Apr 26, 2010
இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்
நண்பர்களே நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.
இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.
இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.
என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.
என்ன நண்பர்களே செய்து முடித்து விட்டீர்கள் இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
14 Responses to “இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்”
-
hamaragana
said...
April 26, 2010 at 7:46 PMஅன்புடன் நண்பருக்கு வணக்கம்
எண் போன்ற ஒன்றுமே கம்புடர் தெரியாத ஆட்களுக்கு நல்ல யோசனை.
நன்றி.. ஒட்டு போட்ட மெயில் விலாசம் கேட்கிறது குடுத்த தப்புன்னு வருது .நான் என்ன
செயட்டும். -
ஜிஎஸ்ஆர்
said...
April 26, 2010 at 8:08 PM@hamaragana
வணக்கம் நண்பரே தாங்கள் தமிழிஷில் ஒட்டு போட விரும்பினால் நீங்கள் http://www.tamilish.com/register இங்கு சென்று Username: என்பதில் நீங்கள் விரும்பும் பெயர் கொடுக்கவும் , Email: என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும் , Password: என்பதில் உங்கள் விருப்பம் போல கொடுத்து Register செய்யவும் அவர்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு உறுதிக்கடிதம் அனுப்புவார்கள் பின்னர் நீங்கள் Register செய்யும் போது கொடுத்த Username: Password: மறக்கவேண்டாம் இனி நீங்கள் விரும்பும் உங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு வாக்கு அளிக்கலாம்
(Register முடித்து Login செய்து பின்னர் அதன் கீழ் இருக்கும் Modify என்பதை கிளிக்கி நீங்கள் விருப்பபட்டால் மற்ற விபரங்கள் கொடுக்கவும்)
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன் -
hamaragana
said...
April 26, 2010 at 8:26 PMdear friend thankyou very much
-
Thomas Ruban
said...
April 26, 2010 at 8:36 PM// பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.//
உண்மைதான் நன்றி நண்பரே... -
rajasurian
said...
April 27, 2010 at 9:31 AM//விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 20 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்//
Bandwidth Limit-ன் default value தான் 20. நாம் அதை 0-க்கு மாற்ற வேண்டும். -
ஜிஎஸ்ஆர்
said...
April 27, 2010 at 10:39 AM@rajasurian
நல்லது நண்பா தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அதே நேரத்தில் நாம் அதன் பிட் ரேட் மாற்றியுள்ளதால் இதில் 20 என இருந்தால் உங்கள் முகப்பு பக்கம் எளிதாக திறக்க வசதியாய் இருக்கும் இருப்பினும் அதை மாற்றிவிட்டேன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
April 27, 2010 at 10:40 AM@Thomas Ruban
நன்றி நண்பா
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
April 27, 2010 at 12:42 PMyou are post very informative
keep it up -
April 27, 2010 at 2:26 PMgood boy
-
Vengatesh TR
said...
November 27, 2010 at 8:53 PM.தாங்கள் கூறிய படியே, செய்து விட்டேன், நண்பரே !
.தகவலுக்கு, நன்றி ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 9:55 AM@சிகப்பு மனிதன்மாற்றம் இருக்கிறதா அதை உணர்கிறீர்களா?
-
Vengatesh TR
said...
November 30, 2010 at 4:13 AM.10kbps ஸ்பீட் கூட வருகிறது !
-
ஜிஎஸ்ஆர்
said...
December 2, 2010 at 11:26 PM@சிகப்பு மனிதன்சந்தோஷம் நண்பரே
-
Alim
said...
December 14, 2010 at 5:04 PMHow to do this in windows vista, I dont have a option port in my device manager.
gpedit.msc is also not functioning.
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>