Apr 6, 2010

14

ஸ்டார்ட்(Start) பட்டன் பெயர்மாற்றலாம்

  • Apr 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:தீர்வு ஒன்று இருக்குமானால் முயன்று காண்,ஒன்றும் இல்லாவிட்டால் கவலைப்படாதை

    வணக்கம் நண்பர்களே நாம் இப்போது பார்க்கபோவது நமது கணினியில் இருக்கும் ஸ்டார்ட் பட்டனின் பெயரை நமது விருப்பதிற்கு மாற்றமுடியுமா? மாற்றமுடியும் என்றால் அது எப்படி?

    முதலில் இந்த Resource Hackerஎனும் மென்பொருளை தரவிறக்கவும் சிறிய அளவுள்ள பைல்தான் இனி தரவிறக்கிய பைலில் கீழே இருக்கும் படம் போல இருப்பதுதான் அதனுடைய EXE பைல் அதை இருமுறை கிளிக்கயவுடன் புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் File-Open கொடுக்கவும்





    இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் இதில் பைலின் பெயர் என்கிற இடத்தில் ( %windir%\Explorer.exe )அடைப்பு குறிக்குள் இருக்கும் அந்த பெயரை காப்பி செய்து அங்கு பேஸ்ட் செய்து Open கொடுக்கவும்



    அடுத்து கீழே இருக்கும் விண்டோ திறக்கும் கொஞ்சம் கவணமாக செய்யவும் அதில் String Tabel என்பதை திறந்தால் அதில் நிறைய போல்டர்கள் காணப்படும் அதில் 37ம் நம்பர் போல்டரை திறக்கவும் கீழே பாருங்கள் 1033 என்கிற பைலை கிளிக்கி வலது பக்கம் பாருங்கள் 578 என்கிற எண் இருக்கிறதா அதன் எதிரில் Start என்பது இருக்கிறதா அதில் நீங்கள் Start என்பதற்கு பதிலாக வைக்க நினைக்கும் பெயரை வைக்கவும் நான் Gsr என வைத்துள்ளேன்



    பெயர் மாற்றப்பட்ட பின்பு



    பெயர் மாற்றியாகிவிட்டது இனி நீங்கள் பெயர் மாற்றியவுடன் Compile Script Enable ஆகி இருக்கும் எனவே Compile Script என்பதை கிளிக்குங்கள் இனி File என்பதில் Save as என்பதை தேர்வு செய்து பைலின் Gsr.exe என கொடுத்து சேமித்து விடவும் (Gsr.exe எனபதற்கு பதிலாக நீங்கள் மாற்றிய பெயர்.EXE என சேமிக்கவேண்டும்)படத்தையும் பாருங்கள்



    இனி என்ன முடிந்ததா? அதுதான் இல்லை இன்னும் சில வேலைகள் மீதம் இருக்கிறது start – run எனபதில் regedit என கொடுத்து ஓக்கே கொடுக்கவும் இப்போது புதிய விண்டோ திறந்திருக்கிறதா அதுதான் கணினியின் ரிஜிஸ்டரி இதில் நீங்கள் செல்ல வேண்டிய இடம் இது தான் கவணம் தேவை

    HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\WindowsNT\CurrentVersion\Winlogon

    என்ன நண்பர்களே இறுதியில் Winlogon கண்டுபிடித்து விட்டீர்கள் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் Winlogon என்பதின் மேல் கர்சரை அழுத்தியதும் வலது பக்கம் பாருங்கள் அங்கு Shell எனபதை இரண்டுமுறை கிளிக்கினால் அதில் சிறிய விண்டோ திறக்கும் அதில் முன்பு இருந்த Start.Exe என இருக்கும் அந்த இடத்தில் நான் எனது விருப்ப பெயரான Gsr.exe என மாற்றிவிட்டிருக்கிறேன் இந்த இடத்தில் நீங்கள் முன்னமே ஒரு பெயர் கொடுத்து Save as கொடுத்தீர்கள் ஞாபகம் இருக்கிறதல்லவா அந்த பெயரை கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான் இனி ரிஜிஸ்டரியில் இருந்து வெளியேறி விடுங்கள்



    இனி கணினியை ஒரு முறை ரீபூட் (Restart) செய்து விடுங்கள் இனி பாருங்கள் வித்யாசத்தை மீண்டும் பெயர் மாற்ற விரும்பினால் இதே வழிமுறையை பயன்படுத்தவும்



    இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் பதியவும் தொடர்ந்து இது போல நல்ல தகவல்கள் எழுத விருப்பம் உங்கள் ஆதரவு இருந்தாலே முடியும் யாரும் படிக்கவில்லையென்றால் எழுதுவதில் என்ன பயன்

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்



    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    14 Comments
    Comments

    14 Responses to “ஸ்டார்ட்(Start) பட்டன் பெயர்மாற்றலாம்”

    prabu said...

    May 24, 2010 at 10:11 PM

    sorry sir, ithu ennudaya computer la work pannala sir. restart panna piragu
    "start" irukku


    ஜிஎஸ்ஆர் said...
    May 25, 2010 at 8:46 AM

    @prabu

    தயவுசெய்து ஒரு முறை மீண்டும் கவணமாக முயற்சி செய்து பாருங்களேன் நிச்சியம் செயல்படும்.

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    prabu said...

    May 25, 2010 at 5:05 PM

    sir, ennudaya computer on pannum pothu "c" drive checking varuthu, 10second la
    any one key press pannal than ulla poguthu. itharku oru idea solluga sir pls


    ஜிஎஸ்ஆர் said...
    May 26, 2010 at 9:56 AM

    @prabu

    http://support.microsoft.com/default.aspx?scid=kb;en-us;160963&Product=win2000

    http://www.ehow.com/how_5766265_stop-check-disk-during-boot.html

    http://www.ntcompatible.com/thread11167-1.html

    இதை முயற்சித்து பாருங்களேன் சரியாகவில்லை என்றால் மீண்டும் பதிவு செய்யுங்கள் நிச்சியம் இது பற்றி ஒரு பதிவாகவே எழுதிவிடலாம்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    PRABU said...

    May 26, 2010 at 1:00 PM

    நேரம் இருந்தால் இதனைப் பற்றி ஒரு பதிவு அவசியம் எழுதுங்கள் நண்பரே



    வாழ்க வளமுடன்

    என்றும் உங்கள் பதிவுகளுடன்
    பிரபு


    PRABU said...

    May 26, 2010 at 1:02 PM

    @ஜிஎஸ்ஆர்


    prabu said...

    May 28, 2010 at 9:23 PM

    நேரம் இருந்தால் இதனைப்(stop-check-disk-during-boot) பற்றி ஒரு பதிவு அவசியம் எழுதுங்கள் நண்பரே



    வாழ்க வளமுடன்

    என்றும் உங்கள் பதிவுகளுடன்
    பிரபு


    ஜிஎஸ்ஆர் said...
    May 29, 2010 at 9:07 AM

    @prabu

    தாங்கள் கேட்டுக்கொண்டபடியே எழுதியாகிவிட்டது நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    PRABU said...

    May 29, 2010 at 11:29 AM

    நண்பரே நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரியவில்லை.
    என்னுடைய வேண்டுகோளினையும் ஏற்றுக்கொண்டு ஒரு பதிவினை அளித்துள்ளிர்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் நண்பரே...



    வாழ்க வளமுடன்

    என்றும் உங்கள் பதிவுகளுடன்
    பிரபு


    Vengatesh TR said...
    November 28, 2010 at 12:09 PM

    .இதனை தான், வெகுநாட்களா தேடிக் கொண்டிருந்தேன் !!


    .பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:31 PM

    @சிகப்பு மனிதன்இப்பொழுது சந்தோஷம் தானே


    Vengatesh TR said...
    November 30, 2010 at 4:39 AM

    .மிக்க சந்தோசம், நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:21 PM

    @சிகப்பு மனிதன்சரியான புரிதலுக்கு நன்றி


    the talent boy said...
    August 16, 2012 at 6:27 PM

    nalla nalla thagaval galukku nandri.keep it up.


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர