Jul 7, 2011
வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்தால் மந்தபுத்தி (அறிவியல் உண்மை)
வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் எத்தனையோ நண்பர்கள், பெரியோர்கள் இதனை பற்றி தெரியாமல் இருக்க கூடும் ஆனால் நம் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள் டேய் வடக்கு பக்கம் தலை வைக்காதடா.. ஏன் என கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஆனால் அவர்கள் சொல்வதில் விஞ்ஞானம் இருக்கிறது அந்த விஞ்ஞான அறிவியல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நமக்கு எல்லோருக்கும் தெரியும் நம் பூமியே சுற்றிலும் ஒரு காந்த படுகை இருக்கிறது நமது கிரகங்களும் (Planet) காந்த முனைவுகளை கொண்டுள்ளது நம் கிரகங்கள் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி காந்த துருவம் அமைந்திருக்கிறது இதை சாதரணமாக நம்மிடம் இருக்கும் திசை காட்டும் கருவியில் (Compass) பார்த்தாலே தெரியும். திசை காட்டும் கருவியின் மேல்முனை எப்போதும் வடக்கு நோக்கி இருக்கும் எதிர் முனை தெற்கு பகுதியை நோக்கியே இருக்கும் இந்த காந்த சக்தியை முன்பே விஞ்ஞானம் வளராத காலத்திலேயே நம் முன்னொர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் தெற்கு கிழக்கு பகுதிகளில் சரி சமமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது அதனால் நாம் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமால் எழுந்திருக்க முடியும்.
நமது கிரகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது மேலும் சூரியனின் காந்த துருவம் கிழக்கில் இருந்து பூமிக்குள் வருகிறது இதன் அழுத்தம் நம் தலை வழியாக வெளியேற பார்க்கும் போது அதிகபடியான வெப்பம் எதிர் நோக்கி எழும்பும் போது நம் தலையில் ஒரு வித ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு நோய்வாய் ஏற்படும் நிலையும் வருகிறது. இதன் அடிப்படையிலேயே தான் வீட்டின் முகப்பு கூட வைக்கப்படுகிறது இது நம் இந்தியாவில் இதை கடைபிடிக்கிறார்கள் வேறு இடங்களில் குறைவாகவே இருக்கிறது.
மேலும் இது பற்றிய ஆராய்ச்சியில் வடக்கு மற்றும் மேற்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் அதிகமாகவும் உடம்பில் சோர்வுத்தன்மையும் மூளையை மந்த புத்தி ஆக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இரவு உணவு எப்போதும் கஞ்சனை போல சாப்பிட வேண்டும் அதாவது மதிய உணவு உண்பது போல உண்ணக்கூடாது உறங்கும் போது கிழக்கு பக்கம் தலை வைத்து மேற்கு பக்கம் கால் நீட்டவும் அல்லது தெற்கு பகுதியில் தலை வைத்து வடக்கு பக்கம் கால் நீட்டவும். இதற்கு எதிர்மறையான நிலையில் உறங்குபவர்கள் எப்பொழுதும் எரிச்சலும் சோம்பேறித்தனமும், தன்னம்பிக்கையும் இழந்து காணப்படுவார்களாம்.
சரி என்ன பெரிய தூக்கம் தூங்கின பின் நமக்கு என்ன தெரியபோகுது? எப்படி தூங்குனா தான் என்ன என கேள்வி கேட்பவர்களுக்கு உங்கள் இரவு தூக்கம் சரியில்லை என்றால் அன்றைய தினம் விடிந்ததும் உங்களால் அசூசையான நிலையை உணரமுடியும் பின்ன என்ன எடுத்ததுக்கெல்லாம் எரிச்சல் வரும் வீட்டில் சண்டை வரும் அதோடு அலுவகம் சென்றால் அங்கு சொல்லவே வேண்டாம் உங்கள் தூக்கம் தான் பிரச்சினைகளை விடுபட வைக்கும் சரியான தூக்கமின்மையும் மேலும் சில வியாதிகளை பரிசாக தரும் சரியான நேரத்தில் தூங்கி எழுபவரின் மூளைக்கும் மன உளைசல் அல்லது இன்ன பிற காரணங்களால் தூங்காதவர்களின் மூளையும் EGG (ELECTRICAL ACTIVITY IN THE BRAIN) என்கிற பரிசோதனையில் அதிகம் வித்யாசம் வருவதாக சொல்கிறார்கள்.
நாம் சரியாக தூங்காத போது நம் உடலின் தசைகளும் ரிலாக்ஸாக ஆவதில்லையாம் மாறாக முறுக்கு கூடி அதனாலே முதுகு வலி, கை கால் வலி வரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது அதே போலவே தூங்குவதும் எழுந்திருப்பதும் ஒரு சரியான நேரத்தை வழமையாக்கி கொள்வது நல்லது அதனால் உடல் சரியான இயக்கதில் இருக்கவும் செய்யும்.
வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்து படுத்தால் மந்த புத்தி சுகவீணம், தன்னம்பிக்கை குறைவு வரும்.
தெற்கு கிழக்கு தலை வைத்து படுப்பதால் காந்த சக்தியால் நமக்கு இழப்பு ஏற்படுவதில்லை தேவையில்லாதா அசூசகமான நிலை வருவதில்லை.
ஓவ்வொரு நபருக்கும் தூக்கத்திற்கான அளவுகள் இருக்கிறது.
குழந்தைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்க வேண்டும்
இளைஞர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேண்டும்
வயது வந்தவர்கள் 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.
கர்ப்பமான பெண்கள் வழமையாக தூங்கும் நேரத்தை விட மேலும் சில மணி நேரங்கள் உறங்குவது நல்லது.
நண்பர்களே ஒரு அன்பான வேண்டுகோள் இதற்கு பெயரும் காதலாமே! பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.
மேலும் தகவல்களுக்கு wikipedia
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
20 Responses to “வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்தால் மந்தபுத்தி (அறிவியல் உண்மை)”
-
Mohamed Faaique
said...
July 8, 2011 at 12:14 AMஎங்கள் வீட்டிலும் இப்படி தூங்க தடை போட்டு விடுவார்கள். காரணம் இன்றுதான் புரிந்த்தது. அறியத்தந்தமைக்கு ரொம்ப நன்றி..
-
மாணவன்
said...
July 8, 2011 at 8:00 AMவணக்கம்ணே, இதுபற்றி முன்னமே கேள்வி பட்டிருந்தாலும் உங்கள் பதிவின் மூலம் தெளிவாகவும் விரிவாகவும் தெரிந்துகொண்டேன் நன்றி.
-
Thomas Ruban
said...
July 8, 2011 at 1:54 PM//கிழக்கு பக்கம் தலை வைத்து வடக்கு பக்கம் தலை நீட்டவும் அல்லது தெற்கு பகுதியில் தலை வைத்து மேற்கு பக்கம் தலை வைத்து படுக்கவும்.//
புரியவில்லை....
நன்றி நண்பரே -
ஜிஎஸ்ஆர்
said...
July 8, 2011 at 2:10 PM@Mohamed Faaique நம் முன்னோர்கள் சொல்லும் எல்லாவற்றிலும் அறிவியல் இருக்கிறது ஆனால் அந்த அறிவியலை நம்மிடம் சொல்லமால் அல்லது தெரியாமல் வெறுமனே சொல்வார்கள் அதனால் நாம் அவர்கள் சொல்லை கேட்காமல் எதிர்வாதம் செய்வதும்
“முன்னோர்கள் சொல்லுக்கு மூவாயிரம் அர்த்தங்கள்” -
ஜிஎஸ்ஆர்
said...
July 8, 2011 at 2:12 PM@மாணவன் நல்லது தம்பி நம் முன்னோர்கள் சொல்வது வெறும் வார்த்தைகளில்லை அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது.
-
ஜிஎஸ்ஆர்
said...
July 8, 2011 at 2:14 PM@Thomas Rubanவாக்கிய பிழை சரியாக சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி இப்பொழுது மாற்றி விட்டேன்
மீண்டும் ஒரு நன்றி தவறை சுட்டிக்காட்டியமைக்கு... -
விழி வழி
said...
July 8, 2011 at 3:56 PMபயனுள்ளதகவல்........... நன்றி
-
hamaragana
said...
July 8, 2011 at 6:51 PMஅன்புடன் வணக்கம் திரு ஜி எஸ் ஆர் ,
வடக்கு திசை தலை வைத்து படுத்தால் **..நமது உடம்பில் ஒவ்வுறு செல்களிலும் ஒரு ..proton+&nutron.- ...மேலும் . ஒரு சிறிய மின்னோட்டம் உண்டு .இதனால் வட திசை தலை வைத்து படுக்கும் போது பூமியின் காந்த புலன் நமது உடம்பு மூளை செல்களில் எதிர் மறை மின்னோட்டத்தை ஏற்படுத்தும் அல்லது ஈர்க்கும்.. அதனால் நமது உடம்பு அதனின்று விடுபட முயற்சி செய்து கொண்டே இருக்கும் மூளையும் சேர்ந்து !!. ரெண்டும் சோர்வாகி விடும்.. இதனாலே நமது முன்னோர்கள் ...வட திசை தலை வைத்து படுக்காதே.!!. என்றார்கள்.. இன்னும் வீட்டின் அமைப்பு கூட சூரிய கதிர்கள் மற்ற கிரகங்களின் கதிர் வீச்சு நம் வீட்டுக்குள் வர ஏதுவான கட்டிட அமைப்பு [ வாஸ்து ]அமைத்தார்கள் இப்போ சொன்னா !!! நம்மளை கிண்டல் பண்ணும் கூட்டம்தான் உண்டு
உங்கள் பதிவு ஜனரஞ்சகமாக இருக்கிறது வாழ்த்துக்கள். !!! -
மாய உலகம்
said...
July 14, 2011 at 10:17 PMஉண்மைதாங்க...
-
ஜிஎஸ்ஆர்
said...
September 1, 2011 at 9:03 PM@விழி வழி நன்றி....
-
ஜிஎஸ்ஆர்
said...
September 1, 2011 at 9:04 PM@hamaragana நல்ல விஷயங்களை சொல்லும் போது அவர்கள் புரிந்துகொள்ள முடியாவிட்டால் இப்படி ஏதாவது சொல்லி நம்மை முட்டாளக்குவார்கள்.
-
ஜிஎஸ்ஆர்
said...
September 1, 2011 at 9:04 PM@மாய உலகம் நன்றி...
-
Pushparagam
said...
September 8, 2011 at 1:00 PMமன்னிக்கவும். பொதுவாக தெற்கு பக்கம் தான் தலை வைத்து படுக்கவேண்டும்
என்பதாக. வடக்கு பக்கம் கூடாது என்பர். இது தலைமுறை தலைமுறை யாக
எங்கள் வீட்டு வழூகு. இதில் எது சரி.
வடக்க அல்லது தெற்கா - விளக்ககுங்களேன் -
ஜிஎஸ்ஆர்
said...
September 8, 2011 at 2:03 PM@Pushparagamபதிவில் நானும் அதைத்தானே எழுதியிருக்கிறேன் மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்
-
Unknown
said...
September 24, 2011 at 7:09 PMபயனுள்ள தகவல் நன்றி நண்பரே
என்னுடைய வலைப்பூ முகவரி
http://vairaisathish.blogspot.com/ -
ஜிஎஸ்ஆர்
said...
September 29, 2011 at 6:19 PM@வைரை சதிஷ்வருகைக்கும் தங்களின் அறிமுகத்திற்கும் நன்றி
-
mm
said...
October 5, 2011 at 7:38 PMதிரு. GSR அவர்களே!
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
இது போன்று பல நல்ல தகவல்களை எங்களுடன் பரிமாறிக் கொள்ளவும்.
வாஸ்து பற்றி நான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை.
ஆனால், மக்களிடையே பல மூட நம்பிக்கைகளை உருவாக்கி,
அதனை மூலதனமாக்கி தங்களது வயிற்ரை நிரப்பும் சிலரால்
பல நல்ல விசயங்களும் விமர்சனங்களுக்கு உள்ளாகி -
கேலிப் பொருளாகி மக்கள் மத்தியில் மறக்கடிக்கப்பட்டும் விட்டன.
"முன்னோர்கள் சொல்லுக்கு மூவாயிரம் அர்த்தங்கள்" - நிச்சயமாக!!! -
ஜிஎஸ்ஆர்
said...
October 8, 2011 at 1:12 PM@Abdul Rahmanவணக்கம் நண்பரே இறைவனின் சித்தம் இருந்தால் எனக்கு தெரிந்து அது மற்றவர்களுக்கு பயன்படும் என்கிற நிலையில் உள்ளவற்றை மட்டுமே அதிகம் பகிர்ந்து வந்திருக்கிறேன் இனி வருங்காலமும் இப்படித்தான் இருக்கும்..
என்ன செய்ய சிலரின் தவறான தகவல்களில் சில நேரங்களில் எதார்த்தமான உண்மைகள் கூட அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது.
முன்னோர்களின் சொல்லுக்கு மூவாயிரம் அர்த்தங்கள் என்பது உண்மை... -
Unknown
said...
May 29, 2014 at 12:26 AMAbdul Rahman
வணக்கம் நண்பரே இறைவனின் சித்தம் இருந்தால்
எனக்கு தெரிந்து அது மற்றவர்களுக்கு பயன்படும்
என்னுடைய முகவரி face book sabarimuthu -
ஜிஎஸ்ஆர்
said...
May 31, 2014 at 12:41 PM@Sabari Muthu நல்லது அப்படியே ஆகட்டும்.
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>