Mar 23, 2010
நீங்களும் இசையோடு பாடலாம்
ஆரோக்கியத்திற்கு : உணவில் உப்பையும் எண்ணெயையும் குறைத்துக்கொள்ளுங்கள்
நாம் எல்லோருமே ஏதாவது பிடித்தமான பாடல் கேக்கும்போது நம்மையும் அறியாமால் பாடிவிடுவோம் சிலரின் குரல் இனிமையாக இருக்கும் சிலருக்கு குரல் கரகரப்பாக இருக்கும் இருந்தாலும் எல்லோருக்குமே பாடல் படிக்க விருப்பம் இருக்கும் அதிலும் பெரிய இசை மேதைகளின் இசையில் நமது குரலும் ஒலித்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் சரி நாம ஆசைப்படுறதெல்லாம் நடக்கவா செய்யுது சரி இனையத்தில் கிடைக்கும் கரோக்கி பாடல்களை தரவிறக்கி நாம் நாமாகவே அவர்கள் இசையில் பாடினால் என்ன? பின்னனியில் பாடலாம் அதற்கான மென்பொருள் தொகுப்புகள் இனையத்தில் கிடைக்கின்றன ஆனால் எல்லாம் டாலர் சரி நல்லா பாடுறவங்களுக்கு இது தடையாய் இருக்ககூடாது நேரடியா இசையமைப்பாளர்களின் முன்னிலையில் பாடுவேன் என இருந்தால் உடனே நடக்கிற காரியமா? யூடியூப்-ல் பாருங்கள் நிறைய பேர் தங்களின் சொந்த குரலில் பாடி வலையேற்றியிருக்கிறார்கள் அதில் அவர்களின் திறமையையும் வெளிக்காடியிருக்கிறார்கள், யாருக்கு தெரியும் இந்த முயற்சி உங்கள் இசைபயணத்தின் தொடக்கமாககூட இருக்கலாம் சரி இதுக்காக பணம் கொடுத்தெல்லாம் மென்பொருள் வாங்கவேணாம் இலவசமாக ஆடியோசிட்டி எனும் மென்பொருள் இருக்கிறது இலவசம் என்பதற்காக குறைத்து மதிப்பிடவேண்டாம்
இனி நீங்கள் Audacity தளம் சென்று படத்தில் நான் சிவப்பு நிறம் கொண்டு அடையாளம் காண்பித்துள்ள இரண்டு பைலகளையும் தரவிறக்கி அதில் இன்ஸ்டாலேசன் செய்வதற்கான .EXE பைலை தங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளவும் எல்லாமே வழக்கம்போலத்தான் கணிணியில் நிருவிக்கொளவதில் பிரச்சினை ஒன்றும் இருக்காது நிறுவி முடித்த்தும் புரோக்கிராமினை இயக்க தொடங்குங்கள்
கீழே இருக்கும் படத்தை பருங்கள் அதில் உள்ளது போல Edit எனபதை தேர்வு செய்து Preference என்பதை தேர்ந்தெடுத்து Play other tracks while recording new one என்பதற்கு அருகில் உள்ள கட்டத்தில் டிக் மார்க் கொடுத்து ஓக்கே கொடுக்கவும்
இனி அடுத்ததாக கீழே இருக்கும் படத்தை பாருங்கள் Project எனபதை Import Audio என்பதை கிளிக்கியவுடன் புதிதாய் திறக்கும் விண்டோவில் உங்களுக்கு பிடித்தமான பாடலை பிரவுஸ் செய்து பாடலை உள்ளிடவும்
இனி கீழே படத்தில் உள்ளது போல வந்திருக்கும்
இதுதான் இனி நீங்கள் பாடப்போகும் பகுதி படத்தில் அடையாளம் காண்பித்துள்ள இரண்டு ரேடியோ பட்டனை பாருங்கள் முதலாவது ரேடியோ பட்டன் ரெக்கார்டிங் (அவசியம் ஹெட்போன் தேவை) இரண்டாவது ரேடியோ பட்டன் ரெக்கார்டிங் நிறுத்துவதற்காக நீங்கள் ஹெட்போன் வழியாக பாட்தொடன்கியதும் கீழே ஒரு புதிய விண்டோ திறக்கும் படத்தை பாருங்கள் நான் பகுதியிலே நிறுத்திவிட்டதால் சிறிய ஒலி அலைகள் இருக்கும் நீங்கள் முழுவதும் பாடும்போது மேலே உள்ள ஒலி அளவுக்கு கீழேயும் வந்துவிடும் பாடி முடித்தவுடன் ரெக்கார்டிங் ரேடியோ பட்டனை நிறுத்த மறக்க வேண்டாம்
ரெக்கார்டிங் முடிந்து உங்கள் சொந்த குரலிலே இசையோடு பாடியாகிவிட்டது இனி அதை சேமிக்க வேண்டுமே அதற்கு File மெனுவில் Export As MP3 அல்லது Export As WMV என்பதை தேர்ந்தெடுக்கவும் நான் Export As MP3 எனபதை தேர்ந்தெடுத்திருக்கிறேன் உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தேர்ந்தெடுங்கள் இனி புதிதாக ஒரு விண்டோ திறக்கும் அதில் SAVE எனும் வசதி இருந்தாலும் உங்களால் சேமிக்கமுடியாது அதற்கு நாம் முன்னமே தரவிறக்கிய lame_enc.dll என்கிற சப்போர்ட்டிங் பைலை பிரவுஸ் செய்து உள்ளிடவும் இனி சேமிப்பதில் தடை இருக்காது உங்களுக்கு விருப்பமான பெயர் கொடுத்து ஏதாவது ஒரு டிரைவில் சேமித்துக்கொள்ளவும்
நீங்கள் சேமித்து முடிந்தவுடன் கீழே உள்ள விண்டோ ஒன்று திறக்கும் அதில் உங்களுக்கு தேவையென்றால் விபரங்களை பூர்த்தி செய்யவும் தேவையில்லையென்றாலும் விட்டுவிடலாம்
என்ன ப்பிரியப்பட்ட நண்பர்களே நீங்கள் பாட முடிவெடுத்து விட்டீர்களா சரி இப்பொழுதே தொடங்குகள் இந்த ஆடாசிட்டி மென்பொருளில் நிறைய வசதிகள் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள் குறைந்தபட்சம் உங்கள் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள இவர்களுக்காவது உங்கள் திறமை வெளிப்படட்டுமே யாருக்கு தெரியும் ஒருவேளை நீங்கள் இதன் மூலம் பிரபலமாகக் கூட ஆகலாம் சந்தேகம் இருப்பின் கருத்துரையிடவும்
கரோக்கி பாடல் கிடைக்கும் தளங்கள்
smashits , tamilkaraoke , music.pz10 , punchapaadam , music.cooltoad , karaokemusicindia , tamilkaraokeclub , tamilkaraoke , makemykaraoke , tamilkaraokecds , meragana , tamilmidi , paraparapu , tamilkaraokeworld , iniyathamizh
குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
19 Responses to “நீங்களும் இசையோடு பாடலாம்”
-
2009kr
said...
April 6, 2010 at 8:17 PMஅருமை மிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி
-
நண்பன்
said...
April 19, 2010 at 11:29 PMமிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி buruhani
-
ஜிஎஸ்ஆர்
said...
April 20, 2010 at 8:48 AM@buruhaniibrahim
தங்கள் கருத்துரைக்கு நன்றி
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ம.தி.சுதா
said...
October 31, 2010 at 11:29 PMசகோதரா அருமை.. விரைவில் என் குரலை நீங்கள் கேட்கப் போகிறீர்கள்... (அன்றிலிருந்து எழுதுவதை கைவிடவும் நேரிடலாம்..)
-
ஜிஎஸ்ஆர்
said...
November 1, 2010 at 11:55 AM@2009krவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
November 1, 2010 at 11:56 AM@ம.தி.சுதா ஒரு பாடலை பாடி யூடியுப்பில் வெளியிடுங்க்ள் நண்பா கேட்க ஆவலாய் இருக்கிறோம்
-
மாணவன்
said...
November 1, 2010 at 1:00 PMஇந்த பதிவை இப்போதுதான் கவனித்தேன் நண்பா
அருமையான மென்பொருளை தெளிவாக விளக்கி பதிவிட்டுள்ளீர்கள்
சூப்பர் மென்பொருளை தரவிறக்கிவிட்டேன் பாடுவதற்கு முயற்சி செய்து பார்க்கிறேன் மிகவும் நன்றி நண்பா இப்படியொரு மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்காக...
நானும் ஒரு இசைப்பிரியன் என்பதால் பாடல்களைவிட கரோக்கி இன்ட்ஸ்ருமெண்ட் இசையை அதிகம் விரும்பி கேப்பேன் உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் நிறைய கரோக்கி பாடல் கிடைக்கும் தளங்களை அறிமுகப்படுத்தியதற்காக....
நன்றி
நட்புடன்
மாணவன் -
ஜிஎஸ்ஆர்
said...
November 2, 2010 at 7:57 PM@மாணவன் நான் எனக்கு தெரிந்த விஷயங்கள் பலவற்றையும் இது வரை பகிர்ந்துகொள்ளவில்லை சில நேரம் நான் நினைப்பேன் இதெல்லாம் எல்லோருக்குமே தெரியுமென்று ஆனால் அதை பற்றியே யாராவது எழுதியிருந்தால் அதற்கு இருக்கும் வரவேற்பு பயங்கரமாக இருக்கும்
-
Vengatesh TR
said...
November 28, 2010 at 1:50 PM.இனிமேல், என் வீட்டில் உள்ளவர்கள், பயப்பட போவது, உறுதி என நினைக்கிறேன் ! (என் மெல்லிய மற்றும் இனிமையான குரலை கேட்டு)
.பகிர்வுக்கு நன்றி ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 11:16 AM@சிகப்பு மனிதன்யாருக்கு தெரியும் உங்களுக்குள் ஜேசுதாஸ் இருக்ககூடும்
-
Vengatesh TR
said...
November 30, 2010 at 5:14 AM.அவர் ஆலமரம் போன்றவர் !
.நான் சின்ன செடிக்கு கூட, பொருத்தமானவன் அல்ல, நண்பரே ! -
ஜிஎஸ்ஆர்
said...
December 2, 2010 at 11:16 PM@சிகப்பு மனிதன்அவர் நிச்சியமாய் மிகப்பெரிய பாடகர் என்பதில் சந்தேகமில்லை ஒருவேளை உங்களாலும் சாதிக்க முடியுமே
-
Vengatesh TR
said...
December 2, 2010 at 11:53 PM.முடியும் தான்,
.ஆலமரமே, செடியில் இருந்து தான், வளர்ச்சி கண்டுள்ளது, -
ஜிஎஸ்ஆர்
said...
December 5, 2010 at 9:03 AM@சிகப்பு மனிதன்மிகச்சரியாய் சொல்லியிருக்கிறீர்கள் எனக்கும் இதில் மாற்றுக்கருத்து இல்லை
-
Vengatesh TR
said...
December 7, 2010 at 7:01 AM.நன்றி நண்பரே, !
-
Unknown
said...
December 5, 2015 at 9:40 PMஎனக்கு இதெல்லாம் டவுன் லோடு பண்ண தெரியாது.என் பையனைத்தான் கேட்க வேண்டும்.
-
Unknown
said...
December 5, 2015 at 9:40 PMஎனக்கு இதெல்லாம் டவுன் லோடு பண்ண தெரியாது.என் பையனைத்தான் கேட்க வேண்டும்.
-
Unknown
said...
January 5, 2016 at 2:23 PMயூஸ் பன்னி பாத்துடு சொல்ரேன்
-
MuthukumarERA
said...
June 3, 2018 at 2:20 PMஎனக்கு பாடனணும்னு ஆச
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>