Jul 1, 2010

38

விண்டோஸ் அட்மின் பாஸ்வேர்ட் உடைக்கலாம்

  • Jul 1, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:மனித குலத்தினால் பயன்படுத்தபடும் மிக சக்தி வாய்ந்த மருந்து சொற்கள் தான்.

    இது ஒரு சோதனைக்காகதான் இப்படி ஒரு தலைப்பை வைத்தேன் இது பற்றி விரிவாக எழுத ஆசை இருப்பினும் தவறான வழிக்கு பயன்பட்டு விடுமே என்கிற அச்சம் இருக்கிறது இது போல பிரச்சினையை சந்திப்பவர்கள் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் அவசியம் தங்களிடம் இனைய இனைப்பு இருக்க வேண்டும் சுமார் மூன்று நிமிடங்களில் எந்தவித டேட்டா இழப்பும் இல்லாமல் அட்மின் பாஸ்வேர்டை உடைத்துவிடலாம்.

    இது வரை எழுதிய வேகம் இனி இருக்காது ஒரு விதத்தில் சந்தோஷமாக இருக்கிறது என் சில பதிவுகளை தவிர பெரும்பாண்மையான பதிவுகளில் நீங்கள் சின்ன விஷயத்தையாவது கற்றுக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன் இனி தொடர்ந்து தங்களோடு இனைந்திருக்க முடிந்தால் அவ்வப்போது எழுதுவேன் (நான் எழுதாவிட்டாலும் இங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்பது எனக்கு தெரியும்)

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    38 Comments
    Comments

    38 Responses to “விண்டோஸ் அட்மின் பாஸ்வேர்ட் உடைக்கலாம்”

    கோவி.கண்ணன் said...
    July 1, 2010 at 11:32 AM

    //
    இது ஒரு சோதனைக்காகதான் இப்படி ஒரு தலைப்பை வைத்தேன் இது பற்றி விரிவாக எழுத ஆசை இருப்பினும் தவறான வழிக்கு பயன்பட்டு விடுமே என்கிற அச்சம் இருக்கிறது//

    :) முடியும் ஆனா முடியாது


    மங்குனி அமைச்சர் said...
    July 1, 2010 at 11:54 AM

    நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு , ஏன்???


    Mohideenjp said...
    July 1, 2010 at 12:13 PM

    நான் எழுதாவிட்டாலும் இங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்பது தவறு


    பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
    July 1, 2010 at 1:58 PM

    plz contact me balawatrap@gmail.com
    //இது போல பிரச்சினையை சந்திப்பவர்கள் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் //
    i cant find ur email anywhere!!!


    Thomas Ruban said...
    July 1, 2010 at 4:31 PM

    நண்பா உங்கள் பழைய பதிவில்(யூ டோரண்ட் தரவிறக்க வேகம் அதிகரிக்க (Torrent Speed 25% முதல் 40%) )குறிப்பிட்டப்படி யூ டோரண்ட் ல் மாற்றங்கள் செய்தேன்.ஆரம்பத்தில் நல்ல வேகத்தில் டவுன்லோட் ஆகிறது சிறிது நேரத்தில் வேகம் குறைந்துவிட்டது ஏன்?
    பிட் டோரண்ட் ல் 50-60kp வேகத்தில் டவுன்லோட் ஆகிறது.

    நன்றி.


    WebPrabu said...
    July 1, 2010 at 4:34 PM

    எங்களுக்கு மிகப்பெரிய இழப்பே என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. மீண்டும் ஒருமுறை உங்களின் முடிவை மறுபரிசீலனை செய்து பல்லாண்டு காலம் தொடர்ந்து எங்களுடன் இணைந்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்!!!


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:31 PM

    @கோவி.கண்ணன்

    முடியாதென்பது இல்லை தவறான வழிக்கு பயன்பட்டு விடக்கூடாதே என்பது தான் பிரச்சினையே


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:33 PM

    @மங்குனி அமைச்சர்என்ன நண்பா நாமளும் எழுதித்தான் பார்க்கிறோம் யாருக்குமே பயன் இல்லையே பயன் இருந்தால் குறைந்த பட்சம் ஒரு வாக்கோ கருத்துரையோ அளித்திருப்பார்களே


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:38 PM

    @vaanmohiஇங்க உள்ளவங்களுக்கு இது போன்ற விஷயங்களில் நாட்டமிலை சினிமா மற்றும் பதிவுகளில் கெட்ட வார்த்தையை பயன்படுத்துதல் மற்றவங்களை திட்டுதல் மதிப்பு கொடுக்காமல் பேசுதல் இதுதான் மத்தவங்களுக்கு பிடிச்சுருக்கு சமீபத்துல ஒருவர் ஒரு பிரமுகரை குறித்து விமர்சனம் செய்திருந்தார் அவர் விமர்சனத்தில் தவறான மதிப்பில்லாத வார்த்தைகளை பயன்ப்டுத்தி எழுதினார் அந்த பதிவு பார்த்திங்கனா சூப்பர் ஹிட் இந்த பதிவுலகம் வழியாக நான் வீரன் சூரன் என எழுதுபவர்கள் எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் முன்னால் சென்றால் ஒரு வேளை மூத்திரம் இருந்து விடுவார்கள் பின்னர் நான் உனக்கு ஓட்டு போடுறேன் நீ எனக்கு ஓட்டு போடு பிரபல பதிவுகள் பெரும்பாலனவை அப்படித்தான் மன்னிகவும் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் எழுதிவிட்டேன்


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:40 PM

    @பாலகுமாரன், வத்திராயிருப்பு. நீங்கள் நம் தளத்திற்கு புதியவர் என நினைக்கிறேன் http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_3509.html


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:43 PM

    @Thomas Ruban தரவிறக்க வேகம் எப்போதும் ஒரே மாதிரியான வேகத்தில் இருக்காது உங்கள் ஐஎஸ்பியின் பயன்பாட்டு வேகத்தையும் சார்ந்திருக்கும் இருப்பினும் நிச்சியம் நல்ல மாற்றம் இருக்குமே


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:52 PM

    @WebPrabu தங்களின் அன்பிற்கும் சரியான புரிதலுக்கும் நன்றி நான் என்னதான் நன்றாக எழுதினாலும் அதற்கு குறிப்பிட்ட வாக்கும் கருத்துரையும் இருந்தால் மட்டுமே என் பதிவிற்கு தீனியாய் அமையும் அதை குறையும் போது மற்றவர்களுக்கு தளம் அறிமுகப்படுத்துதலும் குறைகிறது இதனால் எழுதுவதில் நிச்சியமாக மாற்றம் வருகிறது நான் வேண்டுமானால் இரண்டு சினிமா பாடலை அல்லது மென்பொருள் என தினமும் ஒரு பதிவை இட முடியும் எனக்கு அதில் உடன்பாடில்ல்லை நாம் அன்றாடம் சந்திக்கும் கணினி பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காண்பதற்கு மட்டுமே அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பேன் நீங்கள் ஒருமுறை நம் தளத்தை படித்தால் புரியும் மேலும் நான் மென்பொருள்கள் என்பதை விட ஹேக்கிங் பகுதிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருப்பேன் ஆனால் என் சில பதிவுகள் எனக்கே எரிச்சலை வரவழைக்கும் காரணம் நாம் எதிர்பார்க்கின்ற ஹிட்ஸ் கூட இருக்காது மேலும் இங்க உள்ளவங்களுக்கு இது போன்ற விஷயங்களில் நாட்டமிலை சினிமா மற்றும் பதிவுகளில் கெட்ட வார்த்தையை பயன்படுத்துதல் மற்றவங்களை திட்டுதல் மதிப்பு கொடுக்காமல் பேசுதல் இதுதான் மத்தவங்களுக்கு பிடிச்சுருக்கு சமீபத்துல ஒருவர் ஒரு பிரமுகரை குறித்து விமர்சனம் செய்திருந்தார் அவர் விமர்சனத்தில் தவறான மதிப்பில்லாத வார்த்தைகளை பயன்ப்டுத்தி எழுதினார் அந்த பதிவு பார்த்திங்கனா சூப்பர் ஹிட் இந்த பதிவுலகம் வழியாக நான் வீரன் சூரன் என எழுதுபவர்கள் எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் முன்னால் சென்றால் ஒரு வேளை மூத்திரம் இருந்து விடுவார்கள் பின்னர் நான் உனக்கு ஓட்டு போடுறேன் நீ எனக்கு ஓட்டு போடு பிரபல பதிவுகள் பெரும்பாலனவை அப்படித்தான் மன்னிகவும் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் எழுதிவிட்டேன்


    gulf-tamilan said...
    July 1, 2010 at 9:27 PM

    தங்களின் சிறப்பான பணியை தொடர்ந்து செய்யுங்கள்!!!


    Thomas Ruban said...
    July 1, 2010 at 10:18 PM

    hiren boot cd ல் இதற்கான மென்பொருட்கள் பல உள்ளன. admin password யை உடைப்பது மிகவும் எளிதானதுதான். windows 7 ல் வரும் பிட்லாக்கர் encription யையே மிகவும் எளிதாக உடைக்கலாம். ஆக்கம் கடினமானது. அழித்தல் சுலபமானது.


    மின்னுது மின்னல் said...
    July 1, 2010 at 11:48 PM

    ரீடரில் படிப்பதுண்டு பின்னுட்டம் போடுவதில்லை

    ஓட்டுக்காகவோ பின்னுட்டத்துக்காகவோ எழுதினால்
    முதலில் பத்து பேருக்கு தொடர்ச்சியா பின்னுட்டம் இடவேண்டும்
    பின்னர் சாட் லிஸ்டில் சேர்க்க வேண்டும்


    அல்லது எதாவது குருப் மெயிலில் சேரவேண்டும்

    வேற எதோ சொல்ல மறந்து விட்டது


    Raja said...
    July 2, 2010 at 1:24 AM

    U should not take the decision like this.. Pl. do posting daily..


    Jayadev Das said...
    July 2, 2010 at 11:46 AM

    jayadevdas2007@gmail.com

    Kindly let me know the details, sometime back a problem was there, somebody gave an Administrator password to the PC and vanished, we could not get the date from the PC, your Idea may help for such problems. Thanks.


    தமிழார்வன் said...
    July 2, 2010 at 11:20 PM

    நண்பர் ஞானசேகர் அவர்களுக்கு,

    வணக்கம். என்னை உங்கள் நினைவலைகளில் இருந்து முழுவதுமாக நீக்கி இருக்க மாட்டீர்கள் என கருதுகின்றேன். கடந்த http://gsr-gentle.blogspot.com/2010/06/word-shortcut.html பதிவின் போது நாம் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். மறுபடியும் தங்களிடம் இருந்து இப்படிப்பட்ட முடிவுகளை எதிர்பார்க்கவில்லை.

    ”மனிதனின் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகும் போது மனிதன் மனதளவில் பாதிப்பு அடைகிறான்”. கருத்துரைகளையும் ஓட்டுகளையும் மட்டுமே கொண்டு ஒரு பதிவை சிறந்த பதிவு என்று கருதிக் கொள்ள முடியாது.

    இன்றைய நிலையில் தமிழ் வலைப்பதிவுலகத்தில் ஆயிரக்கணக்கான வலைப்பூக்கள் இருந்தாலும் மக்களுக்கு பயன் தரக்கூடியன என்ற கணக்கிற்கு வருவன குறைவான வலைப்பூக்களே. அர்த்தம் இல்லாத அரசியலையும், ஆபாசங்களையும், விமர்சனம் என்ற பெயரில் வரும் கருத்துகளையும் கண்டு மோகம் கொள்வதே இன்றையளவில் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இது போன்ற நிலையில் பிறர் மனம் வருந்தாதவாறும், மக்களுக்கு பயனும் இன்பம் தரக்கூடிய வகையில் எழுதுபவர்களுக்கு ஆதரவு குறைவாகவே இருப்பதை உணர முடிகிறது.

    நீங்கள் சொன்னதை போல எழுதுவதை நிறுத்தினால் கேட்பதற்கு யாருமில்லை என்பது உண்மை என்ற போதிலும், எழுதாவிட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்பதை ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது. நமக்கு தெரிந்த நல்ல தகவல்களை நாமே புதைத்து வைத்து மடிவதால் பயன் என்ன?


    ஒரு சில பதிவுகள் எப்படி பிரபலமாகின்றன என்பதை நீங்களே புரிந்தும் எழுதி உள்ள நிலையில் அதே தவறை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்றே கருதுகிறேன். சென்ற சூன் மாதத்தில் உங்கள் பதிவுகளில் சில, நல்ல கருத்துரைகளையும், தமிழிஷ்-ல் முண்ணனி பதிவுகளின் வரிசையிலும் இடம் பெற்றிருக்கின்றன. உங்களின் நல்ல தகவல்களுக்காக 206 வாசர்கள் (நான் உள்பட) மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பையும் வீணடிக்க மாட்டீர்கள் என்றே கருதுகிறேன்.

    உங்களின் பதிவின் நீளத்தை விட என் கருத்துரையின் நீளம் அதிகம் என்ற போதிலும் நல்ல பதிவரை இழக்க விரும்பவில்லை.

    செயற்கரிய செயல்கள் செய்தவர்கள் (செய்பவர்கள்) எவரும் விளைவின் பலனைப் பற்றி கவலைப்படாதவர்களே... தொடருங்கள்.

    அன்புடன்
    தமிழார்வன்.


    ஜிஎஸ்ஆர் said...
    July 3, 2010 at 9:44 AM

    @gulf-tamilan
    தங்களை போன்ற நண்பர்களுக்காகவது நான் அவ்வப்போது நிச்சியம் எழுதுவேன் நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    July 3, 2010 at 9:48 AM

    @Thomas Ruban விஷயம் தெரிந்தவர்களுக்கு கடினாம செயல் கூட மிகவும் எளிதானது ஆனால் தெரியாதவர்களுக்கோ அது புதிர்தானே நண்பா எனக்கு இதை பற்றி நண்பர் முகமது இஸ்மாயில் சொல்லி தரும் வரை கடினமாகத்தான் இருந்தது அவர் சொல்லி தந்த பின் நான் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் நிலையில் இருக்கிறேன் தங்களுக்கு நேரம் இருந்தால் இதை பற்றி எளிதாக புரியும் வகையில் ஒரு பதிவு எழுதினால் நிறைய பேருக்கு உதவியாக இருக்குமே செய்வீர்களா இதை என் தாழ்மையான வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    July 3, 2010 at 10:00 AM

    @மின்னுது மின்னல் தங்கள் கருத்துரைக்கு நன்றி நாம் எழுதும் போது ஓட்டுக்காகவோ அல்லது கருத்துரைக்காக எழுதுகிறோம் என்பது என் நிலையில் தவறு நாம் விரும்பினால் பதினைந்து ஐடி உருவாக்கி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வாக்கு கருத்துரை அளித்து தமிழிஷின் பிரபல பகுதிக்கு கொண்டு வந்துவிட முடியும் எல்லாம் சாத்தியமே ஆனால் நமக்கு நாம் எழுதுவது மற்றவர்களுக்கு பயன் தருகிறது இதனால் பிரச்சினைகள் தீர்க்கபடுகிறது என்பதற்கு நீங்கள் அளிக்கும் கருத்துரையும் மட்டுமே அதை தீர்மானிக்கும் இவ்வளவு ஏன் சமீபத்திய என் பதிவு கிடைத்த வாக்கு வெறும் ஆறு மட்டுமே ஆனால் நான் இனைத்த மென்பொருளை தரவிறக்கியவர்கள் 45 நபர்கள் இத்தனைக்கும் அது ஒரு புரபசனல் மென்பொருள் நீங்கள் பணம் செலுத்தி பெற வேண்டுமானால் 2300 ரூபாய் வரை வரும். நான் என்ன எதிர்பார்க்கிறேன் நீங்கள் வாக்கு அளித்திருந்தால் அது பிரபல பதிவின் பகுதிக்கு சென்றிருக்கும் அதே நேரத்தில் 45 என்பது 100 நபர்களுக்காவது சென்றடைந்திருக்கும் உண்மைதானே.
    ஒரு பதிவு எழுதி 50 நபர்கள் பயனடைவதை விட 500 நபர்கள் பயனடைந்தால் நல்லது தானே ஆனால் அதை இந்த வாக்கு என்பது தடுத்து விடுகிறதே நண்பரே என் கருத்து நியாயமானது தானே மேலும் இந்த வாக்கும் கருத்துரையும் என் உணவுத்தேவையையோ அல்லது பொருளாதாரத் தேவையையோ நிறைவேற்ற போவதில்லை வெறும் ஒரு அங்கீகாரம் மட்டுமே சரி நீங்கள் என்னை பார்த்திருக்கிறீர்களா இல்லை நான் உங்களை பார்த்திருக்கிறேனா ஆனால் நீங்கள் ஒரு நிமிடம் செலவழித்து அளிக்கும் ஒரு வாக்கு ஒரு கருத்துரை மேலும் பலரை சென்றடைய வைக்கும் என்பது மட்டும் நிச்சியம் நண்பா . தங்களின் சரியான புரிதலுக்கு மிக்க நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    July 3, 2010 at 10:04 AM

    @Raja

    எழுதுகிறேன் நண்பரே தினமும் எழுதாவிட்டாலும் அவ்வப்போது நிச்சியம் எழுதுகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    July 3, 2010 at 10:08 AM

    @Jayadeva
    உடன் பதில் அளிக்க முடியாமைக்கு மன்னிக்கவும் விரைவில் தங்களை தொடர்புகொள்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    July 3, 2010 at 10:12 AM

    @தமிழார்வன் அன்பின் நண்பருக்கு நிச்சியமாக தங்களை போன்ற நல்ல நண்பர்களை நான் ஒரு போதும் மறப்பதில்லை என்றும் என் நினைவுகளில் உங்கள் பெயர் இருக்கும் உங்கள் வேண்டுகோளை நிராகரிப்பது என்னால் முடியாத காரியாம் அதே நேரத்தில் நான் அவ்வப்போது தங்கள் விருப்பப்படியே நிச்சியம் பதிவுகள் எழுதுகிறேன் நண்பரே.

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Jayadev Das said...
    July 5, 2010 at 2:03 PM

    http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_3509.html என்ற வலைப் பக்கத்திற்க்குச் சென்று பார்த்தேன், அதில் Contact என்ற இடத்தில் My Web Page எனக் கொடுத்துள்ளீர்கள், அதைச் சொடுக்கினால் திரும்பவும் உங்கள் வலைப் பக்கத்திற்கே கொண்டு வருகிறது. தங்களது தொடர்பு e-mail ID எங்குமே இல்லை. இந்த இடுக்கையில் கூறியுள்ள முறையை முடிந்தால் எனக்கு தெரிவிக்கவும்.நன்றி.
    jayadevdas2007@gmail.com


    gvraj said...
    July 7, 2010 at 9:34 PM

    Dear Sir,
    வணக்கம் அருமையான தளம் வாழ்த்துக்கள் தொடருங்கள் Add-min-password குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன் E-mail அனுப்புங்கள் எனது முகவரி gv.raj1969@gmail.com
    நன்றி
    By
    B.Govindaraj


    Mohamed Faaique said...
    July 13, 2010 at 12:09 PM

    நம் இணைப்பில் facebbok , u tube போன்றவை வேலை செய்ய வில்லை. (blocked ) என்ன செய்ய முடியும்... விண்டோஸ் அட்மின் பாஸ்வோர்ட் பற்றியும் சொல்லவும்.. " faaique @yahoo .co .uk "


    ஜிஎஸ்ஆர் said...
    July 14, 2010 at 5:02 PM

    @Faaique Najeeb

    முந்தையை பதிவை பாருங்கள்http://gsr-gentle.blogspot.com/2010/05/voip.html


    Mohamed Faaique said...
    July 15, 2010 at 11:30 AM

    we cant install here anythng so.. i tried freegate but no gud.. they hv blocked in server. no more idea... how can i install .....


    Nishanth said...
    July 18, 2010 at 9:49 PM

    Dear Sir,
    வணக்கம் அருமையான தளம் வாழ்த்துக்கள் தொடருங்கள் Add-min-password குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன் E-mail அனுப்புங்கள் எனது முகவரி nisanthans@gmail.com
    நன்றி
    By
    S.nisanthan


    ஜிஎஸ்ஆர் said...
    July 20, 2010 at 6:19 PM

    @Nishanth

    தெரிந்து கொள்ளலாமே


    mahilan said...
    July 26, 2010 at 3:54 PM

    Dear sir,
    I am working social field. When the staff terminates their contract they lock the admin. If you have possible could you please send how to open without data lost
    My e : kingsleyclaman@gmail.com
    Thanks
    Claman.


    Rajesh said...
    December 5, 2010 at 1:58 PM

    எனக்கு அதுபற்றிய விவரத்தை அனுப்புங்களேன்.தற்போது யூசர் ரைட்ஸ் மட்டுமே இருக்கிறது.srajeshsundari@yahoo.co.in


    ஜிஎஸ்ஆர் said...
    December 6, 2010 at 10:36 AM

    @Rajesh நீங்கள் சொல்வதை பார்க்கும் போது அலுவலக கணினி என்பது தெரிகிறது தயவு செய்து மாற்று வழி யோசியுங்கள்


    avvavm said...
    December 14, 2010 at 5:54 PM

    நண்பர் GSR அவர்களுக்கு,

    தற்போதுதான் தங்களின் படைப்புகளை படித்து வியக்கிறேன். அருமையான படைப்ப்புகள். மிக அருமையான கருத்துக்கள்.

    "நான் எழுதாவிட்டாலும் இங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது" தயவு செய்து உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளவும். நமக்கு தெரிந்த கருத்தை அல்லது நன்மை பயக்கும் ஒரு விஷயத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளவும் ஒரு மன தைரியம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது.

    நாம் சொல்லும் இந்த கருத்து தவறாக இருக்குமோ என எண்ணி எத்தனையோ நண்பர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் நீங்கள் ஒரு நல்ல காரியத்தையே செய்து கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து நிறுத்தி விட வேண்டாம்.


    avvavm said...
    December 14, 2010 at 6:05 PM

    நண்பர் GSR அவர்களுக்கு,

    நான் எனது computer ல் admin password அமைத்து பாதுகாத்து வருகிறேன். கொஞ்ச நாள் முன்பு ஒரு புதிய software ஐ நிறுவ என் நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் நண்பர்கள் என்பதைவிட தொழில் முறை நண்பர்கள் என்பதே சரி. அவர்கள் என் computer ஐ on செய்து பார்த்து கொண்டிருந்தார்கள்.

    அவர்களுக்கு coffee எடுக்க பக்கத்துக்கு அறைக்கு சென்று திரும்பி வந்தால் என்னுடைய system த்தின் உள்ளே சென்று நான் கேட்ட software ஐ நிறுவி கொண்டிருந்தார்கள். நான் என்னுடைய password ஐ அவர்களுக்கு சொல்லவில்லை. இது எப்படி என்க நங்கள் administrator வழியாக உள்ளே சென்றுவிட்டோம் என்றார்கள். இது எப்படி?? நான் password ஐ மிக கடினமாகவே அமைத்து இருந்தேன்.


    ஜிஎஸ்ஆர் said...
    December 16, 2010 at 9:29 AM

    @avvavm நிச்சியமாக நண்பா மீண்டும் அதே பதில் தான் இந்த பதிவுலகம் என்பது என்னைப்போன்ற நபர்களுக்கு சரியாக வருவதில்லை நமக்கென இருக்கும் தனித்துவத்தை ஒருபோதும் வெறும் வாக்கு அல்லது கருத்துக்காக விட்டுக்கொடுக்க போவதில்லை


    ஜிஎஸ்ஆர் said...
    December 16, 2010 at 9:34 AM

    @avvavmசாதரணமாக நீங்கள் வெளியில் கொடுத்து பார்மட் செய்து கொடுக்க சொன்னால் அவர்கள் உங்களுக்கென ஒரு அக்கவுன்ட் உருவாக்கி வைத்திருப்பார்கள் ஆனால் அது வெறும் யூசர் அக்கவுண்ட் மட்டுமே கணினியில் அட்மின் பாஸ்வேர்ட் இட்பட்டிருந்தால் அவர்கள் எளிதாக திறந்திருக்க முடியாது உதாரணமாக நீங்கள் கணினியின் அட்மினாக இருக்கும் பட்சத்தில் தாங்கள் சேப் மோட் சென்று பார்த்தால் உங்கள் அக்கவுண்ட் மட்டுமே இருக்கும் அதே நேரத்தில் நீங்கள் வெறும் யூசராக இருந்தால் அங்கு இரண்டு அக்கவுண்ட் இருக்கும் அப்பொழுது அட்மினில் பாஸ்வேர்ட் கொடுக்கபடாதிருந்தால் நேரடியாக உங்களால் உள்ளே செல்ல முடியும் அப்படியில்லாமல் இருந்தால் அட்மின் கடவுச்சொல் இடப்படிருக்கிறது இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சில வகையான மென்பொருள் உதவி கொண்டு ஓரிரு நிமிடங்களில் திறந்து விடலாம்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர