Apr 4, 2010

6

என் நண்பர்கள்

 • Apr 4, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து:ஒரு நிமிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது மேல்

  இந்த பதிவு நான் வழக்கமாக எழுதும் எதார்த்தத்தின் பிரதிபலிப்போ, கவிதை எனும் பெயரில் கிறுக்குவதோ,தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை போல இதில் பெரிதாக ஒன்றும் இருக்காது (இதுக்கு முன்னாடி எழுதியதில் எது நல்லா இருந்துச்சுனு கேக்குறது புரியுது) நான் எழுதியதில் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகலைதான் ஆனாலும் எல்லாமே சராசரியாக ஒரு பதிவுக்கு 220 (சிலவற்றில் குறைவு சிலவற்றில் அதிகம்) ஹிட்ஸ்தான், சந்தோஷமாயிருக்கு பதிவு எழுத தொடங்கிய 25 நாட்களுக்குள் 15 பதிவு எழுதிவிட்டேன் அதில் 3300 ஹிட்ஸ், 9 பாலோவர், 11 கருத்துரை , 158 தமிழிஸ் வாக்குகள் இந்த நேரத்தில் என்னை ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  ஜெயமுத்து:இவன் ஜெயமுத்து என்கிற கோவிந்த் இவன் படிப்பு பத்தாவதுதான் அதுமட்டுமில்லை பத்தாவது பொதுத்தேர்வையே கட் பன்னிட்டு கிரிக்கெட் விளையாட போய்ட்டான் தேர்வு முடிவு வந்த போதுதான் தெரிந்தது இவன் தேர்வுக்கே செல்லாதது அப்புறம் மூன்று மாதம் கழித்து தனியார் முறையில் தேர்வு எழுதி ஒரே தடவையில் வெற்றியும் பெற்றான் இவனை பார்த்தால் தெரியாது இவன் எந்தளவுக்கு புத்திசாலியென்று பொதுவாகவே சொல்வார்கள் ஆள வச்சு எடை போடமுடியாதுனு அது இவன் விஷயத்தில உண்மைதாங்க இவன்கிட்ட பேசிப்பார்த்தா நீங்களும் அசந்து போவிங்க பொதுஅறிவு,விளையாட்டு, அறிவியல்,அரசியல் இப்படி எந்த விஷயத்தை எடுத்தாலும் அவனுக்கு இருக்குற திறமையே வேற ஆனால் என்ன அதை எதையுமே அவன் பயன்படுத்தமாட்டான் கொஞ்சநாள் சிங்கப்பூரில் பொக்லைன் ஓட்டிகிட்டு இருந்தான் இப்ப ஊருக்கு வந்துட்டு திரும்பவும் மரைன் மெக்கானிக் படிக்கிறதுக்காக கேரளாவுள இருக்கான் ஒருவிதம் எல்லாவிதமான வாகனங்களும் ஓட்டுவான் இரு சக்கர வாகணத்தை தவிர(சைக்கிலும் தான்) எந்த பிரச்சினை வந்தாலும் நிதானமா இருந்து டீல் பன்றதில் இவந்தாங்க கில்லாடி இன்னும் திருமணம் செய்யவில்லை. சமீபத்துல அவன் சொந்த ஊரில் பெரிய ஒரு கண்மாய் மீன் ஏலத்திற்கு எங்களை கூட்டிகிட்டு போய் எங்களாலையும் முடியுமென்று நம்பிக்கையை கொடுத்தவன். எங்கள் ஊரில் முதல் முதலாக இண்டர்நெட் பிரவுசிங் செண்டர் கொண்டு வந்தது இவங்க அண்ணன்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் பார்த்தும் அங்கதான்

  முத்துச்செலவம்:இவன் படிப்பு பன்னிரண்டாவதுதான் படிப்பில் அதிக நாட்டமில்லை எங்க குரூப்லேயே ரொம்ப சீக்கிரமா வெளிநாடு போனவன் இவன்தான் எதையும் கத்துகிற ஆர்வம் அதிகம் உள்ளவன் அதனாலேயே மலேசியாவுக்கு சாதாரண தொழிலாலியாகத்தான் போனான் அப்புறம் அவனாகவே முயற்சி பண்னி கம்ப்யூட்டர் கத்துகிட்டு சிஎன்சி ஆப்ரேட்டர் ஆகிட்டான் நல்ல சம்மளம் நல்லா சம்பாதிச்சான் இப்ப ஊருக்கு வந்துட்டு திரும்பவம் போக பிளான் பண்னினான் ஆனா அவங்க வீட்ல அவனை கல்யானம் பண்ண சொல்லி பொண்னு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க அவனுக்கு முதல் தடவை பொண்னு பார்க்கபோகும் போது எங்களையும் அவங்க வீட்ல வரச்சொல்லி கூட்டிகிட்டு போனப்பதான் நாங்களும் பெரிய மனுஷன் ஆகிட்டோம்னு புரிஞ்சது இப்ப அவனுக்கு திருமணம் முடிஞ்சது கல்யானத்துக்கு பக்கத்தில இருக்கமுடியல. 15 வயசுல ஒரு பிசினஸ் டீல் பண்ண அவன் படிச்ச ஸ்கூலுக்கே கூட்டிகிட்டு போய் என்ன மத்தவங்கள நிமிர்ந்து பார்க்க வச்சான். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக கேபிள் டிவி கனைக்கசன் கொண்டுவந்தது இவங்க அண்ணன்தான்

  ஜெயசீலன்:இவன் படிப்பு பத்தாவது அப்புறம் ஐடிஐ படிச்சான் கொஞ்ச முன்கோபக்காரன் எதையும் ஆராய்ந்து பார்க்கமாட்டான் ரொம்ப நல்லவன் சில நேரம் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பான் சொந்தமா எதாவது தொழில் தொடங்கனும்னு ஆசையிருக்கு அதுக்காக சம்பாதிக்க மலேசியா போய் வேலை பார்த்தான் அவன்கிட்ட பெர்மிட் விசா இல்லாததால் அதிக நாள் இருக்க முடியல அதனால சீக்கிரமே வந்துட்டான் யாரையும் பேச்சுல வழிக்கு கொண்டுவந்துருவான் இவன் கல்யானதுக்கு நான் இருந்தேன் வித்யாசமாக பிளக்ஸ் அடிக்க நினைச்சோம் அதனால யாருமே அடிக்காத மாதிரி சேகுவேரா படம் போட்டு ஆங்கிலத்தில் கமெண்ட் எழுதிவச்சோம் அதுல பாருங்க கல்யானத்துக்கு வந்த ஒரு ஆளு கேட்டாரு பாருங்க அவர் கேட்டாரு தம்பி இந்தாளு யாருப்ப (இத்தனைக்கும் விபரம் தெரிஞ்சவர்தான் கம்யூனிஸ்ட் கட்சிதான்) அப்படினு கேட்டு எங்களை நோகடிச்சுட்டாருங்க அதுக்கப்புறம் அவன் கல்யானத்துக்கு வந்த ஆளுங்க எல்லம் அந்த பிளக்ஸ் போர்டை வித்யாசமாதாங்க பார்த்தாங்க. சமீபத்துல இருசக்கர வாகண அபகடத்தில் மாட்டி கால் உடைந்து தற்போது கொஞ்சம் பரவாயில்லை மிகவும் தன்னம்பிக்கையுடையவன்.எனக்கு திருமணம் நடக்கபோவதை இவனிடம் சொல்லவேயில்லை ஆனால் என் திருமணத்தின் அன்று அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினான்

  கேசவன்:இவன் எம்காம் பட்டதாரி எதையுமே ரொம்ப யோசிப்பான் பக்கதில் நாம் தைரியாம இருந்தா எந்த சூழ் நிலைக்கும் பயப்படமாட்டான் இவனோட அண்ணன் கல்யானத்துல நாங்க பண்ணின கூத்தெல்லாம் இப்ப நினைச்சாலும் மனசெல்லாம் ஒரு புரியாத சந்தோஷம்தாங்க ஆனா இவனோட அப்பா ரொம்ம சோசியலா இருப்பாருங்க நான் கல்யாணம் பண்ணிட்டு சிலிண்டர் இல்லாம கஷ்டப்பட்டப்ப இவந்தாங்க அவனோட அண்ணன் ரேஷன்கார்டு கொடுத்து உதவினான்(அவனோட அண்ணன் ஒரு வாகண விபத்தில் இறந்துவிட்டார்) இவன் ஊருக்கு போய் அவனோட பனைமரத்தில நொங்கு வெட்டினோம் அப்ப பாருங்க அந்த ஊருல இருக்குறவங்க சண்டைக்கு வந்துட்டாங்க எங்களுக்கு தெரியாது அது அவனோட அத்தை என்று அப்புறம் ஒரு வழியாய் பிரச்சினை முடிஞ்சதுங்க இவனோட பனைமரம் வீட்ல இருக்குற தென்னைமரம் அவன் வளர்த்த புறா இப்படி எதையுமே அவன்கிட்ட கேக்காமா எடுக்குற உரிமையை எங்களுக்கு கொடுத்துருக்கான் இப்ப அவனும் திருமணம் முடிந்து சென்னையில் இருக்கிறான்.

  சுரேஷ்:இவன் சுரேஷ் என்கிற டிஜிட்டல் சுரேஷ் எட்டாவது தான் படிச்சான் ரொம்ப நல்லவன் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பான் இப்ப இவன் அபுதாபியில் பிளம்பராக வேலையில் இருக்கிறான் இன்னும் திருமணமாகவில்லை அதிக முன்கோபமுள்ளவன் பின்னர் சொன்னால் புரிந்துகொள்வான் நட்புக்காக எதையும் செய்வான் நான் பத்தாவது பெயில் ஆகி அந்த நேரத்தில் ஒரு எலக்டீரிசீனியனிடம் வேலை கற்றுக்கொள்ள சென்றபோது தான் இவன் அறிமுகமானான் பின்னாளில் எனக்கு வயரிங், மற்றும் பிளம்பிங் இந்த இரண்டு துறைகளிலும் எனக்கு இவன் தான் முன்னோடி அதன் பின்னர் நான் மீண்டும் படித்து தேர்வெழுதி கல்லுரியில் படிக்கும்போது நாங்கள் சொந்தாமாகவே வேலை பிடித்து பார்த்தோம் போதுமான அனுபவம் இல்லாததால் தொடர்ந்து வேலை கிடைப்பதில் பிரச்சினை இருந்த்து இன்றைய நிலைமைக்கு நாம் சென்று ஒரு வீட்டில் வேலை கேட்டால் மறுக்கமாட்டார்கள் அந்தளவிற்கு பழக்கவழக்கம் வந்திருக்கிறது இப்பொழுதும் நேரம் கிடைக்கும் போது ஒரு பொழுதுபோக்காக வயரிங் வேலை பார்ப்பதுண்டு எங்க போனாலும் நம்மளை மத்தவங்க முன்னாடி பேசவச்சு நம்ம பெருமையை மத்தவங்ககிட்ட பெருமையா பேசுவான்

  சதிஷ்:இவன் பத்தவது படிச்சவந்தான் எங்க குரூப்லேயே சின்ன வயசுலேயெ ரொம்ப பொருப்பா இருந்தவன் இவந்தான் காரணம் பார்த்திங்கனா அவன் வீட்டில் வட்டிக்கு கொடுக்கும் பிசினஸ் அதனால் இவன் எப்பவுமே ரொம்ப பிஸியாதான் இருப்பான் பெரிய ஆளுங்ககிட்டயெல்லாம் சர்வ சாதாரணமா பேசுவான் எங்களுக்கு ஆச்சரியமா இருக்கும் அவன் திறமையை பார்த்து எங்க போனாலும் அங்க ஒரு முக்கியமான நபரை பழக்கம் பிடித்துவிடுவான் இப்ப கத்தாரில் வேலை பார்த்தான் அதற்கிடையில் சேப்டி ஆபிஸ்ருக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிட்டான் இப்போது விசாவை கேன்சல் செய்து விட்டு ஊருக்கு வந்துவிட்டான் பெண் பார்த்தாகிவிட்டது சம்பிரதாயபடி ஜாதகம் பொருத்தம் பார்த்துவிட்டார்கள் எல்லாம் நன்றாயிருக்கிறதாம் கூடிய விரைவில் இவனின் திருமணம் நடக்கும் என்ன இவன் திருமணத்தையும் காண முடியாத நிலைமை. என் அப்பா பணியில் இருக்கும்போதே இறந்துவிட்டாதால் அவரின் வாரிசு வேலை பெற வாய்ப்பு இருக்கிறது எனவே அதற்கு முயற்சி செய்ய சொல்லி திட்டுவான் பணம் தேவையென்றால் நான் தருகிறேன் என்பான்.

  எல்லாருமே சாதாரணமானவர்கள் தான் ஆனாலும் நட்பிலே உயர்ந்தவர்க்ள் என்னோட ஓவ்வொரு கஷ்டத்திலும் பிரச்சினைகளிலும் எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள் எனக்குள் இருக்குற திறமையை ஒவ்வொரு தருணத்திலும் வெளிக்கொணர்ந்தவர்கள் அவங்களுக்கு நான் உயிர் எனக்கும் என் நண்பர்கள் உயிர்தான் நான் சின்னதா கவிதை எழுதினா அதை பத்து பேர்கிட்ட சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள் ஒவ்வொரு இடத்திலும் என்னை மற்றவர்கள் முன்பாக பெருமையோடு முன்னிருத்தியவர்கள் ஆனால் இதில் ஒரு விஷேசம் தெரியுமா நண்பன் கேசவனை தவிர்த்து மற்ற யாரும் இனைய பக்கம் வரமாட்டார்கள் அதற்காக இனையம் உபயோகிக்க தெரியாதவர்கள் இல்லை இப்படிப்பட்ட நண்பர்களை நினைவு கூறாமல் இருக்க முடியுமா? நண்பர்களே நீங்களும் உங்கள் நண்பர்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளுங்கள் நட்பை பெருமைப்படுத்துங்கள்

  குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

  வாழ்க வளமுடன்


  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  6 Comments
  Comments

  6 Responses to “என் நண்பர்கள்”

  ம.தி.சுதா said...
  November 1, 2010 at 3:26 PM

  ஒவ்வொருத்தரின் முன்னெற்றத்திலும் நண்பர்களின் பங்கு முக்கியமானது... அது கிடைக்கும் நட்பிலும் தங்கியிருக்கிறது.. தங்களது நண்பர்களிலும் பலர் சிறந்தவர்கள் என்பதை வெளிக்காட்டி விட்டீர்கள்...


  ஜிஎஸ்ஆர் said...
  November 2, 2010 at 7:55 PM

  @ம.தி.சுதா நல்ல நண்பர்கள் நம் வீட்டு நிலைக்கண்ணாடி போல நண்பரே


  சிகப்பு மனிதன் said...
  November 28, 2010 at 12:36 PM

  .இன்னும், இதே போல், பல சிறந்த நண்பர்கள் கிடைக்க நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் !


  .நண்பர் ஜெயசீலன் அவர்கள், இப்போது எப்படி இருக்கிறார் ?

  .நண்பர் சதீஷ் அவர்களுக்கு, திருமணம் ஆகிவிட்டாக, இப்போது ?
  .தங்களின் எழுத்துக்களில் பயணிக்கும், பார்வையாளன் !


  ஜிஎஸ்ஆர் said...
  November 29, 2010 at 12:24 PM

  @சிகப்பு மனிதன்தற்போது ஜெயசீலன் குணமடைந்து வேலைக்கு செல்கிறார்

  நண்பர் சதீஷ் திருமணம் முடிந்து தற்போது துபாயில் இருக்கிறார்


  சிகப்பு மனிதன் said...
  November 30, 2010 at 4:41 AM

  .தகவலுக்கு நன்றி, நண்பரே !


  ஜிஎஸ்ஆர் said...
  December 2, 2010 at 11:20 PM

  @சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர