Apr 24, 2010
கணினியின் வேகம் அதிகரிக்க டிப்ஸ்
நண்பர்களே நாம் இப்போது பார்க்கபோவது கணினியின் இயக்க வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றித்தான் சாதரணமாக கொஞ்சம் பணம் செலவழித்தால் கணினியின் வேகத்தை திறம்பட செயல்படும் வகையில் மாற்ற முடியும் ஆனால் எல்லோராலும் பணம் செலவழிக்க முடிவதில்லை அதற்காக தான் இந்த சிறிய டிப்ஸ் இது உங்கள் எல்லோருக்குமே தெரியும் ஆனாலும் இது பற்றி தெரியாத நண்பர்கள் இருக்ககூடுமே
டீபிராக்மெண்ட் இது கணினியை டீபிராக்மெண்ட் செய்வதற்கானது இது நமது கணினியில் இந்த வசதி இருக்கிறது ஆனால் நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும் இந்த டீபிராக்மெண்ட் எதற்காக என நினைக்கும் நண்பர்களுக்காக சின்ன தகவல் நாம் கணினியில் பதியும் தகவல்கள் எல்லாம் ஒரே இடத்தில் பதிந்து வைக்கபடுவதில்லை ஒரு பைல் பல்வேறு இடங்களில் பிரித்து பதியப்படும் அதாவது நமது வண்தட்டு பல்வேறு கிளஸ்டர்களாக பிரிக்கப்பட்டிருக்கும் நாம் டீபிராக்மெண்ட் செய்கையில் பல இடங்களில் இருக்கும் பைல்களை எடுப்பதற்கு வசதியாக ஒருங்கினைக்கும் வேலையை தான் இந்த டீபிராக்மெண்ட் செய்கிறது.
சி சி கிளீனர் இது கணினியில் இருக்கும் தேவையில்லாத ரிஜிஸ்டரியை அழகாக கிளீன் செய்து விடும் உதாரணமாக நீங்கள் உங்கள் கணினியில் ஒரு புரோகிராமை இன்ஸ்டால் செய்து மீண்டும் அன் இன்ஸ்டால் செய்து விடுகிறீர்கள் ஆனால் நீங்கள் அன் இன்ஸ்டால் செய்த புரோகிராமை ரிஜிஸ்டரியில் தேடிப்பார்த்தால் இருக்கும் அதை நீக்குவதற்காகத்தான் இந்த மென்பொருள் உங்களுக்கு தெரியும் கணினியின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்த ரிஜிஸ்டரி வழிதான் மேற்கொள்ள படுகிறது நாமாக மாற்றங்கள் செய்ய நினைத்து தவறு நேர்ந்தால் கணினியின் இயக்கமே நின்று விடும் ஆனால் சிசி கிளீனர் உபயோகிக்கையில் அந்த பிரச்சினை வராது மேலும் சில நேரங்களில் Recycle Bin ல் சில பைல்களை அழிக்க முடியாமல் இருக்கும் அதையும் இந்த சிசி கிளீனர் கொண்டு அழித்து விடலாம்.
அடுத்ததாக அதிகம் பேர் செய்யும் ஒரு தவறு இருக்கிறது நம்முடைய அவரத்தேவைக்காக பெரும்பாண்மையான பைல்களை நாம் கணினியின் டெஸ்க்டாப்பில் வைப்போம் இதனால் எப்படி கணினியின் இயக்கம் குறையும் என பார்த்தால் நமது விண்டோஸ் இயங்குதளம் சாதரணமாக டிரைவ் C- ல் பதியப்படுகிறது இதில் டெஸ்க்டாப் விண்டோஸின் இயங்கு தளத்தில் இருக்கிறது அதனால் இயங்குதள சம்பந்தமில்லாத பைல்கள் அதிகமாக டிரைவ் C -ல் வரும்போது அதன் வேகம் தானகவே குறையும் இதற்கு ஒரு மாற்று வழி கணினியை பார்மட் செய்யும்போது மூன்று டிரைவ்களாக பிரித்து வைக்கவும் இதில் C- ல் நமது இயங்குதளத்தை பதியவும் D-ல் நாம் இயக்க விரும்பும் பல்வேறான புரோக்கிராம்களை பதிந்து கொள்ளவும் E-ல் நமது புரோக்கிராம் அல்லாத நமது பைல்களை சேமித்து பயன்படுத்தவும் இதனால் இயங்கு தளத்தின் வேகம் குறையாமல் இருக்கும் டெஸ்க்டாப்பில் வைக்க விரும்பும் பைல்களுக்கு ஷார்ட்கட் கொடுத்து பயன்படுத்தவும் ஒருவேளை ஷார்ட்கட் ஐகான் பிடிக்கவில்லை என்றால் ஆரோவை நீக்கலாம் பார்க்கவும்.
அடுத்ததாக Start -> Run -> Type msconfig என அடித்து எண்டர் கொடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Startup டேப்பை திறந்து அதில் இருக்கும் எல்லாவற்றையும் Disable செய்து விடவும் வேண்டுமானால் Anti Virus மென்பொருள் மட்டும் Enable செய்துகொள்ளவும் இதனால் கணினியின் Boot நேரம் குறையும்.
இனி வாரம் ஒரு முறையாவது Start -> Run -> Type temp என அடித்து எண்டர் கொடுத்து அதில் இருக்கும் பைல்களை அழித்து விடவும், மீண்டும் Start -> Run -> Type %temp% என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும் , அடுத்ததாக Start -> Run -> Type prefetch என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும்.
இன்னும் ஒரு சிறிய தகவல் மட்டும் நம் தேவைக்காக இனையத்தில் கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள்களை தரவிரக்கி நம் கணினியில் பதிந்து வைத்திருப்போம் அப்படி பதிந்த புரோக்கிராம்கள் மீண்டும் அவசியமில்லை என்றால் மறக்காமல் அன் இன்ஸ்டால் செய்து விடவும் அப்படி உள்ள புரோகிராம்களை முழுவதுமாக நீக்க அன் இன்ஸ்டாலர் உபயோகிக்கவும்.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களும் பயனடையட்டும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
24 Responses to “கணினியின் வேகம் அதிகரிக்க டிப்ஸ்”
-
Thomas Ruban
said...
April 25, 2010 at 2:13 PMபுதியவர்களுக்கு பயன்படும் பயனுள்ள பதிவு நன்றி.
-
ஜிஎஸ்ஆர்
said...
April 25, 2010 at 5:11 PM@Thomas Ruban
தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா தவறுகள் இருந்தால் சுட்டிகாட்ட மறக்கவேண்டாம் நண்பா
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
நண்பன்
said...
April 25, 2010 at 9:58 PMellame nalla seythikal thambi
-
ஜிஎஸ்ஆர்
said...
August 21, 2010 at 9:14 AM@ramநன்றி நண்பரே தொடர்ந்து இனைந்திருங்கள்
-
ஜெயந்த் கிருஷ்ணா
said...
August 28, 2010 at 9:21 AMமிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி..
-
மாணவன்
said...
August 28, 2010 at 12:13 PMமிகவும் பயனுள்ள மென்பொருள் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா...
-
மோகன்ஜி
said...
August 28, 2010 at 5:42 PMமிக உபயோகமான தகவல்கள்.தொடர்ந்து எழுதுங்கள் சகோதரா
-
August 28, 2010 at 6:45 PMஎன்னை போண்ற புதியவர்களுக்கு பயன்படும் பயனுள்ள பதிவு மிகவும் பயனுள்ள மென்பொருள் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா... அன்புடன் அ.மாணீக்கவேலு
-
WebPrabu
said...
August 28, 2010 at 11:16 PMஅருமையான, எளிய, பயனுள்ள பல தகவல்கள். மிக்க நன்றி...:)
-
www.mail2pps.com
said...
August 29, 2010 at 12:05 AMபயனுள்ள தகவல். நன்றி நண்பா!
-
selvaraj
said...
August 29, 2010 at 6:51 AMசிறப்பாக எழுதுகிறிர்கள் தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.
செல்வா -
ஜிஎஸ்ஆர்
said...
August 29, 2010 at 9:19 AM@வெறும்பயதங்களின் வருகைக்கும் பொன்னான கருத்துக்கும் நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
August 29, 2010 at 9:20 AM@மாணவன்நம்மாள் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்கிறோம் வேறென்ன பெரிதாய் செய்து விட்டோம்
-
ஜிஎஸ்ஆர்
said...
August 29, 2010 at 9:22 AM@மோகன்ஜிவாருங்கள் நண்பரே தொடர்ந்து இனைந்திருங்கள் நாமும் தொடர்ந்து எழுதவே விரும்புகிறோம்
-
ஜிஎஸ்ஆர்
said...
August 29, 2010 at 9:23 AM@maanikamபுதியவர் பழையவர் என்கிற பேதமில்லை கணினியை முழுதாக கற்றுக்கொண்டவரும் யாருமில்லை
-
ஜிஎஸ்ஆர்
said...
August 29, 2010 at 9:24 AM@WebPrabuதம்பியின் கருத்துரை எப்பவும் நமக்கு ஒரு பூஸ்ட்தான்
-
ஜிஎஸ்ஆர்
said...
August 29, 2010 at 9:27 AM@www.mail2pps.comதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தொடர்ந்து இனைந்திருக்க முயலுங்கள்
-
ஜிஎஸ்ஆர்
said...
August 29, 2010 at 9:28 AM@selvarajதங்களை போன்ற நண்பர்களின் துனையோடு தொடரவே விரும்புகிறேன்
-
Jayadev Das
said...
August 29, 2010 at 11:15 PMGood ideas, let me try & see.
-
ஜிஎஸ்ஆர்
said...
August 31, 2010 at 9:10 AM@Jayadevaதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
-
Vengatesh TR
said...
November 28, 2010 at 9:46 AM.தகவலுக்கும், மென்பொருளுக்கும் நன்றிக்கடன், எப்படி செய்வது, என்று தெரியவில்லை !!
.பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !! -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 12:51 PM@சிகப்பு மனிதன் எதற்கு நண்பா இத்தனை பெரிய வாசகம் நான் என்ன சாதித்து கொடுத்துவிட்டேன் தெரிந்து மென்பொருளையும் தெரிந்த விஷயத்தையும் எழுதியிருக்கிறேன் அவ்வளவுதானே!
-
Vengatesh TR
said...
November 30, 2010 at 4:23 AM.எங்களுக்காக நேரத்தை செலவிட்டு எழுதுகீர்கள் அல்லவே !
.நான் முயற்சி செய்தேன்,
.அவசியாமான சாப்ட்வேர் தேட 20 நிமிடமும், அதை பயன்படுத்தி அதை விளக்கமாக எழுத 30 நிமிடங்கள் ஆகின்றன !
.இதுவும், நான் விடுமுறையில் உள்ள மாணவன் என்பதால், நீங்கள் அப்படி இல்லையே !
.வேலை பார்த்து கொண்டு, எழுதுவதற்கு நேரம் ஒடுக்குவதே பெரிய விஷயம், அதிலும் தினமும் comment-க்கு reply செய்வது + புதிய பதிவு எழுதுவது என்றால் அது சிரமமான வேலை அல்லவா ! -
ஜிஎஸ்ஆர்
said...
December 2, 2010 at 11:24 PM@சிகப்பு மனிதன்சரியான புரிதலுடன் கூடிய கருத்துரைக்கு நன்றி
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>