Jun 10, 2010
பதின்மம் மற்றும் இருமம்
நண்பர்களே இது வரை என் தளத்திற்கு வந்து படித்து,என் பதிவுகளுக்கு வாக்களித்து, ஓட்டளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி எல்லோரையும் போலதான் நானும் இந்த பதிவுலகத்துக்கு வந்தேன் எனக்கு தெரிந்ததை எழுதினேன் ஆனாலும் எனக்கு திருப்தி இல்லை என்னுடைய ஆசை என் பதிவுகள் நிறைய நபர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான்(இது பேராசையாகவும் இருக்கலாம்) ஆனால் அதை பாழாய் போன ஓட்டு தடுத்து விடுகிறது, மேலும் நான் யாருடைய பதிவிற்கும் சென்று கும்மியடிப்பதோ கொட்டம் அடிப்பதோ இல்லை, ஒரு வேளை இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், இந்த பதிவுலகில் நான் பதிவு எழுதுபவர்களின் வாக்குகளையோ அல்லது கருத்துரையையோ எதிர்பார்ப்பதில்லை என்னுடைய நோக்கம் வாசகர்களை கண்டுபிடித்து அவர்களிடம் என் பதிவை கொண்டு செல்வதுதான் ஆனால் நான் தோற்று விட்டேன் என்னால் எனக்கான வாசகர்களை கண்டுபிடிக்க முடியவில்லை (அவர்களை கவரும் விதத்தில் என் பதிவுகள் இல்லை). ஒன்றுமில்லாத வெற்று பதிவுகள் பெறும் வரவேற்பு கூட நல்ல சில பதிவுகளுக்கு கிடைப்பதில்லையே என நினைக்கும் போது வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த தகவலும் ஏற்கனவே நான் நண்பர் பிகேபி தளத்தில் பகிர்ந்துகொண்டதுதான் தமிழிஷ் திரட்டியிலும் இனைக்கபட்டது தான் இதை ஏற்கனவே படித்தவர்கள் மன்னிக்கவும் தெரியாதவர்கள் தொடரவும்.
நாம் ஒரு கணிப்பான் (கால்குலேட்டர்) வழியாக 27 + 12 என அடித்து கொடுத்தால் அடுத்த நொடியில் 39 என வந்துவிடும் ஆனால் இந்த விடையை சொல்லும் முன் கணிப்பான் அல்லது கணிணி என்ன செய்கிறது என பார்ப்போம்.
அதற்கு முன் தசாமிசம்(decimal) இருமம் (Binary) எப்படி பயன்படுத்தப்படுகிறது என பார்க்கலாம் நாம் கொடுக்கும் பதின்மம்(decimal) எண்கள் இரும்மாக (Binary) மாற்றப்பட்டு பின்னர்தான் கணக்கிடப்படுகிறது.
முதலில் பதின்மம்(decimal) எப்படி இருமம் (Binary) மாற்றப்படுகிறது என் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு 29 என்ற எண்னை எடுத்துக்கொள்ளலாம்
29÷2=14 – 1
14÷2=7 – 0
7÷2=3 – 1
3÷2=1 – 1
1÷2=0 – 1
29 என்பதன் இருமம் 10111
29 - 11101
அதாவது 29÷2=14.5 என வரும் ஆனால் நீங்கள் 14.5 என்ற எண்ணில அடுத்த குறைந்த முழுமையான எண் 14 என்பதை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் மீதமுள்ள .5 என்பதை நீங்கள் 1 என எடுத்துக்கொள்ளவும் அதேபோல் 1÷2=0 – 1
ஒன்றிலிருந்து 2 வகுபடமுடியாது எனவே அதற்கான விடை 0 தான் ஆனால் நான் மேலே சொன்னபடி -1 என்பதை முழு எண்ணாக கணக்கில் எடுத்துக்கொள்ளவும் மேலே உள்ள கணக்கை பார்த்தால் புரியும் இருதியில் நாம் 27 என்பது இரும்மாக மாற்றினால் 27 என்பது 11101 என கிடைக்கும் இந்த 10111 என்பதை வலது பக்கத்தில் இருந்து எண்களை மாற்றி எழுத வேண்டும்.
10111 என்பதை 11101 என எழுதவேண்டும் இனி தாங்கள் செய்தது சரிதான என தெரிந்து கொள்ள கணிணியில் உள்ள கணிப்பானை (கால்குலேட்டர்) திறந்து அதில் இருமம் Binary என்பதை தேர்ந்தெடுத்து 11101 என அடித்து பதின்மம்(decimal) என்பதை தேர்ந்தெடுங்கள் இப்பொழுது பதின்மமாக மாற்றப்பட்ட எண் 29 என இருக்கும்.
மீண்டும் உதாரணத்திற்கு 12 என்ற எண்னை எடுத்துக்கொள்ளலாம்.
12÷2=6 – 0
6÷2=3 – 0
3÷2=1 – 1
1÷2=0 – 1
12- 0011
விடை : 1100
இனி இருமம்Binary எண்னை எப்படி பதின்மமாக (decimal) மாற்றுவதை பார்க்கலாம்.
மேலே குறிப்பட்டுள்ள படி 29 தசாம்சம்- 11101 இருமம் எண்ணாக மாற்றப்பட்டது இனி அப்படி மாற்றப்பட்ட எண் அதாவது இருமம் 11101 என்பது எப்படி பதின்மமாக 29 என வருகிறது என பார்க்கலாம்
1 1 1 0 1 (இது இருமம் எண்)
2(4) 2(3) 2(2) 2(1) 2(0) (ஒவ்வொரு எண்ணின் கீழ் இது போல எழுதிக்கொள்ளுங்கள் எத்தனை எண்கள் இருக்கிறதோ அதற்கு ஏற்றார்போல பெருக்கும் முறையில எண்களை கூட்டிக்கொண்டே செல்லவும் 1 ,2,3,4, எழுதியது போல அடுத்தடுத்து வரும் எண்களுக்கு 5,6,7 என கூட்டிச்செல்லவும்)
16 8 4 2 1 (இதை பொருத்தவரை 2(0)பெருக்கினால் 0 வரும் ஆனால் இதில் மேலே குறிப்பிட்டுள்ளபடி 0 என்பதை 1 என மாற்றிகொள்ளவும் அடுத்து 2(1) என்பது 2 , 2(2) என்பது 4 , என பெருக்கி எழுதவும்)
16 +8 +4 +1 = 29
இப்பொழுது மூன்று வரிசைகள் இருக்கின்றன முதல் வரிசை இருமம் எண் இரண்டாவது வரிசை இருமம் சூத்திரப்படி நாம் எழுதியது அடுத்து மூன்றாவது வரிசை இரண்டாவது வரிசையின் சூத்திரப்படி பெருக்கி வரும் தொகை நான்காவது வரிசையை பாருங்கள் இதில் நான் என்ன செய்திருக்கிறேன் என்றால் முதல் வரிசையில் உள்ள இருமம் எண்ணில் எந்த இடத்தில் 1 என இருக்கிறதோ அதற்கு கீழாக உள்ள மூன்றாவது வரிசையில் எந்த எண் இருக்கிறதோ அதை எழுதவும் 0 என எங்கெல்லாம் வருகிறதோ அவை இருக்குமிடத்தின் கீழ் உள்ள மூன்றாவது வரிசையில் உள்ள எண்ணை கணக்கில் எடுத்துகொள்ளவேண்டியது இல்லை.
மீண்டும் உதாரணத்திற்கு பதின்மம் Decimal 12 என்ற எண் இருமம் Binary 1100 ஆக மாற்றப்பட்டது இனி Binary 1100 என்பதை Decimal எண்ணாக மாற்றலாம்.
1 1 0 0
2(3) 2(2) 2(1) 2(0)
8 4 2 1
விடை : 8 + 4 = 12
இனி இப்படி சோதனை செய்து பாருங்கள்
29 – 12 = 17
29ன் இருமம் 11101 – 12ன் இருமம் 1100 என கணிப்பான் (கால்குலேட்டர்) வழியாக இருமம் தேர்வு செய்து கழித்து பின்னர் அந்த எண்ணை (decimal) பதின்மமாக மாற்றிப்பார்க்கவும்.
கணிணியில் 0 மற்றும் 1 என்பது இல்லையென்றால் கணிணியே இல்லையென்று சொல்லலாம் மேலை பார்த்தாலே தெரிந்திருக்கும் 0 மற்றும் 1 என்பதே கணிணியில் பிரதானம்.
என்ன நண்பர்களே குழப்புவது போல இருக்கிறத ஒன்றிற்கு இரண்டு முறை வாசித்து பாருங்கள் நிச்சியம் புரிந்துவிடும் மேலும் இது நமக்கு உபயோகப்படுவதில்லை இருப்பினும் தெரிந்துகொள்வதில் தவறில்லையே?
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
7 Responses to “பதின்மம் மற்றும் இருமம்”
-
ஜிஎஸ்ஆர்
said...
June 10, 2010 at 10:10 AMநண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!
நான் தங்களுக்கு அறிமுகமானவன் என்பதற்காகவோ அல்லது நான் உங்களுக்கு வாக்கு அளிக்கிறேன் என்பதற்காகவோ தயவு்செய்து என் பதிவை படிக்காமல் வாக்களிக்க வேண்டாம் என் பதிவு உங்களுக்கு பிடித்தால் அல்லது புரிந்தால் மட்டும் தயவுசெய்து வாக்களிக்கவும்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
மு.ம.ராஜன்
said...
July 4, 2010 at 11:52 AMthangal muyarchikku valthukkal..
thayangamal ezhuthungal..
ungal pathivu ennaipola padikka aasaipadum
therinthu koll aaasai padupavarkalukku
kandeepai thevaipadum -
ஜிஎஸ்ஆர்
said...
July 5, 2010 at 9:02 AM@தமிழன்நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஒருவருக்காவது பயன்பட்டு விடாத என்கிற எண்ணத்தில் தான் இதற்கென நேரம் செலவழித்து எழுதுகிறோம் என்னைப்போன்ற பலரும் தங்கள் வரவிற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
-
Unknown
said...
November 24, 2010 at 12:49 PMyour all the posting very use full for my jobs
-
Alim
said...
November 26, 2010 at 4:09 PMdont stop ur thoughts my friends.. ur's blog is very very useful one
-
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:33 PM@BAHRUஇந்த பதிவை ஏற்கனவே என் தளத்தில் எழுதியிருக்கிறேன் என்பதே என் நினைவில் இல்லை தங்கள் கருத்துரையை பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.
தங்கள் வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:34 PM@Abdulஅவசியம் முடிந்தவரை நல்ல தகவல்களை மட்டுமே எழுத முயற்சிக்கிறேன் முடிந்தால் நம் தளத்தோடு இனைந்திருங்கள்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>