Apr 6, 2010

9

அஸைன் ஷார்ட்கட் கீ

  • Apr 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:நல்ல வாய்ப்பு பறந்த வண்ணம் இருக்கிறது எவர் பிடிக்கிறாரோ அதை அவர் அடைகிறார்

    நாம் சாதரணமாக கணினியில் ஒரு மென்பொருள் நிறுவினாலும், நாம் தினமும் உபயோகபடுத்தும் பைல்களுக்கு டெஸ்க்டாப்பில் ஷார்ட்கட் கொடுத்து வைப்போம் அதன் வழியாக நாம் புரோக்கிராம் வழி திறக்காமலே திறக்க இயலும் இந்த வழியில் தான் நாம் புதிதாக ஒரு மென்பொருள் நிறுவினாலும் தானாகவே டெஸ்க்டாப்பில் ஒரு ஷார்ட்கட் உருவாகியிருக்கும் இதை விட வேறு வழியில் ஷார்ட்கட் வைத்துக்கொள்ள முடியுமா ? முடியும் என்றால் அதற்கான வழிமுறையை பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம் இது குறித்தான எனது முந்தைய பதிவு ரன் கட்டளைகள்

    Start- Programs அதில் நீங்கள் ஷார்ட்கட் உருவாக்க நினைக்கும் பைலில் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும் இது Programs-ல் எல்லா புரோகிராம்களுக்கும் பொருந்தும்



    கீழே இருக்கும் படத்தை பாருங்கள் Shortcut Key என்பதற்கு எதிரில் None என இருக்கிறதா இனி அந்த None என்பதில் கர்சரை அழுத்தி தங்களுக்கு வேண்டிய கீயை அஸைன் செய்யவும் நான் F2 என்பதை அஸைன் செய்திருக்கிறேன்



    இதில் கூடுமானவரை F1 முதல் F12 வரை உள்ள கீயை மட்டும் உபயோகிக்கவும் வேறு கீயை அஸைன் செய்யும் போது பிரச்சினைகள் வரக்கூடும்

    உதாரணமாக இதே புரோகிராமுக்கு நான் 0 முதல் 9 வரையிலான ஒரு எண்ணையோ அல்லது A முதல் Z வரையிலான எழுத்தையோ அஸைன் செய்தால் ஏதாவது ஒரு இடத்தில் டைப் செய்யும் போது அந்த எண்ணோ எழுத்தோ வருவதிற்கு பதிலாக நாம் முன்னமே அஸைன் செய்த புரோகிராம் தான் திறக்கும்

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்



    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    9 Comments
    Comments

    9 Responses to “அஸைன் ஷார்ட்கட் கீ”

    யூர்கன் க்ருகியர் said...
    April 6, 2010 at 5:33 PM

    good info!


    ஜிஎஸ்ஆர் said...
    April 6, 2010 at 6:24 PM

    \\யூர்கன் க்ருகியர் said...

    good info!\\


    தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

    முந்தைய பதிவையும் பாருங்களேன்
    http://gsr-gentle.blogspot.com/2010/04/start_06.html

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    hamaragana said...
    April 6, 2010 at 7:36 PM

    dear friend
    thanks a lot for the idea !!


    ஜிஎஸ்ஆர் said...
    April 6, 2010 at 8:01 PM

    \\hamaragana said...

    dear friend
    thanks a lot for the idea !!\\

    வாங்க நண்பா தொடர்ந்து இனைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Unknown said...
    April 7, 2010 at 5:06 PM

    நீங்கள் சொன்னது போல் shortcut key உருவாக்கும் போது Ctrl+Alt+(தேவையான எழுத்து) அழுத்தினால் தானே அப்ளிகேசன் திறக்கும்.Ctrl+Alt அழுத்தும் தேவை இருப்பதால் எந்த எழுத்து கொடுத்தாலும் பிரச்னை இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.


    ஜிஎஸ்ஆர் said...
    April 10, 2010 at 10:11 AM

    \\Siva said...
    April 7, 2010 3:36 PM

    நீங்கள் சொன்னது போல் shortcut key உருவாக்கும் போது Ctrl+Alt+(தேவையான எழுத்து) அழுத்தினால் தானே அப்ளிகேசன் திறக்கும்.Ctrl+Alt அழுத்தும் தேவை இருப்பதால் எந்த எழுத்து கொடுத்தாலும் பிரச்னை இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.\\


    மன்னிக்கவும் சிவா பதில் எழுத தாமதம் ஆகிவிட்டது நீங்கள் சொல்வதும் சரிதான்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    நண்பன் said...
    April 12, 2010 at 10:24 PM

    வணக்கம் நன்பரே தாங்களில் பதிவுகள்
    எல்லாம் மிகஅருமையாக இருக்கிறது.
    புருஹானி


    Vengatesh TR said...
    November 28, 2010 at 12:05 PM

    .நானும் இப்படி தான், பயன்படுத்தி வருகிறேன் !!

    .புடுபிட்டமைக்கு நன்றி, நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:34 PM

    @சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர