Sep 10, 2010

12

தமிழில் மருத்துவ தளங்கள் I

  • Sep 10, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: கடவுள் தீயவர்களை மன்னித்து விடுகிறார் ஆனால் எப்போதும் அல்ல.

    வணக்கம் நண்பர்களே நான் இங்கு சில தமிழ் மருத்துவ தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் ஒரு வேளை இந்த தளங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்க்ள் சிலர் இருப்பார்களேயானால் அவர்களுக்கு உதவட்டுமே என்கிற நோக்கம் மட்டுமே. இந்த காலத்தில் நிறைய விதமான நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன ஒரு விதத்தில் நம் உணவு முறையும் இதற்கு காரணம் இது யாவருக்கும் தெரியும் ஆனாலும் நாம் நம்மை மாற்றிக்கொள்வதில்லை. நாம் எடுத்த்தெற்கெல்லாம் நாம் மருத்துவமனை செல்லமுடிவதில்லை ஆனால் நமக்கு அந்த குறையை போக்குவதற்கென்றே எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் அவர்களுக்கு இருக்கும் நேரமின்மையிலும் தமிழில் மருத்துவ தகவல்களை என்னைப்போல சராசரி மனிதனுக்கும் புரியும் வகையில் மருத்துவ தகவல்களை எழுதுகிறார்கள்.

    மதிப்பிற்குறிய நண்பர் திரு.துமிழ் அவர்களின் தளத்தில் எல்லாவிதமான பொதுமருத்துவம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் பதிகிறார் அதுமட்டுமல்லாமல் நமக்கு இருக்கும் சந்தேகத்தையும் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கும் பதில் அளிக்கிறார் கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலும் அவர் அளிக்கும் தகவல்கள் நமக்கு புரியும் வகையில் இருக்கும். அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.துமிழ் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக மதிப்பிற்குறிய நண்பர் திரு.ராஜ்மோகன் அவர்களின் தளத்தில் குழந்தைகளுக்கன மருத்துவ தகவல்கள் பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம் ஆனால் இன்னும் அவர்கள் மின்னஞ்சல் வழி சந்தேகம் கேட்கும் வசதி தருவார்களேயானால் குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவ தளம் என்பதில் சந்தேகமில்லை. அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.ராஜ்மோகன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக தமிழ் கன்சல்ட் தளம் இங்கு நான்கு மருத்துவர்கள் நமக்கு உதவி செய்வதெற்கென்றே இருக்கிறார்கள் இவர்களும் இந்த மருத்துவ சேவையே இலவசமாகவே செய்கிறார்கள் இவர்களை பொறுத்த வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கலாம் ஆனால் தமிழையே அவர்கள் முதன்மைபடுத்துகிறார்கள் ஆனால் சில இடங்களில் பதில் முழுவதையும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அது ஒரு குறையாகத்தான் நான் நினைக்கிறேன் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்கள் புரிந்துகொளவதில் பிரச்சினையும் இருக்கும் ஆனால் அந்த குறையை களைந்தால் இது சிறந்த தமிழ் மருத்துவ தளம் தான். அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    தமிழ் கன்சல்ட் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக ஆயுர்வேத மருத்துவ தகவல்களை ஆயுர்வேத மருத்துவம் எனும் தளத்தில் பொதுவான மருத்துவ தகவல்களை பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம் மின்னஞ்சல் தொடர்பு கொடுத்திருக்கிறார் அவரின் இலட்சிய கணவாக ஆயுர்வேத 50 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அமைக்க விரும்புவதாக எழுதியிருக்கிறார், பயன்படுத்தி பாருங்கள் சிறந்த தளமாக இருப்பின் அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    ஆயுர்வேத மருத்துவ தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    என்ன நண்பர்களே நான் எனக்கு தெரிந்த தளங்களை பகிரிந்திருக்கிறேன் இது போல் சிறந்த தமிழ் மருத்துவ தளங்கள் இருந்தால் அவசியம் கருத்துரையில் தெரிவிக்கவும் நான் அதை அப்டேட் செய்துவிடுகிறேன் அனைத்து தளங்களின் முகவரிகளும் ஒரு இடத்தில் இருந்தால் எல்லொருக்கும் மருத்துவ சந்தேகங்கள் தீர உதவியாய் இருக்கும்.

    தமிழில் மருத்துவம் II

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    12 Comments
    Comments

    12 Responses to “தமிழில் மருத்துவ தளங்கள் I”

    ம.தி.சுதா said...
    September 10, 2010 at 12:35 PM

    தகவலுக்க நன்றி சகோதரா... அது சரி உங்களுடைய பெவிகோனில் வரும் ஜி.எஸ்ஆர் என்ற எழுத்தை எப்படி அகலம் கூடியதாக வைத்திருக்கிறீர்கள்... எனத தளத்தில் யாழ் நூலகம் படம் போட்டேன் அது சிறிதாகத்தான் வருகிறது... என்ன காரணம்...


    Chef.Palani Murugan, said...
    September 10, 2010 at 3:24 PM

    றி நண்பா வாழ்த்துக்கள்


    Chef.Palani Murugan, said...
    September 10, 2010 at 3:26 PM

    'நன்' தவறிய நன்றி. மீண்டும்


    curesure Mohamad said...
    September 10, 2010 at 10:06 PM

    நன்றி நண்பரே ..ஆயுர்வேதம் தொடர்பான -ஆலோசனைகளை நான் சேவையாக செய்வேன் ..எனது தளத்தையும் சேருங்களேன் ..எனது தள முகவரி
    http://ayurvedamaruthuvam.blogspot.com/..


    ஜிஎஸ்ஆர் said...
    September 11, 2010 at 9:59 AM

    @ம.தி.சுதாஅன்பின் நண்பருக்கு நீங்கள் எந்த அளவு எடுத்திருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை மேலும் இதற்கு நான் சரியான ஒரு பதிலை அளிக்க முடியாது உங்களுடன் கலந்துரையாடினால் மட்டும் அடுத்தடுத்த வழிமுறகளை பரிந்துரைக்க உதவியாய் இருக்கும்


    ஜிஎஸ்ஆர் said...
    September 11, 2010 at 10:00 AM

    @Chef.Palani Murugan, LiBa's Restaurantநீங்கள் நல்ல மனதோடு பாரட்டும் போது எழுத்துபிழைகள் ஒரு குறையில்லை நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    September 11, 2010 at 10:03 AM

    @curesure4uவிடுபட்டதற்கு மன்னிக்கவும் இன்று அல்லது நாளை12.09.10 நிச்சியமாக அப்டேட் செய்து விடுகிறேன் அது மட்டுமல்லாமல் இந்த பதிவை எப்போதும் நம் தளம் திறந்தால் வாசகர்களுக்கு எளிதாக மாற்றும் வகையில் செய்து விடுகிறேன்


    Anonymous said...

    November 11, 2010 at 9:17 AM

    தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள். படிப்பவர்கள் தமிழில் உள்ள மருத்துவ தளங்களே மொத்தம் நான்குதான் என்று நினைத்துவிடப் போகிறார்கள்! கூகிளில் ’மருத்துவம்’ எனத் தேடிப்பாருங்கள். எவ்வளவு தளங்கள் உள்ளன என்பது தெரியும்!

    “என் நண்பர்களின் மருத்துவத் தளங்கள்” என்ற தலைப்பே பொருத்தமானதாகும்!


    ஜிஎஸ்ஆர் said...
    November 11, 2010 at 10:10 PM

    @eegarai

    தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள். படிப்பவர்கள் தமிழில் உள்ள மருத்துவ தளங்களே மொத்தம் நான்குதான் என்று நினைத்துவிடப் போகிறார்கள்! கூகிளில் ’மருத்துவம்’ எனத் தேடிப்பாருங்கள். எவ்வளவு தளங்கள் உள்ளன என்பது தெரியும்!

    “என் நண்பர்களின் மருத்துவத் தளங்கள்” என்ற தலைப்பே பொருத்தமானதாகும்!


    மன்னிக்கவும் நான் பதிவிலேயே எழுதியிருக்கிறேன் எனக்கு தெரிந்த தளங்கள் இதுவென்றும் உங்களுக்கு தெரிந்த சிறந்த மருத்துவ தளங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் அப்டேட் செய்துவிடுகிறேன் என எழுதியிருப்பதை தாங்கள் கவணிக்கவில்லை என நினைக்கிறேன்.

    மேலும் தமிழில் மருத்துவம் என்பதையும் மாற்ற தேவையில்லை என்றே நினைக்கிறேன்..

    சரியான புரிதலுக்கு நன்றி


    நீச்சல்காரன் said...
    November 11, 2010 at 11:30 PM

    http://siddhavaithiyan.blogspot.com/
    http://abidheva.blogspot.com/

    Please add it to your list


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:52 AM

    @நீச்சல்காரன் தெரியப்படுத்தியதற்கு நன்றி அப்டேட் செய்து விடுகிறேன்


    Unknown said...
    January 11, 2014 at 10:36 PM

    nice topics
    www.puthiyatamil.net


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர