Jun 7, 2010

6

இஷ்டத்துக்கு ஐகான் மாத்தலாம்

  • Jun 7, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: அகம்பாவம் பொல்லாத குதிரை அதில் சவாரி செய்ய நினைத்தால் கீழே விழ வேண்டியதுதான்.

    நண்பர்களே சாதரணமாக கணினியில் உள்ள ஐகான்களை நமக்கு இஷ்டமான ஒரு படத்தை நாம் விரும்பும் வகையில் மாற்றமுடியாது மேலும் போட்டோஷாப் தெரிந்தவர்கள் அவர்களுக்கு தேவையான விதத்தில் வடிவமைத்துக்கொள்ள முடியும் அது பற்றி இங்கே என் முந்தைய பதிவு இன்னும் சில மூன்றாம் நபர் மென்பொருள் கொண்டு வடிவமைக்கலாம் ஆனால் அவை யாவும் எனக்கு தெரிந்த வரையில் சிறப்பாக எளிதாக செயல்படுவது போல தெரியவில்லை.

    சாதரணமாக நாம் நமது கணினியில் ஒரு போல்டர் ஐகான் மாற்ற வேண்டுமானால் இப்படியாக செய்வோம் அதற்கான் விளக்கபடம் கீழே பாருங்கள் புரியும்.



    சரி நண்பர்களே நான் எப்பவுமே இப்படித்தான் விரிவாக சொல்கிறேன் என்கிற பெயரில் வழ வழ்வென்று சொல்லிகொண்டிருப்பேன் தயவுசெய்து மன்னிக்க வேண்டும் இனி ஐகான் மேக்கர் தரவிறக்கி கொள்ளுங்கள் தரவிறக்க கிளிக்க வேண்டிய இடத்தை கீழே படத்தில் அடையாளம் காட்டியிருக்கிறேன் பாருங்கள்.



    இதில் நீங்கள் செய்யவேண்டியது நீங்கள் ஐகானாக மாற்ற விரும்பும் படத்தை டிராக் செய்து கட்டத்தினுல் விட வேண்டியதுதான் உடனடியாக ஐகானாக மாற்றப்பட்டு சேமிக்கபடும் இதில் எத்தனை பெரிய அளவு படங்களை இழுத்து விட்டாலும் பிரச்சினையில்லை மேலும் JPG, BMB,GIF இப்படி எந்த படங்களாக பார்மட் ஆக இருந்தாலும் இவன் கவலைப்படுவதில்லை அழகாக மாற்றி தந்துவிடும் பின்னர் படம் 1ல் காண்பித்துள்ள படி நீங்கள் உருவாக்கிய ஐகானை நீஙகள் மாற்ற விரும்பும் போல்டரில் பயன்படுத்தவும்.

    என்ன நண்பர்களே எத்தனை நாட்களுக்கு தான் இப்படி அவர்கள் கொடுத்த ஐகானையே உப்யோகிப்பது இப்போது நமக்கு பிடித்த நபர்களின் போட்டோவை கூட ஐகானாக மாற்றி சேமித்துவிடலாம் தானே! இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்களும் பயணடையட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    6 Comments
    Comments

    6 Responses to “இஷ்டத்துக்கு ஐகான் மாத்தலாம்”

    யூர்கன் க்ருகியர் said...
    June 7, 2010 at 1:05 PM

    super nanbaa !


    முனைவர் இரா.குணசீலன் said...
    June 7, 2010 at 3:29 PM

    பயனுள்ள குறிப்பு நண்பா.


    Vengatesh TR said...
    November 27, 2010 at 1:43 PM

    .பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !

    .உபயோகமான தகவல் !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:35 AM

    @யூர்கன் க்ருகியர்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:36 AM

    @முனைவர்.இரா.குணசீலன்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:38 AM

    @சிகப்பு மனிதன்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர