Sep 29, 2011
ச்சும்மா இரண்டு கணக்கு..
வணக்கம் நண்பர்களே அதிகமான பதிவுகள் எழுதுவதற்கு போதிய நேரமின்மையும்,அயற்சியும் காரணமாய் இருக்கிறது, தொடர்ந்து தளம் வந்து சேரும் நண்பர்கள் இனைந்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.இனி இந்த பதிவின் வழியாக இரண்டு கணக்குகள் பார்க்கலாம் இரண்டிற்கும் சூத்திரம் ஒன்றும் வேண்டியதில்லை, இதற்கென கொஞ்சம் நேரம் செலவழித்து உங்கள் கணித திறமையை சோதித்து தான் பாருங்களேன். இந்த கணக்குகளுக்கான விடையை நான் சில தினங்கள் கழித்து வெளியிடுகிறேன் அதற்கு முன்பாக நீங்கள் விடையை கண்டுபிடித்து பின்னுட்டத்தில் தெரிவியுங்கள் இதற்காக பின்னுட்டங்களை மட்டுப்படுத்த போவதில்லை.
முதல் கணக்கு

நான் தங்களிடம் கேட்ட ஐம்பது ரூபாயை உதாரணமாக ஒரு பெட்டியில் 10 ரூபாய், மற்றொரு பெட்டியில் 20 ரூபாய், வேறொரு பெட்டியில் 20 ரூபாய் இருந்தால் எனக்கு எளிதில் கொடுக்கலாம்.அதே நேரத்தில் ஒரு பெட்டியில் இருந்து வேறொரு பெட்டிக்கு பணம் மாற்றி எடுத்தெல்லாம் கொடுக்க கூடாது.
இந்த மாதிரியாக நான் ஒன்று முதல் ஆயிரத்துக்குள் எவ்வளவு பணம் கேட்டாலும் பெட்டிகளாய் மட்டும் எடுத்துகொடுக்க வேண்டும்
இனி கீழிருக்கும் பெட்டிகளை பாருங்கள் பத்து பெட்டி இருக்கிறது ஒவ்வொரு பெட்டியிலும் தலா ரூ100 இருக்கிறது ஆக மொத்தம் ஆயிரம் இருக்கிறது இது உதாரணத்துக்கு மட்டுமே.
Box 1 | Box 2 | Box 3 | Box 4 | Box 5 | Box 6 | Box 7 | Box 8 | Box 9 | Box 10 |
100 | 100 | 100 | 100 | 100 | 100 | 100 | 100 | 100 | 100 |
நான் தங்களிடம் பணம் ஒன்று முதல் ஆயிரம் வரை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம், நான் எவ்வளவு பணம் கேட்டாலும் நீங்கள் பெட்டிகளாக மட்டுமே எடுத்து தரவேண்டும், உதாரணத்திற்கு நான் முந்நூறு கேட்டால் நீங்கள் மூன்று பெட்டிகளை எடுத்து தரலாம், அதே நேரத்தில் நான் வெறும் ஒரு ரூபாய் மட்டும் கேட்டால் ஒரு ரூபாய் உள்ள ஒரு பெட்டியை மட்டுமே எடுத்து கொடுக்கலாம், இப்படியாக நான் எந்த தொகை கேட்டாலும் பெட்டிகளாக மட்டுமே தரவேண்டும்.
நான் எவ்வளவு பணம் கேட்டாலும் தரக்கூடிய வழியில் பணம் பெட்டியில் இருக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு பெட்டியிலும் எவ்வளவு பணம் போடு வைப்பீர்கள்.விடையை கண்டுபிடித்து பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்.
இரண்டாவது கணக்கு
நீங்கள் ஒரு வியாபாரி தங்களிடம் மொத்தம் நான்கு எடைக்கற்கள் இருக்கிறது அதன் மொத்த எடை 40 கிலோ மட்டுமே இந்த நான்கு எடைக்கற்களும் எந்த எடையில் வேண்டுமானாலும் இருக்காலம் ஆனால் 40 கிலோவிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.
நான் உதாரணத்திற்கு நான்கு எடைக்கற்களின் எடை கொடுத்திருக்கிறேன் இதே போல நீங்கள் விரும்பும் வைகையில் எடைக்கற்களின் எடையை வைத்துக்கொள்ளலாம்.
Weight Kg | Weight Kg | Weight Kg | Weight Kg |
5 | 10 | 12 | 13 |
இனி கணக்கிற்கான கேள்விக்குள் வருகிறேன் உங்களிடம் வரும் வாடிக்கையாளர் 1 கிலோ முதல் 40 கிலோ வரையிலான பொருள்களை வாங்க வரலாம், உதாரணாமாக நான் தங்களிடம் வந்து 27 கிலோ அளவில் அரிசி கேட்கிறேன் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், தங்களிடம் முறையே 5 கிலோ, 10 கிலோ, 12 கிலோ எடைக்கற்கள் இருந்தால் எனக்கான 27 கிலோ எடைகான பொருளை கொடுத்து விட முடியும்.
ஒரு வேளை நான் தஙகளிடம் வெறும் 1 கிலோ அளவிளான பொருளை கேட்டால் உங்களிம் இருக்கும் 12 கிலோ, 13 கிலோ எடைக்கற்களை ஒரு பக்கத்தில் 13 கிலோ எடைக்கல்லையும் மற்றொரு பக்கத்தில் 12 கிலோ எடைக்கல்லையும் வைத்து , 12 கிலோ எடைக்கல் இருக்கும் பகுதியில் எனக்கான 1 கிலோ அளவிலான பொருளை எடை போட்டு கொடுத்து விட முடியும்.
இனி இரண்டாவது கணக்கிற்கான கேள்வி நான் உங்களிடம் 1 கிலோ முதல் 40 கிலோ வரையிலான எந்த எடையில் பொருள் கேட்டாலும் தங்களால் கொடுக்க முடியவேண்டும், அப்படியானால் உங்களிடம் எந்த எடையில் எடைக் கற்கள் இருந்தால் கொடுக்க முடியும்? நான்கு எடைக்கற்கள் எந்த எடையில் இருக்க வேண்டும்.
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு

இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr


14 Responses to “ச்சும்மா இரண்டு கணக்கு..”
-
Mohamed Faaique
said...
1
September 29, 2011 at 7:49 PMமூளைக்கு வேலை வச்சுட்டீங்களே சார்
-
ம.தி.சுதா
said...
2
September 29, 2011 at 7:58 PMஒரு கணக்கு என்னை சுத்திடிச்சு அண்ணாச்சி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன் -
Gopinath M
said...
3
September 30, 2011 at 2:22 PMமுதல் கணக்கிற்கான விடை 1,2,4,8,16,32,64,128,256,489.
-
cheena (சீனா)
said...
4
October 1, 2011 at 5:00 AMஅன்பின் ஜிஎஸ்ஆர் - முதல் கணக்கு ஏற்கனவே மற்றொருவர் பதிவில் இடப்பட்டதுதான். விடைகளை மறுமொழியில் கொடுத்தால் எல்லோரும் பார்ஹ்து விடுவார்களே ! மறுமொழிகளை மட்டுறுத்துங்கள் - சரி அல்லது தவறு எனப் பதில் கொடுங்கள் - இறுதியில் சரியான விடைகளை அறிவியுங்கள். இரண்டாவது கணக்கு பற்றிச் சிந்திக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
-
ஜிஎஸ்ஆர்
said...
5
October 1, 2011 at 2:00 PM@Mohamed Faaiqueவிடையை கண்டுபிடிங்க!
-
ஜிஎஸ்ஆர்
said...
6
October 1, 2011 at 2:01 PM@♔ம.தி.சுதா♔தெரிஞ்ச விடையை எழுதியிருக்கலாமே!
-
ஜிஎஸ்ஆர்
said...
7
October 1, 2011 at 2:02 PM@Gopinath M நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விடை சரியானது தான்..
வாழ்த்துகள்
அடுத்த கேள்விக்கான விடையை கண்டுபிடியுங்கள் -
ஜிஎஸ்ஆர்
said...
8
October 1, 2011 at 2:05 PM@cheena (சீனா)இது என் மேலாளர் வழியாக தெரிந்துகொண்டது. ஏற்கனவே இதைப்பற்றி யாரோ எழுதி இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் முன்பே தெரிந்திருந்தால் முதல் கேள்வியை தவிர்த்திருப்பேன்.
மேலும் மறுமொழிகளை மட்டுறுத்த சொல்லியிருக்கிறீர்கள் அல்லது பதில் அளிக்க சொல்லியிருக்கிறீர்கள் நான் பதில் அளித்து விடுகிறேன்.
முதல் கேள்விக்கான விடை விரைவில் கிடைக்கும் என்பது நான் எதிர்பார்த்தது தான் இரண்டாவது கேள்விக்கும் யாராவது பதில் சொல்லி விட மாட்டார்களா என நானும் காத்திருக்கிறேன்... -
ஜானகிராமன்
said...
9
October 1, 2011 at 9:43 PMஉங்களின் பல பதிவுகளை படித்தேன். அற்புதமாக, பொறுப்புடன் எழுதிவருகிறீர்கள். மிக்க நன்றி.
-
"ராஜா"
said...
10
October 3, 2011 at 9:33 PMsecond puzzle answer is 1,3,9,27...
-
ஜிஎஸ்ஆர்
said...
11
October 3, 2011 at 9:43 PM@ஜானகிராமன்என்னால் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது உருப்படியான தகவல்,என் பதிவுகளால் அவர்கள் பயணடைந்தால் அதுவே மிகப்பெரிய சந்தோஷம்... நம் மக்களுக்கு நம்மாள் முடிந்த ஏதாவது ஒன்றை செய்ய விரும்புகிறேன்.
-
ஜிஎஸ்ஆர்
said...
12
October 3, 2011 at 9:49 PM@"ராஜா"சந்தோஷம் நண்பரே நீங்கள் சொன்னது தான் மேலே கேட்டிருக்கும் கேள்வியின் சரியான விடை.
வாழ்த்துகள் -
Thomas Ruban
said...
13
October 4, 2011 at 10:21 AM1, ANS-1,2,4,8,16,32,64,128,256,489 என்று பிரித்துப் போட்டுக் கொண்டால் சரியாக இருக்கும்.
2. ANS-1,3,9,27
மிக்க நன்றி. -
ஜிஎஸ்ஆர்
said...
14
October 8, 2011 at 1:07 PM@Thomas Rubanமிகச்சரியான விடையை சொல்லியிருக்கிறீர்கள்
வாழ்த்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>