Mar 24, 2010

10

பழைய டயரி கிறுக்கல்

 • Mar 24, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஓரு வரி கருத்து:நமக்காக பொய் சொல்கிறவன் நாளை நமக்கு எதிராகவும் பொய் சொல்வான்

  காதல் இந்த வார்த்தையை சொல்லும்போதே ஒரு சிலிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது காதல் என்ற வார்த்தையை கேட்டவுடன் நினைவுகள் பழைய ஞாபகங்களை நோக்கி செல்வதை தடுக்கமுடியவில்லை! உங்களுக்கும் அப்படித்தானா? அது ஒரு உணர்வு அனுபவித்தவர்களுக்கு அதன் தாக்கம் தெரியும், காதல் என்கிற உணர்வே எனக்கு வந்ததில்லையேனு யாராவது சொல்லமுடியுமா? சே, சொல்லவே முடியாதுங்க ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு தருணத்தில் அனுபவபட்டிருப்போம், அது சந்தோஷமா, துக்கமா, வலியா எப்படிவேணாலும் இருக்குமுங்க காதலை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை, எப்பாவது பார்க்கும்போது ஏற்படுகிற சந்தோஷம் பார்க்கமுடியாதப்ப இருக்குற தவிப்பு, பேசமுடியாத நேரங்களில் ஏற்படும் ஏமாற்றம் இதெல்லாம் சுகமா, சுமையா அப்படினு கேட்டா சொல்லதெரியல ஆனால் அந்த வலி இப்படித்தான் இருக்கும் என கிறுக்கியது

  பழைய டயரி கிறுக்கல்

  விதையாய் விழுந்து
  ஆலமரமாய் வளர்ந்து- எனை
  அசைத்து பார்க்கும்
  ஆடி மாத காற்றே!

  நெஞ்சுக்குள் கண்டிராத
  புது சந்தோஷம் தந்தவளே
  எதேச்சையாய் புன்னகைத்தோம்
  எதார்த்தமாய் பழகினோம்

  எனக்குள் காதல் வருமென்று
  எதிர்பார்த்ததில்லை!
  எதிர்பார்க்காமல் வந்த காதலை
  எதிர்நோக்கவும் முடியவில்லை

  ஒவ்வொரு முறை
  உன்னை கடக்கும் போதும்
  என் உயிரை உன்னிடம் விட்டு
  நடைபிணமாய் செல்கிறேன்

  என் காதலில் நீயும்
  நானும் மட்டும் தான் – எனினும்
  உன்னிடம் பேச தயக்கம்,கவலை
  காரணம் என்னவென்று நீயறிவாய்

  சில நேரம் சிரித்து பேசி
  சிரிக்க வைக்கிறாய் – என்னை
  சில நேரம் எதையோ பேசி
  சித்தனாக்கி போகிறாய்

  உன் மீது கோபமில்லை
  ஆனாலும் எனக்குள் சோகம்
  யாரோ எய்த அம்புக்கு
  என்னவள் நீ எப்படி பொருப்பாவாய்!

  உன் நினைவுகள்
  கர்ப்பத்தில் வெளிவந்த
  என் காதலின்
  முதல் பிரசவம்

  என்னங்க படிச்சுடிங்களா? உங்களுக்கு பழைய காதல் ஞாபகம் வந்துச்சாங்க? காதல் அப்படினா என்ன அன்பு, சரி அன்பு இல்லாத மனுஷன் யாராவது இருக்காங்களா எனக்கு தெரிஞ்சவரை யாரையாவது ஒருத்தரை நாம காதலிச்சுகிட்டுதான் இருக்கோம் அது அப்பா,அம்மா,மனைவி,சகோதர சகோதரி சரி இப்படி யாருமேலையவது நாம நமக்கு தெரியாம அன்பு வச்சுருப்போம் என்ன சில நேரம் வெளிக்காட்ட தெரியாம இருப்போம். எனக்குள்ள அன்பு இருக்குனு உள்ளேயே வச்சுகிட்ட யாருக்கு தெரியும் அன்பை வெளிக்காட்டுங்கள் அதற்காக போலியாய் நடிக்காதீர்கள்

  வள்ளுவர் சொன்னபடி
  அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
  என்பும் உரியர் பிறர்க்கு


  குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்  வாழ்க வளமுடன்


  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  10 Comments
  Comments

  10 Responses to “பழைய டயரி கிறுக்கல்”

  buruhaniibrahim said...
  April 20, 2010 at 8:55 AM

  என்னங்க படிச்சுடிங்களா? உங்களுக்கு பழைய காதல் ஞாபகம் வந்துச்சாங்க? காதல் அப்படினா என்ன அன்பு, சரி அன்பு இல்லாத மனுஷன் யாராவது இருக்காங்களா எனக்கு தெரிஞ்சவரை யாரையாவது ஒருத்தரை நாம காதலிச்சுகிட்டுதான் இருக்கோம் அது அப்பா,அம்மா,மனைவி,சகோதர சகோதரி சரி இப்படி யாருமேலையவது நாம நமக்கு தெரியாம அன்பு வச்சுருப்போம் என்ன சில நேரம் வெளிக்காட்ட தெரியாம இருப்போம். எனக்குள்ள அன்பு இருக்குனு உள்ளேயே வச்சுகிட்ட யாருக்கு தெரியும் அன்பை வெளிக்காட்டுங்கள் அதற்காக போலியாய் நடிக்காதீர்கள்

  romba nalaa ezuthi irukkengz thambi
  vazga valamuda thambi  buruhani


  ஜிஎஸ்ஆர் said...
  April 20, 2010 at 9:44 AM

  @buruhaniibrahim

  எதிர்பார்ப்பில்லா அன்பும் ஆதரவும் வாழும் மட்டும் கிடைக்கவெண்டும் அது தங்களிடம் இருக்கிறது

  என்றும் அன்புடன்

  ஞானசெகர்


  ம.தி.சுதா said...
  October 31, 2010 at 11:12 PM

  ஃஃஃஃஃஎனக்குள் காதல் வருமென்று
  எதிர்பார்த்ததில்லை!
  எதிர்பார்க்காமல் வந்த காதலை
  எதிர்நோக்கவும் முடியவில்லைஃஃஃஃ
  சகொதரா காதல் சிலருக்கு மட்டுமே கொடுப்பனையான ஒரு பொருள்...


  ஜிஎஸ்ஆர் said...
  November 1, 2010 at 11:53 AM

  @ம.தி.சுதாநான் முழுதாய் அனுபவித்திருக்கிறேன் நண்பா இப்போது நினைத்தாலும் மனதெல்லாம் மத்தாப்பு பூக்கும்


  சிகப்பு மனிதன் said...
  November 28, 2010 at 1:38 PM

  \\ஒவ்வொரு முறை
  உன்னை கடக்கும் போதும்
  என் உயிரை உன்னிடம் விட்டு
  நடைபிணமாய் செல்கிறேன் \\

  .உங்கள் உயிரை இன்சூரன்ஸ் செய்து விட்டீர்களா, நண்பரே ?
  \\ உன் மீது கோபமில்லை
  ஆனாலும் எனக்குள் சோகம்
  யாரோ எய்த அம்புக்கு
  என்னவள் நீ எப்படி பொருப்பாவாய் \\


  .இதற்கு-மட்டும் எனக்கு, பொருள் புரியவில்லை, கவிஞரே !


  சிகப்பு மனிதன் said...
  November 28, 2010 at 1:44 PM

  .உங்கள் கவிதையை படித போது, எனக்கு பின்வரும் வரிகள் மனதில் தோன்றின, உங்கள் பார்வைக்கே வைக்கிறேன் :


  .கூடு விட்டு கூடு மாறும் வித்தையை நான் திரை-படத்தில் பார்த்தபோது நம்பவில்லை !..உன் கண்களை பார்த்த போது, நம்பாமல் இருக்கமுடியவில்லை !  [தவறேதும் இருப்பின், மன்னிக்கவும்]


  ஜிஎஸ்ஆர் said...
  November 29, 2010 at 11:18 AM

  @சிகப்பு மனிதன்உண்மைதான் நண்பரே இது சம்ப்ந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும்


  ஜிஎஸ்ஆர் said...
  November 29, 2010 at 11:19 AM

  @சிகப்பு மனிதன்மீண்டும் சொல்கிறேன் தங்களுக்கு கவிதை எழுத வருகிறது எழுதுங்கள்


  சிகப்பு மனிதன் said...
  November 30, 2010 at 5:11 AM

  .ஊக்கமளிப்பதர்க்கு நன்றி, நண்பரே !


  .நான் எழுதினால், உங்களிடம் பகிற்கிரேன் la !!


  ஜிஎஸ்ஆர் said...
  December 2, 2010 at 11:17 PM

  @சிகப்பு மனிதன்எழுதுங்கள்


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர