Aug 1, 2010

12

நினைவுகளில் வாழும் அப்பா

 • Aug 1, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: இருக்கும் வரை தெரியாது இல்லாததின் அருமை.

  எல்லோருக்கும் போலதான் எனக்கும் அப்பா ஆனால் நான் அவர்மேல் அன்பு வச்சிருந்தேன் ஆனால் எனக்கு வெளிக்காட்ட தெரியல ஆனால் அப்பா இறந்த பின் தான் அவரின் அருமை புரிந்தது. நண்பர்களே நம் அப்பா,அம்மா தான் நம் நிகழ்கால தெய்வங்கள் இருக்கும் போது காட்டாத பாசம் மரித்த பின் சொல்லி அழுவதில் பயனில்லை. இந்த பதிவு பல மாதங்களுக்கு முன்னர் எழுதியது நம் தளத்தை தினம் வாசிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

  அப்பா:

  எப்படி எப்படியெல்லாமோ
  கேள்விக்கனை கொண்டு
  எனை துளைத்தெடுப்பாள்- அம்மா
  ஒரேயொரு
  நேர் பார்வையில்- என்
  மன நிலை புரிந்துகொள்வார் - அப்பா

  அப்பாவிடம்
  அதிகம் பேசியதில்லை
  யாரோ சொல்லி கேட்டிருக்கிறேன்
  என்னைப்பற்றி
  ஏதோவெரு சமயம் பெருமையாக
  அப்பா பேசியதாக

  அம்மாவிடம்
  எதிர் வாதம் செய்யும் நான்
  அப்பாவின் முகம் வாடும் போது
  உணர்ந்திருக்கிறேன் என் தவறை

  உன் அப்பா
  எத்தனை நல்லவராக
  இருக்கிறார் - என
  நண்பர்கள் என்னிடம்
  சொல்லும் போதுதான்
  எனக்கு தெரிந்தது
  எத்தனை பேருக்கு
  கிடைக்காத அப்பா
  எனக்கு மட்டும் கிடைத்திருக்கிறாறென

  கேட்ட வரம்
  உடனே கொடுக்க முடியாத
  கடவுள்தான்
  என்னை மகனாக படைத்தார்
  என் அப்பாவுக்கு
  வேண்டுவென வேண்டும் சமயத்தில்
  எனக்கு கிடைத்திட

  குழந்தை பருவத்தில்
  கைப்பிடித்து நடைபயில
  சொல்லி கொடுத்து
  நான் தனியே நடந்தபோது
  என்னைப்பற்றி
  என்னவெல்லாம் நினைத்திருப்பார்?
  என் கால் தடுமாறி
  விழும்போது பதறிப்போகும் அப்பா

  இன்று
  நான் தவிக்கின்ற போது பதறாமல் இறுக்கிறார்
  மீளா துயிலில்

  நண்பர்களோடு பேசும்போதெல்லாம்
  கர்வத்தோடு
  சொல்லியிருக்கிறேன்
  என் அப்பாவின் சிந்தையெல்லாம்
  என்னை பற்றியதானிருக்குமென்று

  இன்று!
  அப்பா இறந்த பின்னர்
  நான் யாரென்று எனக்கும் தெரியவில்லை
  அனைத்து கொள்ள ஆதரவும் இல்லை

  அப்பா இறந்த போது
  யார் யாரோ
  துக்கம் விசாரித்தார்கள்
  நாங்கள் இருக்கிறோம் என்றார்கள்
  என்றாலும்
  என் அப்பாவைப்போல்
  யார் இருக்க முடியும்?

  அப்பா உயிரோடு இருந்தவரை
  அவர் மீது - என்
  பாசத்தை வெளிக்காட்டியதேயில்லை
  அவரின் இழப்பு தாங்காது
  கதறி அழுதபோது
  கண்ணீர் துடைக்க- என்
  அருமை அப்பாவும் இல்லை

  அப்பா உயிரோடு இருந்தவரை
  இழப்பு எதுவுமில்லை
  இறப்புக்கு பின்
  இழப்பதற்கு எதுவுமில்லை


  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  12 Comments
  Comments

  12 Responses to “நினைவுகளில் வாழும் அப்பா”

  kannan said...
  June 14, 2010 at 7:50 PM

  அப்பா உயிரோடு இருந்தவரை
  அவர் மீது - என்
  பாசத்தை வெளிக்காட்டியதேயில்லை... எண்களின் அப்பா பாசத்தை வெளிக்காட்டியதேயில்லை .... மனதில் போட்டு பூட்டி தான் வைத்திருப்பர்...நான் மிலிட்டரி ட்ரைனிங் போகும் பொழுது ...ஒன்றும் சொல்லாமல் வீட்டின் பின்னால் நின்று... கண்ணிற் வடித்து கொண்டு இருக்கிறார்...அன்று தான் அப்பாவின் பாசத்தை உணர்ந்தேன் ...மிடுக்குடன் ஹீராவை போல் வாழ்ந்து மறைந்த அப்பாவை நினைக்க வைத்து விட்டீர்கள்..நன்றி ...உங்கள் கண்ணன்


  ஜிஎஸ்ஆர் said...
  June 15, 2010 at 9:32 AM

  @kannan

  இந்த அப்பாக்களே இப்படித்தான் கண்களில் கோபத்தை காட்டி மனதினுள் அன்பை பூட்டியே வைத்திருப்பார்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அப்பாதான் நிஜமான ஹீரோ


  mohan said...
  August 2, 2010 at 12:56 AM

  hello sir, iam mohan, i watch your every post, it's very usefull, plz give me your mail id, i asking some qustion in computer problem, my id mohan8456@gmail.com


  ஜிஎஸ்ஆர் said...
  August 2, 2010 at 9:05 AM

  @mohanசந்தோஷம் நண்பரே என் பதிவு தங்களுக்கு பயனுள்ளதென்றால் எனக்கும் மகிழ்ச்சியே, ஆனால் என் பதிவு பயனுள்ளதென்றால் பதிவில் வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் எழுதலாமே உங்களை போல படித்து பயன்பெறுபவர்கள் நீங்கள் கற்றுக்கொண்டதோடு இருந்துவிட்டால் நான் எழுதிய பதிவு எப்படி நிறைய நபருக்கு உதவும் இதை உங்களிடம் மட்டுமல்ல என் பதிவை படித்து பயன்பெற்றதாய் நினைக்கும் ஒவ்வொருவரிடமும் கேட்க நினைக்கும் கேள்வி


  செந்தில் குமார் தங்கவேல் said...
  August 2, 2010 at 11:07 PM

  அண்ணன் GSR க்கு,அன்னையொடு அறுசுவைபோம், தந்தையோடு கல்விபோம் என சொல்வழக்கு உண்டு. உங்களின் அப்பா பற்றிய நினைவுகள் படித்தபொழுது 40 நாட்களுக்கு முன்னால் இறந்த என் அம்மாவின் நினைவுகளில் இருந்து மீளமுடியாமல் இருக்கும் எனக்கு , கவிதையாய் ஒரு அஞசலி செலுத்தியதுபோல் இருந்தது.
  நானும் என் அம்மாவிற்க்காக ஒரு கவிதஞலை எழுத வேண்டும் எனும் ஆசையில் உள்ளேன். உங்கள் கவிதை எனக்கு உட்வேகம் தருகிறது.

  அப்பா உயிரோடு இருந்தவரை
  இழப்பு எதுவுமில்லை
  இறப்புக்கு பின்
  இழப்பதற்கு எதுவுமில்லை

  அம்மாவி இறப்பிற்க்கு பின் இன்னும் அவர் வாழ்ந்த , நடந்த , அமர்ந்த இடங்களின் வெறுமை என்னை எல்லாம் இருந்தும்
  அனாதையாய் வெறுமையில், தவிப்பில் நிறுத்துகிறது.


  ஜிஎஸ்ஆர் said...
  August 3, 2010 at 9:48 AM

  @செந்தில் குமார் தங்கவேல்தங்களுக்கு இந்த பதிலில் ஆறுதல் எப்படி சொல்வதென்று புரியவில்லை என்ன செய்ய இயற்கையின் நியதியில் பிறப்பென்று இருக்கும் போது இறப்பும் நிச்சியக்கபடுகிறது , அம்மாவின் ஆத்மா அமைதிக்காக நானும் உங்களோடு இறைவனை பிராத்திக்கிறேன்


  சிகப்பு மனிதன் said...
  November 26, 2010 at 6:06 PM

  .இந்த பதிவை படித்துவிட்டு, கருத்துரை எப்படி எழுதுவது என, தெரியவில்லை !


  .என்னை, கேட்டால், தாய் மற்றும் அல்ல, தந்தையும், நடமாடும் தெய்வம் தான் !


  .பகிர்ந்தமைக்கு நன்றி !


  ஜிஎஸ்ஆர் said...
  November 26, 2010 at 9:26 PM

  @சிகப்பு மனிதன்உண்மை தான் நண்பரே தாயும் தந்தையும் நடமாடும் தெய்வம் தான்


  AKR said...
  July 15, 2016 at 12:47 AM

  Thanks brother


  AKR said...
  July 15, 2016 at 12:47 AM

  Thanks brother


  Unknown said...
  May 13, 2017 at 10:15 AM

  கேட்ட வரம்
  உடனே கொடுக்க முடியாத
  கடவுள்தான்
  என்னை மகனாக படைத்தார்
  என் அப்பாவுக்கு
  வேண்டுவென வேண்டும் சமயத்தில்
  எனக்கு கிடைத்திட


  PANDIAN JAIHIND said...
  June 28, 2017 at 10:55 PM

  அப்பா இருக்கும்போது அதன் அர்த்தம் தெரியவில்லை
  அப்போது தெரிகின்ற வயதும் இல்லை
  இப்போது தெரிந்தபின் என் அப்பா
  உயிரோடு இல்லை


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர