Jun 17, 2010

10

இன்பாக்ஸில் தடையப்பட்ட இனையதளம்

  • Jun 17, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: காதல் வந்தால் அம்மை தழும்பும் அதிர்ஷட குறியாய் தெரியும்.

    நான் ஏற்கனவே தடை செய்யப்பட்ட தளங்களை எப்படி திறப்பது என ஒரு பதிவிட்டிருந்தேன் ஆனால் சில நாடுகளில் இந்த முறையும் செயல்படுத்த முடியவில்லை என்பதை சில நண்பர்கள் மூலமாக அறிகிறேன் சரி அந்த மாதிரியான நேரத்தில் தடை செய்யப்பட்ட தள தகவல்களை எப்படி தெரிந்துகொள்வது சில இடங்களில் கணினி தகவல் சம்பந்தப்பட்ட தளங்களை கூட இண்டர்நெட் சரிவீஸ் புரைவைடர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக தடை செய்திருப்பார்கள் அந்த நேரத்தில் புராக்ஸி சர்வரும் கூட உதவாது அதற்காக தான் இப்போது இந்த சேவையை பற்றி பார்க்க போகிறோம்.

    உங்களிடம் அவசியம் ஒரு மின்னஞ்சல் முகவரி இருக்கவேண்டும் சரி உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இல்லையா இலவச ஜிமெயில் ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள் இன் உங்கள் மின்னஞ்சலை திறந்து அனுப்ப வேண்டிய முகவரியில் www@web2mail.com என்பதை எழுதவும் இனி சப்ஜெகட் என்பதில் தடை செய்யப்பட்ட இனையதளத்தின் முகவரியை கொடுக்கவும் இனி வேறு ஒன்றும் செய்யவேண்டாம் அப்படியே மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள் குறைந்த பட்சம் நான்கு மணி நேரத்திற்குள் தடை செய்ப்பட்ட தளத்தில் உள்ள தகவல்கள் உங்கள் இன்பாக்ஸில் இருக்கும் சில நேரம் நேரம் கூடுதல் ஆகலாம் ஆனாலும் தகவல் வந்துவிடும் மேலும் எப்படி அனுப்புவது என்ற சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பார்க்கவும்.



    இதில் ஒரு பிரச்சினையும் இருக்கிறது நீங்கள் பார்க்க விரும்பும் தளத்தில் வீடியோ அல்லது இமேஜ் இருக்குமானால் அவை உங்கள் இன்பாக்ஸிற்கு வராது டெக்ஸ்ட்டுகள் மட்டுமே வரும் என்ன செய்ய எல்லா தொழில் நுட்பங்களிலும் இது போன்ற ஏதாவது பிரச்சினை இருக்கதானே செய்கிறது.

    சரி என்ன நண்பா தடை செய்யப்பட்ட தளம் திறக்க வழி சொல்கிறீர்கள் நமக்கு வேண்டாத இனையதளத்தை நமது கணினியில் மென்பொருள் உதவி இல்லாமல் தடை செய்ய ஏதாவது வழி இருக்கிறதா என கேட்க்கும் நண்பர்களுக்காக எனது முந்தைய பதிவை பார்க்கவும் இதே வழிமுறையை பின்பற்றி இனையத்தில் தொல்லை கொடுக்கும் பாப் அப் விளம்பரங்களையும் தடையலாம்.

    நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்களை போல மற்ற நண்பர்களும் பயனடைய வாக்கு கருத்துரை அளிப்பதன் மூலம் நிறைய நபர்களை சென்றடைய நீங்களும் ஒரு காரணியாக இருங்கள் நான் எழுதுவதால் மட்டும் எல்லோருக்கும் சென்றடையாது நீங்களும் மனது வைத்தால் மட்டுமே அதிகம் நபர்களை சென்றடைய வழி இருக்கிறது.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    10 Comments
    Comments

    10 Responses to “இன்பாக்ஸில் தடையப்பட்ட இனையதளம்”

    தமிழார்வன் said...
    June 17, 2010 at 12:33 PM

    நண்பர் ஞானசேகர் அவர்களுக்கு வணக்கம்,

    பயனுள்ள தகவல்கள்,
    நல்ல பதிவு,
    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    தமிழார்வன்.


    ஜிஎஸ்ஆர் said...
    June 17, 2010 at 7:04 PM

    @தமிழார்வன்

    தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி


    தமிழ் நாடன் said...
    June 18, 2010 at 8:55 AM

    மிக அவசியமான விவரங்களை சொல்லித்தருகிறீர்கள். மிக்க நன்றி! தொடரட்டும் உங்கள் சேவை!


    ஜிஎஸ்ஆர் said...
    June 19, 2010 at 4:46 PM

    @தமிழ் நாடன்ஏன் நண்பா பொய் சொல்கிறீர்கள்


    மு.ம.ராஜன் said...
    July 4, 2010 at 11:41 AM

    super
    post


    ஜிஎஸ்ஆர் said...
    July 5, 2010 at 8:57 AM

    @தமிழன்நன்றி நண்பரே


    Vengatesh TR said...
    November 27, 2010 at 12:58 PM

    .நல்ல பதிவு நண்பரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:05 AM

    @சிகப்பு மனிதன்பயன்படுத்தி பாருங்கள்


    Anonymous said...

    October 19, 2011 at 11:04 PM

    பயனுள்ள தகவல்கள்
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    nifan


    ஜிஎஸ்ஆர் said...
    October 22, 2011 at 6:31 PM

    @yahyanifanபுரிதலோடு கூடிய வாழ்த்துகளுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர