Apr 7, 2010
வேண்டாத இனையதளம் தடையலாம்
என் நண்பர்கள்
நண்பர்களை நம் அலுவலகத்திலோ இல்லை வீட்டிலையோ சில இனைய தளங்களை தடைவதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம் இதற்கு எந்த மென்பொருளின் அவசியமும் இல்லை இதை செய்வதற்கு அதிக சிரமும் இருக்காது மேலும் இதை கண்டுபிடிப்பதும் சற்று கடினமே
சரி நண்பர்களே எனது தள முகவரி http://gsr-gentle.blogspot.com இதை திறக்கவிடாமல் செய்வது எப்படி என பார்க்கலாம் நீங்கள் தடைய விரும்பும் இனையதளத்தை குறித்துக்கொள்ளுங்கள் அதற்காக எனது வலைத்தளத்தை தடை செய்யாதீர்கள்
இனி நீங்கள் செய்ய வேண்டியது டிரைவ் C:\-யை திறந்து அதில் WINDOWS போல்டரை திறந்து அதில் system32 என்னும் போல்டரை திறக்கவும் இனி அதன் உள்ளே drivers என்னும் போல்டர் திறந்தால் அடுத்ததாக etc எனும் போல்டர் இருக்கும் அதனுள்ளே இருக்கும் hosts என்னும் பைல்தான் இந்த வேலையே செய்யபோகிறது (C:\WINDOWS\system32\drivers\etc\hosts)
என்ன நண்பர்களே hosts பைலை கண்டுபிடித்துவிட்டீர்கள் சரி அடுத்து என்ன அந்த பைலை திறக்க இரண்டு முறை கிளிக்கவும் படத்தை பாருங்கள் இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் இதில் Notepad என்பதை பிரவுஸ் செய்து ஓக்கே கொடுக்கவும்
இனி அந்த பைலை திறந்தவுடன் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் 127.0.0.1 என டைப் செய்து அதற்கு அடுத்தபடியாக நீங்கள் தடைய நினைக்கும் இனையதளத்தின் முகவரியை கொடுத்து விடவும் இந்த முறையில் எத்தனை தளங்களை வேண்டுமானாலும் முடக்கலாம்
அடுத்த தளத்தை சேர்க்க நினைக்கும் போது
127.0.0.1 gsr-gentle.blogspot.com
127.0.0.1 www.google.com
இப்படியும் சேர்க்கலாம் இல்லையென்றால் இப்படி எழுதினாலும் தவறில்லை
127.0.0.1 gsr-gentle.blogspot.com
127.0.0.2 www.google.com
என்ன நண்பர்களே எல்லாம் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் பதியவும் அடுத்த பதிவு காணாமல் போன கண்ட்ரோல் பேனல்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
17 Responses to “வேண்டாத இனையதளம் தடையலாம்”
-
நண்பன்
said...
April 22, 2010 at 9:05 AMmiga nalla pathivu thambi
-
ஜிஎஸ்ஆர்
said...
April 22, 2010 at 12:43 PM@buruhaniibrahim
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி -
May 24, 2010 at 3:11 AMமிகவும் அருமையான பதிவு.
எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் save பண்ண முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்.
நன்றி.
சீலன். -
ஜிஎஸ்ஆர்
said...
May 24, 2010 at 1:22 PM@seelan OMD
நண்பா மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் இதை சேமிப்பதில் எந்த பிரச்சினையும் வராது
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ibza
said...
August 24, 2010 at 12:17 PMvery useful post.. thanks a lot.
-
முத்து
said...
August 24, 2010 at 3:23 PMநன்றி பாஸ்,எனக்கு இது பயன் உள்ள பதிவு
-
Speed Master
said...
August 24, 2010 at 3:30 PMI have XP 3 original Pack this method not working??
Could u please advice -
வரதராஜலு .பூ
said...
August 24, 2010 at 3:38 PMVery useful tweek. Thanx for sharing
-
ஜிஎஸ்ஆர்
said...
August 24, 2010 at 5:52 PM@ibzaதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
August 24, 2010 at 5:53 PM@முத்துஅனைவரும் பயன்பெற வேண்டுமென்பதே நமது ஆசையும் தொடர்ந்து இனைந்திருக்க முயலுங்கள்
-
ஜிஎஸ்ஆர்
said...
August 24, 2010 at 5:54 PM@Speed Master விரைவிலேயே XP 3யில் சோதனை செய்து பார்த்துவிட்டு தகவல் சொல்கிறேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
August 24, 2010 at 5:55 PM@வரதராஜலு .பூதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தொடர்ந்து இனைந்திருக்க முயலுங்கள்
-
Mohamed Faaique
said...
August 24, 2010 at 7:30 PMமிகவும் பிரயோசனமான பதிவு நன்பா.. இன்னும் எழுதுங்கள்
-
ஜிஎஸ்ஆர்
said...
August 25, 2010 at 8:56 AM@Mohamed Faaiqueஅன்பின் நண்பா நான் தற்போது இண்ட்லியில் இனைபபதெல்லாம் நான் எழுத வந்த புதிதில் எழுதியது இப்போது இண்ட்லியில் இனைக்கிறேன்
-
Vengatesh TR
said...
November 28, 2010 at 11:44 AM// தடைவதற்கான வழிமுறைகள்
.எனக்கு புரியவில்லை, நண்பா !
.சற்று விளக்கமாக, எனக்கு கூற முடியுமா,நேரம்-இருந்தால், தொழில்நுட்ப நண்பரே ? -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 12:36 PM@சிகப்பு மனிதன்அவசியம் விளக்குகிறேன் ஆனால் இப்போது முடியாது நேரமின்மையே காரணமாக இருக்கிறது மன்னிக்கவும்
-
Vengatesh TR
said...
December 3, 2010 at 12:20 AM.மன்னிப்பு எனும் பெரிய வார்த்தைகளை, நீங்கள் கூற வேண்டாம், நண்பரே !!
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>