியும் மாற்றி விட முடிவு எடுக்கிறார்.

    கூலித்தொழிலாளி தன் மேனேஜரிடம் சென்று தனக்கு கொஞ்சம் பணத்தேவை இருப்பதாக சொல்லி தன்னை கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கும்படி கேட்கிறார் அதற்கு மேனேஜரும் சம்மதிக்கிறார் அன்று முதல் எப்படியும் ஒரு தங்க காசு வாங்கி தன்னிடம் இருக்கும் 99 தங்க காசுகளை 100 தங்க காசுகளாக சேர்த்துவிட வேண்டுமென்ற வெறியில் பல மணி நேரம் உழைக்கிறார் இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய மகன் அப்பா எனக்கு விளையாட்டு பொருள் வேண்டும் என கேட்கிறான் ஆனால் அதுவரை மகனிடம் கோபப்படாத தந்தை இப்போது மிகுந்த கோபத்துடன் இப்படி தேவையில்லாத செலவுகளுக்கு எல்லாம் பணத்தை வீணாக்க முடியாது என்பதாக கடினமான வார்த்தைகளை பிரயோகித்து மகனுடன் கூட நேரம் செலவலிக்காமல் ஒரு தங்க காசு மட்டுமே குறியாய் இருக்கிறார்.

    இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா? இப்படித்தான் இன்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நமக்கு கிடைப்பதை வைத்து நாம் சந்தோஷப்படுவதில்லை 10 ரூபாய் கிடைத்தால் 20 ரூபாய் கிடைக்காதவென மனது ஏங்கும் இலட்ச ரூபாய் கிடைத்தால் மனம் கோடிக்கு (தெருக்கோடிக்கு அல்ல) ஆசைப்படும். நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தை நாம் பணத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மனதை ரணமாக்கி நம் சந்தோஷத்தையும் இழந்து நம் குடும்பத்தினர் சந்தோஷத்தையும் சேர்த்தே அழித்து விடுகிறோம்.

    உலகத்தில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் எல்லோரையும் பார்த்து நமக்கு பொறாமையோ, ஆற்றாமையோ இருக்கும் பொதுவாக அவர்களுக்கு என்ன அவர்களிடம் எல்லாம் இருக்கிறது என்பதாக நினைப்போம் ஆனால் அவர்கள் நிலையோ நாம் மேலே பார்த்த கூலித்தொழிலாளி கதையாகத்தான் இருக்கும்.

    எல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருப்பது போல பெரும் கோடீஸ்வரர்களிலும் சில விதி விலக்குகள் இருக்கிறார்கள் உதாரணத்திற்கு : வார்ன் பப்பட், பில்கேட்ஸ் போன்றவர்கள் தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதற்கு தயாராய் இருக்கிறார்கள் அதிலும் வார்ன் பப்பட் கிட்டத்தட்ட தன் பெருவாரியான சொத்துக்களை டிரஸ்டுகளுக்கும் பொது நலன்களுக்கும் கொடுத்துவிட்டார் சமீபத்தில் கூட தன்னிடம் இருப்பதில் 1 மில்லியன் டாலர்கள் மட்டும் எனக்கு போதும் என்பதாக ஒரு செய்தி வந்திருந்தது இவர்களை போல செய்து விட யாருக்கும் மனம் வரும்?

    இன்னொருவர் இருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரு மேஜிக்கல் போன் (ஐபோன்) சொந்தக்கார்ர் முன்னவர்கள் தன்னிடம் இருப்பதை டிரஸ்டுகளுக்கு அள்ளிக்கொடுத்தனர் ஆனால் இவரோ இவர் வரும் முன்பே இயங்கிகொண்டிருந்த டிரஸ்டையும் தான் வந்ததும் நிறுத்தி விட்டார்...பார்த்தீர்களா மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்...

    இந்த வாழ்க்கையில இப்ப இருக்கிற இந்த நிமிடம் நமக்கு சொந்தமானது முடிந்தவரை எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டாலே நமக்கு நிம்மதி வந்துவிடும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவச்சு வாழ பழகுவோம்?...பதிவு கோர்வையில்லாமல் இருக்கலம் ஆனால் சொல்ல வந்த விஷயம் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் விரும்பினால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பகிருங்களேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர