Apr 20, 2010

7

தேவதையை கண்ட நாள்

  • Apr 20, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:ஏழைகள் உணவைத் தேடுகின்றனர், பணக்காரர்கள் பசியை தேடுகின்றனர்.

    என் கிறுக்கல்களில் இதுவும் ஒன்று என நினைத்து படிக்கவும் என் எழுத்துகளில் இலக்கியம் எதிர்பார்க்கவேண்டாம், இதை படிக்கும் போது முதன் முதலாக நீங்கள் காதலித்த பெண்ணை சில ஆண்டுகள் கழித்து சந்திக்க போகிறீர்கள் என நினைத்துக்கொண்டு படித்து பாருங்களேன் ஒருவேளை உங்களால் இதை முழுவதுமாய் உணரமுடியும்

    தேவதையை கண்ட நாள்

    முதன் முதலில் உன்னை சந்தித்த
    அந்த நாளை நினைக்கையில்
    என் பழைய நினைவுகள்
    இப்பவும் புத்தம் புதிதாய்

    உன்னை காணும் முன்
    வழியெல்லாம் கற்பனைகள்
    ஆயிரமாயிரம் ஆசைகள்- நீ
    அறிந்திட வாய்ப்பில்லையடி

    உன்னை பார்த்த பின்பும்
    அறியாதவன் போலிருந்த- என்னை
    எப்படியடி அடையாளம் கண்டாய்
    நான் தான் உன்னவனென்று

    நீ அழைத்த பின் பக்கம் வந்து
    திருட்டு முழி விழித்து –உன்
    அழகை ரசித்ததாலே
    பசித்த வயிறும் பசி மறந்து போனதடி

    தெற்றுப்பல் தெரிய செவ்விதழில்
    நீ சிரிக்கையில் – என்
    எண்ணங்கள் விண்ணில் மறைந்ததை
    நீ எப்படியடி அறிவாய்

    மறந்திடமாட்டிகளே என்று
    வழியனுப்பிய போது
    எனக்குள் உன்மீது கோபம்தான்
    எப்படியடி உன்னால் கேட்க முடிந்தது

    திரும்பும் வழியெல்லாம்
    உன் நினைவுகள்
    என் நினைவுகளை மட்டுமல்ல – என்
    உயிரையும் உன்னிடம் தான் விட்டு வந்தேன்

    இடையறா வேளைப்பளுவின்
    இருக்கத்தை தளர்த்த கூட- உன்
    உருவத்தின் பிம்பம் தேவையென்பதை
    நீ எப்படியடி மறந்து போனாய்

    என் அருமை நண்பர்களே நான் எழுதியது உங்களில் யாராவது ஒருத்தரை பாதிக்குமேயானால் நானும் ஒரு கவிஞனே

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    7 Comments
    Comments

    7 Responses to “தேவதையை கண்ட நாள்”

    நண்பன் said...
    April 21, 2010 at 5:29 PM

    திரும்பும் வழியெல்லாம்
    உன் நினைவுகள்
    என் நினைவுகளை மட்டுமல்ல – என்
    உயிரையும் உன்னிடம் தான் விட்டு வந்தேன்


    Vengatesh TR said...
    November 28, 2010 at 10:05 AM

    .சந்தேகத்துக்கு இடமில்லை, நீங்கள் கவிஞர் தான், !!

    .ஏன், எப்போதும்,பெண்ணை பார்க்கிறது போல், எழுதுகிறார்கள் ??

    .ஒரு ஆணை, பார்த்து பெண் எழுதுவது போல், நான் ஒரு கவிதையையும், கண்டதில்லை என் கண்களில் !! (except in films)



    .பகின்றமைக்கு நன்றி, கவிஞரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:48 PM

    @சிகப்பு மனிதன்அதனால் என்ன ஒரு பெண் ஆண் மீது இருக்கும் காதலை பற்றி ஒரு கவிதை எழுதி விடுவோம்


    Vengatesh TR said...
    November 30, 2010 at 4:26 AM

    .கவிதையை ரசிக்க எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:23 PM

    @சிகப்பு மனிதன் நானும் எழுத நினைக்கிறேன் அதற்கான மன நிலை அமைவதில்லை


    Vengatesh TR said...
    December 3, 2010 at 12:24 AM

    .அவசரம் இல்லை, நண்பரே !

    .அனால், கட்டாயம் வேண்டும், உங்களிடமிருந்து !!


    Vengatesh TR said...
    December 7, 2010 at 7:08 AM

    .நிறைவேற்றி விட்டீர்கள் !!

    http://gsr-gentle.blogspot.com/2010/12/blog-post.html


    .தங்களுக்கு நன்றி, நண்பரே !!


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர