Jun 29, 2010

8

கரிசகாட்டு சிறுக்கி

  • Jun 29, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: அன்பு கொடுப்பவரையும் பெறுகிறவரையும் குணம்டையச் செய்கிறது.

    வணக்கம் நண்பர்களே இந்த வாரம் புரியாத கிறுக்கல்களின் கவிதை கிறுக்கல்கள் வாரம் இதெல்லாம் நான் ஒரு 8 வருடங்களுக்கு முன்னர் எழுதியது இன்று எதார்த்தமாக டைரியை புரட்டிய போது சரி இதேயே பதிவாக இட்டு நம் நண்பர்களின் கருத்தை அறியலாமே என நினைத்து பதிந்தும் விட்டேன் இனி நீங்கள் தான் கருத்தை சொல்லவேண்டும் பிடித்திருந்தால் வாக்கு அளிக்கவும்.

    கரிசகாட்டு சிறுக்கி

    கரிசல் காட்டில்
    என்னில் கவிதையாய் வந்தவள்

    பால் சிந்தும் பவுர்ணமியில்
    பகல் சூரியனாய் வந்தவள்

    பூச்சூடும் தலையோரத்தில்
    என்னை தொடுத்து வந்தவள்

    என்னை உன் ஞாபக முடிச்சுகளில்
    பின்னச்செய்த மந்திரமென்ன

    பூக்களின் வாசத்தை
    எனக்குள் புதைத்த ரகசியமென்ன

    பெயர் தெரியாமல் உன் பின்னால்
    பல காலம் சுற்றச்செய்த விசித்திரமென்ன

    வெட்கம் பிடுங்கிய கணங்களில்-எனை
    நொருக்கிய உணர்வுகளின் மாயமென்ன

    என்னை சலனப்படுத்தி
    சருகாக்கிய உன் சரித்திரமென்ன

    என்ன நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் வாக்கும் இது பற்றிய தங்களின் மேலான கருத்தும் எழுதுங்களேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    8 Comments
    Comments

    8 Responses to “கரிசகாட்டு சிறுக்கி”

    மதுரை சரவணன் said...
    June 30, 2010 at 12:46 AM

    கவிதை வரிகள் அருமை. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்


    Mohideenjp said...
    June 30, 2010 at 10:23 PM

    வளர்க! வாழ்த்துக்கள்


    Mohideenjp said...
    June 30, 2010 at 10:35 PM

    தான் கருத்தை சொல்லவேண்டும் பிடித்திருக்கிறது your Regards


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:23 PM

    @மதுரை சரவணன்

    நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:23 PM

    @vanmohiநன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:23 PM

    @vanmohi

    தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி


    Vengatesh TR said...
    November 27, 2010 at 12:22 PM

    .எங்களின் கருத்துரை, எங்களை மட்டும் இல்லை, உங்கள் எழுத்துகளையும் வளப்படுத்தும் !

    .பகின்றமைக்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:10 AM

    @சிகப்பு மனிதன்உண்மை தான் உங்கள் கருத்துரைகள் நிச்சியமாக என் எழுத்துக்களை செம்மையாக்கும்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர