Apr 26, 2010

20

தரவிறக்க முடியாத பாடல், வீடியோவை சேமிக்கலாம்

  • Apr 26, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:விருப்பமுள்ளவனை விதி வழிகாட்டிச் செல்லும், பிடிக்காதவனை விரட்டிச்செல்லும்.

    வணக்கம் நண்பர்களே எனக்கு தெரிந்த தகவல் அது மற்றவர்களுக்கு உபயோகப்படட்டும் என்கிற நினைப்பில் எழுதி வருகிறேன் அதில் நண்பர்கள் படித்து பயனடைவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, கற்றுக்கொண்டவைகள் நமக்குள் புதைந்து போவதில் யாருக்கு என்ன இலாபம்? அந்த வித்த்தில் உங்களுக்கும் எனக்குமான தொடர்பை மேம்படுத்த பிளாக்கரின் வசதி பெருமளவில் உதவி புரிகிறது. நான் யாரென்று உங்களுக்கு தெரியுமா? இல்லை நீங்கள் யாரென்று எனக்குதான் தெரியுமா? முகம் தெரியா நட்பில் போலித்தனம் இல்லை என்பதை என் தளத்திற்கு வரும் உங்கள் வழியாக அறிந்து கொண்டேன்.

    சரி இப்படி எழுதினால் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம் நாம் விஷயத்துக்குள் செல்வோம் சாதரணமாக இனையத்தில் நமக்கு பிடித்த பாடல்களையோ அல்லது வீடியோவையோ தரவிறக்கி வைத்துக்கொள்வோம் ஆனால் சில நேரங்களில் நாம் தரவிறக்க முயற்சிக்கும் போது சில செய்திகள் நம்மை எரிச்சலூட்டும் அதாவது பாடல்களை நாம் இனையத்திலேயே கேட்கமுடியும் ஆனால் தரவிறக்க முடியாது யோசித்து பாருங்கள் நமக்கு மிகவும் பிடித்தமான பாடல் அல்லது வீடியோவை நம்மால் தரவிறக்க முடியாவிட்டால் நமக்கு எரிச்சல் வரத்தானே செய்யும் அந்த மாதிரி நேரங்களில் நாம் எப்படி அந்த பாடலை நம் கணினிக்கு கொண்டு வருவது எனப்பார்க்கலாம்.

    நீங்கள் Free Coder 8.1 MB
    சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளவும் இப்போது உங்கள் பிரவுசரில் புதிதாக ஒரு டூல்பார் இருக்கும் இந்த டூல்பார் வழியாகத்தான் நாம் தரவிறக்க முடியாத பாடல் மற்றும் வீடியோவை ரெக்கார்ட் செய்யப்போகிறோம் இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது பாடல்களை ரெக்கார்ட் செய்யும்போது kbit/s உயர்த்தி செய்துகொள்ளலாம் அப்படி செய்வதால் கொஞ்சம் இசையில் நல்ல மாற்றம் தெரியும் முன்பெல்லாம் அனைத்து பாடல்களும் 128 kbit/s என்கிற அளவில் தான் இருந்தது இப்பொழுது 224 kbit/s என்கிற அளவில் வருகிறது இதன் அளவு கூடும்தோறும் அதன் தரம் அதிகரிக்கும் சரி இனி எப்படி ரெக்கார்ட் செய்வது என பார்க்கலாம்.



    இதில் முதலாக Settings என்பதை கிளிக்கி அதில் Storage Directory என்பதில் நீங்கள் ரெக்கார்ட் செய்யும் ஆடியோ அல்லது வீடியோ எங்கே சேமித்து வைக்கவேண்டும் எனபதை குறிப்பதாகும் எங்கு சேமித்து வைக்கவேண்டும் என்பதை மாற்றிக்கொள்ளவும், அதன் கீழே இருக்கும் Video Capture Settings என்பதில் நான் 50MB என கொடுத்துள்ளேன் அதில் உங்கள் விருப்பம் போல அளவை மாற்றிக்கொள்ளவும். இங்கு நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் எந்தவொரு வீடியோ இனையம் வழியாக நீங்கள் பார்த்துகொண்டிருந்தாலும் அத்தனை வீடியோவும் இதில் இருக்கும்,அடுத்து Audio Capture Settings இதில் ஆடியோ ரெக்கார்ட் செய்வதற்கு நீங்கள் விரும்பும் அளவில் kbit/s மாற்றிக்கொள்ளவும் முடிந்தவரை 128 kbit/s அல்லது 224 kbit/s என்கிற அளவில் இருந்தால் நல்லது.

    Video History மேலே இருக்கும் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள் இதில் நீங்கள் இனையம் வழி பார்க்கும் ஒவ்வொரு வீடியோவும் உங்கள் அனுமதியில்லாமலே ரெக்கார்ட் ஆகி கொண்டிருக்கும் இதில் உங்களுக்கு தேவையான வீடியோவை உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளலாம் தேவையில்லை என நினைப்பவற்றை அழித்து விடலாம் அதிலியே வீடியோ பார்க்கும் வசதியும் இதில் இருக்கிறது.இது யூடியூப் மற்றும் எல்லாவிதமான தளங்களில் இருக்கும் வீடியோவை பதிவு செய்யும் என்பது இதன் சிறப்பு.

    Audio Record மேலே இருக்கும் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் தரவிறக்க முடியாத பாடல் அதே நேரத்தில் பாடல் கேக்கும் வசதி இருந்தால் மட்டுமே ரெக்கார்ட் செய்ய இயலும் என்பதை நினைவில் வைக்கவும் (விரைவிலேயே தரவிறக்க முகவரி இல்லையென்றாலும் அதை எப்படி டவுன்லோட் செய்வது என எழுதுகிறேன்) Audio Record என்கிற பட்டனை கிளிக்கினால் போதும் ரெக்கார்ட் ஆக தொடங்கிவிடும் குவாலிட்டியில் ஒன்றும் பிரச்சினை இருக்காது இது சேமிக்கும் இடம் நாம் முன்னமே Storage Directory என்பதில் நாம் எங்கு சேமிக்க சொல்லியிருந்தோமோ அங்கு சென்று பாருங்கள் உங்கள் விருப்பமான ஆடியோ பாடல் ரெடி இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது யூ டியூப்பில் இருக்கும் வீடியோ வடிவிலான பாடலையும் வெறும் ஆடியோ வடிவில் சேமித்துக்கொள்ளலாம்.

    மேலும் இதில் Skype உபயோகிப்பவர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோவை ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.

    என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா விரைவிலேயே டிவிடி தயாரிப்பதற்கான ஒரு மென்பொருளை தருகிறேன் என்ன இனையத்தில் தான் எத்தனையோ விதமான மென்பொருள்கள் இருக்கிறது என்கிறீர்களா நானும் மறுக்கவில்லை ஆனால் பிரேம் பிரேமாக மாற்றும் வசதி இல்லையே உதாரணமாக ஒரு வீடியோவை டிவிடி-யாக மாற்றுகிறீர்கள் இதில் பார்த்தோமேயானால் Next வசதி இருக்காது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல Forward அல்லது Rewind செய்யவேண்டிவரும் அதற்கு பதிலாக மாற்று வழிதான் Next வசதி அதாவது பிரேமிங் வசதி.

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    20 Comments
    Comments

    20 Responses to “தரவிறக்க முடியாத பாடல், வீடியோவை சேமிக்கலாம்”

    நண்பன் said...
    April 26, 2010 at 6:25 PM

    விருப்பமுள்ளவனை விதி வழிகாட்டிச் செல்லும், பிடிக்காதவனை விரட்டிச்செல்லும்.

    தம்பி, உங்களின் பதிவு மென்மேலும் உயர்ந்து கொண்டு போகிறது உங்களது ஞானப்பொண்மொழிகள் காலத்தால் என்றும் அழியாதவை என்றென்றும் எமது
    மணதில் நிறைந்து நின்று எம்மை நல்வழிப்பாதையில் அழைத்துச்செல்லகூடியவை தாங்கள் எழுதும் அனைத்து பதிவுகளும் நல்லா சிரியவர் முதல் பெரியவர் வரை புரிந்து விடும் வகையில் உள்ளது உங்களை
    போண்று நண்பர் கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம் உங்களுக்கு நான் வைத்து
    இருக்கும் பெயர் ஆல் இன் ஞானசேகர் இன்னும் எழுதி கொண்டே போகலாம்


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன் அண்னன் ஹாஜா புருஹானி


    ஜிஎஸ்ஆர் said...
    April 26, 2010 at 6:39 PM

    @buruhaniibrahim

    தங்களின் புகழ்ச்சிக்கு நான் அருகதையில்லாதவன் தயவு செய்து பதிவு சம்பந்தபட்ட கருத்துரைகள் எழுதினால் அது மற்றவர்களுக்கு உபயோகப்படும் மேலும் பாரட்டுகளும் அங்கீகாரமும் தகுதியான நபருக்கே கிடைக்கவேண்டும் எனக்கு அந்த தகுதி இருப்பதாக தெரியவில்லை


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    eeasy baby said...
    June 6, 2010 at 6:22 AM

    மிகவும் அருமை


    ஜிஎஸ்ஆர் said...
    June 6, 2010 at 9:00 AM

    @eeasy baby

    தங்களின் கருத்துரைக்கு நன்றி

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Unknown said...
    July 21, 2010 at 8:59 PM

    உங்களின் சேவையை மனதாரப்பாராட்டுகிறேன், அன்றாடம் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை துல்லியமாக கணித்து அதற்கு ஏற்றவாறு விடுதலை அளிக்கும் பதிலை கொடுப்பது மிகவும் நன்றாக உள்ளதோடுமட்டுமல்லாது, எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் மாறுபடுகிறீர்கள். உங்களை பாராட்ட வார்த்தகைகள் இல்லை. ஏதாவது கோபத்தில் உங்கள் பங்களிப்பை நிறுத்திவிடவேண்டாம். அறிவு என்பது பகிர்ந்தளிக்கப்படுவதாலும் பேறு பெறுகிறது. என்னிடம் இல்லாத ஒன்றை உங்களிடம் பெருவதில் மகிழ்ச்சி அடைகிறேன், 'பேறாகக்கருதிகிறேன்'.


    ஜிஎஸ்ஆர் said...
    July 22, 2010 at 10:25 AM

    @GOPSA - கோப்ஸா

    உங்கள் அன்பிற்கோ அல்லது இந்த பாரட்டுக்கோ நான் தகுதியானவனா என்பது தெரியவில்லை ஆனால் என்க்குண்டான பொறுப்பு என்னவென்பதை உங்கள் கருத்துரை தெளிவாக்குகிறது


    S.முத்துவேல் said...
    August 31, 2010 at 1:39 PM

    உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை http://www.tamilcnn.net/ தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் . எந்த நேரமும் குறைந்தது 4000 பேர் பார்க்கின்றனர். உங்களுடைய வலை பதிவு மிக அருமை. நிறைய கற்றுகொண்டு இருக்கிறென். உங்களுக்கு என் மன மார்ந்த நன்றிகள்........


    Good citizen said...
    August 31, 2010 at 1:40 PM

    reecoder firefox ன் ஒரு addon ஆக இருந்தது
    நான் அப்போதே பயன்படுத்தி இருக்கிறேன் ,,அது update ஆகி தற்போது
    video வும் தரமிறக்கும் அளவுக்கு மாற்றம்
    அடைந்துள்ளது ,,Anyway உங்கள் வழி காட்டலுக்கு நன்றி


    Rajasurian said...
    August 31, 2010 at 3:42 PM

    நல்ல தகவல்

    நன்றி


    WebPrabu said...
    August 31, 2010 at 10:34 PM

    நல்ல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்... மிக்க நன்றி!!!:)


    ஜிஎஸ்ஆர் said...
    September 1, 2010 at 9:01 AM

    @muthuvelதங்கள் அன்பிற்கும் புரிதலுடன் கூடிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா நான் அதிகமான திரட்டிகளில் இனைப்பதில்லை போதிய நேரமின்மையே காரணம் அதே நேரத்தில் நீங்கள் மற்ற திரட்டிகளில் முடிந்தால் நம் தளத்தை பகிரிந்துகொள்ளுங்களேன்


    ஜிஎஸ்ஆர் said...
    September 1, 2010 at 9:03 AM

    @moulefrite நல்லது நண்பரே நானும் அதை முயற்சித்து பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 1, 2010 at 9:04 AM

    @Rajasurianஅன்பின் நண்பர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 1, 2010 at 9:21 AM

    @WebPrabuநல்லது தம்பி


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 12:28 PM

    நல்ல விசயமொன்று எனக்கு இப்போது டவுண்லோட் மனேஜர் பரவாயில்லை போல் இருக்கிறது...


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 12:28 PM

    ஃஃஃஃவிருப்பமுள்ளவனை விதி வழிகாட்டிச் செல்லும், பிடிக்காதவனை விரட்டிச்செல்லும்.ஃஃஃஃ
    உண்மை தான் சகோதரா...


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:28 PM

    @ம.தி.சுதாஇந்த பதிவு பழையது அல்லவா ஒவ்வொரு நாளும் புது புதுப் தொழில் நுட்பங்கள் வந்து பழைய நுட்பங்களை துரத்தி விடுகிறதே


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:30 PM

    @ம.தி.சுதாபிறப்பில் இருந்து இறப்பு வரை எல்லாவற்றிலும் அவனுடைய நேரங்காலம் கூடவே வருகிறது அது தான் விதி அவனுக்கு நம்மை பிடித்து விட்டால் நம்மை ஓரே நாளில் உயரத்துக்கு கொண்டு செல்வான் பிடிக்காவிட்டாலோ உயரத்தில் இருந்தே கண்ணிமைக்கும் நேரத்தில் மண்ணில் கிடத்தி விடும்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 8:48 PM

    .பயனுள்ள மென்பொருள், நண்பரே !!



    .நான், தங்களை, இன்டலி இணையத்தில் இருந்து, அடையாளம் கண்டு தான், வந்தேன் !!


    .இந்த வார்த்தைகள் என்னை கவர்கின்றன ::


    // நான் யாரென்று உங்களுக்கு தெரியுமா? இல்லை நீங்கள் யாரென்று எனக்குதான் தெரியுமா? முகம் தெரியா நட்பில் போலித்தனம் இல்லை என்பதை என் தளத்திற்கு வரும் உங்கள் வழியாக அறிந்து கொண்டேன்.

    // இந்த பதிவு பழையது அல்லவா ஒவ்வொரு நாளும் புது புதுப் தொழில் நுட்பங்கள் வந்து பழைய நுட்பங்களை துரத்தி விடுகிறதே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:56 AM

    @சிகப்பு மனிதன்உண்மை தான் புதிய தொழில்நுட்பங்கள் வந்து பழையவற்றை துரத்துகின்றன ஆனாலும் பழையது நமக்கு அவசியமே


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர