Apr 25, 2010

10

கடவுள் நல்லவனா கெட்டவனா

  • Apr 25, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:நீ முயற்சி செய்யாத வரை உன்னால் என்ன முடியுமென்று ஒருபோதும் தெரியாது

    இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிறக்கும் போதே ஒரு அடையாளத்துடன் தான் பிறக்கின்றோம் முதலில் நாம் அறியப்படும் போது நமது அப்பாவின் பெயராலும் அம்மாவின் பெயரால் மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அறியப்படுகிறோம் பின்னர் நாம் வளர வளர நம்மை சாதி என்கிற அடையாளத்தோடு காணப்படுகிறோம் பின்னர் மதத்தின் அடிப்படையில் அறியப்படுகிறோம் இவையெல்லாம் ஒவ்வொரு நேரத்தில் நாம் ஒவ்வொரு விதமாக நம்மை இந்த சமுதாயம் அடையாளப்படுத்துகிறது நான் இப்போது எழுதப்போவது மதம் அதாவது கடவுளை பற்றித்தான்.

    இந்த கடவுளை சுற்றித்தான் எத்தனை விதமான உருவகபடுத்துதல்கள் எத்தனை பிரிவுகள் , இந்து, கிறிஸ்து, இஸ்லாம், புத்தம் இன்னும் எத்தனை எத்தனையோ கடவுள்கள் அதில் எத்தனையோ கொள்கைகள் நான் ஒரு இந்து ஆனால் இந்த இந்து மதத்தில் தான் எத்தனை கடவுள்கள் எத்தனை விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன அதுபோல கிறிஸ்து, இஸ்லாம் மதத்தை எடுத்துக்கொண்டாலும் அதில்தான் எத்தனை பிரிவுகள், வழிபாட்டு முறைகள் இருக்கின்றன?

    நாம் எல்லோரும் வழிபடும் முறையும் வழிபடும் உருவமும் வெவ்வேறானதாக இருக்கிறது ஆனால் ஒவ்வொரு மத புத்தகத்திலும் நமக்கு சொல்ல வருவது என்னவோ ஓரே மாதிரியான கருத்துகள் தான் என்ன இந்து மதத்தை பொருத்த வரை பகவத் கீதை எனும் நூல் இருக்கிறது இதில் பகவான் ஸ்ரீகிருஷ்னர் போர்களத்தில் உபதேசிப்பதாய் உள்ளது அதை அடிப்படையாக வைத்துதான் பகவத்கீதை எழுதப்பட்டது என நினைக்கிறேன் இந்த மதமே சிந்து சமவெளி நாகரீகத்தின் வழியாக வந்ததாம் அதாவது பாரசீக மொழியில் ச என்கிற எழுத்து ஹ என அழைத்து அதன் வழியாக ஹிந்து என பெயர் வந்ததாக அறியப்படுகிறது இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய அறிஞர்கள் சொல்கிறார்கள் இந்து மதம் கிறிஸ்து மதம் தோன்றும் முன்பாக சுமார் 1500 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆனால் வரலாற்று தகவல்களோ சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக கல்வெட்டுகள் சாட்சி அளிக்கின்றன, பழங்கால மதங்களில் இன்னமும் அழிந்து விடாத மதமாக இருப்பது இந்து மதம் தான் அழியாமல் இருப்பதன் ஒரு காரணம் புதிய கருத்துகளை தினித்தாலும் ஏற்றுக்கொள்ளல்தான் இதன் சிறப்பு இதில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது அதாவது இந்து மதத்தை முன்னுக்கு பின்னான முரன்பாடன தகவல்கள் நிறைய இருந்தாலும் அவை யாவும் மக்களை குழப்புவதற்கு பதிலாக இறையுணர்வை தூண்டுவதாக இருப்பதை உணரலாம். இதில் ஒரு சாரார் மாமிசம் புசிப்பதில்லை காரணம் கேட்டல் கடவுள் பெயர் சொல்வார்கள் ஆனால் அதே நேரத்தில் பெரும்பாண்மையான் மக்கள் அதே மாமிசத்தை கடவுளுக்கு படைத்து தானும் உண்கின்றனர்.

    அடுத்ததாக கிறிஸ்து மதம் இந்த கிறிஸ்து மதத்தை அப்படி எளிதாக ஒதுக்கி விடமுடியாது காரணம் இந்த உலகை ஒரு காலவரையரைக்குள் கொண்டு வந்ததுதான் அதாவது கிறிஸ்து பிறக்கும் முன்பாக இருந்த காலத்தை கி.மு எனவும் கிறிஸ்து பிறந்த பின் உள்ள காலத்தை கி.பி எனவும் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்தியிருக்கிறது இங்கே ஒரு விஷயம் யோசிக்க வேண்டியிருக்கு அப்படியானால் இயேசு பிறப்பதற்கு முன் எப்படி காலத்தை எப்படி கணக்கிட்டார்கள் என்பது பற்றி சரியான தகவல் இல்லையென்று தான் நினைக்கிறேன்.

    அதிலும் இயேசுவின் பிறப்பிற்கு முன்பே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசிகள் அறிவித்ததாக பைபிள் வழி அறியமுடிகிறது அது மட்டுமல்லாமல் வெரும் ஒரு கதையாக இல்லாமல் பல இடங்களில் வரலாற்று ஸ்தளங்களின் பெயர் இருப்பது நம்ப வைப்பதாய் இருக்கிறது. இயேசு பிறப்பார் எனவும் அவர் மக்களின் நோய் நொடிகள் தீர்ப்பார் எனவும் தீர்க்கதரிசிகள் சொன்னது போல நடந்தது என பைபிளில் பல இடங்களில் வாசகங்கள் காணப்படுகிறது மேலும் இவர் பிறந்த நாள் தான் இப்போது கிறிஸ்துமஸ் என கொண்டாடப்படுகிறது ஆனால் இதிலும் சில மாயாஜால விஷயங்கள் காணப்படுகிறது உதாரணத்திற்கு மரித்தவரை எழுப்பினார், கன்னிப்பெண் கருத்தரித்து தீர்ந்து போன உணவுகள் மலை மலையாய் குவிந்தது என இப்படியும் இதில் சில தகவல்கள் இருக்கின்றன ஆனால் இந்த மத்ததிலும் நண்மை செய்வதையும் நல்ல வழியில் நடப்பதையும் தான் அறிவுறுத்துகின்றனர். இங்கு மாமிசத்தை பொருத்தவரை தடையில்லை அதற்கு ஒரு விளக்கவும் காணப்படுகிறது நீ செய்யும் பாவங்களை நானே ஏற்றுக்கொள்கிறேன் என ஒரு வாசகம் இருக்கிறது பின்னர் எதனாலவோ பாவம் செய்தவனுக்கு நரகம் நண்மை செய்தவனுக்கு சொர்க்கம் என விளக்குவது நம்மை சிந்திக்க வைக்கிறது.

    இனி இஸ்லாம் மதம் இந்த மதத்தை பொருத்தவரை நிறைய தவறான கருத்துக்கள் இருக்கிறதென்பதை மறுப்பதிற்கில்லை, மேலும் அல்லாஹ் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார் அல்லது இதன் தொடக்க வரலாறு என்னவென்பதை உணர்ந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கிறது காரணம் பார்த்தோமேயானால் அதிக இடங்களில் முகமது நபி என்கிற இறைதூதரை பற்றித்தான் பேசப்படுகிறது அதிலும் முகமது நபி அவர்களின் கருத்துகள் தான் முழுவதுமாய் விதைக்கபட்டிருக்கிறது சில இடத்தில் மூட நம்பிக்கைகளை அழிக்க சொல்லி சாடியிருக்கிறார் அதாவது குர் ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ இது மாதிரியான பழக்கங்களுக்கு ஆதாரம் இல்லை என அறியப்படுகிறது மேலும் இஸ்லாமில் சில நல்ல கருத்துகள் பொதிந்து கிடப்பதை மறுக்கமுடியாது அதாவது ஒரு இடத்தில் பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உன்னிடம் அதிகம் இருக்குமேயானால் அதில் ஏழை எளியவர்களுக்கும் பங்கு இருக்கிறது அவற்றை சரியாக முறைப்படி கணக்கிட்டு கொடுக்கவேண்டும் இல்லையென்றால் இலவு காத்த கிளி போலத்தான் என்பதை விரைவில் உணரமுடியும் என்பதாக விளக்கபடுகிறது.

    மேலும் சில இடங்களில் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதமாக சில இடங்களில் காணப்படுகிறது அதாவது சமாதி வழிபாடு செய்வதன் மூலம் இறந்து போனவர்கள் நம்மை இறைவனை நெருங்கசெய்ய உதவுவார்கள் என நம்புகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு உதவுகிறவனும் பண்பாளனுக்கும் அல்லாஹ் ஆசீர்வதிப்பார் என்பதாக நல்ல விஷயங்களும் இருக்கிறது மேலும் கடவுள் என்பதை விட அடிப்படை நல்ல விஷயங்களை போதிப்பாதாகவே எனக்கு தோன்றுகிறது, சில இடங்களில் வட்டிக்கு கொடுப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது சில இடங்களில் வணக்கம் தெரிவித்தால் பதில் வணக்கம் சொல்ல அறிவுறுத்துகிறது ஒரு இடத்தில் ஒரு இடத்தில் என் சமுதாயத்தில் வருங்காலத்தில் என் பள்ளிகள் அதிகமாக இருக்கும் கூட்டம் நிரம்பி வழியும் அதே நேரத்தில் அங்கு நேர்மை இருக்கது என முகமது நபி அவர்கள் கூறுகிறார்கள் இந்த இஸ்லாம் மதம் தொடங்கும் போது வெறும் 40 நபர்களுடன் ஆரம்பித்ததாம் என்னை பொருத்தவரை மத அடிப்படையோடு சில வாழ்வியல் அடிப்படைகளையும் இனைத்தே காணப்படுகிறது.

    அடுத்து புத்த மதம் இதை பற்றி பார்ப்போமேயானால் நேரடியாக இந்து மதத்திலிருந்தே பிரிந்து போனதாக சொல்லப்படுகிறது ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு மனிதனை கடவுளாக சித்தரித்தது இதிலும் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் இதில் மறைமுகமாக தவறான வழியில் அழைத்து சென்றதாகவும் ஒரு தகவல் அதாவது புத்தர் ஒரு ஆணாதிக்கவாதி எனவும் பெண்களை வெறுப்பவர் எனவும் அந்த வெறுப்பில் தான் துறவறம் பூண்டார் எனவும் சில இடங்களில் பெண்களுக்கான உரிமை விஷயத்தில் மறுப்பு தெரிவித்ததாகவும் கூட வரலாறு இருக்கிறது மேலும் தம்மை பின் தொடரகூட பெண்களுக்கு ஒழுக்க விதிகள் ஏற்படுத்தியாதாகவும் காணப்படுகிறது இருப்பினும் சில இடங்களில் சில நல்ல விஷயங்களையும் சொல்கிறது குறிப்பாக அடுத்தவனின் மனைவி மேல இச்சை கொல்லாதே உன் வயதுக்கும் குறைந்த பெண்களை சகோதரியாக பாவிக்கவும் உன் வயதுக்கு மேலை உள்ள பெண்களை தாயாக பாவிக்கவும் போதிக்கபடுகிறது மேலும் பாலியல் உணர்வு என்பது இயற்கையானது ஆனால் இதில் மட்டும் பாலியலை ஏதோ ஒரு பெரிய தவறு போல காட்டியிருப்பது கொஞ்சம் சிந்திக்கவேண்டியாதா இருக்கிறது ஒரு வேளை கிறிஸ்து, மற்றும் இஸ்லாம் இந்த இரு மதங்களும் துறவறம் என்பதை இங்கிருந்துதான் எடுத்துக் கொண்டிருக்குமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

    ஆக எல்லா மதங்களுமே பார்த்தோமேயானால் முடிந்தவரை கடவுள் எனும் பெயரில் நல்ல விஷயங்களை தான் சொல்லியிருக்கிறது சில விஷயங்கள் தவறாகவும் தினிக்கபட்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவோம். நான் யோசித்தது கடவுள் உண்மையென்றால் ஏன் மக்களுக்கு காட்சி கொடுக்கவில்லை ஏன் முன்னர் தோன்றியது போல இறை தூதர்கள் இப்போதும் தோன்றவில்லை ஆக மேலே சொன்ன எல்லா விஷங்களும் ஒரு கற்பனையா இந்த சந்தேகம் உங்களுக்கும் வரும், கடவுள் இருக்கிறான இல்லையா என்பதல்ல விஷயம் நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிடித்தமான மதத்தில் இருக்கிறோம் பிடித்தமான தெய்வங்களை வழிபடுகிறோம் நமக்கு பிடித்தமான உணவுகளை இறைவனுக்கு படைக்கிறோம் இது எல்லாமே ஒரு மூடச்செயல் போல தோன்றினாலும் இதன் பின்னே நல்ல விஷயங்கள் இருப்பதை நாம் உணரமுடியும் சாதரண ஒரு ஏழையால் அவனுக்கு பிடித்த உணவை எப்போதும் உண்ண முடியாது ஆனால் அவனுக்கும் நல்ல உணவு கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் தான் தன்னை கொண்டாட சொல்லியிருக்கிறான் அவனுக்கு நல்ல உணவு கிடைக்குமே இப்படி மறைமுகமான சிந்தனைகள் நிறைய காணப்படும் நீங்களும் யோசித்து பாருங்களேன்.

    நம்முடைய ஒவ்வொரு மதத்திலும் நமக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதன் பேரில்தான் வழிபடுகிறோம் ஆனால் கடவுளை நம்பும் அளவிற்கு நாம் உண்மையாக நேர்மையாக நடக்கிறோமா என்றால் நிச்சியமாக இல்லை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். கடவுள் என்பவன் இருந்தால் நல்லவனாக தானே இருக்கமுடியும், நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் தண்டனை கொடுத்தால் நாம் வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டும்தானே பார்த்துகொண்டிருபோம் ஆனால் கடவுள் என்பவன் நாம் செய்யும் பாவங்களை மன்னிப்பதால் தானே நாம் இன்னமும் பூமியில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம் ஒருவேளே கடவுள் ஒரு சர்வாதிகாரியைப்போல இருந்தால் நமக்கு சொர்க்கம் என்ற வார்த்தையே தெரியாமல் போயிருக்கும்தானே.

    சரி நண்பர்களே மிக நீளமான பதிவாக எழுதிவிட்டேன் உங்களை பொருத்தவரை கடவுள் நல்லவனா கெட்டவனா?

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    10 Comments
    Comments

    10 Responses to “கடவுள் நல்லவனா கெட்டவனா”

    நண்பன் said...
    April 23, 2010 at 4:38 PM

    KADAVUL NALLAVANUM ALLA KETTAVANUM ALLA AVAN ORU KURUDAN


    மாணவன் said...
    August 28, 2010 at 12:27 PM

    அழகாகவும் அருமையாகவும் எழுதியுள்ளீர்கள்... கடவுள் பற்றிய எண்ணம் அவரவர்கள் மனத்தை பொருத்தது என்னைப்பொருத்தவரையில் கடவுள் நல்லவர்தான் நமக்கு ஏதாவது கஷ்டம் வரும்போதுதான் கடவுளைத்தேடி செல்கிறோம்...
    அவ்வபோது இதைப்போல உங்களுக்கு தோன்றியதை எழுதுங்கள் நண்பரே நன்றாக இருக்கிறது...

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...

    வாழ்த்துக்களுடன்...

    உங்கள். மாணவன்


    Robin said...
    August 28, 2010 at 12:39 PM

    ஆதிகாலத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் நேரடி தொடர்பு இருந்தது. மனிதன் தவறு செய்ய செய்ய கடவுள் விலக ஆரம்பித்தார். இதன் பிறகு வழிபாடுகள் தோன்ற ஆரம்பித்தன. வாழிபாட்டு முறைகளையொட்டி மதங்களும் தோன்றின. ஆதிகால மதங்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று உருவ வழிபாட்டைக் கொண்ட பாகன் மதம். பாகன் மதத்தைப் பற்றிய குறிப்புகள் பைபிளிலும் உண்டு. இந்து மதம் என்பது உலகெங்கும் பரவியிருந்த பாகன் மதத்தின் இந்திய வடிவம்தான். இன்னொன்று உருவ வழிபாடற்றது. இதன் பிந்தைய வடிவம்தான் யூத மார்க்கம். பின்னர் யூத மார்க்கத்தின் அடிப்படை கருத்துகளுடன் இயேசுகிறிஸ்துவின் போதனைகள் சேர்க்கப்பட்டு கிறிஸ்தவமதம் உருவானது. யூத, கிறிஸ்தவ, அரபு பாகன் மதக்கருத்துகளை சிறிது மாற்றி கலந்து இஸ்லாமிய மதம் உருவானது.

    இது மதங்களைப் பற்றிய எனது புரிதல்.


    Robin said...
    August 28, 2010 at 12:41 PM

    //நீ செய்யும் பாவங்களை நானே ஏற்றுக்கொள்கிறேன் என ஒரு வாசகம் இருக்கிறது பின்னர் எதனாலவோ பாவம் செய்தவனுக்கு நரகம் நண்மை செய்தவனுக்கு சொர்க்கம் என விளக்குவது நம்மை சிந்திக்க வைக்கிறது.//
    பாவ மன்னிப்பு என்பது தவறு செய்த ஒருவன் உண்மையாகவே மனம் வருந்து மன்னிப்பு கேட்கும்போது கிடைப்பது.
    மற்றபடி தவறு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்.


    ஜிஎஸ்ஆர் said...
    August 29, 2010 at 9:30 AM

    @மாணவன்உண்மைதான் நண்பரே கடவுள் என்பது அவரவர் மனதை பொருத்தது நானும் இதற்கு உடன்படுகிறேன் மேலும் இது போல ஏதாவது எழுத ஆசைதான் எழுத முயற்சிக்கிறேன் நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    August 29, 2010 at 9:32 AM

    @Robinஉண்மைதான் யோசித்து பார்த்தோமேயானால் கடவுளுக்கு மனிதனுக்கும் நேரடி தொடர்பு இருந்திருக்க வேண்டும் பின்னர் மனிதன் வழி மாறியிருக்க வேண்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    August 29, 2010 at 9:34 AM

    @Robinஉண்மைதான் மேலும் ஓரே விஷயத்தை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் மிக்க நன்றி


    Vengatesh TR said...
    November 27, 2010 at 9:15 PM

    .அவர், நல்லவர் தான், நல்லவர்களுக்கு !, கெட்டவர் கெட்டவர்களுக்கு !


    .கடவுள், வல்லவர், எனக்கு !


    .இந்த பதிவை படிக்க நிமிடங்கள் பல ஆகின !




    .சமூக தகவலுக்கு, நன்றி நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:53 AM

    @சிகப்பு மனிதன்எனக்கும் கடவுள் நல்லவரே வல்லவரே


    திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...
    January 21, 2013 at 11:44 AM

    தற்பொழுது தான் உங்களின் இந்தக் கட்டுரையை படிக்க நேர்ந்தது.இஸ்லாத்தை பற்றி சில நல்ல கருத்துகளை சொல்லவந்தமைக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .

    பொத்தம் பொதுவாக எல்லா மதங்களையும் சாடுவதுபோல இஸ்லாத்தையும் சாடியுள்ளீர்கள்.இதற்க்கு இஸ்லாத்தின் அடிப்படையை தாங்கள் விளங்கிக்கொள்ள அல்லது விளங்குவதற்கு முயற்சிக்காததே காரணம்.

    இஸ்லாத்தின் வரவு:
    தாங்கள் விளங்கிவைத்திருப்பது போல முகம்மது நபி என்ற இறைத்தூதரால் கொண்டு வரப்பட்டதல்ல இஸ்லாம்.ஆதி மனிதர் ஆதம் (ஆதாம்) நபி அவர்களும் ஒரு முஸ்லிம் என்றே குர்ஆன்,ஹதீஸ்கள் கூறுகின்றன,அவரின் மூலமாக தான் மனித சமுதாயம் பெருகியது.தங்கள் வசதிக்காக மனித சமுதாயம் தன் வாழ்வியல் இடங்களை அமைத்து பல பிரிவுகளாக வாழ்ந்தது அக்காலக்கட்டத்தில் மனிதர்கள் பெரும் பாவங்கள் செய்யும் பொழுது அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் இறைதூதர்கள் பலர் இந்த மனித சமுகத்திற்கு அனுப்பப்பட்டனர் அவர்கள் அனைவரும் ஏக இறைவனான அல்லாஹ்வை வணங்க சொல்லியே இப்பூமிக்கு அனுப்பப்பட்டனர்.அவர்களின் வரிசையில் முகம்மது நபியும் ஒரு இறைதூதரே,தனக்கு முன் வந்த இறைதூதர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய மார்கத்தை முகம்மது நபி பூர்த்தியாக்கினார்கள்.முகம்மது நபியும்,அவர்களுக்கு முன் சென்ற இறைதூதர்களும் மக்களிடம் மண்டி இருந்த மூட பழக்கவழக்கங்கள்,சிலை வழிபாடுகளை வன்மையாக எதிர்த்ததை குர்ஆன் வசனங்கள் பளுவும்,எண்ணிலடங்காத ஹதீஸ்கள் பலவும் குறிப்பிடுவதை தாங்கள் படித்ததில்லை போலும் அதனால் தான் //முகமது நபி அவர்களின் கருத்துகள் தான் முழுவதுமாய் விதைக்கபட்டிருக்கிறது சில இடத்தில் மூட நம்பிக்கைகளை அழிக்க சொல்லி சாடியிருக்கிறார் அதாவது குர் ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ இது மாதிரியான பழக்கங்களுக்கு ஆதாரம் இல்லை என அறியப்படுகிறது//நாம் நம் கண்ணை மூடிவிட்டால் மொத்த உலகமும் இருண்டுவிடாது நண்பரே.

    //மேலும் சில இடங்களில் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதமாக சில இடங்களில் காணப்படுகிறது அதாவது சமாதி வழிபாடு செய்வதன் மூலம் இறந்து போனவர்கள் நம்மை இறைவனை நெருங்கசெய்ய உதவுவார்கள் என நம்புகிறார்கள் // இது இஸ்லாமே ஏற்றுகொள்ளாத ஒரு செயல் இப்படி சமாதி வழிபாடு செய்பவர்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது மேலும் இச்செயலை செய்பவர்களுக்கு மறுமையில் இறைவனிடமிருந்து கடுமையான தண்டனை கிடைக்கும் என்று சொல்கிறது காரணம் சமாதி வழிபாடு செய்பவர்கள் அல்லாஹ்வுக்கு இனை கற்பித்தவர்கள் ஆவார்கள்.இந்த சமாதிவழிபாடு கொள்கை ஆசிய பகுதி முஸ்லிம்கள் தான் மிகுதியாக செய்கின்றனர் அதிலும் குறிப்பாக இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,....இவர்களில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக மற்ற மதங்களில் இருந்து மாறியவர்கள் தான் (இவர்களோ அல்லது இவர்களின் முன்னோர்களோ)அதனால் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றாமல் பழைய மதத்தின் சாயலிலே தங்கள் முன்னோர்கள் காட்டித்தந்த தவறான வழியிலையே நீடிகின்றனர்.

    //என்னை பொருத்தவரை மத அடிப்படையோடு சில வாழ்வியல் அடிப்படைகளையும் இனைத்தே காணப்படுகிறது//

    சரியாக சொன்னீர்கள் இஸ்லாம் என்பதே ஒரு வாழ்வியல் வழிகாட்டியாகும்.அதனால் தான் நாங்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறாமல் மார்க்கம் என்கிறோம்.மார்க்கம் என்றால் வழி.இது இறைவனை அவன் நம் மீது திருப்தியுள்ள நிலையில் அவனை அடைய நேரான வழியில் கொண்டு செல்லும் என்கிற பொருள் பட.இஸ்லாம் என்பதே ஒரு கொள்கை..சில வாழ்வியல் அடிப்படைகள் அல்ல முழு மனித வாழ்விற்கான எங்கள் அடிப்படையே இஸ்லாம் தான்.

    for detail contact:tvpmuslim.blogspot.com


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர