Jan 30, 2012

15

வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும்.

  • Jan 30, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஆபத்திற்கு உதவுவது எப்பொழும் சொந்தமல்ல நட்பு மட்டுமே.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களுக்காக, உங்களில் சிலர் சில வலைத்தளங்களில் ஏதாவது ஒரு தகவலை காப்பி எடுத்து வேர்ட் பைலிலோ அல்லது இன்ன பிறவற்றில் பேஸ்ட் செய்யும் போது நாம் காப்பி எடுத்த தகவலோடு அந்த பதிவின் உரலும் (Read more :-http://gsr-gentle.blogspot.com) கூடவே உங்கள் கிளிப்பேர்டில் வந்து இருக்கும் நாம் இந்த பதிவின் வழியாக பார்க்க போவதும் இதைப்பற்றி தான். நான் என்ன சொல்கிறேன் என்பது சரியாக புரியாதவர்கள் என் தளத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து பாருங்கள் புரியும்.

    இனி நீங்கள் செய்ய வேண்டியது tynt™ publisher tools தளத்திற்கு சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்து உங்களுக்கென ஒரு அக்கவுண்ட் உருவாக்கவும்.



    நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கியதும் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் திறக்கும் அதில் உங்கள் தளத்துக்கான ஸ்கிரிப்ட் வந்திருக்கும், ஸ்கிரிப்ட் காப்பி எடுத்து உங்கள் பிளாக்கர் தளம் திறந்து Design-> Edit Html சென்று Ctrl +F அழுத்தி <head> என்பதை கண்டுபிடித்து அதற்கு மேலாக நீங்கள் காப்பி எடுத்த ஸ்கிரிப்ட்டை பேஸ்ட் செய்து விடவும் அவ்வளவு தான். முடிந்தால் ஸ்கிரிப்ட் பேஸ்ட் செய்யும் முன், ஸ்கிரிப்டின் தொடக்கத்தில் <!—XXXXXXX Start--> ஸ்கிரிப்டின் முடிவில் <!—XXXXXXX End--> இப்படியாக சேர்த்து விடுங்கள் XXXXXXX என்பதில் உங்களுக்கு புரியும் வகையிலான தலைப்பை கொடுத்து விடுங்கள் பின்னாளில் தேவையில்லையென்றால் நீக்குவதற்கு ஸ்கிரிப்ட் கண்டுபிடிக்க உதவியாய் இருக்கும்.



    நீங்கள் இதில் கூடுதலாக மாற்றங்கள் செய்ய விரும்பினால் Customize Attribution கிளிக்குவதன் மூலம் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ள முடியும்.

    கூடவே ஒரு செய்தி இதை வைப்பதால் மட்டும் காப்பி எடுத்தவர்கள் உங்கள் பதிவின் உரலை இனைப்பார்கள் என்று கணவு காண வேண்டாம் அழகாக டெலிட் செய்து விடுவார்கள் அது மட்டுமல்லாமல் இது போன்ற தளங்களில் காப்பி எடுக்கும் போது கூடவே வரும் URL வராமல் செய்வதற்கான வழிகளும் இனையத்தில் இருக்கிறது.

    என்ன நண்பர்களே பதிவு உங்களுக்கு உதவியானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Jan 10, 2012

    3

    தங்க நாணயம் 99

  • Jan 10, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மனிதன் பிறப்பது மெய்ஞனாக ஆனால் இறப்பதோ வஞ்சகனாக.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ஒரு கதையின் வழியாக இன்றைய எதார்த்த மனிதனின் நிலையை சொல்லிவிட முடியுமா என்றால் சொல்லிவிட முடியும் என்பது தான் உண்மை முன்பெல்லாம் குறும்படம் பற்றி அதிகம் தெரியாது ஆனால் இப்பொழுது யூடியுப்பில் நான் அதிகம் விரும்பி தேடி பார்ப்பது குறும்படங்களை தான்.. உண்மையில் ஆச்சரியமாய் இருக்கிறது 10 நிமிடத்திற்குள் எத்தனை அழகாய் ஆழமாய் அந்த உணர்வுகளை நமக்குள் உள்வாங்க வைத்துவிடுகிறார்கள் அதிலும் கனேஷ்குமார் டீம் ஒன்று இருக்கிறது அவர்களின் நகைச்சுவை குறும்படங்கள் நன்றாயிருக்கும் நேரமிருந்தால் பாருங்களேன்.

    நான் விரும்பும் தளங்களில் pkp
    , urssimbu
    , www.mybloggertricks.com
    இவைகளும் அடங்கும் இதில் பிகேபி
    குறித்தும் சிலம்பரசன்
    குறித்தும் சில பதிவுகளில் சுட்டிக்காட்டியிருக்கிறேன் ஆனால் பலமுறை பாகிஸ்தான் நண்பர் Mohammad Mustafa Ahmedzai எழுதும் www.mybloggertricks.com
    குறித்து ஏதாவது ஒரு பதிவில் வெளிப்படுத்த நினைப்பேன் ஆனால் குறிப்பிடுவதற்கான இடம் இல்லாததால் இதுவரை அவரை பற்றி குறிப்பிடமுடியவில்லை மேலும் அவர் எழுதுவது எல்லாமே பிளாக்கர் தொழில்நுட்பம், HTML நிரல்கள் தான் என்பதால் அதை எடுத்து மீண்டும் ஒரு மறுபதிப்பு செய்வதில் விருப்பமில்லை இவருடைய தள பதிவுகள் அதிலும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவுகள் பரவலாய் இனையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பேதமில்லாமல் பரவிக்கிடக்கிறது. மேலும் பிளாக்கர் தொழில்நுட்ப தளங்களின் தகவல்களுக்கு பிளாக்கர் தொழில்நுட்ப தளங்கள்
    .

    இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் Mohammad Mustafa Ahmedzai
    ஒரு குட்டி கதையை தன் தளத்தில் சொல்லியிருந்தார் அதையே கொஞ்சம் சுருக்கமாக நமது நடையில் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு வேளை நான் விரும்பியது போல யோசித்த்து போல உங்களையும் யோசிக்க வைக்கலாம்.

    ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் 80% நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலைபார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள் ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை ஆனால் என்ன குறை என்பதையும் அவரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை ஆனால் தன்னிடம் கூலி வாங்கி ஜீவணம் செய்யும் கூலித்தொழிலாளி தன் குழந்தையுடன் குடும்ப சந்தோஷமாக இருக்கிறானே இது எப்படி முடிகிறது என தன் வீட்டு மேனேஜரிடம் கேட்கிறார் உடனே மேனேஜர் அதற்கான ஒரு காரணத்தை சொல்லுகிறார் மேலும் கூடவே ஒரு ஆலோசனையும் சொல்லுகிறார்.

    ஆலோசனையின் படியே 99 தங்க்காசுகளை ஒரு பையில் இட்டு அதை அந்த ஏழை கூலித்தொழிலாளியின் வீட்டு வாசலில் இரவிலேயே போட்டுவிடுகிறார்கள் விடிந்த்தும் கூலித்தொழிலாளி கதவை திறக்கும் போது வாசலில் ஒரு பை இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் எடுத்து பிரித்து பார்க்கிறார் அதில் 99 தங்க காசுகள் ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் அதிர்ச்சி ஆனால் சந்தோஷத்தை கொண்டாடமல் மீண்டும் அந்த தங்க காசுகளை எண்ணி பார்க்கிறார் அதே 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது ஆனாலும் மீண்டும் எண்ணி பார்க்கிறார் அப்போதும் 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது அங்கும் இங்கும் தேடிப்பாத்தும் 100 தங்கக்காசுகள் கிடைக்கவில்லை ஆனால் இப்போது இவருக்கு 99 தங்கக்காசு கிடைத்த போது சந்தோஷப்படாமல் இல்லாத ஒரு தங்க காசுக்கு ஏங்குகிறார் 99 தங்க்காசுகளை 100 ஆக எப்படியும் மாற்றி விட முடிவு எடுக்கிறார்.

    கூலித்தொழிலாளி தன் மேனேஜரிடம் சென்று தனக்கு கொஞ்சம் பணத்தேவை இருப்பதாக சொல்லி தன்னை கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கும்படி கேட்கிறார் அதற்கு மேனேஜரும் சம்மதிக்கிறார் அன்று முதல் எப்படியும் ஒரு தங்க காசு வாங்கி தன்னிடம் இருக்கும் 99 தங்க காசுகளை 100 தங்க காசுகளாக சேர்த்துவிட வேண்டுமென்ற வெறியில் பல மணி நேரம் உழைக்கிறார் இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய மகன் அப்பா எனக்கு விளையாட்டு பொருள் வேண்டும் என கேட்கிறான் ஆனால் அதுவரை மகனிடம் கோபப்படாத தந்தை இப்போது மிகுந்த கோபத்துடன் இப்படி தேவையில்லாத செலவுகளுக்கு எல்லாம் பணத்தை வீணாக்க முடியாது என்பதாக கடினமான வார்த்தைகளை பிரயோகித்து மகனுடன் கூட நேரம் செலவலிக்காமல் ஒரு தங்க காசு மட்டுமே குறியாய் இருக்கிறார்.

    இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா? இப்படித்தான் இன்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நமக்கு கிடைப்பதை வைத்து நாம் சந்தோஷப்படுவதில்லை 10 ரூபாய் கிடைத்தால் 20 ரூபாய் கிடைக்காதவென மனது ஏங்கும் இலட்ச ரூபாய் கிடைத்தால் மனம் கோடிக்கு (தெருக்கோடிக்கு அல்ல) ஆசைப்படும். நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தை நாம் பணத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மனதை ரணமாக்கி நம் சந்தோஷத்தையும் இழந்து நம் குடும்பத்தினர் சந்தோஷத்தையும் சேர்த்தே அழித்து விடுகிறோம்.

    உலகத்தில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் எல்லோரையும் பார்த்து நமக்கு பொறாமையோ, ஆற்றாமையோ இருக்கும் பொதுவாக அவர்களுக்கு என்ன அவர்களிடம் எல்லாம் இருக்கிறது என்பதாக நினைப்போம் ஆனால் அவர்கள் நிலையோ நாம் மேலே பார்த்த கூலித்தொழிலாளி கதையாகத்தான் இருக்கும்.

    எல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருப்பது போல பெரும் கோடீஸ்வரர்களிலும் சில விதி விலக்குகள் இருக்கிறார்கள் உதாரணத்திற்கு : வார்ன் பப்பட், பில்கேட்ஸ் போன்றவர்கள் தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதற்கு தயாராய் இருக்கிறார்கள் அதிலும் வார்ன் பப்பட் கிட்டத்தட்ட தன் பெருவாரியான சொத்துக்களை டிரஸ்டுகளுக்கும் பொது நலன்களுக்கும் கொடுத்துவிட்டார் சமீபத்தில் கூட தன்னிடம் இருப்பதில் 1 மில்லியன் டாலர்கள் மட்டும் எனக்கு போதும் என்பதாக ஒரு செய்தி வந்திருந்தது இவர்களை போல செய்து விட யாருக்கும் மனம் வரும்?

    இன்னொருவர் இருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரு மேஜிக்கல் போன் (ஐபோன்) சொந்தக்கார்ர் முன்னவர்கள் தன்னிடம் இருப்பதை டிரஸ்டுகளுக்கு அள்ளிக்கொடுத்தனர் ஆனால் இவரோ இவர் வரும் முன்பே இயங்கிகொண்டிருந்த டிரஸ்டையும் தான் வந்ததும் நிறுத்தி விட்டார்...பார்த்தீர்களா மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்...

    இந்த வாழ்க்கையில இப்ப இருக்கிற இந்த நிமிடம் நமக்கு சொந்தமானது முடிந்தவரை எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டாலே நமக்கு நிம்மதி வந்துவிடும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவச்சு வாழ பழகுவோம்?...பதிவு கோர்வையில்லாமல் இருக்கலம் ஆனால் சொல்ல வந்த விஷயம் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் விரும்பினால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பகிருங்களேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர