May 20, 2010

19

யுஎஸ்பி-யில் எழுதுவதை தடுக்கலாம்

  • May 20, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பிறரை நாம் கேக்காததால் அநேக விஷங்கள் தெரியாமலே போகிறோம்

    வணக்கம் நண்பர்களே முன்பு போல பதிவு எழுதமுடியவில்லை இதற்கு சில மானசீக அவஸ்தை தான் காரணம் நான் முதன் முதலில் எழுதிய பதிவுக்கு தமிழிஷில் கிடைத்த வாக்கு 12 பின்னர் அடுத்த வந்த எல்லா பதிவுகளும் சராசரியாக 15 முதல் 35 வரை பெற்றிருக்கிறது ஆனால் சமீபத்திய எனது பதிவுகள் 5 வாக்குகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது, 44 பதிவுகள் எழுதிவிட்டேன் ஆனால் இதுவரை எழுதியது சந்தோஷமாக இருந்தது இனி எழுதுவதை நிறுத்திவிடலாம் என நினைத்த போதுதான் Menporul.co.ccஅவர் எழுதிய இரண்டு கருத்துரைகள் இந்த பதிவை எழுத தூண்டியது.

    (1) Hi i know you from the days of pkp wiki. you write well. is it possible for you to move your non-tech posts to separate blog or tech posts only to separate blog so that you get into top ten computer blogs without wasting any time. your blog will get more exposure than you can imagine due to the top ten placement.

    (2) Still you have not answered my question directly. I can include in next top ten as a trial measure if you can consider separate separate blogs.

    Menporul.co.cc நண்பரே மன்னிக்கவும் என்னையும் டாப் டென் தொழில்நுட்ப பதிவுகளில் இனைக்க விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது அதே நேரத்தில் ஒரு பிளாக்கில் எழுதுவதே மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது இனி முடிந்தவரை தொழில் நுட்ப பதிவுகள் மட்டும் பிளாக்கில் இடம்பெற செய்ய முயற்சிக்கிறேன் இருப்பினும் உறுதியாக சொல்லமுடியவில்ல தயவசெய்து மன்னிக்கவும் தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி.

    இன்று கையில் யுஎஸ்பி இல்லாதவர்கள் குறைவு என்பதை விட இல்லாதவர்கள் இல்லை என்று சொல்வதே சரியாக இருக்கும் அந்த அளவிற்கு நாம் இதை பயன் படுத்த தொடங்கியிருக்கிறோம் சரி அதற்கும் இந்த பதிவிற்க்கும் என்ன சம்மந்தம் என நினைக்கவேண்டாம். நம்முடைய கணினியை சில நேரம் நமக்கு தெரிந்த நபர்கள் உபயோகிப்பார்கள் அந்த நேரத்தில் நம் கணினியில் இருக்கும் கோப்புகளை அவர்கள் காப்பி எடுத்துக்கொண்டால் உங்களுக்கு தெரியுமா? தெரியாதுதானே! சரி அதற்கு அந்த யுஎஸ்பி-யில் எழுதவிடாமல் செய்துவிட்டால் காப்பி எடுக்க முடியாமல் தடுத்துவிடலாமே.

    சரி முதலில் அதை எப்படி செயல்படுத்துவது என பார்க்கலாம் இதற்காக மென்பொருள் ஒன்றும் அவசியமில்லை நமது ரிஜிஸ்டரியில் சிறிய மாற்றம் செய்துவிட்டால் போதும் நான் இங்கு இரண்டு விதமான ரிஜிஸ்டரி தருகிறேன் ஒன்று எழுதவிடாமல் தடுக்க மற்றொன்று எழுதுவதை அனுமதிக்க.

    யுஎஸ்பி-யில் எழுதவிடாமல் தடுக்க:

    Windows Registry Editor Version 5.00

    [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
    "WriteProtect"=dword:00000001

    இதை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (Windows Key + R then type notepad) பேஸ்ட் செய்யவும் பின்னர் சேமிக்கும் போது உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பெயர் கொடுத்து எக்ஸ்டென்ஷன் .reg என்பதாக சேமிக்கவும் இனி இதை செயல்படுத்த டபுள் கிளிக் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் கணினியில் இருந்து உங்களுக்கு தெரியாமல் யுஎஸ்பி-யில் காப்பி எடுக்கமுடியாது.

    யுஎஸ்பி-யில் எழுத அனுமதிக்க:

    Windows Registry Editor Version 5.00

    [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
    "WriteProtect"=dword:00000000

    இதை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (Windows Key + R then type notepad) பேஸ்ட் செய்யவும் பின்னர் சேமிக்கும் போது உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பெயர் கொடுத்து எக்ஸ்டென்ஷன் .reg என்பதாக சேமிக்கவும் இனி இதை செயல்படுத்த டபுள் கிளிக் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இனிமேல் உங்கள் கணினி யுஎஸ்பி-யில் எழுத அனுமதிக்கும்.

    என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்களை போன்ற மற்ற நண்பர்களுக்கும் சென்றடையட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    19 Comments
    Comments

    19 Responses to “யுஎஸ்பி-யில் எழுதுவதை தடுக்கலாம்”

    RaghuRamdv said...
    May 20, 2010 at 12:22 PM

    Dear Mr. Ganasekhar,
    Most of your posts are informative. Thanks for all your posts.


    கரிகாலன் said...

    May 20, 2010 at 3:28 PM

    நன்றி பயனுள்ள இடுகை


    ராஜேஷ் said...
    May 20, 2010 at 4:15 PM

    அருமையான் பதிவு நண்பா தொடறட்டும் உங்கள் பணி


    ஜிஎஸ்ஆர் said...
    May 20, 2010 at 5:17 PM

    @RaghuRamdv

    நன்றி நண்பா உங்கள் கருத்துரைதான் என் எழுத்தின் ஊக்கம் தொடர்ந்து வாருங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    May 20, 2010 at 5:17 PM

    @கரிகாலன்

    தங்கள் கருத்துரைக்கு மிக்க் நன்றி நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    May 20, 2010 at 5:19 PM

    @ராஜேஷ்

    நிச்சியம் நண்பா உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்ந்துகொண்டே இருப்பேன்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Anonymous said...

    May 20, 2010 at 6:04 PM

    hi,

    very good information keep going.

    ragu


    ஜிஎஸ்ஆர் said...
    May 20, 2010 at 6:45 PM

    @Anonymous


    நன்றி நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    dominic said...
    May 21, 2010 at 9:04 AM

    Hi,
    keep posting like this information

    nice

    Dominic.,


    Unknown said...
    May 21, 2010 at 9:29 AM

    Dear friend,
    I want pen drive data recovery free software. where it is available. please give the website address.

    M.Gnanasekaran


    ஜிஎஸ்ஆர் said...
    May 21, 2010 at 1:09 PM

    @எம்.ஞானசேகரன்

    Recuva - Download
    http://www.piriform.com/recuva/download

    இதை முயற்சித்து பாருங்களேன்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    May 21, 2010 at 1:10 PM

    @dominic

    நிச்சியம் நண்பா உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்ந்துகொண்டே இருப்பேன்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Anonymous said...

    May 24, 2010 at 2:59 AM

    nice


    MHM NIMZATH said...
    May 28, 2010 at 5:24 PM

    பயனுள்ள தகவல்களை தந்தீர்கள் நண்றி.
    Folder ஐ Delete செய்யாமல் ஆக்குவது எப்படி?
    எண்னை நீங்கள் மண்னிக்க வேண்டும் உங்களுடைய தகவல்களை நான் எனது இணையபக்கத்தில் இணைக்கவுள்ளேன்.


    Vengatesh TR said...
    November 27, 2010 at 7:37 PM

    .recuva ஐ, விட EASEUs DATa REVOVERy WIZARd, மிக உபயோகமாக இருக்கும், என் நான் நினைக்கிறேன், !



    .தித்திக்கும் தகவல், தந்தமைக்கு நன்றி, நண்பரே !


    Vengatesh TR said...
    November 27, 2010 at 7:40 PM

    .how to bring background photos, on folder sir ?

    .particularly, in USB drive's home(primary-initial) folder ?


    .and, it to be set as non-deletable, by others !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:13 AM

    @seelan OMDவருகைக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:14 AM

    @MHM NIMZATHபோல்டர் அழிக்கமுடியால் செய்ய வழி இருக்கிறதென நினைக்கிறேன் முயற்சிக்கலாம்


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:14 AM

    @சிகப்பு மனிதன் அப்படியா நானும் அதை முயற்சித்து பார்க்கிறேன் தகவல் பகிரிந்தமைக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர