Jun 23, 2010
யூ டோரண்ட் தரவிறக்க வேகம் அதிகரிக்க (Torrent Speed 25% முதல் 40%)
நண்பர்களே நாம் இனையத்தில் எப்படி கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாதோ அப்படியே இந்த டோரண்டை பற்றி அறியாதவர்கள் குறைவாகவே இருப்பார்கள் இந்த டோரண்டின் வழியாக இலவச மென்பொருள்கள் முதல் கல்வி குறிப்புகள் வரை இலவசமாக கிடைக்கும் இது ஒரு கிளையண்ட் இது பற்றி தெரியாதவர்கள் இங்கு
தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும் மேலும் சில உதவிகளுக்கு இங்கு
பார்க்கவும்.
சாதரணமாக உங்கள் இனைய இனைப்பின் வேகம் மற்றும் Seeders எண்ணிக்கையை பொருத்தே உங்கள் தரவிறக்க நேரம் மற்றும் வேகம் இரண்டும் இருக்கும் மேலும் இதில் நீங்கள் ஏதாவது ஒன்றை தரவிறக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அந்த தரவிறக்கம் முடிந்ததும் உங்கள் கணினியும் யூ டோரண்டின் வழங்கி போல செயல்பட ஆரம்பித்து விடும் அதாவது நீங்கள் ஒன்றை தரவிறக்கி முடித்தவுடன் அது மற்றவர்களுக்கு அப்லோட் செய்ய ஆரம்பித்துவிடும் ஒரு விதத்தில் நல்லதுதான் மற்றவர்கள் நமக்கு அப்படி வழங்குவதால் தானே நமக்கு கிடைக்கிறது ஆனால் உங்கள் இனைய கணக்கு குறிப்பிட்ட அளவு வரையரை நிர்னயிக்கப்பட்டிருந்தால் நிறுத்தி வைத்துவிடுவது நல்லது இல்லையேல் உங்கள் இனைய தொகை அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
சரி நாம இப்ப பார்க்க போவது ஒரு வீடியோ அல்லது ஏதாவது அவசியமான ஒன்றை கொஞ்சம் வேகமாக தரவிறக்க பிட் ரேட் அதிகரிப்பது பற்றித்தான் இதனால் என்ன நண்மை உங்கள் தரவிறக்க வேகம் 20கேபியில் இருந்தால் நாம் செய்யப்போகும் மாற்றங்களில் 20கேபி வேகம் என்பது 40 முதல் 50ஆக கூடிய வாய்ப்பிருக்கிறது இனி கொஞ்சம் கவணமாக கீழே செய்யப்போகும் மாற்றங்களை நீங்களும் செய்து விடவும்.
முதலில் Options கிளிக்கி அதில் Preference என்பதை கிளிக்கவும் இப்பொது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் General என்பதை கிளிக்கி படத்தில் இருப்பது போல இருக்கிறதா என பார்க்கவும் அப்படி இல்லையென்றால் இதன் படியே மாற்றிக்கொள்ளவும.
அடுத்ததாக Connection எனபதை கிளிக்கி Post used for Incoming Connections என்பதில் 47624 என மாற்றிவிடவும் அடுத்து Enable UPnP port mapping எனபதில் டிக் மார்க் இருந்தால் அதை எடுத்து விடவும்.
அடுத்து Bandwidth என்பதில் கிளிக்கி Maximum upload rate (kB/s):[0: unlimited] என்பதின் நேராக உள்ள கட்டத்தில் 65 என மாற்றவும், அடுத்ததாக அதன் கீழே பாருங்கள் அதில் Global maximum number of connections: என்பதில் 1890 என மாற்றவும் அடுத்து Maximum number of connected peers per torrent என்பதில் 2329 என மாற்றவும், அடுத்து Number of upload slots per torrent:என்பதில் 14 என மாற்றிவிடவும்.
அடுத்ததாக BitTorrent என்பதை கிளிக்கி Protocol Encryption என்பதை Enabled செய்துவிடுங்கள்.
இனி Advanced என்பதை கிளிக்கி பின்வரும் மாற்றங்களை நிதானமாக ஒவ்வொன்றாக செய்யவும்.
bt.allow_same-ip-----True
bt.enable_tracker-----True
bt.gracefull_shutdown-----False
bt.send_have_to_seed-----False
gui.bypass_search_redirect-----True
ipfilter.enable-----False
net.max_halfopen-----66
net.outgoing_port-----50
net.wsaevents-----150
peer.disconnect_inactive_interval-----900
queue.dont_count_slow_dl-----False
queue.dont_count_slow_ul-----False
தங்கள் பார்வைக்காக படத்தையும் இனைத்துள்ளேன்
நண்பர்களாக என் தளத்தில் 76 பாலோவர் 168 மின்னஞ்சல் வழி தளம் வருபவர்கள் என இருக்கிறீர்கள் தயவு செய்து ஒரு நிமிடம் செலவழித்து உங்கள் வாக்கையும் கருத்துகளையும் பதிவு செய்வதன் மூலம் மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கலாமே இது உங்களால் முடியும்தானே? நீங்கள் அளிக்கும் ஒரு வாக்கு மேலும் அதிக நபர்களுக்கு சென்றடைய அடிப்படையாய் இருக்கும் உங்களுக்கு தமிழிஷின் பிரபல பகுதி பற்றி தெரியும்தானே ஒரு நிமிடம் செலவழிக்க யோசிக்காதீர்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
45 Responses to “யூ டோரண்ட் தரவிறக்க வேகம் அதிகரிக்க (Torrent Speed 25% முதல் 40%)”
-
Cable சங்கர்
said...
June 23, 2010 at 3:34 PMஞான சேகர்.. இது பிட்டோரண்டுக்கு ம்ட்டுமா.. இல்லை யுடோரண்டுக்கும் கூடத்தானா?
-
ஜிஎஸ்ஆர்
said...
June 23, 2010 at 4:55 PM@Cable Sankar
இது யூ டோரண்டுக்கு மட்டுமே பொருந்தும் நான் பிட் டோரண்டில் முயற்சி செய்து பார்க்கவில்லை வேண்டுமானால் அதையும் முயற்சித்து பார்த்துவிட்டு சொல்கிறேன் பிட் டோரண்டை விட யூ டோரண்ட் சிறப்பாக இருக்கிறது -
சகோதரன் ஜெகதீஸ்வரன்
said...
June 23, 2010 at 9:41 PMஅடுத்ததாக Connection எனபதை கிளிக்கி Post used for Incoming Connections என்பதில் 47624 என மாற்றிவிடவும்
இப்படி செய்தால் This is not a valid integer என்று சொல்கிறது,. என்ன செய்யலாம்.
-ஜெகதீஸ்வரன்.
sagothara.wordpress.com -
வால்பையன்
said...
June 23, 2010 at 9:50 PMயூ டோரண்ட் பயன்படுத்தும் போது நெட்டு அப்படியே உட்காருது, அதுக்கு எதாவது வழியிருக்கா தல!
-
iskcon
said...
June 23, 2010 at 10:36 PMமிக்க அருமை நன்றி.
-
மரா
said...
June 24, 2010 at 12:40 AMநல்ல பல உருப்படியான விசயங்களை எழுதுகிறீர்கள். நன்றி.நன்றி.
-
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 9:47 AM@ஜெகதீஸ்வரன்.
பழைய வெர்சனை நீக்கி விட்டு புதிய வெர்ச்ன் நிறுவுங்கள் -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 10:00 AM@வால்பையன்
சாதரணமாக யூ டோரண்ட் பயன்படுத்தும் போது இனைய வேகம் கொஞ்சம் குறையத்தான் செய்யும் நீங்கள் முதலில் http://www.speedtest.net/சென்று உங்கள் இனைய வேகத்தை சோதித்து பாருங்கள் ஒரு மாற்றத்துக்காக இதையும் http://gsr-gentle.blogspot.com/2010/06/dns.html முயற்சித்து பாருங்கள் அடுத்து புது வெர்சன் இன்ஸ்டால் சோதித்து பாருங்கள் மேலும் இந்த பதிவில் உள்ள கொடுத்துள்ள மாற்றங்களை செய்து பாருங்கள் நிச்சியம் மாற்றம் தெரியும் அப்படியே இதையும் பாருங்கள் http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_8670.html ஒரு வேளை குறிப்பிடும் படியான மாற்றங்கள் தெரியலாம் -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 10:05 AM@iskcon
நன்றி நண்பரே -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 10:07 AM@மயில்ராவணன்
நண்பா உண்மையை சொல்கிறேன் உங்கள் வார்த்தை பிரயொகங்கள் அழகாய் இருக்கிறது -
Sara
said...
June 24, 2010 at 1:47 PMநல்ல தகவல்! யூடோரண்டை பற்றி நிறைய பேரிடம் விசாரித்தேன்! யாரும் தெளிவாக சொல்லித்தரவில்லை! உங்கள் பதிவு கண்ணில் பட்டது! உபயோகமாகியிருக்கிறது! தொடர்ந்து வழங்குங்கள்!
-
முத்து
said...
June 24, 2010 at 2:06 PMரொம்ப உதவிகரமான தகவல் நன்றி
-
Unknown
said...
June 24, 2010 at 4:12 PMமுயன்று பார்த்தேன்.
மாற்றம் செய்றதுக்கு முன்ன 60-80KB/s ஆ இருந்த டவுண்லோட் ஸ்பீட் 95-115KB/s க்கு எகிறிடிச்சு. நன்றி தல..
ஓட்டும் போட்டாச்சு. -
எட்வின்
said...
June 24, 2010 at 4:26 PMநானும் கொஞ்ச நாளா டோரண்ட் கூட முட்டி மோதிக்கிட்டு இருந்தேன். உருப்படியான தகவல் குடுத்திருக்கீங்க. நன்றி.
-
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 5:00 PM@ash
நன்றி நண்பா தங்களை போன்றோரின் கருத்துரைகள் தான் மேலும் பலரை முயற்சித்து பார்க்க தூண்டும் -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 5:02 PM@முத்து
நன்றி நண்பரே உங்களுக்கு வேகம் கூடியதா -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 5:02 PM@junaidநன்றி நண்பா தங்களை போன்றோரின் கருத்துரைகள் தான் மேலும் பலரை முயற்சித்து பார்க்க தூண்டும்
-
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 5:04 PM@எட்வின் முடிந்தவரை அன்றாடும் பயன்படும் நடவடிக்கைகளுக்கான கணினியில் உள்ள நுட்பங்களை மட்டுமே எழுதி வருகிறேன் தொடர்ந்து இனைந்திருங்கள்
-
முத்து
said...
June 24, 2010 at 5:10 PMஜிஎஸ்ஆர் said... 16
நன்றி நண்பரே உங்களுக்கு வேகம் கூடியதா////////
இரண்டு மணி நேரம் போராடி டவுன் லோட் பண்ண மேட்டர் அரை மணி நேரத்தில் முடிந்தது -
prince
said...
June 24, 2010 at 11:44 PMநன்றி நண்பா!! migavum payanullathaai amainthathu....ADOBE Web premium CS5 ..link irunthaal anuppikodungalen ...85.prince@gmail.com
-
Dominic
said...
June 30, 2010 at 6:30 AMமிக பயனுள்ள தகவல்...
isp inaal தரப்படும் உச்ச இணைய பதிவிறக்க வேகம் 120kb/s அக உள்ளது...
torrents பாவித்து இதை விட உயர்ந்த வேகத்தில் பதிவிறக்கலாமா? -
ஜிஎஸ்ஆர்
said...
July 1, 2010 at 5:28 PM@முத்து
தகவல் கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன் -
ஜிஎஸ்ஆர்
said...
July 1, 2010 at 5:29 PM@anonymous முடியுமென்றே நினைக்கிறேன் என்ன அந்த நேரத்தில் உங்களால் இனையத்தில் வேறு ஒன்றும் செய்ய் இயலாது
-
சிநேகிதன் அக்பர்
said...
July 3, 2010 at 12:34 PMநல்ல பகிர்வு நன்றி பாஸ்.
-
guru
said...
July 5, 2010 at 4:59 PMஉங்களுடைய இந்த தெளிவான பதிவிற்கு நன்றிகள்....
நானும் யூடோரண்ட் தான் உபயோகபடுத்தி வருகிறேன்..
உங்களுடைய இந்த பதிவு கண்டிப்பாக எனக்கு உபயோகமாக இருக்கும்.... -
Ramesh
said...
October 22, 2010 at 9:17 AMUngal pathivugal arumai. Ella tholil nutpa padhivum padithu vitten.Arumai. Vaalthukkal
-
Vengatesh TR
said...
November 27, 2010 at 12:34 PM.பகிர்ந்தமைக்கு நன்றி !!
-
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 11:08 AM@அக்பர்தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 11:09 AM@guruதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 11:09 AM@சிகப்பு மனிதன்தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
-
avvavm
said...
December 14, 2010 at 5:32 PMஅருமை தற்போதுதான் தங்களின் ஒவ்வொரு படைப்பையும் படித்து வருகிறேன்.
-
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:25 AM@avvavmநல்லது நண்பரே தஙகளை போன்ற நண்பர்கள் அவசியம் தொடர்ந்து இனைந்திருங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
-
Sethu
said...
July 24, 2011 at 11:53 AMThanks... very use ful information...
-
ஜிஎஸ்ஆர்
said...
September 1, 2011 at 9:02 PM@Sethuபுரிதலுக்கு நன்றி
-
sellvaraj.blogspot.com
said...
December 25, 2012 at 12:37 PMமிகவும் அருமையான தகவல்!
நன்றி! -
Learn more and more
said...
January 14, 2013 at 8:20 PMமிக அருமையான கட்டுரை. ஆனால் உங்கள் அறிவுறை படி net.wsaevents-----150 இந்த எழுத்து advanced column இல் எல்லை. அதனால் அதை மட்டும் மாற்ற முடியவில்லை .
நன்றி பல. -
shiva
said...
January 19, 2013 at 2:04 PMமிகவும் அருமையான பதிவு தங்களுக்கு நன்றி
-
சேலம் தேவா
said...
January 21, 2013 at 1:38 PMஎன்னுடைய கணினியில் உள்ள யூடொரண்ட் வெர்சன் 3.2.3-யில் நீங்கள் Advance பகுதியில் குறிப்பிட்டுள்ள சில பகுதிகள் இல்லை.மற்றபடி பெரும்பாலானவர்களுக்கு மிகப்பயனுள்ள பதிவு.தங்கள் நேரத்தை ஒதுக்கி பதிவிட்டதற்கு நன்றி.
-
manjoorraja
said...
January 21, 2013 at 3:00 PMஇன்று இரவு முயற்சி செய்கிறேன். நன்றி.
-
Unknown
said...
January 21, 2013 at 10:03 PMbrother there is no net.wsaevents-----150
option in version 3.1 -
manjoorraja
said...
January 21, 2013 at 10:24 PMUtorrent plusல் சில கமெண்ட்கள் இல்லை. நீங்கள் சொன்னபடி மற்றவற்றை மாற்றினேன். ஆனால் வேகம் அதிகரிக்கவில்லை
-
Rajkumar R
said...
January 22, 2013 at 2:58 AMநல்ல பதிவு ! வாழ்த்துக்கள்! நன்றி!
-
Unknown
said...
January 23, 2013 at 12:46 AMஉங்கள் நல்ல உள்ளத்தை நான் மதிக்கிறேன் you best thinking nature
-
Unknown
said...
January 24, 2013 at 10:11 PMமதிபிற்குரியவரே,
ஒரு நண்பர் கம்ப்யூட்டர் மெக்கானிக் மூலம் 2012 நவம்பர் மாதம் புதிய கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்த Desktop Computer வாங்கினேன். கம்பெனியின் பெயர் acer அந்த நண்பர் கொடுத்தார். என்னிடம் install windows7 professional CD தரவில்லை. அவர் சொந்த ஊருக்கு நிரந்தரமாக சென்றுவிட்டார். அவர் install செய்தது windows7 professional.
உங்களது கட்டுரைகளை இணையம் மூலம் படித்து பிறகு நாமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.
இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் என்னுடைய கம்ப்யூட்டர் எதாவதுபிரச்சினை என்றால், நானே எப்படி windows7 professional install செய்வது என்னிடம் windows7 professional CD கூட இல்லை.
கடையில் windows7 professional CD வாங்குவது என்றால் என்ன version சொல்லி வாங்க வேண்டும். அந்த CD வாங்க வேண்டுமா அல்லது window home premium வாங்க வேண்டுமா. அதை எப்படி install செய்ய வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு எளிமையாக இணையத்தில் எழுத்து மூலமாக சொல்லித் தர வேண்டும்.
சிறு சிறு தொகுப்பகக்கூட எழுதினால் போதும் என்னுடைய Email ID senthilnathanpts@gmail.com.
என்றாவது ஒரு நாள் கம்ப்யூட்டர் பிரச்சினை ஏற்பட்டு நீங்கள் சொல்லிக் கொடுத்த மாதிரி install செய்து அது success ஆகிவிட்டால் எனது சந்தோஷத்தை எழுத்து மூலமாக முதலில் உங்களிடம் தான் பகிர்ந்துக்கொள்வேன்.
குறிப்பு:
Windows install செய்யும்போது internet on செய்து இருக்கவேண்டுமா அல்லது off செய்து இருக்கவேண்டுமா என்பதை சொல்லவேண்டும். கம்ப்யூட்டரில் அ ஆவன்னா கூட எனக்கு தெரியாது. ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.
நீங்கள் எனக்கு கற்றுத்தருவீர்கள் என்று நம்புகிறேன்.
புகப்பகக்கலைஞர் திரு. ஜி. வெங்கட்ராம் எழுதியது.
தப்பான பாதையில் போயிக்கிட்டிருக்கோம்னு தெரிந்த வினாடியில் திரும்பிடனும். அங்கிருந்தே புதிய வாழ்க்கை ஆரம்பிக்கும். இவ்வளவு தூரம் வந்துட்டோம், இதே பாதையில் போயிடலாம்னு போயிட்டே இருந்தா வாழ்ந்த வாழ்க்கை திருப்தி இருக்காது கிடைச்சதை அமைதியா ஏத்துக்கிட்டு வாழமை பிடிச்ச்சதுக்காக போராடி வாழும் போது கிடைக்கற மனநிறைவுக்கு விலையே இல்லை. அப்படி ஒரு திருப்தியோடு வாழ்ந்தால் இதை உறுருதியா சொல்கிறேன். -
Shanmugavel
said...
May 8, 2014 at 6:57 PMநன்றி ஞானசேகர் நல்ல நல்ல விஷயங்களை எழுதி வருகிறீர்கள்.
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>