Apr 7, 2010

18

காணாமல் போன கண்ட்ரோல் பேனல்

  • Apr 7, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:அன்பு தன்னையே கொடுக்கிறது அது வாங்கப்படுவதில்லை

    நண்பர்களே சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது கணினியில் வைரஸ் பிரச்சினை காரணமாக கண்ட்ரோல் பேனலை திறக்க முடியவில்லை என கேட்டிருந்தார் (உங்களுக்கு இப்போது தேவையில்லை என்றாலும் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதாவது உபயோகப்படலாம்) சரி இதையும் ஒரு பதிவாக எழுதிவிடலாமே என்கிற முடிவு தான் இந்த பதிவின் நோக்கம்

    சில கணினிகளில் அட்மின் மட்டுமே கண்ட்ரோல் பேனல் திறக்கமுடியும் சில நேரங்களில் வைரஸ் தொல்லையினாலும் கண்ட்ரோல் பேனல் முடங்கி விடக்கூடும் அந்த நேரத்தில் ரிஜிஸ்டரியையும் சேர்த்து முடக்கிவிடும் ரிஜிஸ்டரி திறக்க முடிந்த்தென்றால் சில மாற்றங்கள் மேற்கொண்டு சரி செய்துவிடலாம் சரி ரிஜிஸ்ட்ரியை திறக்க முடியவில்லை அப்போது என்ன செய்யலாம்
    -----------------------------------------------------------------------------------

    Option Explicit

    'Declare variables
    Dim WSHShell, n, MyBox, p, t, mustboot, errnum, vers
    Dim enab, disab, jobfunc, itemtype

    Set WSHShell = WScript.CreateObject("WScript.Shell")
    p = "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System\"
    p = p & "DisableRegistryTools"
    itemtype = "REG_DWORD"
    mustboot = "Log off and back on, or restart your pc to" & vbCR & "effect the changes"
    enab = "ENABLED"
    disab = "DISABLED"
    jobfunc = "Registry Editing Tools are now "

    'This section tries to read the registry key value. If not present an
    'error is generated. Normal error return should be 0 if value is
    'present
    t = "Confirmation"
    Err.Clear
    On Error Resume Next
    n = WSHShell.RegRead (p)
    On Error Goto 0
    errnum = Err.Number

    if errnum <> 0 then
    'Create the registry key value for DisableRegistryTools with value 0
    WSHShell.RegWrite p, 0, itemtype
    End If

    'If the key is present, or was created, it is toggled
    'Confirmations can be disabled by commenting out
    'the two MyBox lines below

    If n = 0 Then
    n = 1
    WSHShell.RegWrite p, n, itemtype
    Mybox = MsgBox(jobfunc & disab & vbCR & mustboot, 4096, t)
    ElseIf n = 1 then
    n = 0
    WSHShell.RegWrite p, n, itemtype
    Mybox = MsgBox(jobfunc & enab & vbCR & mustboot, 4096, t)
    End If

    -----------------------------------------------------------------------------------

    மேலை உள்ள கோடிங்கை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (windows key + R then type notepad) பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது regenb.vbs என சேமிக்கவும் இதில் regenb எனபது பெயர் .vbs என்பது அதன் எக்ஸ்டென்சன் உங்களுக்கு புரியும் வகையில் பெயர் கொடுத்து.vbs சேமித்துகொள்ளவும்

    regenb.vbs என்கிற பைலை இருமுறை கிளிக்கவும் உடனே உங்கள் கணினி ரீபூட் ( Restart) செய்ய சொல்லும் அதன்படியே செய்யவும் இனி தங்கள் கணினியில் ரிஜிஸ்டரி Enable ஆகி இருக்கும் இது வைரஸ் காரணமாக முடங்கி இருந்தாலும் அல்லது அட்மின் முடக்கி இருந்தாலும் இரண்டையும் சரி செய்து விடும் (இதையே ரிஜிஸ்டரி Disable ஆக மாற்றவும் பயன்படுத்தலாம்)

    இனி இரண்டாவது கட்டமாக என்ன செய்யவேண்டும் ரிஜிஸ்டரியில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் அதற்கு இந்த வழிமுறையை பின்பற்றலாம்

    ----------------------------------------------------------------------------------

    [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
    "NoControlPanel"=dword:00000000

    [HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
    "NoControlPanel"=dword:00000000

    -----------------------------------------------------------------------------------

    நான் முன்பு சொன்னது போலவே ஒரு நோட்பேட் திறந்து (windows key + R then type notepad) பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது cpenb.reg என சேமிக்கவும் இதில் cpenb எனபது பெயர் .reg என்பது அதன் எக்ஸ்டென்சன் உங்களுக்கு புரியும் வகையில் பெயர் கொடுத்து.reg சேமித்துகொள்ளவும், வழக்கம் போல இருமுறை கிளிக்கினால் இதுவே ரிஜிஸ்டரியில் கண்ட்ரோல் பேனலை Enable செய்து விடும்.

    சரி இத்தனை செய்த பின்பும் கண்ட்ரோல் பேனல் திறக்கவில்லை அதற்கு என்னதான் செய்வது அடுத்த வழிமுறையையும் பார்த்துவிடுவோம்

    Start – Run and Type gpedit.msc ஓக்கே கொடுக்கவும் இனி திறக்கும் விண்டோவில் User Configuration எனபதன் கீழே உள்ள Administrative Templates என்பதை இருமுறை கிளிக்கி வலது பக்கம் திறக்கும் விண்டோவில் Control Panel என்பதை இருமுறை கிளிக்கவும்



    கீழே இருக்கும் படத்தை பாருங்கள் இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் Prohibit access to the Control Panel என்பதை இருமுறை கிளிக்கவும்



    இனி கீழே இருக்கும் படத்தை போல ஒரு புதிய விண்டோ திறந்திருக்கும் அதில் படத்தில் உள்ளது போல Enable என்பதை தெரிவு செய்து அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து கணினியை Restart செய்து விடுங்கள் இனி கண்ட்ரோல் பேனல் திறக்கும்



    சரி நண்பர்களே இனியும் கண்ட்ரோல் பேனல் திறக்கவில்லையா என்ன சரி கவலையை விடுங்கள் இன்னும் ஒரு வழிமுறையையும் பார்த்துவிடுவோம்
    Start –Run – Type regedit

    இந்த இடத்தை கண்டுபிடியுங்கள் ஒன்றும் சிரமம் இருக்காது
    HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System

    என்ன நண்பர்களே System என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள் அப்படியே வலது பக்கம் பாருங்கள் NoDispCPL என இருக்கிறதா அதை இருமுறை கிளிக்கி திறக்கும் விண்டோவில் ஜீரோ (0) என மாற்றிவிடுங்கள் இனி நிச்சியாமாக கண்ட்ரோல் பேனல் திறக்கும்



    என்ன நண்பர்க்ளே பதிவு மிக நீளமாகிவிட்டது என நினைக்கிறேன் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் பதியவும்

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்



    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    18 Comments
    Comments

    18 Responses to “காணாமல் போன கண்ட்ரோல் பேனல்”

    நண்பன் said...
    April 20, 2010 at 12:41 PM

    onnume puriyala rombavum kolappittenga thambi


    Colvin said...
    July 13, 2010 at 2:06 PM

    மிக மிக அற்புதமான குறிப்பு. முன்னரெல்லாம் இத்தகைய சந்தர்ப்பங்களில் நான் PC ஐ Format செய்வேன். இக்குறிப்பு மிக பயன்படும். இன்னும் சில Tools களையும் பாவித்து இதனை செய்ய முடியும் பதிவுகள் சிலவற்றில் வாசித்த ஞாபகம்.

    உங்கள் குறிப்பு மிக பயனுள்ளது. நான் இதனைPrint எடுத்து எனது File இல் போடப் போகிறேன்.


    ஜிஎஸ்ஆர் said...
    July 14, 2010 at 5:08 PM

    @colvin

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நண்பா


    Mohamed Faaique said...
    August 23, 2010 at 9:13 AM

    அசத்தல்...


    மாணவன் said...
    August 23, 2010 at 9:16 AM

    அருமை நண்பரே,

    அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள், என்னைப்போன்ற ஹார்டுவேர் துறையை கற்று வருகின்றவர்களுக்கு மிகவும் முக்கியமான அவசியமான பயனுள்ள பதிவு...

    தொடர்ந்து இன்னும் சிறப்பான பதிவுகளை எதிர்பார்த்து...

    ஆவலுடன்...

    உங்கள். மாணவன்

    உங்களுடைய இமெயில் முகவரி கிடைக்குமா நண்பரே..


    Meshak said...
    August 23, 2010 at 6:40 PM

    சூப்பர் தல,நானும் பார்மேட் தான் ஒரே வழின்னு நினைச்சிகிட்டிரிந்தேன்.அடுத்த முறை இதை முயன்று பார்க்கிறேன்.


    எஸ்.கே said...
    August 23, 2010 at 7:00 PM

    பார்மெட் பண்ணாமல் இப்படியும் ஒரு வழி உள்ளதா! தகவலுக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!


    Unknown said...
    August 23, 2010 at 11:42 PM

    நண்பரே,

    தங்களின் பதிவை நான் தவறாமல் படித்துக்கு வந்துள்ளேன் .. தற்பொழுது என் மடி கணினியில் சிறிய பிரச்சனை.. If I remove the Lap top from the charger, the sound effect is not coming.. Even though If i remove the charger port after full charging, it very difficult to hear the music, and talk through skype to my home.. If you, Know abt the Solution Pls let me know.. I ll be ever thankful to you.


    உண்மையுள்ள,

    வாசகி


    ஜிஎஸ்ஆர் said...
    August 24, 2010 at 9:15 AM

    @Mohamed Faaique நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    August 24, 2010 at 9:19 AM

    @மாணவன்உங்கள் விருப்பபடியே என்னால் முடிந்தவரை நல்ல பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன் தங்களுக்கு நேரமிருந்தால் நம் பழைய பதிவுகளை படித்து பாருங்களேன் என்னை தொடர்பு கொள்ள நமது தளத்தில் மேலே வலது பக்கம் பாருங்கள் அதன் வழியாக நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் நேரடியாக எனக்கு வந்துவிடும்


    ஜிஎஸ்ஆர் said...
    August 24, 2010 at 9:26 AM

    @Tamilulagamமன்னிக்கவும் தங்கள் தளத்தில் பதிவை இனைக்க திறந்தால் இப்படியாக இருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    August 24, 2010 at 9:29 AM

    @Meshakநன்றி நண்பா நிச்சியம் அடுத்த முறை முயன்று பாருங்கள் அடிக்கடி பார்மட் செய்வதை தவிர்த்து விடுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    August 24, 2010 at 9:31 AM

    @எஸ்.கேஇன்னும் சில சந்தர்ப்பங்களில் இதனினும் மாற்று வழி இருக்கிறது இருந்தாலும் இது தங்களுக்கு உதவியாக இருந்தால் மகிழ்ச்சிதான் மேலும் நண்பரே அடிக்கடி பார்மட் செய்வதை தவிர்த்து விடுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    August 24, 2010 at 9:44 AM

    @saroஎன் பதிவின் வழியாக நீங்கள் பயனடைந்தால் நிச்சியம் மகிழ்ச்சியே, சரி பிரச்சினையை பார்ப்போம் சாதரணமாக இது உங்கள் மதர்போர்டில் ஏதாவது பிரச்சினை இருந்தால் இது போல் நடக்க வாய்ப்பிருக்கிறது மேலும் இந்த பிரச்சினை எப்போது தொடங்கியது, உங்கள் மடிக்கணினி கீழே விழுந்ததா? கணினியில் இது அல்லாமல் வேறு ஏதேனும் பிரச்சினையை சந்திக்கிறீர்களா? எரிச்சலூட்டும் வகையில் எதுவும் தகவல் வருகிறதா? தங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நமது தளத்தில் வலது பக்கம் மேலை பாருஙள் அது வழியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிடுங்கள் கூகுள் அரட்டையில் வந்தால் உதவு செய்ய வசதியாயிருக்கும்


    prithik said...
    August 24, 2010 at 11:16 PM

    என்னுடைய கண்ணியில் kaspersky ஒரிஜினல் பதிப்பை பயன்படுத்திவருகிறேன் இருந்தும் என் கணினி அடிக்கடி bluescreen னுடன் restart ஆகிறது இது என்ன பிரச்னை எண்டு என்னால் கணிக்க முடியவில்லை அண்ணா எனக்கு இதை பற்றி தகவல் தரவும்


    ஜிஎஸ்ஆர் said...
    August 25, 2010 at 9:13 AM

    @prithikஇதை பாருங்கள் ஒருவேளை தங்களுக்கு உதவக்கூடும்


    Vengatesh TR said...
    November 28, 2010 at 11:52 AM

    .பதிவு நீளமாக போக போக, உங்களுக்கும் எங்களுக்கும், இருக்கும் தூரம், குறைந்து கொண்டே வருகிறது ! (படித்து - பின்தொடர்ந்து (follower) )


    .என் சாதாரண நேரத்தையும், பொன்னான நேரமாக, மாற்றுவதற்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:35 PM

    @சிகப்பு மனிதன்உங்களை போன்ற நண்பர்களால் தான் எனக்கு கிடைக்கும் நேரத்தை மற்றவர்களுக்கு பயனுள்ளதாய் மாற்றிக்கொண்டிருக்கிறேன்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர