Jun 29, 2010

10

சின்ன சின்ன ஆசைகள்

  • Jun 29, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: அன்பு மின்னல் மாதிரி அது விழும் வரை எங்கே அடிக்குமென்று சொல்லமுடியாது.

    வணக்கம் நண்பர்களே பதிவுலகத்திற்கு எழுத வந்து 31/2 மாதங்கள் ஆகிற நிலையில் இது வரை 75 பதிவுகள் எழுதிவிட்டேன் 28,500 ஹிட்ஸை நெருங்கிவிட்டேன் அதிலும் சமீப நாட்களாக என் தளத்திற்கு நேரடியாக வருபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது இந்த நேரத்தில் நண்பர்களாக இனைந்திருக்கும் 79 பாலோவர்கள் மின்னஞ்சல் சந்தாதாரர்களாக இனைந்திருக்கும் 194 நபர்கள் மேலும் பதிவை படிக்கின்ற நபர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் ஒவ்வொரு பதிவிற்க்கும் வாக்கு அளித்து பிரபல பதிவாக்கும் நண்பர்கள் அவர்களை குறிப்பிட்டு பெயர் சொல்ல முடியவில்லை காரணம் என் ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொரு விதமான நபர்களே வாக்களித்திருக்கிறார்கள் கருத்துரையும் அதேபோலத்தான் எனக்கு சந்தோஷமாய் இருக்கிறது காரணம் நான் எதை எழுதினாலும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து அருமை என சொல்லாமால் பதிவை பிடித்தவர்கள் மட்டுமே வாக்களிக்கிறார்கள் என்பதையும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தான் வாக்கும் கருத்துரையும் அளிக்கிறார்கள் என்பது என்னைபொருத்தவரை சந்தோஷமாகதானிருக்கிறது இந்த நேரத்தில் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை பதிவு செய்கிறேன்.

    சரி என்ன எழுதுவது என யோசிக்கும் போதுதான் எனக்கே நினைவு வந்தது நம் தளத்தின் பெயரே புரியாத கிறுக்கல்கல் தானே பேசாமல் கவிதை எனும் பெயரில் நான் முன்னர் கிறுக்கிய கிறுக்கல்கள் படித்து பாருங்கள் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

    சின்ன சின்ன ஆசைகள்

    நீ சூடி உதிர்ந்த ரோஜா இதழ்களை
    என் வீட்டு வரவேற்பறையில் வைத்திட ஆசை

    உன் கூந்தலில் முகம் புதைத்து
    நறுமண ரகசியம் தெரிந்திட ஆசை

    என்னை வசீகரிக்கும் தேன் இதழில்
    அழுத்தமாய் முத்தமிட ஆசை

    உன் மார்பினில் ஒட்டியிருக்கும்
    கச்சையாய் பிறந்திட ஆசை

    உன் பிஞ்சுவிரல் சொடுக்கி
    சிம்பொனி இசைத்திட ஆசை

    உன் மெல்லிய இடையில் பூத்திருக்கும்
    வெண் முத்துக்களை ருசித்திட ஆசை

    உன் கால் விரல் நகங்களை
    கடித்து விட ஆசை

    என்றாவது ஒரு நாள்!

    உன் மடியில் தலைசாய்த்தபடியே
    மரித்து விட ஆசை.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    10 Comments
    Comments

    10 Responses to “சின்ன சின்ன ஆசைகள்”

    யூர்கன் க்ருகியர் said...
    June 29, 2010 at 9:54 AM

    என்னது.... கவிதையா ?


    யூர்கன் க்ருகியர் said...
    June 29, 2010 at 9:56 AM

    நல்லாத்தான் இருக்கு :)


    அரபுத்தமிழன் said...
    June 30, 2010 at 11:52 AM

    //உன் மார்பினில் ஒட்டியிருக்கும்
    கச்சையாய் பிறந்திட ஆசை//

    இரவாகி அல்லது அழுக்காகித் தூர வீசப்பட்டு வேறொன்று
    மார்பைத் தழுவுகையில் ஏற்படும் ரணத்திற்கு

    //உன் மடியில் தலைசாய்த்தபடியே
    மரித்து விட ஆசை.// இதுவே பெட்டர்.

    இப்படி உருகுவதற்குப் பெண்ணோ ஆணோ பெறுமதியல்ல.
    இதனால் தான் நானும் காதல் கவிதைகள் எழுதுவதில்லை.


    அரபுத்தமிழன் said...
    June 30, 2010 at 11:53 AM

    ஆங், மற்ற வரிகள் ஓக்கே. :-)


    Mohideenjp said...
    June 30, 2010 at 11:05 PM

    பாரட்டுக்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:20 PM

    @யூர்கன் க்ருகியர்

    புரிந்தால் புனிதம் மறுத்தால் புதிர்


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:20 PM

    @யூர்கன் க்ருகியர்

    நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:21 PM

    @அரபுத்தமிழன்

    தங்களின் கருத்துரையின் அர்த்தம் புரியவில்லை நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:22 PM

    @அரபுத்தமிழன்
    மற்ற வரிகள் பிடித்திருந்தால் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:22 PM

    @vaanmohi

    மிகவும் நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர