Jun 3, 2010
தமிழில் எழுதுவது எப்படி?
வணக்கம் நண்பர்களே சமீபத்தில் என் நண்பன் கேசவன் இப்படியாக கேட்டான் “நீ எப்படிடா தமிழில் எழுதுற?” என் நண்பனை போல இன்னும் எத்தனையோ நண்பர்களுக்கு இது கொஞ்சம் கடினமாக தெரியும் காரணம் அடிப்படையில் தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு கொஞ்சம் கடினமாகவே தெரியும் ஆனால் இப்போதெல்லாம் தமிங்கிழிஷ் முறையை தான் பயன்படுத்துகிறார்கள் எனவே ஏன் இது பற்றி ஒரு பதிவாக எழுதக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவு இதை தெரிந்த நண்பர்கள் மன்னிக்கவும் தெரியாத நண்பர்கள் தொடரவும்.
நான் இங்கு குறிப்பிட போகும் அனைத்து மென்பொருள்கலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க கூடியவை அதாவது நீங்கள் ஆங்கிலத்தில் ammaa என டைப் செய்தால் உங்களுக்கு அம்மா என்பதாக வரும் முதலில் உங்களுக்கு கொஞ்சம் சிரம்மமாக தெரியும் ஆனால் கொஞ்ச நாள் பழகி விட்டால் நீங்கள் ஆங்கிலத்தை தட்டச்சு செய்வது போல தமிழிலும் தட்டச்சு செய்யலாம்.
கூகுள் தமிழ் எழுதி இது இனைய ஜாம்பாவனின் தமிழ் எழுது மென்பொருள் எப்பவும் போல இதுவும் மிகவும் பயன்படுத்த எளிமையானது தவறான வார்த்தைகள் டைப் செய்யும் போது சரியான வார்த்தைகளை நமக்கு காண்பிக்கும் இதற்கானகூகுள் உதவி பக்கம் போதிய நேரமின்மையால் நான் இதற்கான படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.
மைக்ரோசாப்ட் தமிழ் எழுதி விண்டோஸ் ஜாம்பவானின் மென்பொருள் இதை பற்றியும் அதிகம் சொல்ல தேவையில்லை எதிலும் எளிமை அது இதிலும் தொடர்கிறது தவறான வார்த்தைகள் டைப் செய்யும் போது சரியான வார்த்தைகளை நமக்கு காண்பிக்கும் இதற்கானமைக்ரோசாப்ட் உதவி பக்கம் இதற்கும் படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.
NHM தமிழ் எழுதி மற்ற இரண்டையும் விட இது உபயோகிப்பதற்கு எளிமையாய் இருக்கும் ஆனால் இதில் தவறாக டைப் செய்தால் திருத்தி காண்பிக்கும் வசதி இல்லை ஆனால் சிறப்பாக செயல்படும் இதற்கானNHM உதவி பக்கம் இதில் உங்கள் கணினியின் வலது பக்க மூலையில் ஒரு மணி வந்திருக்கிம் அதில் Tamil Phonetic என்பதை தெரிவு செய்து அல்லது Alt+2 அழுத்தி டைப் செய்ய தொடங்கலாம் இதற்கும் படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.
திருவின் தமிழ் எழுதி இதை பற்றி விரிவாக சொலவதற்கு ஒன்றுமில்லை என சொல்லிவிட முடியாது இருப்பினும் இதையும் நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன் இதற்கான உதவி பக்கம் இங்கேயே இருக்கிறது இது பற்றியும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.
அழகி தமிழ் எழுதி ஒரு நேரத்தில் பணம் செலுத்தி பெறும் மென்பொருளாக இருந்தது இப்போது இலவசமாகவே கிடைக்கிறது இதில் நிறைய வச்திகள் இருக்கின்றன ஆனால் இதில் மட்டுமே போட்டோஷாப் மென்பொருளில் தமிழை உள்ளிடும் வசதி இருக்கிறது இதற்கான் உதவி பக்கம் இந்த தளத்திலேயே இருக்கிறது மேலும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.
என்ன நன்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் மேலும் இது தெரியாத நபர்களையும் சென்றடையும் விதமாக உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
7 Responses to “தமிழில் எழுதுவது எப்படி?”
-
soundar
said...
June 3, 2010 at 11:13 AMநல்ல தகவல்...
-
ttpian
said...
June 3, 2010 at 6:02 PMsorry,i am unable to write in TAMIL
-
ஜிஎஸ்ஆர்
said...
June 5, 2010 at 9:07 AM@soundar
தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 5, 2010 at 9:11 AM@ttpian
நான் கொடுத்துள்ள மென்பொருள்களின் வாயிலாக தமிழில் எழுதமுடியவில்லையா? இல்லே எழுதுவதில் வேறேதுனும் பிரச்சினை இருக்கிறதா?
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
சிவமணியன்
said...
October 13, 2010 at 1:05 PMநான் NHM எழுதியையே பயன்படுத்துகிறேன். அதுவே சுலபமாகவும், வேகமாகவும் உள்ளது. இந்த பதிவுக்கு நன்றி.
-
சிகப்பு மனிதன்
said...
November 27, 2010 at 2:08 PM.நான், கூகிள் தமிழ் transliteration பயன்படுத்துகிறேன் !!
.எனக்கும் பேருதவியாய் மற்றும், பயனுள்ளதாய் இருக்கிறது !
.மற்ற options-களையும் இன்று தெரிந்து கொண்டேன் !
.பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !! -
Jegan
said...
December 27, 2010 at 8:57 PMநல்லா பதிவு. எலோரும் Unicode என்கிறார்கள். அது அன்ன ? எப்படி விளக்கவும். எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது. கூகுள் தமிழ் எழுதிதான் உபயோகிக்கிறேன்.
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>