Apr 13, 2010
தமிழ் ஆங்கில அகராதி
நண்பகளே நமக்கு சில நேரங்களில் ஏதாவது ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் தேடிய அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் சிலருக்கு நான் குறிப்பிடப்போகும் தளங்கள் தெரிந்திருக்கும் அப்படி தெரிந்தவர்கள் இதில் விடுப்பட்ட மற்றும் சிறப்பான தளங்கள் இருந்தால் இங்கே அறிமுகப்படுத்தவும்
தமிழ் அகராதிகள்
முதலில் பார்க்க போவது பால்ஸ் டிக்ஸ்னரி இது மென்பொருளாகவே கிடைக்கிறது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ளலாம் என்ன இதில் ஒரு பிரச்சினை தமிழ் யூனிக்கோட் சப்போர்ட் செய்வதில்லை அதாவது தமிழில் யூனிக்கோட் டைப் செய்ய இயலாது மற்றபடி எழுத்துரு பிரச்சினை இல்லை
இரண்டாவதாக பிடிஎப் புத்தகம் இது இஎக்சி பைல் இல்லை இருந்தாலும் புத்தக வடிவில் கிடைக்கிறது
மூன்றாவதாக ஆன்லைனில் தேடுவதற்கு வசதியாக ஆன்லைன் தமிழ் டிக்ஸ்னரி இதில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ், தமிழில் இருந்து ஆங்கிலம் என இரண்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ன இதற்கு இனைய வசதி வேண்டும்
நான்காவதாக கூகுள் வழங்கும் கூகுள் அகராதி இதில் நிறைய மொழிகளுக்கான வசதிகள் இருக்கிறது அதில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ், தமிழில் இருந்து ஆங்கிலம் என இரண்டும் பார்த்துக்கொள்ளலாம் இதற்கும் இனைய வசதி வேண்டும்
ஆங்கில அகராதி
முதலாவதாக நான் பயன்படுத்திய அகராதியிலேயே மிகச் சிறப்பானது இதுதான் எனக்கூறலாம் அந்தளவிற்கு அதன் சிறப்பு இருக்கும் Word Web இதன் சிறப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள் எந்த இடத்தில் இந்த அகராதி தேவைப்படுகிறதோ அந்த இடத்தில் அர்த்தம் தெரியவேண்டிய வார்த்தையை செலக்ட் செய்து Ctrl + Alt + W என அழுத்தினால் போதும் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்
இரண்டாவதாக ஆக்ஸ்போர்டு அகராதி இதுவும் இஎக்சி பைலாக கிடைக்கிறது இதை நான் உபயோகித்து பார்க்கவில்லை ஆனாலும் சில நண்பர்கள் நன்றாக இருப்பதாகவே கூறுகிறார்கள் நீங்களும் முயற்சி செய்து பார்த்து விட்டு கருத்துரையில் எழுதுங்களே
மூன்றாவதாக ஆன்லைன் அகராதி இதுவும் கொடுக்கும் வார்த்தைகளுக்கு உதாரணத்தோடு விளக்கி கூறுகிறார்கள் இதுவும் சிறப்பாக இருக்கிறது இனைய இனைப்பு அவசியம்
நான்காவதாக Cambridge இதுவும் ஒரு ஆன்லைன் அகராதிதான் இதன் விளக்கம் சிறப்பாக இருக்கிறது ஆனால் உபயோகிக்க இனைய இனைப்பு தேவை.
என்ன நண்பா எல்லாமே கணினி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பயன்படுவதாய் இருக்கிறது எங்களை போல மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மொபைல் டிக்ஸ்னரி எதுவும் இல்லையா என கேட்பவர்களுக்காக இங்கே சென்று உங்கள் மொபைல் மாடல் எண் கொடுத்து தரவிறக்கவும் மேலும் மொபைலுக்கான நிறைய மென்பொருள்கள் இங்கு இலவசமாக கிடைக்கிறது.
(விரைவிலேயே மொபைலுக்கான சில அவசிய மென்பொருள்கள் பற்றி எழுதுகிறேன்)
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
7 Responses to “தமிழ் ஆங்கில அகராதி”
-
யூர்கன் க்ருகியர்
said...
April 14, 2010 at 1:58 PMsuper
-
FMTF
said...
April 16, 2010 at 11:20 PMvery nice my friend also mr.sivarajan comment a free website without any registration http://www.smsjive.com/index.php.. nice nice nice...
-
Vengatesh TR
said...
November 28, 2010 at 11:18 AM.பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !
.naan Sony Ericssion w200i use seikiraen, என் மொபைலுக்கு அகாரதி கிடைக்குமா ? -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 12:41 PM@யூர்கன் க்ருகியர்வருகைக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 12:42 PM@vidyasakaran புரிதலுக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 12:43 PM@சிகப்பு மனிதன்மன்னிக்கவும் நண்பா நான் உபயோகிப்பது நோக்கிய என்பதால் தான் இதைப்பற்றி எழுதினேன் நீங்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுங்கள் உங்கள் அலைபேசி மாதிரியை நேரம் கிடைக்கும் போது தேடிப்பார்த்து சொல்கிறேன்
-
Vengatesh TR
said...
December 7, 2010 at 7:12 AM.இதையும், பூர்த்தி செய்து விட்டீர்கள் !
.தங்கள் எழுடாணி க்கு, மீண்டும் நன்றி !!
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>