Mar 29, 2010
விண்டோஸ் போல்டரை மாற்றலாம்
சாதரணமாக நமது கணிணியில் புதியதாக ஒரு போல்டர் திறந்தால் கீழே உள்ள படம் போலத்தான் இருக்கும் அதை நமக்கு வேண்டுமானால் நமது விண்டோஸில் உள்ள சில ICONகளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் அதற்கான வழிமுறை
சரி இதுல இருக்குறது ஒன்னுமே நமக்கு பிடிக்கல நமக்கு பிடிச்ச மாதிரி நம்முடைய போட்டோவையோ அல்லது நம் குழந்தைகள் போட்டோவோ இருந்தா நல்லாயிருக்குமே கீழே பாருங்கள் நான் எனது கீழே பாருங்கள் நான் எனது பெயரின் சுருக்கெழுத்தை வைத்திருக்கிறேன்
இதை எப்படி கொண்டுவருவது என பார்க்கலாம் தங்கள் கணிணியில் போட்டோஷாப் மென்பொருள் அவசியம் இருத்தல் வேண்டும்
வழிமுறை
போட்டோஷாப்பை திறந்து புதிய பைல் திறந்து File – New அல்லது CTRL+N எனக்கொடுத்து புதிதாய் திறக்கும் விண்டோவில் படத்தில் உள்ளது போல Pixels என்பது 48 X 48 என்கிற அளவில் இருக்கட்டும் அதற்கு குறைந்து இருந்தாலும் பிரச்சினை இல்லை அதற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் Resolution என்பதை விருப்பப்படி வைத்துக்கொள்ளவும்
இனி திறக்கும் விண்டோவில் தங்களுக்கு பிடித்தமான போட்டோ அல்லது ஏதாவது எழுதவிரும்பினால் எழுதிக்கொள்ளவும் படத்தின் அளவு அல்லது எழுத்தின் அளவை கூட்ட, குறைக்க Show Buunding Box என்பதை தேர்ந்தெடுத்துகொண்டால் அதை சுற்றி ஒரு கட்டம் போல வரும் அதில் எலியை (மவுஸ்) வைத்து ஷிபிட் கீ-யை அழுத்திபிடித்துகொண்டு அளவை மாற்றலாம் அவ்வளவுதான்
சரி இனி என்ன நாம் தயார் செய்த பைலை சேமித்துவிடவேண்டியதுதான் சேமிக்கும்போது வழக்கமான முறையான JPEG அல்லது PSD பைலாக அல்லாமல் ICO என்கிற பார்மட்டில் சேமித்துவிடுங்கள்
இனி நாம் முதலிலேயே பார்த்தமாதிரி Folder Properties சென்று திறக்கும் வின்டோவில customize செலக்ட் செய்து அதன் கீழே உள்ள Change Icon என்பதை தேர்ந்தெடுத்து புதிதாய் திறக்கும் விண்டோவில் Browse என்பதை தேர்ந்தெடுக்கவும் இனி தாங்கள் போட்டோஷாப்பில் தயார் செய்து சேமித்த ICO பைலை தேர்ந்தெடுக்கவும் ஓக்கே கொடுக்கவும் இனி நீங்கள் தேர்வு செய்த படமே உங்கள் போல்டராக தெரியும்
பார்த்தீர்களா நான் எனது பெயரின் சுருக்கெழுத்தை வைத்திருக்கிறேன் இந்த முறையில் உங்களுக்கு பிடித்தமாதிரி கற்பனைக்கு ஏற்றால்போல் மாற்றி வச்சுங்க
போட்டோஷாப் மென்பொருள் இல்லாதவர்கள் இந்த மென்பொருள் உபயோகித்து பார்க்கலாம் சந்தேகம் இருப்பின் கேள்விகளை கருத்துரையில் பதியவும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
5 Responses to “விண்டோஸ் போல்டரை மாற்றலாம்”
-
Alim
said...
October 17, 2010 at 5:14 PMHi GSr.
I have photoshop 7.0.
There is no ICO format. Could u explain me to add this ICO format -
ஜிஎஸ்ஆர்
said...
October 18, 2010 at 12:07 AM@Abdul நண்பா இந்த பொதியை தரவிறக்குங்கள் அதனுள் PLUG IN இனைத்திருக்கிறேன்
http://www.4shared.com/file/DYBEAbKq/Photoshop_7_ICO_Plugin.html
நீங்கள் தரவிறக்கிய PLUG INகளை நீங்கள் எந்த டிரைவில் இன்ஸ்டால் செய்திருக்கிறீர்கள் என தெரியாது ஒரு வேளை நீங்கள் டிரைவ் Dல் இன்ஸ்டால் செய்திருந்தால் D:\Program Files\Adobe\Photoshop CS\Plug-Ins\File Formats அங்கு பேஸ்ட் செய்துவிடுங்கள் எப்படி இருந்தாலும் File Formats கண்டுபிடித்து பேஸ்ட் செய்யவும் மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்புகொள்ளவும் (ICO என்பது ஐகான் அளவுள்ள இமேஜ்களுக்கு மட்டுமே தெரியும் உதாரணத்துக்கு 48 X 48 இதற்கு கீழாக உள்ளவற்றிற்கு பொருந்தும் -
Vengatesh TR
said...
November 28, 2010 at 1:16 PM.gold-shell software link, file is deleted from server, sir !!
.நிரந்தரமாக, எந்த folder create செய்தாலும், நம் icon, default
ஆக,வருவது போல், செய்ய முடியுமா, நண்பரே ?
.பகிர்வுக்கு, நண்பரே ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 11:29 AM@சிகப்பு மனிதன் நீங்கள் சுட்டியதை சரி செய்துவிட்டேன்
\\நிரந்தரமாக, எந்த folder create செய்தாலும், நம் icon, default
ஆக,வருவது போல், செய்ய முடியுமா, நண்பரே ?\\
முயற்சிக்கலாம் -
Vengatesh TR
said...
November 30, 2010 at 5:08 AM.தரவிறக்கி விட்டேன் நண்பரே, goldIcon சாப்ட்வேர்'ஐ !!
.அதே சுட்டியில் உள்ள FLAX software, அருமையாக இருக்கும் !
.நேரம் இருந்தால், உபயோகித்து பார்த்து, பதிவு எழுதுங்களேன், பலர் பயனைடைவர் !
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>