Oct 22, 2010

24

மாறி வரும் காதல்,காமம், கலாச்சாரம்

 • Oct 22, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: இல்லறத்தாருக்கும், துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம் ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மான்ந்தம் கிடையாது.

  வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சிலருக்கு பிடிக்காமல் போகலாம் சிலர் இந்த கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம், இன்னும் சிலர் படித்த சுவடே தெரியாமல் படித்துவிட்டுச் செல்லலாம். எது எப்படியிருந்தாலும் நான் எனக்கு தெரிந்த விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

  நம் சமுதாயத்தை சீர்குலைப்பதில் சினிமாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது பொதுவாகவே நம் மக்கள் அப்படித்தான் செய்தித்தாள்களில் வரும் கள்ளக்காதல் செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், சினிமா செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எப்பவும் அதிகமாகவே இருக்கிறது உடனே ஒன்றிரண்டு நபர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் அதற்காக உண்மை என்பது பொய்யாகிவிடாது.

  நடு நிலையாய் இருக்க வேண்டிய செய்தித்தாள்கள் முதற்கொண்டு அதை வியாபார ரீதியாகவே ஒரு செய்தியை கவர்ச்சியுடன் வெளியிடுகின்றன, அதை விட தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளோ வெறும் ஆபாசத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றன சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஒரு ஆடல் நிகழ்ச்சி அதில் இருக்கும் நடுவர் ஒரு பெண் தான் ஆனால் அவர் ஆடல் பற்றி குறிப்பிட்டு அவர் உடை குறைத்து தொப்புள் காண்பிக்கவேண்டும் என்பதை நேரடியாக கூறாமல் வேறு ஏதேதோ சொல்லி வற்புறுத்துகிறார் அவர்கள் என்ன செய்வார்கள் இந்த உலகம் மொத்தமும் அன்பு, பண்பு, பகுத்தறிவு இவையெல்லாவற்றையும் நடிப்பாகவும், நாடகமாகவும் மாற்றி பணம் சம்பாதிக்கும் குறிக்கோளையை கொண்டுள்ளன இதில் தமிழ் தொலைக்காட்சிகள் இந்த பணியை மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.

  எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் சினிமாவில் மட்டுமே காதல் காட்சிகளை கண்டிருக்கிறேன் ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிறையவே கண்டிருக்கிறேன் ஆனால் இந்த வகையான காதல், கள்ளக்காதல் இரண்டுமே வளர்ந்த நகரங்கள், கிராமங்கள் என பாகுபாடில்லாமல் வியாபித்து கிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை இதில் கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும், செய்தித்தாள்களில் படித்ததும் அடங்கும்.

  சில வருடங்கள் வேலை நிமித்தம் சென்னையில் வசித்திருக்கிறேன் அன்றைய காலக்கட்டத்தில் பொழுதுபோக்கிற்காக மெரினா பீச் செல்வது வழக்கம் ஆனால் நாளடைவில் அங்கு செல்வதென்பதை அருவருக்கும் வகையில் அமைந்தது அங்கு இரவு 8.30 மணியை தாண்டிவிட்டால் அங்கே கனஜோராக வியாபரம் தொடங்கிவிடும் இது அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியும் ஆனால் அவர்கள் அதை கண்டுகொண்டதாக கூட காட்டிக்கொள்ள மாட்டார்கள் சரி அவர்கள் தான் பிழைக்க வழியில்லை என்று நொண்டிசாக்கு சொல்கிறார்கள் சரி என விட்டுவிடுவோம் படிக்கும் கல்லூரி பெண்கள், இளைஞர்கள், இளைஞிகள் அவர்களும் அவர்கள் பங்குக்கு எந்தளவிற்கு இந்த சமுதாயத்தை சீர்குலைக்க முடியுமோ அந்தளவிற்கு சீர்குலைக்கிறார்கள் இதில் யாரை குற்றம் சொல்வது இளைஞனையா? இளைஞியையா? பெற்றவர்களையா? கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களையா? இல்லை எது நடந்தாலும் அதையும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கும் சராசரி மனிதனையா? எங்கு தொடங்குகிறது இந்த பிழை?

  நான் நினைக்கிறேன் இந்த உலகத்தில் பலவிதமான மக்கள், பலவிதமான நாகரீகம் , பலவிதமான மதம், சாதி அமைப்பு இருக்கிறது ஆனாலும் ஒட்டுமொத்தமாக தமிழர்களின் கலாச்சாரம் மற்றவர்களால் மதிக்கக்கூடியாதாகவே இருக்கிறது அப்படித்தானே? நம்மில் தான் உறவுகளுக்கு மதிப்பும், முன்னுரிமையும் கொடுக்கபடுகிறது ஆனால் அதே நம் சமூகத்தில் குறுகிய நாட்களுக்குள் எத்தனை மாற்றம்? இது காலம் கொண்டுவந்ததா இல்லை மனிதன் மிருகமாகின்றான?

  நம் மக்களில் தான் மாமா, அத்தை பெண்ணை திருமணம் செய்கிறோம், இன்னும் சிலர் தனது அக்கா மகள் அதாவது மருமகளை திருமணம் செய்கின்றனர் ஆனால் இதை பற்றி அண்டை மாநிலத்தவர்கள் கேட்டால் எப்படியாவது வியாக்கினயம் பேசி சமாளித்து விடுவோம் இன்னமும் இந்த மாதிரியான திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன ஆனால் இதிலும் இஸ்லாம் மக்களை பற்றி கேட்கவே வேண்டாம் அவர்கள் இதற்கு வேறு ரீதியில் நமக்கு பதில் சொல்லி குழப்புவார்கள் நாம் அதற்குள் போகவேண்டாம் அதே நேரத்தில் நமது அண்டை மாநிலம் கேரளா அங்குள்ளவர்கள் நாம் நியாயப்படுத்தும் மாமா, அத்தை மகள், மகன், அல்லது அக்கா மகள் இந்த உறவுமுறையில் கூட திருமணம் செய்வதில்லை ஆனால் அங்கும் சில திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன ஆனால் பெருமளவில் இல்லை என ஆறுதல் அடையளாம்.

  சில நேரங்களில் செய்தித்தாள்களில் படிக்கிறோம் ஓரே வீட்டில் வசித்த சகோதர, சகோதரி வீட்டை எதிர்த்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்கின்றனர் சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா? நன்கு படித்தவர்கள், சகோதர,சகோதரி முறை தெரிந்தும் திருமணம் செய்பவர்களை முற்போக்கு சிந்தனைவாதிகளா? சட்டம் இருக்கிறது என்பதால் எந்தவித தவறுகளையும் செய்யலாமா? இன்னும் சிலர் இதற்கும் மேலே சென்று ஓரே பால் இனத்தவர்கள் ஒருமித்து வாழ்கிறார்கள் இதை என்ன சொல்வது, எங்கு தொடங்குகிறது இந்த தவறுகளுக்கான சூழல்? இது சரியா இல்லை மாற்றப்படவேண்டுமா?

  காதலின் அர்த்தம் தெரியாமல் இளைய சமுதாயம் சீர்கெட்டு கிடக்கிறது இப்பொழுதெல்லாம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் காதல் செய்ய ஆரம்பிக்கின்றனர், காதல் என்றால் என்ன என்று உணர்வதற்குள்ளாகவே காதல்! உண்மையில் இது அவர்களுக்கு ஒரு சந்தோஷாமான நிகழ்வாக உணர்கிறார்கள் இப்படித்தான் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னர் நம்மூரில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் இருவர் சராசரி வயது 15க்குள்ளே தான் இருந்திருக்கும் இருவருக்கும் காதல் அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் இருப்பிடத்துக்கும் நான் வசிக்கும் இடத்திற்கும் குறைந்தபட்சம் ஆறு கிலோமீட்டர் இருக்கும். ஆனால் என்ன செய்வதென்று அறியாத பாலகர்கள் சினிமாவில் தஞ்சம் சென்றடைவது போல நானும் என் நண்பனும் நிற்கும் இடத்தில் கண்ணில் பட்டார்கள் நமக்கு நமது பாகத்தில் உள்ளவர்களை முழுவதுமாக தெரியும் அதே போல நம்மையும் நன்கு அறிவார்கள். இந்த இருவருமே நம் கண்ணில் பட்டதே இல்லையே என கூப்பிட்டு விசாரித்தால் காதல் திருமணம் செய்ய வந்தார்களாம் சரி கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்தால் 150க்கு மேலே போகாது இதை வைத்துக்கொண்டு இவர்கள் புது வாழ்க்கை தொடங்க போகிறார்களாம், பின்னர் நாங்களே விசாரித்து அவர்கள் வீட்டிற்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்னரே அவர்கள் குடும்பத்தார்கள் நமது பாகத்திற்கு வந்து விட்டிருந்தார்கள்.

  இனிமேல் தான் விஷயமே இருக்கிறது நான் முன்னமே சொன்ன அவர்கள் வயதை ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள், இருவரின் குடும்பத்தார் வந்ததும் கோபத்தில் அடித்து விட்டார்கள் அப்போழுது தான் நாம் சினிமாவில் காண்பது போல இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்துக்கொண்டு பிரியமாட்டேன் என அடம்பிடிக்கிறார்கள் இது எதன் பாதிப்பு நீங்கள் தான் சொல்லவேண்டும்.

  இனி இந்த கள்ளக்காதால் சாதரன ஒரு நபர் திருமணம் முடிந்தவர் அவர் அவர் மணைவி, கணவன் அல்லாத அல்லது சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு காதல் அதற்கு பெயர் கள்ளக்காதால். இந்த காதலுக்கு இடத்திற்கு தகுந்தாற் போல இருவிதமான பெயர்கள் அழைக்கப்படுகிறது பிரபலமல்லாத ஒரு சராசரி நபர் இந்த தவறை செய்தால் இதற்கு பெயர் கள்ளக்காதல் அதே நேரத்தில் பிரபலமானவர்கள் இந்த தவறை செய்தால் அதற்கு பத்திரிக்கைகள் வழங்கும் பெயர் காதல் இந்த கள்ளக்காதல் தான் நெஞ்சை பதை பதைக்க செய்கிறது சமீபத்தில் நடந்த ஒரு சிறுவனின் கொலை, மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனின் கொலை, தலையில் அடித்து கொலை என புதிது புதிதான வக்கிரமான முறையில் கொலைகள் நடைபெறுவது இந்த கள்ளக்காதலில் தான். இதை பற்றி நான் அதிகம் எழுதப்போவதில்லை. என்னுடைய கேள்வி எதனால் இந்த மாற்றம் ஏற்படுகிறது எங்கு தவறு நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது ஆனாலும் இதில ஒரு விஷயம் இந்த கள்ளக்காதலில் குற்றவாளிகள் பெரும்பாலும் ஒரு பால் இனத்தவராகவே இருக்கின்றனர் என்பதை பத்திரிக்கைகள் விளம்படுத்தும் போது தான் நமக்கும் தெரிகிறது.

  இனி நாம் மேலே பார்த்த இரண்டிலுமே சேராத காட்டுமிராண்டித்தனமான ஒரு செயல் இருக்கிறது அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம் ஆனால் பெரும்பாண்மையான செய்திகள் வெளிநாடுகளில் நடந்தவை தான் அதாவது பெற்ற மகளேயே வன்புணர்வு செய்து வீட்டிலே அடைத்து வைத்து கொடுமை படுத்தப்பட்டு பின்னர் சட்டத்தால் மீட்கப்பட்டதாக செய்திகளில் படிக்கிறோம் ஆனால் இதெல்லாம் வெளிநாடுகளில் தான் கலாச்சாரம் தெரியமால் மனித நேயம் இல்லாமல் , உறவு முறை தெரியாமல் சிதைக்கிறார்கள் என நினைத்திருந்த நேரத்தில் தான் மிக சமீபத்தில் ஒரு சம்பவம் அறிய நேர்ந்தது இதை வாசிக்கும் போது முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த யாரவது இருந்தால் இந்த உண்மை அவர்களுக்கு தெரியும் இது நடந்து பல வருடங்கள் இருக்கும். முதுகுளத்தூரில் இருக்கும் குடிகாரன் மனைவி இறந்த சில நாட்களிலியே குடித்து விட்டு 18 வயது கூட நிரம்பாத மகளை வன்புணர்வு செய்திருக்கிறான் பாவம் அந்த பெண் என்ன செய்வதென்றே தெரியாமல் சகித்திருக்கிறார்கள் இறுதியில் நடந்தது தான் ஆச்சரியம் கடைசியில் தகப்பனும் மகளுமே குடித்தனம் நடத்த தொடங்கிவிட்டனர் இப்போது அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருவருமே தாமாகவே பிடித்தவர்களோடு திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனராம் காரணம்? இந்த குடும்பத்தை பற்றி தெரிந்தவர்கள் எப்படி பெண் எடுப்பார்கள் இதில் தவறு யாரை சொல்வது குடிகார தகப்பனையா? பெற்ற தகப்பன் இப்படியான ஒரு தவறை செய்யும் போது அதை ஏற்றுக்கொண்டிருக்கும் பெண்ணையா? இல்லை சந்தர்ப்ப சூழலையா? என்னைப்பொருத்த வரை நான் சந்தர்ப்ப சூழல் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் உங்கள் பதில் என்ன? எதை குற்றப்படுத்துவீர்கள்.

  மனிதர்கள் தோன்றிய காலத்தில் மிருகம் போலத்தான் இருந்திருக்கிறான் ஆனால் நாளடைவில் எத்தனையோ மாற்றங்களை உணர்ந்திருக்கிறான் நல்லது கெட்டது, சரி,தவறு, உறவுகளுக்கு மரியாதை, முக்கியத்துவம் எல்லாமே படிப்படியாக வளர்ந்து தான் வந்திருக்கிறது ஆனால் வளர்ந்து வரும் சூழலில் மீண்டும் மிருகமாக ஐந்தறிவு ஜீவியை போல மாறுகிறார்களை எதனால் இந்த மாற்றம், இது தான் நாகரீகமா? முற்போக்கான எண்ணமா? உறவுகள் என்பது வெறும் பாலியல் சார்ந்ததா?

  இந்த பதிவில் வரும் சில விஷயங்களை தவிர்க்க நினைக்கவே விரும்பினேன் ஆனால் தவிர்க்க முடியவில்லை முடிந்தவரை சொல்ல வந்த விஷயத்தை மட்டும் தான் தொட்டிருக்கிறேன் யாரும் இதை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளவேண்டாம், இதை விழிப்புணர்வாக, இப்படியும் நடக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்கவே இந்த பதிவு. நண்பர்களே இதை குறித்தான ஆரோக்கியமான சிந்தனைகளை முன்வையுங்கள், நடைமுறைக்குட்பட்ட பதிவு என்றென்னினால் அவசியம் பதிவிற்கு வாக்கும், பதிவை பற்றிய ஆரோக்கியமான கருத்தை உங்கள் விவாதமாக வைக்கவும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  24 Comments
  Comments

  24 Responses to “மாறி வரும் காதல்,காமம், கலாச்சாரம்”

  மாணவன் said...
  October 22, 2010 at 2:31 PM

  அன்பின் நண்பா,
  “மாறி வரும் காதல்,காமம்,கலாச்சாரம்” இன்று மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள் நீங்கள் சொல்வதுபோல் சில ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் சினிமாக்களும் போட்டிபோட்டுகொண்டு ஆபாசங்களை அரங்கேற்றி வருகின்றன. குறிப்பாக சில இளைஞர்கள் இளைஞிகள் மாணவர்கள் நாகரிகம் என்ற பெயரில் தடம் மாறி செல்கின்றனர். ஒருபக்கம் அறிவியலின் வளர்ச்சி நமக்கு வியப்பாக இருந்தாலும் அதை தீய வழியில் பயன்படுத்துவதையே சிலர் குறியாகக்கொண்டுள்ளனர் முக்கியமாக மொபைல் போன் இன்று கேமரா மொபைல் இல்லாத மனிதர்களே இல்லை சிலர் இதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை, இதில் என்ன சொல்வது, யாரை குறைபட்டுக்கொள்வது, இப்படியே போனால் இந்த சமூகத்தின் நிலைமை எதிர்கால தலைமுறையினர்.... எல்லாமே கேள்விக்குறியாக உள்ளது.
  நண்பா எனதுபார்வையில் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொண்டேன்
  அவ்வபோது இதைப்போன்ற பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்...
  வாய்ப்பிற்கு நன்றி


  மதுரை பாண்டி said...
  October 22, 2010 at 2:39 PM

  சரியாக சொல்லி இருகிறீங்க !! இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.


  kandha said...
  October 22, 2010 at 3:39 PM

  Usefull article in a right time.
  Every one has think about it.


  எஸ்.கே said...
  October 22, 2010 at 5:02 PM

  உறவுகளுக்குக்குள் சரியான புரிதல் இல்லாமை, பள்ளிகளில் பாலுறவு சார்ந்த விசயங்களை தெளிவுபடுத்தாமை போன்ற சமூக குறைபாடுகள் இப்படி நடக்க பெரும் காரணமாகின்றன!!


  தமிழரசி said...
  October 22, 2010 at 5:29 PM

  முடிந்தவரைன்னு சொல்ல முடியாது பெரும்பாலும் மிகத்தெளிவா சொல்லியிருக்கீங்க...முதல் காதல் ஒரே காதல் என்பதெல்லாம் பொய் அதிலும் காதலில் கள்ளக்காதல் என்ற ஒன்றில்லை..இந்த வார்த்தை கேட்கும் போதெல்லாம் சிரிப்பதா அழுவதா கோவப்படுவதா என தெரியாமல் நான்.இதை புரியவைக்க நிறைய சொல்லவேண்டி இருக்கும் இருப்பினும் புரிந்து கொள்வார்களா என்பது சந்தேகம், இதை உணரும் போது நாம் விளக்குவது வீண் என்றும் தோன்றும்


  Shafiq said...
  October 22, 2010 at 5:57 PM

  Dear Brother,

  தாங்கள் இஸ்லாத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்வுலகில் தாங்கள் மேற்ச்சொன்ன அனைத்து விதமான அனாச்சாரங்களையும் தடுத்து நிறுத்திட இஸ்லாம் என்ற கொள்கையே சிறந்தது, இதை நான் சும்மா சொல்லவில்லை நீங்கள் அதை ஆராய்ந்து பாருங்கள், உதாரணத்திற்க்கு சில சட்டங்களை பாருங்கள் - 1) வயது வந்த ஆணும் பெண்ணும் தனித்திருக்க வேண்டாம் ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான், 2)எந்த பெண்ணும் மஹ்ரம்(இரத்த பந்தங்கள்) இல்லாத ஆண்களுடன் பயணம் செய்ய வேண்டாம்,3) குழந்தைகள் 10 வயது வந்தவுடன் அவர்களின் படுக்கைய பிரித்துவிடுங்கள்,4) ஆண்களும், பெண்களும் தங்களது பார்வையை தாழ்த்திக்கொள்ளட்டும்...இதுபோல நிறைய..நன்றி...


  ம.தி.சுதா said...
  October 23, 2010 at 12:34 AM

  சகோதரா சமுக சிர்திருத்தத்திற்காய் உருவான சினிமாவே இன்று சமுகத்தை அழிக்கிறதே....


  ம.தி.சுதா said...
  October 23, 2010 at 12:37 AM

  சகோதரா எமத கணணியில் ஹிடின் பண்ணியுள்ள பைலை எப்படிக் கண்டுபிடிக்கலாம்...


  ஜிஎஸ்ஆர் said...
  October 23, 2010 at 8:54 AM

  @மாணவன்அறிவியலின் சில உச்ச கட்ட வளர்ச்சி சில நேரத்தில் சமுதாயத்தில் அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது சரியான உதாரணம் அலைபேசி, நண்மையை மட்டுமே சிந்தித்து செயல்பட்டாலும் அதை தீமைக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என அடம் பிடிக்கிறார்கள் சட்டத்தின் பிடி இறுக வேண்டும்


  ஜிஎஸ்ஆர் said...
  October 23, 2010 at 8:59 AM

  @மதுரை பாண்டி நன்றி நண்பா அவ்வப்போது இது போன்ற பதிவுகளையும் எழுதுகிறேன் உங்களின் சரியான புரிதலுக்கு நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  October 23, 2010 at 9:00 AM

  @kandhaஉண்மைதான் நண்பரே எல்லோருமே சிந்திக்கிறார்கள் ஆனால் இதன் சரியான காரணத்தை இதுவரை கண்டறிந்து களையமுடியவில்லையே நண்பா


  ஜிஎஸ்ஆர் said...
  October 23, 2010 at 9:02 AM

  @எஸ்.கேஉண்மைதான் கற்றுக்கொடுக்கும் ஆசைரியர்கள் கூட அறிவியல் பாடத்தில் வரும் பாலுறவு சம்பந்த விஷயங்களை சொல்லிக்கொடுப்பதில்லை என்ன செய்வது அவர்கள் சிந்திப்பது வேறு விதமாக இருக்கிறது


  ஜிஎஸ்ஆர் said...
  October 23, 2010 at 9:05 AM

  @தமிழரசிஆம் சகோதரி நானும் உங்கள் கருத்தில் உடன்படுகிறேன் ஆனால் நான் பதிவிலேயே சொன்னபடி சில விஷயங்களை சொல்வதறகு அவசியம் சில வார்த்தை பிரயோயகங்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது அவ்வாறு பயன்படுத்தாமல் வேறு வார்த்தைகளை இட்டு பூர்த்தி செய்யும் போது பதிவின் சாரம்சம் போய்விடுகிறது தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  October 23, 2010 at 9:07 AM

  @Shafiqஅன்பின் நண்பா நான் தங்களின் இஸ்லாம் பற்றி எந்தவித தவறான விஷயங்களையும் நான் தினிக்கவில்லை ஆனால் அதே நேரத்தில் இஸ்லாம் சொல்வதை முழுவதும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நான் இதற்கு முன்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதையும் பாருங்கள்http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_22.html


  ஜிஎஸ்ஆர் said...
  October 23, 2010 at 9:10 AM

  @ம.தி.சுதாசமூக சீர்திருத்தம் என்பதை கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை பெரும்பாலான சினிமா வியாபாரத்தையும் பொழுதுபோக்கையும் மட்டுமே கருத்தில் கொண்டுள்ளன


  ஜிஎஸ்ஆர் said...
  October 23, 2010 at 9:10 AM

  @ம.தி.சுதாஇப்படி கண்டுபிடிக்கலாமே
  http://i53.tinypic.com/23r46j9.jpg


  ம.தி.சுதா said...
  October 31, 2010 at 10:51 PM

  மன்னிக்கணும் சகோதரா நான் இதைக் கவனிக்கவில்லை.. மன்னிக்கவும்..


  Islamiya Paarvai said...
  November 11, 2010 at 4:16 PM

  நண்பா நான் சிறுவயதில் இருக்கும்போது என் வீட்டருகே இப்படிப்பட்ட கள்ளக் காதல் கொண்டோர் ஏராளமானோர் இருந்தனர். இன்னும் இந்தக் கள்ளக் காதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் என் வீட்டருகே போவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனென்றால் அந்தக் கள்ளக் காதல்களை நான் நேரில் கண்டு மிரண்டு போனவன். ச்சீ... ச்சீ... எப்படி இப்படியெல்லாம் இவர்களால் வாழ முடிகிறதோ? குடும்ப அமைப்பே இல்லாமல் சிலர் இப்படி வாழ்கின்றனர்.


  ஜிஎஸ்ஆர் said...
  November 12, 2010 at 12:38 AM

  @Islamiya Paarvai இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விஷயத்தில் படித்தவர் படிக்காதவர் இருவருமே இந்த தவறை செய்கின்றனர் இது தான் காலம் கலிகாலமோ?


  kannan said...
  June 27, 2011 at 1:25 PM

  இப்படி தான் வாழ வேண்டும் என்று நாம் தானே சட்டம் வகுத்தோம் ......மாமா அக்கா மகளை கட்டுவது நமக்கு சரி என்று படும் ....இதுவே வட மாநிலத்தவருக்கு சரியில்லை என்பார்கள் ....அப்பொழுது யார் மீது குற்றம் உள்ளது ....அவரவர் மனதுக்கு பட்டது தான் ..சரி ...என எடுத்து கொள்ளலாமா ....விடை தெரிய வில்லை... தச்சை கண்ணன்


  rtvenkat said...
  May 4, 2012 at 10:23 PM

  ஒரு நல்ல,தேவையான,தற்சமயம் மிக அவசியமான விசயத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி! எனக்குத் தோன்றியது என்னவோ, இப்படி ஒரு சமுதாய சீர்கேட்டிற்கு காரணமாக‌ முக்கியபங்கு வகிப்பது திரைப்படம்,தொலைக்காட்சி மற்றும் ஒரு சில,பல பத்திரிக்கைகளே. ஆணும் பெண்ணும் ஒட்டாமல் உரசாமல், காதலைப் பற்றி சொல்லியிருக்கிறதா மேற்சொன்ன ஊடகங்களில் எவையேனும்? இவ்வளவு ஏன்? இன்று வரும் எந்த ஒரு பொருளுக்கான விளம்பரமும் காமத்தை முன்வைத்தோ (அ) உள்வைத்தோ உருவாக்கப்படுகிறது மற்றும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய பெரும்பாலான பெற்றோர்களும் கூட தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகள் கெட்டுப்போக காரணமாகின்றனர். வீட்டில் குழந்தைகள் உள்ளபோது தொலைக்காட்சியில் எதைப்பார்க்க வேண்டும்,எதைப்பார்க்கக் கூடாது என்பதைப்பற்றி சிந்திப்பதில்லை.இதுபோல் இன்னும் பல!!! என்று தணியும் இந்த த‌றிகெட்ட மோகம்? கவலையுடன்...


  ஜிஎஸ்ஆர் said...
  May 8, 2012 at 4:08 PM

  @kannanஅவரவர் மனதுக்கு படுவதை சரி என எடுத்துக்கொண்டால் சமுதாயம் சீரழிவதை தடுக்க முடியாது அதே நேரத்தில் கலாச்சாரமும் மறைந்தே போய்விடும்


  ஜிஎஸ்ஆர் said...
  May 8, 2012 at 4:10 PM

  @rtvenkat நம்மை போல தனி மனிதர்கள் ஆதங்கபட்டு பேசுவதில் பெரிதாக எதுவும் நடக்க போவதில்லை அதே நேரத்தில் அரசு நினைத்தால் கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்


  Nalliah said...
  September 8, 2016 at 3:31 AM


  "ஆதலினால் காதல் செய்வீர்"

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம். “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவியவன் பாரதி.

  ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதயங்கள் இணையாது வெறும் உடல்கள் மட்டும் இணைந்த உடலுறவு மட்டுமே.

  ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.

  கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், கல்யாணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப் பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.

  எங்கள் எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவருடன் கல்யாணம் எப்படி வருடக் கணக்கில் தொடர முடியும்?

  பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில், நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக வெறும் சம்பிரதாயங்களுக்கும் கடமைக்கும் கணவன் மனைவி எனக் குறுகி, இறுதி வரை தொடர்கின்றன.

  கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் எங்கள் கணவன் மனைவிக்கிடையில் "சாப்பாடு தயாரா?", "பிள்ளைகள் என்ன சாப்பிட்டார்கள்?" என சில சொற்களுக்கு மேல் அவர்களுக்கிடையில் உரையாடும் குடும்பங்கள் மிக மிக அரிது.

  உண்மையான காதலில்தான் அன்பு இருக்கும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், குதர்க்கமாகப் பேசுவதும், குத்திக்காட்டுவதும், போலியான உறவுகளில்தான் இருக்க முடியும். கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால் பல ஆண்கள் விபச்சாரிகளை தேடிப்போனார்கள். நாங்கள் பெரும்பாலும் எங்கள் நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுவோம்.
  கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டுப் பேசி காதல் வளராதலால், வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதை புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலை பார்த்துவிட்டு, நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம்.

  இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள நெருக்கத்தையே காதல் என எண்ணி, ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாக சற்று நெருக்கமாக பழக நேர்ந்தாலே அது கல்யாணம் செய்து கொள்வது வரை சென்று விடுகின்றது.

  இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.

  காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும், தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ளவும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.

  – நல்லையா தயாபரன்


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர