Jun 15, 2010

11

கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு

  • Jun 15, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பதவி உங்களுக்கு பெருமை தருவதை விட அந்த பதவியை நீங்கள் பெருமைபடுத்துங்கள்.

    கணினியில் சில சிறிய விஷயங்களில் சின்ன மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் இனையவேகத்தை கொஞ்சம் அதிகரிக்கலாம் அதற்கு நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம் இதற்கான இலவச DNS (Domain Name System) நான்கு நிறுவனங்கள் வழங்குகின்றன இவர்கள் தரும் முகவரியை மாற்றுவதன் மூலம் இனையவேகத்தை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

    இனி நீங்கள் செய்யவேண்டியது My Network Places என்பதின் பிராப்பர்ட்டிஸ் தேர்வு செய்யுங்கள் இப்போது உங்களுக்கு Local Area Connection என்பதாக ஒரு விண்டொ திறக்கும் அதில் மீண்டும் வலது கிளிக்கில் அதனுடைய பிராப்பர்ட்டிஸ் கிளிக்கவும்.



    இப்போது உங்களுக்கு கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் நீங்கள் General என்கிற டேப்பை திறந்து Internet Protocol (TCP/IP) என்பதை தெரிவு செய்து படத்தில் நான் காண்பித்துள்ளது போல Properties என்பதை கிளிக்குங்கள்.



    இப்போது மீண்டும் ஒரு பாப் அப் விண்டோ திறக்கிறதா இங்குதான் உங்கள் கணினியின் IP Address மற்றும் செர்வரின் முகவரி இருக்கும் நீங்கள் ஐபி-யை ஒன்றும் செய்யவேண்டாம் நான் படத்தில் அடையாளம் காண்பித்துள்ள இடத்தில் நீங்கள் கீழே கொடுத்துள்ள ஏதாவது ஒரு நிறுவனத்தின் DNS முகவரியை டைப் செய்யவும்.



    நான் மேலே சொன்ன நான்கு நிறுவனங்களும் அவர்கள் இலவசமாக வழங்கும் DNS முகவரிகளும் ஒவ்வொன்றாக மாற்றிப்பார்த்து உங்களுக்கு எது வேகத்தை அதிகரிப்பதாக நினைக்கிறீர்களோ அதையே உங்கள் கணினியின் DNS முகவரியாக வைத்துக்கொள்ளுங்கள் வேண்டுமானல் தற்போதைய DNS முகவரி தெரிந்துகொள்ள Start -> Run -> டைப் cmd திறக்கும் கமாண்ட் பிராம்ப்ட்டில் ipconfig/all என டைப் செய்தால் உங்கள் கணினியின் ஐபி மற்றும் DNS முகவரி இருக்கும். உங்கள் இனையவேகத்தை சோதனை செய்து பார்க்க இனைய சோதனை 1 , இனைய சோதனை 2சென்று சோதித்து பார்க்கவும்.

    நிறுவனங்களும் இலவச செர்வர் முகவரிகளும்

    1.ScrubIT DNS Service

    Preferred DNS Server 67.138.54.100
    Alternate DNS Server 207.225.209.66

    2.Dnsadvantage DNS Service

    Preferred DNS Server 156.154.70.1
    Alternate DNS Server 156.154.71.1

    3.OpenDNS DNS Service

    Preferred DNS Server 208.67.222.222
    Alternate DNS Server 208.67.220.220

    4.Google DNS Service

    Preferred DNS Server 8.8.8.8
    Alternate DNS Server 8.8.4.4

    வழக்கம் போல இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பயனுள்ளது என நினைத்தால் உங்கள் நண்பர்களுக்கும் நம் தளத்தை அறிமுகபடுத்துங்கள் மேலும் வாக்கும் கருத்துரையும் அளித்து நம் தளத்தின் நண்பர்கள் பட்டியலில் இனைவதன் மூலம் உங்கள் ஆதரவை வெளிக்காட்டுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    11 Comments
    Comments

    11 Responses to “கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு”

    vinoveenee said...
    June 15, 2010 at 1:24 PM

    NALLA THAGAVAL


    முனைவர் இரா.குணசீலன் said...
    June 15, 2010 at 3:25 PM

    தேவையான தகவல் நண்பா.


    கருடன் said...
    June 15, 2010 at 5:53 PM

    edikku chinna Parattu??? perusave parattidalam.... NALLA IRUKKU... ROMBA NALLA IRUKKU.... ROMBA ROMBA NALLA IRUKKU....


    ஜிஎஸ்ஆர் said...
    June 16, 2010 at 9:12 AM

    @vinoveenee

    தங்களின் கருத்துரைக்கு நன்றி தொடர்ந்து நம் தளத்தோடு இனைந்திருங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    June 16, 2010 at 9:13 AM

    @Adimai-Pandian

    தங்களின் பாரட்டுகளுக்கு நன்றி நண்பா

    தாங்கள் ஒரு நகைச்சுவை பிரியரா?


    ஜிஎஸ்ஆர் said...
    June 16, 2010 at 9:14 AM

    @முனைவர்.இரா.குணசீலன்

    நன்றி நண்பர் குணசீலன்


    முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
    June 16, 2010 at 11:36 AM

    நன்றி பாஸ்.. தகவல் அருமை


    Unknown said...
    June 16, 2010 at 3:54 PM

    well done my dear


    ஜிஎஸ்ஆர் said...
    June 16, 2010 at 4:40 PM

    @shahul

    தங்களின் கருத்துரைக்கு நன்றி தொடர்ந்து நம் தளத்தோடு இனைந்திருங்கள்


    SYED AHAMED said...
    July 1, 2010 at 2:20 PM

    Thanks for your kind information about DNS and download speed check website.
    regards
    syed Ahamed
    Singapore


    rtvenkat said...
    April 23, 2012 at 12:54 AM

    மிக அருமை நண்பரே! உஙக‌ள் சேவை சிறக்க வாழ்த்துக்கள். முயற்சித்திவிட்டு நிச்சயம் பதில் எழுதுகிறேன்.


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர