Oct 3, 2011
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் அவர்களின் ஜாதக பலன்கள் அறிவது பற்றி பார்க்கலாம்.

விஞ்ஞானம் மெய்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் ஜோதிட்த்தின் மீதான நம்பிக்கை ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது அதன் அடிப்படையில் தான் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்கள் பிறந்த நேரத்தை குறித்து வைத்து யாராவது ஒரு ஜோதிடரிம் கொடுத்து அவர்கள் வழியாக நட்சத்திரமும், ராசியும், , அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் ஜாதகமும் எழுதி வாங்குவது வழக்கம். ராசி நட்சத்திரம் சரியாக தெரிந்துகொள்ள முடிகிறது அதே நேரத்தில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள்கள் அவ்வளவு சிறப்பானதாக தெரியவில்லை இருப்பினும் அதற்கான தரவிறக்கமும் தருகிறேன்.
இனி முதலில் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் நட்சத்திரம் மற்றும் ராசி கண்டு பிடிக்க.
குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி
முதலாவதாக Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) தளம் சென்று பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் கொடுக்கவும் நீங்கள் இந்தியாவில் இருந்தால் Time Zone மாற்ற வேண்டியதில்லை வெளி நாடுகளில் பிறந்த குழந்தையாய் இருக்கும்பட்சத்தில் அதற்கான Time Zone மாற்றவேண்டியது அவசியமாகும் இந்த தளம் உபயோகிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது. 1901 ம் ஆண்டு முதல் 2100 ம் ஆண்டு வரையிலான நட்சத்திரம் மற்றும் ராசி இரண்டையும் எளிதாக அறிய முடியும்.
இரண்டாவதாக இவர்களும் Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) சரியான பதிலை தருகிறார்கள் ஆனால் கொஞ்சம் நம்மை அதிகம் கேள்வி கேட்டு குழப்புவார்கள் உதாரணத்துக்கு Latitude, Longitude இவையிரண்டும் ஜோதிட்த்தில் அவசியமே ஆனால் நமக்கு சரியான இடத்திற்கான Latitude, Longitude எல்லோருக்கும் தெரிவதில்லை ஆனால் அதை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான மென்பொருள் ஜாதகம் கணிக்கும் மென்பொருளின் உள்ளே அந்த வசதியும் இருக்கிறது அதை வைத்து இங்கு தேவையான Latitude, Longitude இரண்டையும் நிரப்ப முடியும். இவர்களின் முடிவும் சரியாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.
மூன்றவதாக முழுவதும் தமிழ் பெயர்கள் மற்றும் எந்த நட்சத்திரத்துக்கு எந்த எழுத்து தமிழில் தொடங்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள தமிழில் பெயர் மற்றும் நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
இப்பொழுது உங்களால் மிக எளிதாக பிறந்த குழந்தையின் நேரத்தை வைத்து ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்துகொண்டிருப்பீர்கள் மேலும் நட்சத்திர, மற்றும் ராசி பலன்கள் தெரிந்து கொள்ள.
நட்சத்திரம் மற்றும் ராசியின் பொதுவான பலன்கள்
பொதுவான நட்சத்திர பலன் தெரிந்து கொள்ள tamilkalanjiyam , astrology.himadurai
பொதுவான ராசி பலன் தெரிந்து கொள்ள astrology.dinakaran
இனி நட்சதிரத்துகான பெயர் அடிப்படையில் பெயர் வைப்பதற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்து தொடக்க எழுத்தாக அமையவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள.
பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து தெரிந்து கொள்ள baby names based on birthstar எழுத்துக்கள் தமிங்கிழிஷ் அடிப்படையை கொண்டது உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்துக்கு Cho, Che, Chu, La இதை சு,சே,சோ,ல என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும், தெவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
பிறந்த குழந்தைக்கான நட்சத்திரம் ராசி தெரிந்து கொண்டாகி விட்டது அதனிடையே பொதுவான நட்சத்திர, ராசி பலனகளும் தெரிந்துகொண்டோம் இனி குழந்தைகளுக்கான பெயர் எந்த தளங்களில் தேடலாம் என்பதற்காக சில தளங்களை வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கான பெயர்கள் தேட
web.archive.org
thamizhagam.net
shaivam.org
pudhucherry.com
anbutamil.com
babynames.looktamil.com
indiaparenting.com
hinduchildnames.com
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் ஜாதகம்,திருமண பொருத்தம்,வருட பலன் தெரிந்துகொள்வது பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு

இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr


26 Responses to “பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து”
-
மாணவன்
said...
1
October 3, 2011 at 4:38 PMவணக்கம் அண்ணே,
பயனுள்ள ஜோதிடக் குறிப்புகளையும், குழந்தைகளுக்கான பெயர் தேடலுள்ள தளங்களையும் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிண்ணே! -
Rajasurian
said...
2
October 3, 2011 at 8:24 PMஉபயோகமான பதிவு. பகிர்விற்கு நன்றி.
-
ஜிஎஸ்ஆர்
said...
3
October 3, 2011 at 9:37 PM@மாணவன்தம்பி எனக்கும் இது சில நேரஙகளில் தேவைப்படுகிறது அது தான் ஒரு பதிவாக எழுதி வைத்து விட்டால் நமக்கும் எளிது தேவைப்படும் நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும் சரிதானே?...
-
ஜிஎஸ்ஆர்
said...
4
October 3, 2011 at 9:38 PM@Rajasurian நன்றி நண்பரே வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
-
Umapathy
said...
5
October 11, 2011 at 7:33 PMநன்றி சார்
-
ஜிஎஸ்ஆர்
said...
6
October 16, 2011 at 5:37 PM@உமாபதிவரவிற்கு நன்றி
-
DHARMA 63
said...
7
May 4, 2012 at 3:08 PMIam Dharmalingam,
This is very useful and everyone can get their real name as per their natchatra.good good good. -
ஜிஎஸ்ஆர்
said...
8
May 8, 2012 at 4:07 PM@Unknownபயனடைந்தால் சந்தோஷமே.
-
viyanci
said...
9
October 2, 2013 at 7:49 PMgood one intersting for all those things congratulations for your effort i know rajmohan doctor whenever my son was inhealth i just go and check him i hope he is one of the good child care doctor
-
Unknown
said...
10
July 2, 2014 at 9:28 PMசூப்பர் இன்னும் எதிர் பார்கிரேன்
-
Unlock
said...
11
November 5, 2014 at 12:21 PM,
மிகவும் பயனுள்ள தகவல்
பதிவிற்க்கு நன்றி
, -
Unknown
said...
12
December 26, 2014 at 11:33 PMநன்றி,நன்றி,அருமை
-
Way to live with natural
said...
13
February 16, 2016 at 11:24 PMபயன் அடைந்தேன்
-
aksnursingcollege
said...
14
April 23, 2016 at 10:28 AMHi
-
aksnursingcollege
said...
15
April 23, 2016 at 10:29 AMHi
-
kuchalakorner
said...
16
April 8, 2017 at 3:49 PMஎமகண்ட நேரத்தில் பிறந்த குழந்தை பற்றி
-
Krish
said...
17
July 5, 2017 at 7:44 PMமிக்க நன்றி....
-
Unknown
said...
18
November 12, 2017 at 6:08 PMOct 25 2017 at 13:20pm
-
Unknown
said...
19
January 21, 2018 at 10:50 AMநன்றி எங்கள் குழந்தைக்கு நல்ல பெயர் கிடைத்தது
-
Unknown
said...
20
November 8, 2018 at 10:13 AM5/11/18 ராசி நட்சத்திரம் வேண்டும்
-
Unknown
said...
21
November 18, 2018 at 2:06 PMபயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
-
Unknown
said...
22
November 30, 2018 at 11:26 PMTiruvallur 15/11/2018.02.37am
-
Unknown
said...
23
March 24, 2019 at 12:46 AMவணக்கம் ,21-3-2019 காலை 11.29am11.30am பிறந்த இரட்டை குழந்தைகள் .ஜதகம் கணிக்க வேண்டும்.பிறந்த இடம் malaysia
-
Unknown
said...
24
November 10, 2021 at 6:14 PMஅண்ணா எனக்கு ஒரு வேண்டுகோள்
-
Unknown
said...
25
November 10, 2021 at 6:18 PMகுழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்
-
FaresGlob
said...
26
October 12, 2022 at 6:03 PMThank you for telling me about how to select a new born baby's name by their Rashi but any person can select the name of anyone by their Rashi
jetblue airways customer service
Breeze Airways Phone Number
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>