Oct 22, 2011

27

படுக்கையறையில் செல்போன் கேமரா செருப்பால் அடியுங்கள்

 • Oct 22, 2011
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: மானுடம் தழைக்க உரத்த சிந்தனைகள் அவசியம்.

  வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக இரண்டு நபர்களை குறித்தும், பல குடும்ப அந்தரங்கள் வெளிவருவதற்கு காரணமாக இருக்கும் மொபைல் போன் கேமாரா குறித்தும் பார்க்கலாம், நான் பதிவுலகத்திற்கு வருவதற்கு முன்பு எனக்கு இப்போதுள்ள திரட்டிகளை எல்லாம் தெரியாது ஏன் நிறைய தமிழ் தளங்கள் இருக்கிறது என்பதும் தெரியாது ஆனால் முதன் முதலில் நான் கண்ட தமிழ் தொழில்நுட்ப தளம் திரு பிகேபி அவர்களின் pkp.blogspot.com மற்றும் wiki.pkp.in நான் நினைப்பது சரியாக இருந்தால் இன்று தொழில்நுட்பம் பற்றி எழுதிவரும் நண்பர்கள் பலரும் ஒரு நேரத்தில் பிகேபி தள வாசகர்களாக இருந்திருக்க கூடும் ஒரு வேளை இல்லாமால் கூட இருக்கலாம், தமிழில் தொழில்நுட்ப தகவல்கலை தருவதில் பிகேபி-க்கு நிகர் பிகேபி தான், தமிழில் சில கணினி போரங்கள் இருக்கின்றன ஆனால் எத்தனை போரங்களில் கேள்வியை பதிந்தால் பதில் கிடைக்கும்? ஆனால் பெருவாரியான கேள்விகளுக்கு பிகேபி நண்பர்கள் பதில் அளித்து விடுவார்கள். திரு பிகேபி தளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இப்போது அவசியம் இல்லையென்றாலும் ஏதாவது ஒரு நேரத்தில் அவசியம் வரலாம்.

  அடுத்ததாக பதிவுலகத்தில் மாணவன் எனும் பெயரில் அறியப்படும் தம்பி சிலம்பரசன் urssimbu.blogspot.com அவர்கள் தளத்தில் பலவித படைப்புகளை எழுதிவருகிறார் அதில் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது அவரின் வரலாற்று நாயகர்கள் எனும் தொடர்பதிவை குறித்து தான் நமக்கெல்லம் சில வரலாறு நினைவு கூறும் மனிதர்களை பற்றி தெரியும் ஆனால் அவரை பற்றி சிறிதாய் ஒரு கட்டுரையை கூட தயார் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே! ஆனால் தம்பியின் urssimbu.blogspot.com தளத்தின் வரலாறு நினைவுபடுத்தும் உன்னதமான மாமனிதர்களை அழகு தமிழில் இரண்டோ மூன்றோ பக்கங்களில் மொத்த வரலாறையும் நம் கண் முன் நிறுத்தி விடுவார் வாசிப்புக்கு ஏற்ற நடை தமிழ் எனக்கு பிடிக்கும். பள்ளியின் படிக்கும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் இருக்கும் இவரின் வரலாற்று நாயகர்கள் தொகுப்பு, பெற்றோர்கள் யாரேனும் என் தளத்தை இப்போது படித்துகொண்டிருந்தால் அவசியம் இவர் தளத்தை குறித்து வைத்துக்கொள்ளவும்.

  பிகேபி தொழில் நுட்பத்தில் வல்லவர் என்றால், இளையவர் மாணவன் வரலாற்று தகவல்களின் மினி விக்கிபீடியா.

  இனி திரு பிகேபி அவர்களின் ஒரு பதிவை அப்படியே காப்பி எடுத்து பதிகிறேன் இதை மேலும் சிலருடைய கவணத்திற்காவது கொண்டு செல்லவே அவரின் அனுமதி இல்லாமேலேயே (மன்னித்து விடுவார் என்கிற நம்பிக்கை) அவரின் ஒரு பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

  ரொம்ப வருத்தம்

  இப்படி ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவை நான் வெளியிடுவேனென்று என்றுமே நான் நினைத்ததில்லை. சொல்லவேண்டிய சில காரியங்களை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தால் இங்கு சொல்கின்றேன். அப்படி நான் ஒன்றும் புண்ணியவான் இல்லை. நமீதா 200ரூவா ஆபாசம் விசிடி பற்றி பதிவுகளில் கேள்விபட்ட உடனே அதிஷ்டமோ என்னமோ அதற்கான சுட்டியும் நம்மிடம் மாட்டிவிடுகின்றது.எல்லாம் 8 நிமிட கப்சா வீடியோக்கள்.

  ஆனால் நிஜ கணவன்கள், நிஜ மனைவிகளின் ரகசிய விடியோக்கள் ரேப்பிட்ஷேர் சுட்டிகளாக வரும் போது தான் ரொம்ப வருத்தமாய் இருக்கின்றது. அதுவும் இந்திய தம்பதிகளின் அந்தரங்க விளையாட்டுக்கள். பெரும்பாலான வீடியோக்களில் அந்த மனைவியோ அல்லது அந்த பெண் நண்பியோ கேமராவை அணைக்க சண்டைபோடுவாள். அதையும் மீறி அவன் திமிராய் கேமராவை ஸ்டெடியாய் செட் செய்து வைத்திருப்பான். அல்லது அந்த ஒளிப்பட பெட்டியை மறைத்து வைத்திருப்பான். ஆண்கள் மேல் வெறுப்பையே வரவைக்கும் வக்கிர நாய்கள் அவன்கள். மற்றும் சில பெண்கள் அப்பாவியாய் விடயம் தெரியாது இருப்பர். அந்த ஆண் நாய் முடிந்த வரை தன் முகத்தை மறைக்க முயன்றுகொண்டே இருப்பான். தன் கூத்துக்களை வீடியோவில் பார்க்கும் சில நிமிட அற்ப சுகத்துக்காக ஆண் மிருகம் செய்யும் அந்த ஆபாச ரெக்கார்டிங் இணையத்தில் ஒரு முறை வந்து விட்டால். பன்னிக்குட்டி மாதிரி. தடுக்கவே முடியாது.சரமாரியாய் பரவிக்கொண்டே இருக்கும். இந்த இளம் தம்பதிகள் சுதந்திரமாய் வெளிஉலகம் வருவது எப்படி?.

  ஏதோ ஒன்றோ இரண்டோ முறை ஞானி போல் இண்டர்நெட் சாட்டில் தன்னிடம் பேசிய , சில ஆறுதல் வார்த்தைகள் பேசிய அந்த தொலைதூர ஆணை நம்பி தன்னை முழுசாய் வெப்கேமில் காண்பிக்க அவள் மனம் வருகின்றது. உஷாராய் இவன் ரெக்கார்ட் செய்து அந்த காணொளொயை இணையேற்றம் செய்து விடுகின்றான் அவள் நம்பிக்கையில் மண்ணை வாரி போட்டு விட்டு. இவள் மானமும் இணையக் கப்பல் ஏறிவிடுகின்றது.

  எந்த குடும்ப பெண்ணும் அதுவும் நம் நாட்டு குடும்ப பெண்கள் கணவன் அல்லது தனது பாய்பிரண்டு மகிழ்ச்சியாய் இருக்க எது வேண்டுமானாலும் செய்வாள், எதைவேண்டுமானாலும் அனுமதிப்பாள்- ஆனால் தன் உடம்பு இணையத்தில் காட்டிபொருளாய் இருக்க ஆசைப்படுவாளா என்பது சந்தேகமே.

  ஸோ... இந்த நவீன உலகில் சில படுக்கையறை ஒழுக்கங்களை உங்கள் நலனுக்காக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெப்கேம், கேமெரா, கேமரா உள்ள செல்போன் இதையெல்லாம் படுக்கையறைக்கு வெளியே மட்டும் கண்டிஷனாய் வைத்திருங்கள்.

  மீறி வெப்கேமோ, கேமரா உள்ள செல்போனோ, அல்லது வேறெதாவதொரு கேமராவோ படுக்கையறைக்கு கொண்டுவரும் கணவன் எவனானாலும் அவனை செருப்பால் அடியுங்கள். அப்படியொரு ரசனை அவனுக்கு தேவையில்லை.

  நம் பெண்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களில்லை என்ற நம்பிக்கை இருக்கின்றது. செய்திகள் வரலாம்.

  ஸாரி...நண்பர்களே! இப்படி ஒரு dirty பதிவு! :)
  நன்றி திரு.பிகேபி


  நண்பர்களே மேலே இருக்கும் தகவலகளை அவசியம் உங்கள் வேண்டப்பட்டவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், இதை எழுதிமுடிக்கும் வேலையில் நான் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டு எழுதிய" கொஞ்சம் பொருமையாய் கூகுலில் தேடினால் நம் புகைப்படம் கூட கிடைத்து விடும்" என்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  27 Comments
  Comments

  27 Responses to “படுக்கையறையில் செல்போன் கேமரா செருப்பால் அடியுங்கள்”

  Mohamed Faaique said...
  October 22, 2011 at 6:34 PM

  நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  October 22, 2011 at 6:36 PM

  @Mohamed Faaique நன்றி நண்பா முடிந்தால் இதை தங்கள் தளத்திலும் பிரசுரம் செய்யுங்கள்


  stalin said...
  October 22, 2011 at 6:51 PM

  சரியா சொன்னிங்க gsr பிரதர் ...

  நன்றி


  Vijayakumar A said...
  October 22, 2011 at 6:54 PM

  என்னால முடிஞ்சது நான் எனோட friends குலாம் சொலிட்டேன்....


  K.s.s.Rajh said...
  October 22, 2011 at 9:33 PM

  நல்ல பகிர்வு..


  karurkirukkan said...
  October 22, 2011 at 10:54 PM

  thx ,very useful post, nandri


  tHE bOSS said...
  October 23, 2011 at 5:46 AM

  தவிர்க்க முடியாத பதிவு..


  guru said...
  October 23, 2011 at 10:21 AM

  சரியான நேரத்தில் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...


  காந்தி பனங்கூர் said...
  October 23, 2011 at 4:57 PM

  Yes, ladies should not allow camera in bed rooms.

  PKP and silamparasan blogs are very useful to us. Thanks brother


  விச்சு said...
  October 23, 2011 at 6:35 PM

  இன்றைய தலைமுறைக்குத் தேவையான பகிர்வு..நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  October 24, 2011 at 12:03 AM

  @stalinபுரிதலுக்கு நன்றி சகோதரா.


  ஜிஎஸ்ஆர் said...
  October 24, 2011 at 12:04 AM

  @Vijayakumar Aஅவசிய்ம் பகிர்ந்துகொள்ளுங்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்றாகிறது.


  ஜிஎஸ்ஆர் said...
  October 24, 2011 at 12:05 AM

  @K.s.s.Rajh நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  October 24, 2011 at 12:06 AM

  @karurkirukkanதங்கள் நண்பர்களுக்கும் உறவிணர்களுக்கும் சூசகமாக எடுத்துச் சொல்லுங்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  October 24, 2011 at 12:07 AM

  @tHE bOSSதேவையான தகவலும் தானே?


  ஜிஎஸ்ஆர் said...
  October 24, 2011 at 12:08 AM

  @guruவேண்டப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  October 24, 2011 at 12:09 AM

  @காந்தி பனங்கூர்பெண்களுக்கு புரிந்தால் சந்தோஷம்..


  ஜிஎஸ்ஆர் said...
  October 24, 2011 at 12:10 AM

  @விச்சுபுரிதலுக்கு நன்றி மேலும் சிலருக்கு சென்றடையும் வகையில் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்


  மாணவன் said...
  October 24, 2011 at 7:19 PM

  தற்போதைய சூழலில் அனைவரும் அவசியம் இதுபற்றிய தகவல்களை தெரிந்துகொண்டு எச்சரிக்கையாய் இருப்பதற்கு சரியான நேரத்தில் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் அண்ணே நன்றி!

  நண்பர்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை பகிர்ந்துகொள்கிறேன்...!


  மாணவன் said...
  October 24, 2011 at 7:24 PM

  எனனைப்பற்றியும் எனது வலைத்தளத்தையும் பற்றியும் சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே!

  உங்களைப்போன்றவர்களின் ஊக்கத்தாலும், பாராட்டுதலாலும்தான் இதுபோன்ற வரலாற்று தகவல்களை இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. அந்த வகையில் அவ்வபோது எனது சிறுசிறு தவறுகளையும், குறைகளையும் சுட்டிக்காட்டி சிறப்பான முறையில் வழிநடத்துவதில் உங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது அண்ணே, மீண்டும் நன்றிகள் பல.


  மாணவன் said...
  October 24, 2011 at 7:29 PM

  //நான் பதிவுலகத்திற்கு வருவதற்கு முன்பு எனக்கு இப்போதுள்ள திரட்டிகளை எல்லாம் தெரியாது ஏன் நிறைய தமிழ் தளங்கள் இருக்கிறது என்பதும் தெரியாது ஆனால் முதன் முதலில் நான் கண்ட தமிழ் தொழில்நுட்ப தளம் திரு பிகேபி அவர்களின் pkp.blogspot.com மற்றும் wiki.pkp.in நான் நினைப்பது சரியாக இருந்தால் இன்று தொழில்நுட்பம் பற்றி எழுதிவரும் நண்பர்கள் பலரும் ஒரு நேரத்தில் பிகேபி தள வாசகர்களாக இருந்திருக்க கூடும் ஒரு வேளை இல்லாமால் கூட இருக்கலாம், தமிழில் தொழில்நுட்ப தகவல்கலை தருவதில் பிகேபி-க்கு நிகர் பிகேபி தான்///

  உண்மைதாண்ணே, உங்களைப்போன்றே பதிவுலகில் தொழில்நுட்ப தளங்களில் எனக்கும்முதலில் அறிமுகமானது திரு.பிகேபி ஐயாவின் தளம்தான் அதன்மூலம்தான் உங்களின் அறிமுகமும் கிடைத்தது. தொழில்நுட்பத் தகவல்களை பகிர்ந்துகொள்வதில் பிகேபி ஐயா எப்பவுமே கிங்க்தான்.... அவரின் வலைத்தளமும்,போரமும் எங்களைப்போன்ற தொழில்நுட்ப துறையில் இருக்கும் பொறியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.


  ஜிஎஸ்ஆர் said...
  October 27, 2011 at 1:39 PM

  @மாணவன் நான் தங்களை பற்றி பெரிதாய் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் உங்கள் வரலாற்று நாயகர்கள் போன்ற பதிவுகள் பள்ளியில் படிப்பவர்களுக்கு பெரிதும் உதவும் என்பது என் நம்பிக்கை...


  padmanabang said...
  October 27, 2011 at 3:38 PM

  நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  October 31, 2011 at 7:26 PM

  @padmanabangசரியான புரிதலுக்கு நன்றி நண்பரே..


  ZAKIR HUSSAIN said...
  November 5, 2011 at 5:10 PM

  இதில் வெளி நாட்டிலிருப்பவர்களுடன் [ உறவினர்களுடன் ] இலவசமாக பேசுகிறேன் என்று வெப் கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டரிலும் வீட்டில் உள்ள சிறு வயது பிள்ளைகள் பேசுவதால் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. டெக்னாலஜி முன்னேற்றம் சுய மரியாதையையும் கெளரவத்தையும் இழந்து விடும் சூழ்நிலைக்கு நாம் தான் எடுத்து செல்கிறோம்.


  ஜிஎஸ்ஆர் said...
  November 8, 2011 at 1:09 PM

  @ZAKIR HUSSAINஉண்மையை சரியாய் புரிந்துகொண்டீர்கள் நன்றி நண்பா


  srikumarandigitalstudio desaigandhi said...
  December 24, 2011 at 11:17 AM

  நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. நன்றி........


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர