Jun 23, 2010
பதிவுலக அனுபவத்தில் கற்றது
1)நல்ல பதிவுகளை நீங்கள் படித்தாலும் அதற்கு வாக்கோ அல்லது கருத்துரை எழுதாதீர்கள் அப்படியே எழுதினாலும் பதிவை பற்றிய கருத்து வராமல் பார்த்துக்கொள்ளவும்.
2)உங்களுக்கு பிடித்த பதிவர் என்றால் பதிவை படிக்காமலே முதலில் வாக்கு அளித்து விட்டு பின்னர் கருத்துரையும் எழுதி விடுங்கள்.
3)அறிமுகம் இல்லாத பதிவர்கள் நல்ல பதிவுகள் எழுதினாலும் அதை புறக்கணியுங்கள் அப்போது தான் அவர் ஆர்வத்தை தடை செய்ய முடியும்.
4)காணும் எல்லா வலைபதிவுகளிலும் சேர்ந்துகொள்ளுங்கள் ஒரு வேளை அவர்கள் உங்கள் தளத்தில் இனையக்கூடும்.
5)ஆயத்த நிலையிலான கருத்துரை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அது இப்படியும் இருக்கலாம் ஆஹா அருமை சூப்பர் என இருந்தால் நன்றாயிருக்கும்
6)தமிழிஷில் உங்கள் புதிய பதிவை இனைக்கும் நாட்களில் அன்று வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் முடிந்தவரை வாக்களியுங்கள் அவர்களும் உங்களுக்கு வாக்களிப்பார்கள்
7)மறந்தும் நல்ல பதிவுகளுக்கு ஆதரவாக இருக்காதீர்கள் முடிந்தால் ஜால்ரா போட பழகுங்கள்
இதை அப்படியே செயல்படுத்துங்கள் உங்கள் எல்லா பதிவுகளும் பிரபல பதிவாக மாறிவிடும்
இதை அப்படியே செயல்படுத்துங்கள் உங்கள் எல்லா பதிவுகளும் பிரபல பதிவாக மாறிவிடும் சந்தேகம் இருந்தால் பொருமையாக வலையுலகத்தில் நடப்பதை கவணித்து புரிந்துகொள்ளுங்கள்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
27 Responses to “பதிவுலக அனுபவத்தில் கற்றது”
-
ஜீவன்பென்னி
said...
June 23, 2010 at 2:50 PMஇதுதாங்க பதிவுலக அரசியல்.
-
யூர்கன் க்ருகியர்
said...
June 23, 2010 at 3:05 PMஎன்னாச்சு நண்பா ??
-
Cable சங்கர்
said...
June 23, 2010 at 3:27 PMயூர்கன் க்ரூகியர்.. அதையேதான் நானும் கேட்கிறேன்.. என்னாச்சு.. :(
-
Saran R
said...
June 23, 2010 at 4:22 PMநானும் தமிழ் பதிவுலகிற்கு புதிது தான்.
பதிவெழுத ஆரம்பித்து 14 நாட்கள் மட்டுமே ஆகிறது.
என்னை பொறுத்தவரை தமிழ் பதிவுலகில் மறுமொழி கிடைப்பது குதுரை கொம்பு தான் போல,
இருபினும் இந்த பதிவில் எனக்கு சிலவற்றை புரிந்துகொள்ள முடியவில்லை
அவை, 1, 3, 7
உண்மையில், நிங்கள் சொல்லவருவதை நேராகவே சொல்லலாமே.
மேலும், உங்கள் Comment as இல் Name / URL சேர்த்தால் நன்றாக இருக்குமே,
http://SaranR.in -
ஜிஎஸ்ஆர்
said...
June 23, 2010 at 4:58 PM@ஜீவன்பென்னி
நிறைய எழுதாலமென நினைத்தேன் ஒரு வேளை கொஞ்சம் ஆழமாக எழுதினால் அது இங்குள்ள பலரையும் குறிப்பிடுவது போல தோன்றும் -
ஜிஎஸ்ஆர்
said...
June 23, 2010 at 5:05 PM@யூர்கன் க்ருகியர்
என்ன நண்பா சில நேரம் ஏதாவது நல்ல தகவலை கம்ப்யூட்டரை கொடஞ்சு எழுதினா அதுக்கு இருக்கிற வரவேற்ப பார்ர்கும் போது எரிச்சலா இருக்குங்க நண்பா பேசாம இந்த வலைத்தளத்தை அழித்து விட்டு முன்பு போல பிகேபி பாரத்தில் தெரிந்த தகவல்களை பதியலாம் என நினைப்பேன். நான் நல்ல பதிவு என நினைக்கும் ப்திவு பெறும் வாக்குகள் 10 கூட தாண்டாது நாம் சும்மா எல்லோருக்கும் தெரிந்ததை எழுதுவேன் அது பார்த்தோம் என்றால் அதிக வாக்கு பெற்றிருக்கும் -
ஜிஎஸ்ஆர்
said...
June 23, 2010 at 5:15 PM@Cable Sankar
என்ன நண்பா சில நேரம் வெறுப்பா இருக்கு இந்த பதிவுலகத்திற்கு நானாகத்தான் வந்தேன் யாருடைய கட்டுப்படுத்துதலும் இல்லை இனையத்தின் வாயிலாக நண்பர்கள் யாருமில்லை இவ்வளவு ஏன் பேஸ்புக் டிவிட்டர் போன்ற ஆர்குட் போன்ற சமுதாய தளங்களில் கூட என்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை ஆனால் ஒரு மனிதனுக்கு அங்கீகாரம் என்பது மிகவும் அவசியமாய் இருக்கிறதே அந்த ஆதங்கம் தான் இந்த பதிவு இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் அது சரியாய் இருக்காதே -
ஜிஎஸ்ஆர்
said...
June 23, 2010 at 5:26 PM@Saran
நீங்கள் கேட்பது சரிதான் நான் நினைப்பதை நேரடியாக சொல்லவில்லை மாறாக மறைமுகமாகவே சொல்லியி்ருக்கிறேன் ஆனால் என் எண்ண ஒட்டத்தை சரியாக புரிந்துகொண்டீர்கள் என்றே நினைக்கிறேன்
\\உங்கள் Comment as இல் Name / URL சேர்த்தால் நன்றாக இருக்குமே\\
என் பதிவுகள் பிரபலமாகவேண்டும் என்பதை விட நல்ல பதிவுகள் பிரபலமாக வேண்டும் என்பதே என் நோக்காம் ஆனால் இங்கு மொக்கைகளுக்கே அதிகம் வரவேற்பு இருக்கும்
தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி -
எல் கே
said...
June 23, 2010 at 5:31 PM@gsr
i usualy read most new comers blog. for due to some reasons i am not able to comment on all blogs. but if i like it i will vote for the blog irrespective of author :)
but what you have mentioned is happening in tamil blog world i agree
(sorry for commenting in english) -
Saran R
said...
June 23, 2010 at 7:34 PM/ உங்கள் Comment as இல் Name / URL சேர்த்தால் நன்றாக இருக்குமே /
இதற்கு நிங்கள் இன்னும் பதில் சொல்லவில்லையெ?
உங்கள் Comment as ல் Name / URL சேர்த்தால் என்னை போன்ற blogspot, wordpress அல்லாத websites வைத்திருப்பவர்களும் comment போட வசதியாக இருக்கும்.
http://www.SaranR.in -
ஜிஎஸ்ஆர்
said...
June 23, 2010 at 8:40 PM@LK
தங்களின் புரிதலுக்கு நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
June 23, 2010 at 8:43 PM@Saran R
எனக்கு தெரியவில்லை நீங்களே இதற்கான வழிமுறையை கூறுங்களேன் மேலும் நமது தளத்தில் Open ID என்பதை பயன்படுத்தி கருத்துரை இடலாமே!
தங்களின் பதிலுக்காய் -
gulf-tamilan
said...
June 23, 2010 at 9:04 PMஅட! என்னங்க ஆச்சு? நல்லா எழுதுங்க கொஞ்ச நாள் ஆகும் ஆதரவு கிடைக்க!!!
-
Lucky Limat - லக்கி லிமட்
said...
June 23, 2010 at 9:31 PMநண்பரே,
நானும் தொழில்நுட்ப வலைப்பூ வைத்திருக்கிறேன்.உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.எனக்கும் ஆரம்பத்தில் இப்படிதான் இருந்தது.நீங்கள் தொடர்ந்து எழுதும் போது உங்களை ஆதரிப்பார்கள்.
நண்பரே தொழில்நுட்ப பதிவுகள் வேறு,மற்ற போது பதிவுகள் வேறு.தொழில்நுட்ப பதிவுகள் வெகு சிலரே ஆதரவு அளிப்பார்கள்.
// சில நேரம் ஏதாவது நல்ல தகவலை கம்ப்யூட்டரை கொடஞ்சு எழுதினா அதுக்கு இருக்கிற வரவேற்ப பார்ர்கும் போது எரிச்சலா இருக்குங்க நண்பா //
நண்பரே நல்ல தகவலை கம்ப்யூட்டரை கொடஞ்சு எழுதும் பதிவுகள் என்பது நமக்கு மட்டுமே அது சிறந்த பதிவு ஆனால் படிப்பவர்கள் தனக்கு பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிடிக்கிறது.மேலும் கணிணி அதிகம் தெரியாதவர்கள் நாம் கொடஞ்சு எழுதும் பதிவுகளை அவர்களுக்கு அதிகம் ஆர்வமில்லாததால் விரும்புவதில்லை.
மேலும் தொழில்நுட்ப பதிவுகளுக்கு கருத்துரைகள் பெரும்பாலும் அதிகமாக கிடைக்காது.மற்ற பதிவுகளை போல சுவாரசியம் இல்லாததே காரணம். -
வால்பையன்
said...
June 23, 2010 at 10:02 PMஇந்த பதிவு நல்லாயிருக்குன்னு சொல்லனுமா?
இல்லைன்னு சொல்லனுமா?
ஒன்னும் புரியலையே! -
puduvaisiva
said...
June 23, 2010 at 10:32 PM"காணும் எல்லா வலைபதிவுகளிலும் சேர்ந்துகொள்ளுங்கள் ஒரு வேளை அவர்கள் உங்கள் தளத்தில் இனையக்கூடும்"
:-)) -
பொன் மாலை பொழுது
said...
June 24, 2010 at 12:27 AMஎதைபற்றியும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உங்களுக்கு நியாயமான வாறு தொடர்ந்து எழுதலாம்.நாளடைவில் உங்களுக்கு என்று ஒரு வாசகர்,நண்பர் வட்டம் உண்டாகிவிடும்.
இதுதான் எனது அனுபவம்.ஆரம்பத்தில் இப்படித்தானிருக்கும்.
"நாம் எழுதுவதை அணைவரும் இங்கு அங்கீகரிக்க வேண்டும் " என்ற எண்ணம் இருந்தால் விரக்திதான்
வரும். -
மரா
said...
June 24, 2010 at 12:45 AMஏன் இப்புடி........ஞானம் சார். ரிலாக்ஸ்.நானெல்லாம் உங்க பதிவு புடிக்காமயா இமெயில் சந்தா கட்டியிருக்குறோம். தொடர்ந்து எழுதுங்க. டெக்னாலஜி போரடிச்சா ரெண்டு படத்த பாத்துட்டு விமர்சனம் எழுதுங்க..அப்புறம் திரும்ப டெக்னாலஜி பற்றி எழுத ஆரம்பித்துவிடுவீர்கள்.....நன்றி
-
எண்ணங்கள் 13189034291840215795
said...
June 24, 2010 at 6:00 AM:)
நகைச்சுவை என்றாலும் சிந்திக்க வைப்பது..
ஓட்டு கேட்பது பிச்சை எடுப்ப்து போன்ற தோற்றமளிக்குது என்பது என் கருத்து.. ( அம்மா தாயே 2 நாளா பிரபலாமகல.. ஒரே ஒரு ஓட்டு போடு தாயே ..:) )
மேலும் தன் எழுத்தின்/கருத்தின் மேல் நம்பிக்கையில்லாதவரின் செயல் அது.. பரிதாபம்தான்.
பின்னூட்டம் போடவேண்டாம் என்றே என் பதிவுகளில் சொல்லி வருகிறேன்.. போலி நட்புகள் வந்திடுமோ என்ற பயத்தில்..மீறி வரும் பின்னூட்டங்களை மதிக்கிறேன்..
இருப்பினும் என் சிறப்பான பதிவுகளுக்கு யாராவது ஓட்டு போட்டு பிரபலாமாக்கி விடுகிறார்கள் தான்..பலறை சென்றடையும் நல்லெண்ணத்தில்..
நேரத்தை பிச்சை கேட்பதும் அசிங்கம்தான் .. -
யாசவி
said...
June 24, 2010 at 8:10 AMgo ahead :)
-
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 8:54 AM@gulf-tamilan
நல்லது நண்பா -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 9:00 AM@Lucky Limat லக்கி லிமட்
மிகப்பெரிய மென்பொருள் நிறுவணங்கள் கூட தங்களின் மென்பொருளை வெளியிட்டு அதற்கு கருத்துரையும் ஸ்டார் ரேட்டிங்க் கொடுக்கிறார்கள் நிலைமை இப்படியிருக்கும் போது நாம் எழுதுவதை சோதித்து ஊர்ஜிதமாய் சொல்ல சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
நாம் எழுதுவதை விட அதை ஒரு வாசகர் படித்து அதை செயல்படுத்தி அவருக்கு பயன் ஏற்பட்டு அதை அவர் கருத்துரையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன் இது கட்டாயமல்ல எனது விருப்பம் மட்டுமே.
இருப்பினும் கருத்துக்களை அழகாய் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி நண்பா.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 9:02 AM@வால்பையன்
குழம்புவதற்க்கு ஒன்றுமில்லை நிச்சியாமாய் இது நல்ல பதிவு இல்லை -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 9:10 AM@கக்கு - மாணிக்கம்
எனக்கென்று வாசகர் கூட்டம் எனபதெல்லாம் இல்லை உங்களுக்கு நேரம் கிடைத்தால் என் பதிவுகளை வாசித்து பாருங்களேன் அதில் கருத்துரைகள் இருக்கும் ஆனால் குறிப்பிட்ட நபர்களாய் இருக்க மாட்டார்கள் வாக்கு அளித்தவர்களை பாருங்கள் அதுவும் அது போலத்தான் குறிப்பிடும்படியான வாக்குகளாக இருக்காது நான் சொல்ல வருவது என் பதிவை பிடித்தவர்கள் ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு நபர்கள்
\\நாம் எழுதுவதை அணைவரும் இங்கு அங்கீகரிக்க வேண்டும் " என்ற எண்ணம் இருந்தால் விரக்திதான்
வரும்\\
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் என்னை பொருத்தவரை நல்லவை அங்கீகரிக்கபட வேண்டும் அது யாராய் இருந்தாலும்
தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 9:13 AM@மயில்ராவணன்
நண்பருக்கு வணக்கம் நிச்சியமாக உங்கள் கருத்துரையை நான் வரவேற்கிறேன் நெருடல் இல்லாத வார்த்தை பிரயோகங்கள் -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 9:39 AM@புன்னகை தேசம்.
\\:)
நகைச்சுவை என்றாலும் சிந்திக்க வைப்பது..\\
தங்களுக்கு இது நகைச்சுவையாய் தோன்றினால் தங்களின் மனநிலை. அது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
\\ஓட்டு கேட்பது பிச்சை எடுப்ப்து போன்ற தோற்றமளிக்குது என்பது என் கருத்து.. ( அம்மா தாயே 2 நாளா பிரபலாமகல.. ஒரே ஒரு ஓட்டு போடு தாயே ..:) )\\
என்ன செய்ய நல்ல விஷயங்கள் நான்கு பேருக்கு சென்றடைய வாக்கு பிச்சை அவசியமாகிறது அதே நேரத்தில் உங்களுக்கு ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
1.நான்கு மணி நேரம் செலவழித்து ஒரு பதிவு எழுதி அதற்கு நான்கு வாக்குகள் பெற்று நாற்பது பேர் படித்ததோடு முடங்கி போவதை விரும்புவீர்களா?
அல்லது
2.நான்கு மணி நேரம் செலவழித்து ஒரு பதிவு எழுதி அதற்கு இருபது வாக்குகள் பெற்று 800 பேர் படித்து பயணடைந்தார்கள் என்பதை விரும்புவீர்களா? ( நான் இரண்டாவது வகையை சேர்ந்தவன்)
\\மேலும் தன் எழுத்தின்/கருத்தின் மேல் நம்பிக்கையில்லாதவரின் செயல் அது.. பரிதாபம்தான்.\\
உங்களின் அனுதாபத்துக்கு நன்றி உங்களுக்கு ஒன்று தெரியுமா பிரபல நிறுவணங்கள் கூட அவர்களுக்கு என்று ஒரு மக்கள் தொடர்பாளார் அல்லது விளம்பர தொடர்பாளர் ஒருவர் இருப்பார் நீங்கள் சொல்வதை பார்க்கும் போது அவர்கள் அவர்களின் பொருள்களின் மீது நம்பிக்கையில்லாமலா? இப்படி நிறைய கேள்விகள் கேட்கலாம் ஆனால் விரும்பவில்லை மேலும் அங்கீகாரம் கிடைத்தால் தான் நீங்களும் நானும் மனிதர்களாகவே ஏற்றுக்கொள்ள படுவோம் இல்லையேல் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
\\பின்னூட்டம் போடவேண்டாம் என்றே என் பதிவுகளில் சொல்லி வருகிறேன்.. போலி நட்புகள் வந்திடுமோ என்ற பயத்தில்..மீறி வரும் பின்னூட்டங்களை மதிக்கிறேன்..\\
பின்னூட்டம் போடவேண்டாம் எனபதை விட பின்னுட்ட பெட்டியை நீக்கி விடலாமே?
\\இருப்பினும் என் சிறப்பான பதிவுகளுக்கு யாராவது ஓட்டு போட்டு பிரபலாமாக்கி விடுகிறார்கள் தான்..பலறை சென்றடையும் நல்லெண்ணத்தில்..\\
சந்தோஷம் நான் இது வரை தங்கள் தளத்தில் என்ன எழுதியிருக்கிறீர்கள் எனபதை பார்த்ததில்லை சிறப்பான பதிவுகள் பிரபலமாகியிருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.
\\நேரத்தை பிச்சை கேட்பதும் அசிங்கம்தான் ..\\
இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை
உங்களின் உள்ளத்தில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை இது போன்ற ஒரு கருத்துரை எழுதுவதற்கு முன்னால் என் முந்தைய பதிவுகளை படித்து பார்த்திருக்கலாம். தயவுசெய்து நீங்கள் யாரக இருந்தாலும் பரவாயில்லை இனி இது போன்ற ஒரு கருத்து எழுத முயற்சிக்காதீர்கள் நிச்சியமாய் தங்கள் கருத்து எனக்கு ஏற்றுக்கொள்ள கூடியதாய் இல்லை இதற்கு நீங்கள் மீண்டும் ஒரு கருத்துரை எழுதி நேரம் வீணாக்க வேண்டாம்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 24, 2010 at 9:43 AM@யாசவி
நன்றி நண்பரே
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>