Jun 20, 2010
பிடிஎப் வெட்டு ஒட்டு எடிட் என்னவேணாலும் பண்னு
இந்த பதிவுலகத்திற்கு வந்து சரியாக 103 நாட்கள் ஆகிவிட்டது 70 பதிவுகள் எழுதிவிட்டேன் இதனால் என்ன சாதித்தேன் இதனால் மன உளைச்சல் இல்லாது வேற ஒரு ம*&%$#ம் இல்லை வெறுப்பா இருக்கு ஒவ்வொரு முறை பதிவு எழுதும் போதும் நினைக்கிறேன் இதுவே கடைசியாய் இருக்கட்டுமென ஆனால் எழுத்து சிரங்கு பிடித்தவன் போல மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறேன் இந்த ம*&%$#று எழுத வந்ததுக்கு அப்புறம் வேலையில் கூட சரியாக கவணம் செலுத்த முடியவில்லை.
உங்கள் எல்லோருக்குமே பிடிஎப் பற்றி தெரியும் ஆனால் ஒரு பிடிஎப் பைலை ஒவ்வொரு பக்கமாக பிரிக்கவோ அல்லது தனித்தனியாக உள்ள பிடிஎப் பைல்களை ஒன்று சேர்க்கவோ அல்லது அதில் உங்களை கையெழுத்தை சேர்க்கவோ அல்லது பிடிஎப் என்கிரிப்ட் செய்யவோ, என்கிரிப்ட் செய்ததை மீண்டும் டிகிரிப்ட் செய்யவோ பக்கங்களின் வரிசை எண் மாற்றவோ எத்தனையோ ஆன்லைன் தளங்கள் இருக்கிறது அதில் உங்களுக்கு நேரம் விரயம் அதிகம் ஆகும் மேலும் இலவசமாக கிடைப்பதில்லை அதற்கு எல்லாம் தீர்வாக நான் பரிந்துரைக்கும் மென்பொருள் இருக்கும் இனி நீங்கள் பிடிஎப் உருவாக்கவோ அல்லது அதை எடிட் செய்வதோ மிக எளிது இதில் ஒரு பிரச்சினை தமிழ் மட்டும் எடிட் செய்ய நினைத்தால் தமிழ் யூனிகோட்டை ஆதரிக்க மறுக்கிறது பரவாயில்லை விரைவிலேயே அதற்கான தீர்வு வரும் என நம்புவோம்.
எடிட் வெட்ட ஒட்ட ஸ்டாம்பிங்
பிடிஎப் டூல்ஸ் தரவிறக்கி கணினியில் நிறுவி விடுங்கள் இதன் வழியாக ஒரு பிடிஎப் பைலை பிரிக்கவோ அல்லது சேர்க்கவோ என்கிரிப்ட்,டிகிரிப்ட் செய்யவோ அல்லது XMLலை பிடிஎப் ஆக மாற்றுவது மிக எளிது உபயோகித்து பாருங்கள் நிச்சியம் உங்களுக்கு இது உபயோகமானதாக இருக்கும்.
பிடிஎப் உருவாக்க மட்டும்
கியூட் ரைட்டர் தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவி விடுங்கள் இது உங்கள் பிரிண்டர் செட்டிங்ஸ் உள்ளே வந்து விடும் எந்த பைலை பிடிஎப் ஆக மாற்ற நினைக்கிறீர்களோ அதை பிரிண்ட் கொடுப்பது போல கொடுத்தால் வரும் பிராப்பர்ட்டியில் Cute Printer என்பதை தேர்ந்தெடுக்கவும் மிகவும் எளிமையாக இருக்கும் பயன்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.
எடிட் பண்ணலாம்
பிடிஎப் சூட் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி விடுங்கள் இதில் என்ன ஒரு விஷேசம் இருக்கிறதென்றால் உங்கள் பிடிஎப் பைலில் ஏதாவது ஒரு வார்த்தையை சேர்க்கவேண்டும் அல்லது நீக்க வேண்டும் இந்த இரண்டும் இதில் எளிதாக செய்துவிடலாம் என்ன தமிழில் மட்டும் எழுத்துரு பிரச்சினை வருகிறது ஆனால் நிச்சியம் இது ஒரு நல்ல மென்பொருள்.
நண்பர்களாக என் தளத்தில் 66 பாலோவர் 153 மின்னஞ்சல் வழி தளம் வருபவர்கள் என இருக்கிறீர்கள் தயவு செய்து ஒரு நிமிடம் செலவழித்து உங்கள் கருத்துகளையும் வாக்கையும் பதிவு செய்வதன் மூலம் மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கலாமே இது உங்களால் முடியும்தானே?
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
41 Responses to “பிடிஎப் வெட்டு ஒட்டு எடிட் என்னவேணாலும் பண்னு”
-
சௌந்தர்
said...
June 20, 2010 at 10:52 AMஅப்புறம் வேலையில் கூட சரியாக கவணம் செலுத்த முடியவில்லை//
வேலையும் செய்ய வேண்டும் பதிவும் எழுதுத வேண்டும் நண்பரே -
பட்டாசு
said...
June 20, 2010 at 11:03 AM//ஜிஎஸ்ஆர்
சொல்றமாதிரி எதுவுமில்லை ச்சும்மா ஏதாவது எழுதலாம்னு கிறுக்கி வைக்கிறேங்க//
this is your profile, told by you.
Dont think about others, do your job well, everyone will follow you.
I agree with you about claps for our work it will a great boost for us.
All your works are very nice. go ahed. -
WebPrabu
said...
June 20, 2010 at 11:13 AMஅனைவருக்கும் உபயோகமுள்ள பதிவு. உங்களின் பதிவுகள் அனைத்துமே மிகவும் பயனுள்ளவையாகவும், அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியாதாகவும், மிகவும் எளிய தமிழ் உரையிலும் உள்ளது. ஒவ்வொரு செய்திகளையும் எவ்வளவு சிறப்பாகவும், நுணுக்கமாகவும் தருவதில் உங்களுகென்று ஒரு தனித்திறமை உள்ளது. உங்களை நம்பி இருக்கும் எங்களை கை விட்டுவிடாதீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்களின் சேவையை தமிழுக்கும் மற்றும் தமிழ் மக்களுக்கும் தொடர்ந்து செய்யுங்கள். இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாகவே அமையும், நன்றாகவே முடியும். நீடூழி வாழ்க வளமுடன்!!!
-
Felix Raj
said...
June 20, 2010 at 7:35 PMmikka nandri anbudan felix
-
சினிமா ரசிகன்
said...
June 20, 2010 at 8:06 PMwow enna arumaiyaana pathivu thayavu seythu ungal ponnana paniyai thodaravum
-
முனைவர் இரா.குணசீலன்
said...
June 20, 2010 at 8:18 PMபயனுள்ள பதிவு..
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.. -
ஹிப்ஸ்...
said...
June 20, 2010 at 10:47 PMபயனுள்ள செய்தி இடுகைக்கு நன்றி...
-
- இரவீ -
said...
June 20, 2010 at 11:51 PMஉபயோகமுள்ள பதிவு...நன்றி.
-
SAYANTHAN
said...
June 21, 2010 at 8:00 AMஉபயோகமுள்ள பதிவு...நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
June 21, 2010 at 9:12 AM@soundar
நன்றி நண்பா தங்கள் ஆலோசனைக்கு என்ன செய்ய எழுத ஆரம்பித்தால் இந்த போதை பிடித்து விடுகிறது
அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 21, 2010 at 9:13 AM@பட்டாசு
வணக்கம் நண்பா முடிந்தவரை அத்யாவசியமான தகவலகள் மட்டுமே தங்களிடம் கொண்டு சேர்க்க விரும்பிகிறேன் தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
June 21, 2010 at 9:15 AM@WebPrabu
இல்லை நண்பா மிகப்பெரிய பாரட்டுதலை கொடுத்திருக்கிறீர்கள் அந்த பாரட்டுகளுக்கு நான் தகுதியானவனா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் முடிந்தவரை தங்கள் விருப்பம் போலவே எழுத முயற்சிக்கிறேன்
தங்களின் பொன்னான நேரம் செலவழித்து கருத்துரை எழுதியமைக்கு மிக்க நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
June 21, 2010 at 9:17 AM@Felix Raj
தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா -
ஜிஎஸ்ஆர்
said...
June 21, 2010 at 9:20 AM@சினிமா ரசிகன்
தங்களின் பொன்னான நேரத்தில் கருத்துரை எழுதியமைக்கு மிக்க நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
June 21, 2010 at 9:22 AM@முனைவர்.இரா.குணசீலன்
நன்றி நண்பா சில நேரங்களில் என்னையுமறியாமல் வெறுப்பு வருகிறது நான் ஏற்கனவே ஒரு முறை ஜிமெயில் அரட்டையில் சொன்னேன் ஞாபகமிருக்கிறதா -
ஜிஎஸ்ஆர்
said...
June 21, 2010 at 9:30 AM@ஹிப்ஸ்...
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா உங்களை போன்றவர்கள் எழுதும் கருத்துரைகள் தான் ஒரு பதிவை மேம்படுத்தும் -
ஜிஎஸ்ஆர்
said...
June 21, 2010 at 9:32 AM@- இரவீ -
தங்களின் பொன்னான நேரத்தில் கருத்துரை எழுதியமைக்கு மிக்க நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
June 21, 2010 at 9:32 AM@SAYANTHAN
தங்களின் பொன்னான நேரத்தில் கருத்துரை எழுதியமைக்கு மிக்க நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
June 21, 2010 at 9:33 AM@SAYANTHAN
தங்களின் பொன்னான நேரத்தில் கருத்துரை எழுதியமைக்கு மிக்க நன்றி -
அரபுத்தமிழன்
said...
June 21, 2010 at 11:08 AMமன்னிக்கவும், இன்றுதான் தங்கள் வலைக்குள் வந்தேன். பதிவுலகம் என்பது நல்ல நட்பை உருவாக்கும் அதே சமயத்தில் எதிரிகளையும் உருவாக்குது.
பதிவர்களாகிய் நாம், பாராட்டை எதிர்பார்க்கும் அதே சமயத்தில் நிராகரிப்பையும் விமர்சனங்களையும் சகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
டெக்னிக்கல் பதிவுகள் எழுதும் தங்களைப் போன்றோர் சடைவடையாமல்
தன்னலம் பாராத சமுதாயத் தொண்டாகக் கருதி இணைந்திருங்கள். -
mohan
said...
June 21, 2010 at 1:24 PMவணக்கம் சார், தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.....வாழ்த்துகள்....சில இனையதளங்களை pdf கோப்பாக சேமிக்கும் போது அதனுடன் விளம்பரங்களும் சேர்த்து சேமிக்கப்படுகின்றன, விளம்பரங்களை எவ்வாறு நீக்குவது ????? தங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றேன்....நன்றி.
-
Jayadev Das
said...
June 21, 2010 at 11:39 PMரொம்ப நன்றி, ஏன் அலுவலகத்தில் எல்லோருக்கும் இந்த லிங்க்-களை கொடுக்க இருக்கிறேன், பத்து பேராவது இவற்றை உபயோகிப்பார்கள், மிக்க நன்றி.
-
Unknown
said...
June 22, 2010 at 7:26 AMதகவல்களுக்கு நன்றி சார். எனக்கு ஒரு உதவி தேவை படுகிரது சார், வருகின்ற
ஞாயிற்று கிழமை காலை 8 மனி முதல் 8.30 மனி வரை கலைஞர் தொலைக்காட்சியில்
ஒலிபரப்பாகும்(20.06.2010) நிகைச்சினை பதிவு செய்ய வேண்டும்.இதற்க்கு நான் யாரிடம் தொடர்புக்கோள்ள வேன்டும் என்று தெரியவில்லை, தயவு செய்து எனக்கு எப்படியாவது உதவி செய்ய முடியுமா சார். உங்கள் தகவலுக்காக காத்துக்கொன்டு இருக்கின்றேன். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் உங்கள் பதிவுகளுடன்
பிரபு திருவண்ணாமலை -
ஜிஎஸ்ஆர்
said...
June 22, 2010 at 8:52 AM@அரபுத்தமிழன்
\\மன்னிக்கவும், இன்றுதான் தங்கள் வலைக்குள் வந்தேன். பதிவுலகம் என்பது நல்ல நட்பை உருவாக்கும் அதே சமயத்தில் எதிரிகளையும் உருவாக்குது.
பதிவர்களாகிய் நாம், பாராட்டை எதிர்பார்க்கும் அதே சமயத்தில் நிராகரிப்பையும் விமர்சனங்களையும் சகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
டெக்னிக்கல் பதிவுகள் எழுதும் தங்களைப் போன்றோர் சடைவடையாமல்
தன்னலம் பாராத சமுதாயத் தொண்டாகக் கருதி இணைந்திருங்கள்.\\
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் ஊர் கூடி தேர் இழுத்தால் மட்டுமே அந்த தேர் வீதி உலா வரமுடியும் எல்லோரும் பார்ர்கவும் முடியும்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 22, 2010 at 8:53 AM@mohan
கொஞ்சம் நேரம் கொடுங்கள் நிச்சியமாக தங்களுக்கு பதில் அளிக்கிறேன் -
ஜிஎஸ்ஆர்
said...
June 22, 2010 at 8:59 AM@Jayadeva
எழுதுவதை விட கொண்டு சேர்ப்பதே மிக கடிணம் நீங்கள் அதை செய்கிறேன் என்கிறீர்கள் நன்றி நண்பா -
ஜிஎஸ்ஆர்
said...
June 22, 2010 at 9:10 AM@myblog
வணக்கம் நண்பரே ஒரு நல்ல கேள்வியை கேட்டிருக்கிறீர்கள் தாங்கள் விருப்பபடி தொலைகாட்சியில் ஒளிபரப்பாவதை பதிவு செய்ய நீங்கள் TV Tuner Card வாங்க வேண்டும் மேலும் கூடுதல் விபரங்களை நீங்கள் வாங்கும் கடையிலே கேட்டு தெரிந்துகொள்ளலாம் தற்போதெல்லாம் Cam Cader பயன்படுத்தி பதிவு செய்ய முடியும் என கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் நான் இந்த இரண்டையும் முயற்சித்தது இல்லை
நண்பர் ஷிர்டி சாய்தாசன் அவர்களிடம் கேளுங்கள் அவருக்கு இதில் அனுபவம் இருக்கிறது
suthanthira-ilavasa-menporul.blogspot.com
நான் வேண்டுமானால் இனையத்தில் தெடி பதில் அளித்துவிடுவேன் நான் சோதனை செய்து பார்க்காமல் தங்களுக்கு உதவுவது என்பது சரியாய் இருக்காது
தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி -
sumo
said...
September 17, 2010 at 7:20 PMமிகவும் நன்றாக உள்ளது சேவையை தொடரவும்
-
ஜிஎஸ்ஆர்
said...
September 19, 2010 at 9:27 AM@sumoவரவேற்பு இருக்கும் வரை தொடரும்
-
guru
said...
November 24, 2010 at 12:40 PMஎனக்கு உதவியாக இருந்தது...
நன்றி.... -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 9:14 PM@guru நல்லது நண்பரே
-
Vengatesh TR
said...
November 27, 2010 at 12:49 PM.பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !
.ஆன்லைனில் எடிட் செய்ய, எதாவது வழி உண்டா ? -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 11:06 AM@சிகப்பு மனிதன்தெரிய வரும் போது அவசியம் தெரிவிக்கிறேன்
-
Vengatesh TR
said...
November 30, 2010 at 3:30 AM.தங்கள் மறு-தகவலுக்கு(reply) நன்றி, நண்பரே !
-
Vengatesh TR
said...
November 30, 2010 at 3:32 AM.எனக்கு ஒரு சந்தேகம்,
.தற்போது மணி 3.30am ஆகிறது !
.அனால், நான் இப்போது மேலே இட்ட தகவலுக்கு 2.00am என காட்டுகிறதே, ஏன் ? -
Unknown
said...
December 2, 2010 at 8:24 PMhello sir...i am lakshmanan enaku hdd erukara bad sector clean panna enna steps panna vendum enru sollungal....
hdd adikadi format vena aguma sollungal sir.... -
ஜிஎஸ்ஆர்
said...
December 2, 2010 at 10:57 PM@சிகப்பு மனிதன்இதுவரை நான் இதை கவணித்திருக்கவில்லை ஆனால் விரைவில் என்னவென்று பார்க்கிறேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
December 2, 2010 at 10:58 PM@Subscriberஉங்கள் கணினியில் Bad Sector பிரச்சினை என்கிறீர்கள் உங்களுக்கு எப்படியான பிரச்சினையாக இருக்கிறது அதை ஸ்கீர்ன் ஷாட் எடுத்து அனுப்பமுடியுமா?
மேலும் கேள்விகள் இன்னும் கொஞ்சம் தெளிவாய் இருந்தால் எனக்கு புரிந்துகொள்ள வசதியாய் இருக்கும் -
வில்லன்
said...
January 25, 2012 at 5:13 PMநண்பரே எனக்கு உதவியாக இருந்தது
நண்பரே நீங்கள் வாழ்க வளமுடன் -
வில்லன்
said...
January 25, 2012 at 5:28 PMநண்பரே நான் முதன் முதலாக உங்கள் வலை பகுதிக்கு வருகிறேன்.
உங்கள் பனி சிறப்பாக உள்ளதாகவும் உள்ளது. -
ஜிஎஸ்ஆர்
said...
January 28, 2012 at 7:31 PM@வில்லன் தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே...
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>